Monday, August 15, 2011

புது யுகத்தின் ஆனந்த சுதந்திரம்
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று

ஆகஸ்ட் 15, 1947 சுதந்திர இந்தியாவின் பிறந்த நாள்.
இந்நாள் பாரதத்தின் பழைய யுகத்தின் முடிவிற்கும்,
புது யுகத்தின் துவக்கத்திற்குமான அடையாளமாகும்.

சுதந்திரத் திருநாளையே, ஒரு சுதந்திர தேசத்தின் மக்களாகிய நாம், நமது வாழ்க்கை மற்றும் செயல்பாட்டின் வாயிலாக மானுடத்தின் அரசியல், சமூக, பண்பாட்டு, ஆன்மீக எதிர்காலத்திற்கு வித்திடும் ஒரு புது யுகத்தின் துவக்க நாளாகவும் மாற்றலாம்.
ஆகஸ்ட் 15 பூரண சுதந்திரம் என்பதை முதலில் உச்சரித்த பகவான் ஸ்ரீ அரவிந்தர் பிறந்த நாள். இவ்வளவு பரந்த முக்கியத்துவம் கிடைத்திருப்பது உண்மையிலேயே ஸ்ரீ அரவிந்தர்க்கு பெருமை சேர்க்கிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் ஊட்டியவர் ஸ்ரீ அரவிந்தர்

இந்தியாவின் சுதந்திரம் இறைவனால் நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்பதனை தனது ஆன்மீக ஆற்றலால் கண்டுகொண்டு இறைவனின் சித்தத்தை நிறைவேற்ற பின்நாட்களில் ஆன்மீக பணியை மேற்கொண்டவர்.

இந்திய தேசிய உணர்வின் சின்னமாகவும், மானுடத்தின் ஆன்மீக வழிகாட்டியாகவும் திகழும் ஸ்ரீ அரவிந்தர்.

சுதந்திர தினம் ஸ்ரீ அரவிந்தர் பிறந்த நாளில் அமைந்தது தற்செயலான நிகழ்வாக அல்லாமல் முன்நிச்சயிக்கப்பட்ட ஒரு ஏற்பாடாக, எதற்காக ஸ்ரீ அரவிந்தர்  வாழ்க்கையின் துவக்க கட்டத்தில் பணியாற்றினாரோ அந்த உன்னத இலட்சியம் முழுமையாக நிறைவேற,  ஸ்ரீ அரவிந்தரை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்திச் செல்லும் இறைவனின் ஒப்புதலாகவும் அத்தாட்சியாகவும் கொள்கிறோம்.

அதைவிட, இவ்வுலகில் என்னென்ன நிகழ வேண்டும் என எதிர்பார்த்தாரோ, அன்று நடைமுறையில் சாத்தியமற்ற கனவுகளாக தெரிந்த அனைத்தும், அனைத்து உலக-இயக்கங்களும் இன்று நிறைவேறி வருவதையும்,  ஸ்ரீ அரவிந்தர் வாழ்நாளிலேயே அவைகள் சாதனைகளாவதையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

இவ்வனைத்து இயக்கங்களிலும் சுதந்திர இந்தியா ஒரு முக்கிய பங்காற்றவும், அதற்கு தலைமையேற்கவும் முடியும். 

ஒரு சுதந்திரமான, ஒற்றுமையான இந்தியாவை உருவாக்கும் புரட்சி இயக்கமே ஸ்ரீ அரவிந்தர் முதல் கனவாகும்.

இந்தியா இன்று விடுதலை பெற்றுவிட்டது. 
ஆனால் ஒற்றுமையை சாதிக்கவில்லை. 

வெள்ளைய ஏகாதிபத்யம் ஏற்படுவதற்கு முன்னர் இருந்ததைப்போல, விடுதலைக்குப்பின் இந்தியா மீண்டும் பல நாடுகளாக சிதறுண்டு குழப்பத்தில் ஆழ்ந்துவிடுமோ என்று கூட ஒரு கட்டத்தில் அவருக்கு தோன்றியது. 

யோகி ஸ்ரீ அரவிந்தர்
 அதிர்ஷ்டவசமாக அந்த ஆபத்து தவிர்க்கப்பட்டுவிட்டது.

ஒரு முழுமையான ஒருங்கிணைப்பாக இல்லாவிட்டாலும், மிகப்பெரிய, சக்திவாய்ந்த தேசமாக இந்தியா நிலைபெற்றுவிட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் எவ்வித பாகுபடுத்தலோ, பிளவோ இன்றி தீர்க்கப்படும் என்ற அரசியல் நிர்ணய சபையின் அறிவுப்பூர்வமான அதிரடி கொள்கை நம்பிக்கையூட்டுகிறது.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
சாதாரண மனிதர்களால் எளிதில் முடியாதவற்றை, இயற்கைக்கு மாறானவையாகத் தோன்றுவதை அற்புதமாக நிகழ்த்திக் காட்டுவது மகான்களின் தனிச்சிறப்பு.

