Friday, August 31, 2012

ஸ்ரீ ஆனந்த ஆஞ்சநேயர்
கோவையில் ஈச்சனாரி கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கும்
பஜனைக்கோல அனுமன் ஆலயத்திற்குச் சென்றிருந்தோம்..

திரு எம் . ஆர். சேட் அவர்கள் ஸ்ரீராம் சேவா ஆஸ்ரமம் என்கிற ட்ரஸ்ட் ஏற்படுத்தி தம் பெற்றோர்கள் ஒரு அனுமன் கோவில் கட்டவேண்டும் என்று கண்ட கனவை நிறைவேற்ற  சுமார் ஒரு ஏக்கர் அளவுள்ள பூமியில் சோலைவனமாக மரங்களும் , நந்தவனமும் , துளசி வனமும் சூழ அனுமனுக்கு அழகிய ஆலயம் அமைத்துள்ளார்..
   மிக மிகத்தூய்மையாக பரமரிக்கப்படும் ஆலயம்  ..

ஞாயிற்றுக்கிழமைகளில்   ஹனுமனின் புகழ் பாட அருமையான சத்சங்கம் அமைதிருக்கிறார்கள்..


இராம . அரங்கநாதன் அவர்கள் பெர்க்ஸ் பள்ளி வளாகத்தில் அமைத்திருக்கும் பிரமிடு போலவே  இங்கும் தியானம் செய்வதற்கு பிரமிட் அமைத்திருக்கிறார்  பிரபஞ்ச காந்த அலைகள் பிரமிட் முனையில் குவிந்து மனம் ஒருமுகப்படுவதற்கு சிறப்பாக துணைபுரியும் அதிசயத்தை உணரமுடிகிறது...

பிரமிட்டின் உள்பகுதி

தானே வடிவமைத்து கட்டிய கோவிலில் ஜன்னல்களில் தாமரைப்பூ வடிவமும் ,கதவுகளில் சங்கு ,சக்கரம் , கதை , வில் , ஓம் வடிவங்களும் வருமாறு அமைத்ததை விளக்குகிறார்..https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=610c35685a&view=att&th=139913f3f5b26f53&attid=0.2&disp=inline&safe=1&zw&saduie=AG9B_P8zGJs0Rg0M_zZnphEiwVHC&sadet=1346763132359&sads=wuDIhdQRTNPYUL7gZ-84dCB5xew&sadssc=1
 சன்னதியில் ஸ்ரீ ராமர் , சிவன் , அனுமன் ஆகியோருக்கு பிரார்த்தனை செய்துகொண்டு காணிக்கை செலுத்த உண்டியல் உண்டு..
முன்பொரு முறை சென்றிருந்தபோது அபூர்வமான நரசிமரின் சாளக்கிரம வடிவம் ஒன்று சிவபார்வதி விகரகங்களுக்கு அருகில் பார்த்திருந்தோம்..
ஸ்ரீ ராமர் அங்கே அருகில் இருக்கும் போது அவரது அவதாரமான நரசிம்மர் சிலை அவர் அருகில் இருப்பதுதான் முறை என்று சொல்லி ஆராதித்து வந்தோம்..

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அனுமன் விக்ரகம் உயிர்த்துடிப்புடன் நம்மை ஈர்க்கிறது...
https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=610c35685a&view=att&th=139913f3f5b26f53&attid=0.4&disp=inline&safe=1&zw&saduie=AG9B_P8zGJs0Rg0M_zZnphEiwVHC&sadet=1346763223283&sads=JapabVwKptaL01n70dhk17fVQvo

17 comments:

 1. 2
  =

  ஸ்ரீராமஜயம்
  ============


  தங்களின் வெற்றிகரமான

  6 5 0 ஆவது பதிவுக்கு என்

  மனமார்ந்த

  பா ரா ட் டு க் க ள் !.

  அன்பான இனிய

  வா ழ் த் து க ள் .!!

  *****************************

  ReplyDelete
 2. இன்று ஆகஸ்டு 31

  நாளை செப்டம்பர் 1

  தங்களின்

  பொறுப்புகளும்

  கடமைகளும்,

  திட்டமிட்ட பணிகளும்

  நல்லபடியாகத்

  தொடர்ந்து சிறக்கட்டும் !  இறைப்பணிகள் மட்டும்

  எங்களுக்கு தினமும்

  இதுபோன்ற அழகான

  பதிவுகளாகக் கிடைக்கட்டும்.!!

  ******************************

  ReplyDelete
 3. //இங்கும் தியானம் செய்வதற்கு பிரமிட் அமைத்திருக்கிறார்கள்.

