Friday, September 14, 2012

ஆனந்த கணபதி !படிமம்:Gsb.jpg


""மூஷிக வாஹன மோதகஹஸ்த சாமரகர்ண விளம்பித சூத்ர
வாமனரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே!!''

விநாயகர் சதுர்த்தி நன்னாளில், “ஓம் கணேசாய நம’ என்ற மந்திரத்தை, 108 முறை சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால்,  நல்லருளைப் பெறலாம்

கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவா வரம் தர காத்திருக்கும் குணநிதியே! 

பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே! 

ஒப்பில்லாத உயர்ந்த தயாளகுணமுள்ளவனே! கஜாமுகாசுரனை வென்றவனே! கெட்டதை அழித்து நல்லதைச் செய்து என்னைக் காக்கும் விநாயகனே! உனக்கு என் வணக்கம்.


 “சுமுகர்’ என்ற பெயக் கொண்டவர் கணபதி  “சு’ என்றால் மேலான அல்லது “ஆனந்தமான’ என்று பொருள்படும். 
ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் 
ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக ஆனை முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார்.

யானைத் தலையை விநாயகர் தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத் தரப்படுகின்றன.

 மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. 
மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். 

ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; 
அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது.

Paris


subbu rathinam
http://menakasury.blogspot.com 
ஐயா அவர்களின் தெய்வீகப்பகிர்வு ...YouTube - Videos from this email

13 comments:

 1. படங்கள் தத்ரூபமாக இருக்கின்றன.

  ReplyDelete
 2. தங்கள் வலைப் பதிவைப் படித்து முடித்தவுடன் நான் முணுமுணுத்த சீர்காழி கோவிந்தராஜனின் பாடல் ........

  “ விநாயகனே வினை தீர்ப்பவனே
  வேழ முகத்தோனே ஞால முதல்வனே
  குணாநிதியே குருவே சரணம்
  குறைகள் களைய இதுவே தருணம் ‘’

  ReplyDelete
 3. ஆனந்த கணபதியை ஆனந்தமாக தரிசித்தோம் நன்றி

  ReplyDelete

 4. மூஷிக வாஹன என்னும் பாடல்
  அந்த மூஷிகனுக்கே பிடித்த பாடல்.
  திரு இளங்கோ மேற்கோள் இட்டிருக்கும் பாடலும் மிகவும் பிரசித்தம்.
  இந்த இரண்டையுமே நான் அடாணா ராகத்தில் பாடுவேன்.
  திருமதி ராஜேஸ்வரி அவர்களின் தெய்வீக உள்ளத்துக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.

  இங்கேயும் கேட்கலாம்.

  subbu rathinam
  http://menakasury.blogspot.com

  ReplyDelete
 5. மிக அருமையான படங்கள்

  ReplyDelete
 6. அழகான படங்களுடன் நல்ல பகிர்வு.

  ReplyDelete
 7. அருமை.... அக்கா என்னால் வலைத்தலம் வரமுடியவில்லை இப்பொழுதுதான் எனக்கு கொஞ்சம் நேரம் கிடைத்தது. அக்கா நலம் காண ஆவல்.

  ReplyDelete
 8. காக்கும் கணபதி கணேசனை நினை,
  கவலைகள் மறையும் என்றும்!

  ReplyDelete
 9. வெள்ளிக்கிழமையும் அதுவுமா மனம் பக்திமயமா இருக்கு உங்கள் பதிவும் படங்களையும் பார்த்து.நன்றி ஆன்மீகத் தோழி !

  ReplyDelete
 10. சூப்பர் ... அழகான படங்கள்.. அதிலும் முதலாவது பிள்ளையார் படம் சூப்பர்ரோ சூப்பர்ர்... கொப்பி பண்ணுவோமே எனக் கையை வச்சேன்ன்ன்.. அவர் மாட்டாராம்ம்:)).

  ReplyDelete
 11. மிகவும் அருமை....

  நன்றி,
  மலர்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 12. ஆனந்த கணபதி

  என்ற இந்தப்பதிவினைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல மிகவும் ஆனந்தமாக உள்ளது.

  முதல் ஐந்து படங்களும் கடைசி [கோலங்கள் உள்பட] நான்கு படங்களும் மிகவும் பளிச்சென்று சூப்பராக உள்ளன.

  மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் என் நன்றியோ நன்றிகள்.

  ooooo

  ReplyDelete