ஏனெனில் அவர்கள் அந்த இயற்கையையே வென்றவர்கள்.

அதனால் தான் அவர்கள் சித்தர்களாகவும், ஞானிகளாகவும், 
யோகிகளாகவும், மகான்களாகவும் விளங்குகின்றனர்.
ஸ்ரீ அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும்
ஸ்ரீ அரவிந்தர் சுதந்திரப் போராட்ட வீரராக மட்டுமல்லாமல் மகா யோகியாகவும் விளங்கியவர்.

 ‘சாவித்ரி’ என்னும் மகா காவியத்தைப் படைத்தவர்.
திருப்பாத சரணம் 
நள்ளிரவில் பெற்றோம் இன்னும் விடியவில்லை என்ற முகாரி பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்து ஆனந்த பைரவியாய் இனிய கீதமிசைக்கும் வண்ணம் வளம் பல பெற்று சுதந்திரத்தைப் பேணுவோம்.[Independence+Day.jpg]

4th Of July, FireWorks, Animated Fireworks, Animated Graphics, Independence Day, Fourth Of July, Keefers

33 comments:

 1. இனிய சுதந்திரத்திருநாள் நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வாழ்க பாரதம்
  ஜெய் ஹிந்த்
  சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்

  ReplyDelete
 7. மூவர்ணப்படங்கள் அனைத்தும் அருமை.

  நாட்டுப்பற்றுடன் கூடிய நல்ல கட்டுரை.

  இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

  //ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
  ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று// vgk

  ReplyDelete
 8. கண்ணை கவரும் படங்கள் பிரமாதம்
  சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. மனதை கொள்ளக் கொண்டு சுதந்திரத்தை பெருமையாக்கும் படங்கள் கருத்துக்கள்....

  தங்களுக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. அழகான படங்களுடன் கூடிய அருமையான பதிவு - இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் ராஜராஜேஸ்வரி. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  ReplyDelete
 11. சுதந்திர தின நல் வாழ்த்துக்கள். படங்கள் அனைத்தும் அருமை.

  ReplyDelete
 12. சுதந்திர தின வாழ்த்துகளை வெறும் சம்பிரதாயமாக சொல்லாமல் உணர்வு பொங்க கூறிய விதத்திற்கு HATS OFF!

  ReplyDelete
 13. எல்லா படங்களும் அருமையாக இருந்தன,,, சுதந்திர தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. வந்தே மாதரம்
  இனிய சுதந்திர தின நல வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. இனிய சுதந்திரத்திருநாள் நல்வாழ்த்துகள்..

  அருமையான தெளிவான படங்கள். தெளிவான விளக்கம். மகிழ்ச்சி. நல்ல இடுகை. நன்றி சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 17. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. கேரட் வெங்காயம் பீன்ஸ் - போட்டோ அற்புதம். சுத்தந்திர தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. அருமை.மூவர்ண் படங்கள் அத்தனையும் மனதை கொள்ளை கொண்டு விட்டது. அரவிந்தர் பற்றிய தகவல்களும் அருமை.
  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

  ReplyDelete
 22. சுதந்திர தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. ""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

  அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 24. சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோதரி ...அழகான படங்களையும் பரிசாகத் தந்துள்ளீர்கள் ...நன்றி !

  ReplyDelete
 25. இரண்டு திருநாள்களையும் சேர்த்து எழுதியிருக்கிறீர்கள்-உங்கள் வழக்கமான கலக்கல் படங்களுடன். சுதந்திரதின வாழ்த்துகள்.

  ReplyDelete
 26. தமிழ் வண்ணம் திரட்டியின் New Post ல் உங்கள் பதிவின் தலைப்பு , நீங்கள் பதிவிடும் பதிவின் உங்கள் பிடித்த மூன்று வரிகளை எழுதி , Link என்ற இடத்தில் உங்கள் பதிவின் முகவரியை இடவும். இந்த முறை பதிவிட்டால்தான் அன்பரே உங்கள் தளத்துக்கு traffic கூடும்

  ReplyDelete
 27. உடனே திருந்தி விடுங்கள் அன்பாரே

  ReplyDelete
 28. அரவிந்தர் பற்றிய தகவல் மிக அருமை சகோ..,
  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 29. பின்னூட்டமிட்டு வாழ்த்து கூறிய அனைவருக்கும் இனிய சுந்திர திருநாள் வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 30. வழக்கம் போல படமும் பதிவும்
  அருமை!

  புலவர் சா இராமாநுசம்
  காணோம் வலைப் பக்கம்

  ReplyDelete
 31. என் சுதந்தர தின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 32. ;)
  சர்வ மங்கள மாங்கல்யே
  சிவே சர்வார்த்த சாதிகே !
  சரண்யே த்ரயம்பிகே கெளரி
  நாராயணீ நமோஸ்துதே !!

  ReplyDelete