ஸரஸிஜ நயனே ஸரோஜ ஹஸ்தே தவலதராம் சுக கந்தமால்ய சோபே
பகவதி ஹரிவல்லபே மனோக்ஞே த்ரிபுவனபூதிகரி ப்ரஸீத மஹ்யம்
ப்ரக்ருதிம் விக்ருதிம் வித்யாம் ஸர்வபூத ஹிதப்ரதாம் ச்ரத்தாம்
விபூதிம் ஸுரபிம் நமாமி பரமாத்மிகாம்
அஷ்ட லட்சுமிகளில் அடிப்படையானவள் தைரிய லட்சுமி ..
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்பமில்லை’
திருநாவுக்கரசர் சுவாமிகள் அரச கட்டளை வரும்போது ‘பணிவோமல்லோம்’ என்று கூறும் நெஞ்சத்தில் எத்தனை துணிவு !!
அஷ்டலட்சுமிகளின் பாக்கியம் பெற்ற போஜ மகாராஜா நீண்ட நாட்கள் வழிபட்டு வந்ததற்காக லஷ்மிகள் கிளம்பும் நாளில் அத்தனை லஷ்மிகளும் வரம் தர சித்தமான போது வரமேதும் கேட்கவில்லை.!!
ஏழு லட்சுமிகள் போன பின்பு கடைசியாக தைரிய லஷ்மி வந்தாள்.
அம்மா நான் கேட்கும் வரம் நீ மட்டும் என்னிடம் தங்க வேண்டும் என்பதே என்றான் போஜராஜன்.
அம்மா நான் கேட்கும் வரம் நீ மட்டும் என்னிடம் தங்க வேண்டும் என்பதே என்றான் போஜராஜன்.
பக்தன் கேட்ட வரத்தின்படி தைரியலட்சுமி மட்டும் அங்கேயே தங்கி விட்டாள்.
மறுநாள் போஜன் பூஜைக்கு புறப்படும் போது தினம் எட்டு லட்சுமிகளை பூஜிப்பேன், இன்று ஒரு லட்சுமியை மட்டுமே பூஜிக்க போகிறேன் என்று நினைத்துக்கொண்டு பூஜைக்கு போனான்.
அங்கு பூஜாக்கிரகத்தில் அஷ்ட லட்சுமிகளும் இருக்கக்கண்டு ஆச்சரியம் அடைந்தான்.
எங்கள் தலையில் தைரிய லட்சுமி எங்கு இருக்கிறாளோ அங்கு நாங்கள் ஏழு பேரும் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறது.
நீ தைரிய லட்சுமியை உன்னுடனேயே இருத்திக் கொண்டதால் நாங்கள் மீண்டும் இங்கேயே வந்து தங்க நேர்ந்தது என்றார்கள் அந்த ஏழு லட்சுமிகள்.
அஸ்ய யஜமானஸ்ய தைர்ய ஸ்தைர்ய
வீர்ய விஜய ஆயுர் ஆரோக்ய
ஐஸ்வர்ய அபிவிருத்த யர்த்தம்,
இஷ்ட காம்யார்த்த சித்த யர்த்தம்,
பாகவத ப்ரீத யர்த்தம் திவ்ய சரணார விந்தயோஹோ,
ஸமஸ்த லோக சாந்த்யர்த்தம்
துளசீ தள குங்குமார்ச்சன சகஸ்ர நாம பூஜாம் கரிஷ்யேவீர்ய விஜய ஆயுர் ஆரோக்ய
ஐஸ்வர்ய அபிவிருத்த யர்த்தம்,
இஷ்ட காம்யார்த்த சித்த யர்த்தம்,
பாகவத ப்ரீத யர்த்தம் திவ்ய சரணார விந்தயோஹோ,
ஸமஸ்த லோக சாந்த்யர்த்தம்
தவிர்க்க முடியாததுடன் எப்படி சமரசம் செய்து கொள்வது என்று தெரிந்து கொண்டால் போதும்.'
இயற்கை உன்னை நோக்கிக் கோடாரியை வீசும் போது உனக்கு இரண்டே வழிகள் தான் இருக்கின்றன.
ஒன்று,கோடரியின் கைப்பிடியைப் பிடிப்பது;
மற்றொன்று கோடரியின் கூர் முனையைப் பிடிப்பது.
பறந்து வரும் கோடரியின் கைப்பிடியைப் பிடித்து அதை நமக்குப் பயன் தரும் வகையில் உபயோகப்படுத்திக் கொள்வது தான் தைரியம்.
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
மரம் சாய்ந்து போனால் விலையாகலாம்
மலர் சாய்ந்து போனால் சரமாகலாம் -
இந்த மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்?