  பிரபஞ்ச காந்த அலைகள் பிரமிட் முனையில் குவிந்து மனம் ஒருமுகப்படுவதற்கு சிறப்பாக துணைபுரியும் அதிசயத்தை உணரமுடிகிறது...//

  மிகவும் அற்புதமான தகவல்.

  ReplyDelete
 4. your blog on Anjaneyar at Kovai
  motivates me to visit the temple
  at some point of time in my
  life.
  Of course, it is possible, as I understand, only with His Grace.
  Thank U Mrs.Rajeswari.

  subbu rathinam
  http://vazhvuneri.blogspot.com

  ReplyDelete
 5. //கோவையில் ஈச்சனாரி கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கும்
  பஜனைக்கோல அனுமன் ஆலயத்திற்குச் சென்றிருந்தோம்.. //

  மிக்க மகிழ்ச்சி.

  நாங்களும் உங்களுடன் சேர்ந்தே அந்தக் கோயிலுக்குள் சென்று வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது, இந்தப் பதிவினைப் படிக்கும் போதும்,
  படங்களைப் பார்க்கும் போதும்.

  ReplyDelete
 6. ”ஸ்ரீ ஆனந்த ஆஞ்ஜநேயர்”

  பற்றிய இன்றைய தங்களின் பதிவு வழக்கம்போல அருமையாக உள்ளது.

  //சுமார் ஒரு ஏக்கர் அளவுள்ள பூமியில் சோலைவனமாக மரங்களும், நந்தவனமும், துளஸி வனமும் சூழ ஹனுமனுக்கு அழகிய ஆலயம் அமைத்துள்ளார்கள்.

  மிக மிகத் தூய்மையாக பரமரிக்கப்படும் ஆலயம்//

  மகிழ்ச்சியளிக்கும் நல்ல தகவல்கள்.

  //ஞாயிற்றுக்கிழமைகளில் ஹனுமனின் புகழ் பாட அருமையான சத்சங்கம் அமைதிருக்கிறார்கள்.//

  பேஷ் பேஷ் ! ரொம்ப நன்னாயிருக்கு.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் சகோதரி !..சிறப்பான பகிர்வுக்கும் மிக்க நன்றி மேலும் சிறப்பாகத் தொடரட்டும் .

  ReplyDelete
 8. 650 வது பதிவுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
  எப்படி தங்களால் தொடர்ந்து சிறப்பான பதிவுகளை
  தினமும் தரமுடிகிறது என்கிற விஷயத்தை பதிவிட்டால்
  2 நாளைக்கு ஒரு பதிவுக்கே திணரும் என்போன்றோருக்கு
  பேருதவியாக இருக்கும்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அனுமன் போற்றும் ஸ்ரீராமர் தங்களுக்கு சகல சௌபாக்கியத்தை அருளட்டும்

  ReplyDelete
 10. தங்களின் வெற்றிகரமான

  6 5 0 ஆவது பதிவுக்கு என்

  மனமார்ந்த

  பா ரா ட் டு க் க ள் !.
  [வை.கோபாலகிருஷ்ண்ணர், அவர்கள் வழியில்]

  ReplyDelete
 11. அருமையான பகிர்வு! நன்றி!

  இன்று என் தளத்தில்
  ருத்திராட்சம் சில தகவல்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_31.html

  ReplyDelete
 12. 650 ஆவது பதிவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  நினைக்கவே மலைப்பாக உள்ளது...

  ரமணி சார் சொன்னது போல் விவரங்கள் தந்தால் பல பேருக்கு உதவியாக இருக்கும்...

  ReplyDelete
 13. நல்லதொரு பகிர்வு. நன்றி.

  ReplyDelete
 14. 650-க்கு வாழ்த்துக்கள் சகோ!

  தொடர்ந்து வீறு நடை போடுங்கள்!

  ReplyDelete
 15. இந்தக் கோவிலின் ஸ்தாபகர் எனக்கு மிகவும் வேண்டியவர். என் தகப்பனாருக்கும் தெரிந்தவர். அற்புதமான மனிதர். ஒரு படத்தில் தெரிகிறார்.

  ReplyDelete
 16. அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 17. அருமையான பகிர்வு. பெர்க்ஸ் பள்ளி வளாகத்தில் உள்ள பிரமிட்டுக்கு அப்பாவுடன் ஒருமுறை சென்றிருக்கிறேன். இங்கு அடுத்த முறை செல்ல வேண்டும். அந்த பிரமிடில் உள்ளே சென்றால் மேலே செல்வதற்கு படிகள் இருக்கும் என்று நினைவு...

  ReplyDelete