Thursday, August 30, 2012

ஸ்ரீ லக்ஷ்மி கடாக்ஷம் !!


ஸ்ரீலக்ஷ்மி வைகுண்டத்தில் மகாலக்ஷ்மியாகவும், 
இந்திரனிடத்தில் சொர்க்க லக்ஷ்மியாகவும், 
மன்னர்களிடத்தில் ராஜலக்ஷ்மியாகவும், 
வீரர்களிடம் தைரிய லக்ஷ்மியாகவும், 
குடும்பத்தில் கிரக லக்ஷ்மியாகவும் விளங்குகிறாள். 

மஹாலஷ்மி பாற்கடலில் தோன்றியவள்..உப்பின் பிறப்பிடம் கடல்

வெள்ளிக்கிழமைகளில்  உப்பு வாங்குதல் மிகவும் விஷேசம்..


Gajalakshmi


மஹாலக்ஷ்மிமலரின் அழகு. அருள் பார்வையுடன் திகழும் செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி.

திருப்பாற்கடலில் இருந்து அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் (செந்தாமரையில்) வீற்றிருக்கிறாள்.  நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது.

செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.

கஜலக்ஷ்மி  பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும், அஷ்டதிக்கு கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன், அவளுக்கு மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன.

பல்லவர்கள் அமைத்துள்ள குடைவறைக்கோயில்களில் பலவற்றில், யானைகள் நீரை முகந்து நீராட்ட, தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைக் காண முடியும்.

யானைகளின் பிளிறலை லக்ஷ்மி விரும்பிக்கேட்கிறாள் என வேதமந்திரமான ஸ்ரீசூக்தம் கூறுகிறது.

கோலக்ஷ்மி என்று பசுக்களை அழைக்கின்றனர்.
கிரகப்பிரவேசம் நடத்தும் போது, பசுக்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன் மூலம், லக்ஷ்மி தேவி முதலில் செல்கிறாள் என்பது ஐதீகமாக உள்ளது.

அஷ்ட லக்ஷ்மி,ஆதி லக்ஷ்மி, மகா லக்ஷ்மி, தனலக்ஷ்மி, தானிய லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, கஜலக்ஷ்மி, ஆகிய லக்ஷ்மியின் அம்சங்கள். .......        


16 விளக்குகள் நெய்யினால் ஏற்றி, மஹாலக்ஷ்மி அர்ச்சனைக்கு வில்வம் இலை, தாமரை பூ அல்லது வெள்ளி காசு , பூக்கள் குங்குமம், குபேரன் படம்  லஷ்மி படம், அர்ச்சனை செய்ய காசுகளை பயன்படுத்தி வெள்ளிக்கிழமைகளில் பூஜிப்பது விஷேசம்..


காயேன‌ வாசா ம‌ன‌சேந்திரியை வா புத்யாத்ம‌நா வா ப்ர‌க்ருதேஸ்வ‌பாவாத்
க‌ரோமி ய‌த்ய‌த்ச‌க‌ல‌ம் ப‌ர‌ஸ்மை நாராயணாயேதி ச‌ம‌ர்ப‌யாமி !!!
17 comments:

 1. அழகான பதிவு
  அருமையான விளக்கங்கள்
  அசத்தலான படங்கள்
  அனைத்துமே அருமை

  அனைவருக்கும்
  ஸ்ரீலக்ஷ்மி கடாக்ஷம்
  பொங்கட்டும்.

  பாராட்டுக்கள்
  வாழ்த்துகள்.

  இன்றோ நாளையோ,
  வெற்றிகரமாக
  வெளியாக உள்ள
  தங்களின்

  6 5 0 ஆவது

  பதிவுக்கு என் இனிய
  அட்வான்ஸ் வாழ்த்துகள். ;)

  ReplyDelete
 2. மேலிருந்து கீழாக மூன்றாம் வரிசையில் காட்டியுள்ள இதழ் விரித்த ஐந்து செந்தாமரைகள், என் மனதுக்கு மிகவும் இதமளிப்பதாக உள்ளன. சந்தோஷம்.

  ReplyDelete
 3. வெள்ளிக்கிண்ணத்தில் முந்திரி மிதக்கும் பாயஸமும் .....

  வெள்ளிக்கொலுசு அணிந்த யானையின் கால்களும் ......

  எத்தனை முறை பார்த்தாலும் இன்பம் தருபவைகளாகவே உள்ளன.

  ReplyDelete
 4. கீழிருந்து மூன்றாவது படத்தில் அன்னபக்ஷி வாகனத்தில் மஹாலக்ஷ்மி தேரில் அமர்ந்திருக்க யானையொன்று அந்தத்தேரினை, சங்கலியால் இழுத்து வருவது போல காட்டியுள்ளது, மிகவும் புதுமையான [இதுவரை காட்டப்படாத] அருமையான படமாக உள்ளது. ;)

  ReplyDelete
 5. /வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்குதல் மிகவும் விசேஷம்/

  ”உப்பிட்டவரை உள் அளவும் நினை” என்று சொல்லுவார்கள்.

  இந்த உப்பு வாங்குதல் பற்றிய விசேஷத்தைச் சொல்லி பதிவு இட்டவரை ........ !!!!