நடை மாறிப் போனால் கலையாகலாம் விடை மாறிப்போனால் சரியாகலாம்
கடல் மாறிப் போனால் நிலம் ஆகலாம் இருண்டாலும் வானில் மீன் காணலாம்
திரண்டாலும் பாலில் நிறங்காணலாம் மருந்தாலும் தீரா நோய் தீரலாம்
மனதில் தைர்யம் நிறைந்திருந்தால் மட்டுமே ...
ஆன்மிகத்தில் தோய்ந்து பதப்பட்ட மனமே அச்சங்களற்றது.
‘நாளைப் பொழுதை நடத்த இறைவன் உண்டு’ என்ற நம்பிக்கை நிறைந்த சுகம் மனிதர்களைப் பார்த்து அஞ்சுவது இல்லை.
பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலும் இல்லாத சமநிலை அந்த அகத்துக்கு மட்டுமே இயல்பு.
எது சத்தியமோ அதை எந்தச் சூழ்நிலைக்கும் அஞ்சாது இனிய சொற் களால் கம்பீரமாகச் சொல்ல யாரால் முடிகிறதோ அவர்களே இந்தத் தேசத்தின் ஆன்மிகப் பேராற்றலை யுகயுகாந்திரங்களாகக் காத்து வருகின்றனர்.
கலை நயத்துடன் கூடிய பதிவு! தீபம் ஏற்றி வழிபடுவதும் கலை நயத்துடன் இருக்க வேண்டும். தவறை சுட்டிக்காட்டுவதற்கு மன்னிக்கவும் சகோதரி! தீபக்காட்சி தவிர கலை நயத்துடன் அழகு மிளிரும் அற்புதப் பதிவு!
ReplyDeleteதைர்ய லக்ஷ்மி நம் அனைவருக்கும் தைரியத்தினை தரட்டும்....
ReplyDeleteநல்ல பகிர்வு.
07.9.12 அன்று வெள்ளிக்கிழமை மாலை
ReplyDeleteதங்களது தைரியலட்சுமி பதிவை பார்த்தேன்.எனக்கு மிகுந்த மன மகிழ்சியையும் மன நிறைவையும் தந்தது.அதன் பின் படித்தேன்.
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்
snrmani@rediffmail.com
தைரிய லஷ்மி உடன் இருந்தால் எல்லாமும் உடன் இருக்கும். உண்மைதான்
ReplyDeleteஅழகிய படங்களுக்குப் பாராட்டுகள்
ReplyDeleteநெஞ்சில் உரமும் நேர்மைத்தெளிவும் தரும் பகிர்வுகள்... பாராட்டுக்கள்..
ReplyDeleteஎங்கள் தலையில் தைரிய லட்சுமி எங்கு இருக்கிறாளோ அங்கு நாங்கள் ஏழு பேரும் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறது.
ReplyDeleteதைர்யம் இருக்குமிடத்தில் அஷ்டலஷ்மிகளும் வாசம் செய்யும் அருமையான லஷ்மிகரமான பதிவுக்கும் படங்களுக்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
அருமையான விளக்கங்களுடன் அஷ்டலஷ்மிகளின் பகிர்வு.
ReplyDeleteவெள்ளிக்கிழமையான இன்று உங்கள் தைரிய லக்ஷ்மியைப் படித்து மனதில் தைரியம் வரப் பிரார்த்தித்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துகளும். அப்பாதுரையின் பதிவில் இருந்து இங்கே வந்தேன். :)))))
ReplyDeleteதொடர
ReplyDeleteகமென்ட் போடாமல் நழுவிய பதிவு.. கரெக்டா கொக்கி போட்டு இழுத்துட்டீங்க.
ReplyDeleteஅ ல காவியம் பத்தின பதிவு எழுதுறப்ப உங்க பதிவுகளை நினைச்சுட்டு எழுதினேன். அஷ்டலட்சுமி பெயர்களை சட்டுனு பிடிக்கணும்னா உங்க பதிவை விட்டா எனக்கு வேறே கதி இல்லிங்க :)
தைர்ய லக்ஷ்மிக்கு என் வந்தனங்கள்.
ReplyDeleteஅனைத்துப்படங்களும், விளக்கங்களும் அழகாக அருமையாக உள்ளன.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
தைர்ய லக்ஷ்மிக்கு என் வந்தனங்கள்.
ReplyDeleteஅனைத்துப்படங்களும், விளக்கங்களும் அழகாக அருமையாக உள்ளன.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
[ இன்று 5 AM to 5 PM அம்பாளை எங்குமே தரிஸிக்க முடியவில்லை.]