  தகவலைக்கேட்டே நாங்கள் உப்பிப்போகிறோம். நன்றி ;)

  ReplyDelete
 6. //காயேன‌ வாசா
  ம‌ன‌சேந்திரியை வா
  புத்யாத்ம‌நா வா
  ப்ர‌க்ருதேஸ்வ‌பாவாத்
  க‌ரோமி ய‌த்ய‌த்ச‌க‌ல‌ம் ப‌ர‌ஸ்மை ஸ்ரீ நாராயணாயேதி ச‌ம‌ர்ப‌யாமி !!!//

  மிகவும் அழகான ஸ்லோகம் இது.

  இதுவரை நடந்தது எல்லாம் ....

  இப்போது நடப்பது எல்லாம் ....

  இனி நடக்கப்போவது எல்லாம் ...

  நாராயணன் செயலே !

  என்று பொருள்.

  நாம் செய்ததாக எதையுமே நினைக்கக் கூடாது. எல்லாம் அவன் செயல். நான் செய்த இதை ஸ்ரீமந் நாராயணன் செய்ததாக அவனுக்கு அர்பணிக்கிறேன் என்று, கடைசியாக ஒரு உத்தரணி தீர்த்தத்தைத் தரையில் கொட்டிச் சொல்லிவிட்டு, எதையுமே [எந்த ஜபம் பூஜைகள் முதலியவற்றை] முடிப்பது வழக்கம்.


  ReplyDelete
 7. வணக்கம் சகோ..

  வழக்கமான அசத்தலான பதிவு..
  நன்றி.

  ReplyDelete
 8. Very nice Sir.
  The Lakshmi idol on Lotus looks very nice. Likes the Tanjore Painting also. Elephant wearing anklet! Very cute!

  ReplyDelete
 9. அழகான புகைப்படங்கள்...யானையின் படம் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் எடுத்த படம் தானே மேடம்??...

  ReplyDelete
 10. ஸ்ரீலக்ஷ்மி கடாக்ஷம் கிடைத்தது...

  பகிர்வுக்கு நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. யானை வாகனத்தின் மேல் அமர்ந்திருக்கும் திருக்கோலம் -அது தான் "வைபவலஷ்மி"

  உடன் பதிவில் வெளியிட்டமைக்கு என் மனம் கனிந்த நன்றி.

  ReplyDelete
 12. 'மங்களம் ஜயமங்களம்
  மஹா லக்ஷ்மிகி மங்களம்'

  ReplyDelete
 13. ஸ்ரீதேவி: அம்ருதோத் பூதாகமலா சந்திரசோபனா
  விஷ்ணுபத்னீ வைஷ்ணவீச வராரோஹாச சார்ங்கிணீ
  ஹரிப்ரியா தேவதேவி மஹாலக்ஷ்மி ச சுந்தரி

  ReplyDelete
 14. அருளவேண்டும் தாயே !

  அங்கயிற் கண்ணி நீயே !

  பெயரும் புகழும் பொருந்தி வாழ,

  பூமியில் கலைகள் சிறந்து வாழ,

  அருளவேண்டும் தாயே !


  கலைகள் கற்கவும் கற்பனை செய்யவும்

  காலம் கடவாமல் கருத்தை திருத்தவும்,

  உலகிலே நல்ல உண்மைகள் பேசவும்,

  உன்னை நினைக்கவும் உயர்வாக வாழவும்

  அருளவேண்டும் தாயே !

  ReplyDelete
 15. வரவேண்டும் வரவேண்டும் தாயே!
  ஒரு வரம் தர வேண்டும் தரவேண்டும் நீயே!
  வரவேண்டும் வரவேண்டும் தாயே….  அறம் வளர்க்கும் அம்மா பர்வதவர்த்தினி
  அய்யாறு தனில் மேவும் தர்மசவர்த்தினி
  திருவையாறு தனில் மேவும் தர்மசவர்த்தினி
  வரவேண்டும் வரவேண்டும் தாயே!

  தானெனும் அகந்தை தலைக்கே ஏறாமல்,
  தாழ்ந்த நிலையிலும் தருமம் மாறாது
  வான் புகழ் வள்ளுவன் வகுத்த நன் நெறியில்
  வையகம் வாழ்ந்திட வரம் அருள் தாயே!
  இவ்வையகம் வாழ்ந்திட வரம் அருள் நீயே

  வரவேண்டும் வரவேண்டும் தாயே!
  ஒரு வரம் தர வேண்டும் தரவேண்டும் நீயே!
  வரவேண்டும் வரவேண்டும் தாயே….

  ReplyDelete
 16. 2-வது மற்றும் 6-வது படம் காணக்கிடைக்காத அற்புதம்

  ReplyDelete
 17. லக்ஷ்மி தேவி எனக்கு அருள் பாலித்து விட்டாள். இந்தப் திவைப் பார்க்கவும்.

  http://swamysmusings.blogspot.in/2012/08/blog-post_31.html

  சிறிது நகைச்சுவையை ரசிப்பீர்கள் என்று நம்பி இந்த பின்னைட்டத்தைப் போடுகிறேன். பிடிக்காவிட்டால் நீக்கி விடலாம். வருந்த மாட்டேன்.

  ReplyDelete