Wednesday, August 8, 2012

மதிலழகு மன்னார்குடி


இந்தீவரஸ்யாமள கோமளாங்கம் இந்த்ராதி தேவார்ச்சித பாதபத்மம் 
ஸந்தான கல்பத்ரும மாஸ்ரிதானாம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
-பால முகுந்தாஷ்டகம்.
நீலோத்பல மலரின் நிறம் கொண்டகிருஷ்ணா, நமஸ்காரம். 
பேரழகு கொண்ட சரீரம் பெற்றவரே, இந்திரன் முதலான தேவர்களால் பூஜிக்கப்பட்ட அழகு பாதங்களை உடையவரே, நமஸ்காரம்.
விரும்பி வேண்டுவோருக்கு புத்திர பாக்யம் அருள்பவரே, 
கற்பக விருட்சம் போல் பக்தர்களுக்கு அனைத்து பாக்கியங்களையும் அளிப்பவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்
கருட மண்டபத்தை கடந்து தொடர்ந்திடுவேன்
கண்ணாடி சேவை கண்டு கண்கள் கசிந்திடுவேன்
பெருமாள் சன்னிதிமுன் பித்தாகி நின்றிடுவேன்
பிறவிப்பிணி அறுத்து உலகை வென்றிடுவேன்
எட்டெழுத்தைக் சொல்லி கிட்டே நெருங்கிடுவேன்
ஓம் நமோ நாராயணா என்ற எட்டெழுத்தை சொல்லி கிட்டே நெருங்கிடுவேன்
என்னை தெரிகிறதா என்றே கேட்டிடுவேன் - என்னும் உள்ளக்கிடக்கையை அறிந்து அழைத்தே தரிசனம் தந்து ஆட்கொண்டான் மாயக்கண்ணன் !!
எங்கள் குடும்பத்தின் கைகளில் தவழ்ந்த சந்தான கோபால கிருஷ்ணன்

கராரவிந்தேந பதாரவிந்தம் முகாரவிந்தே விநிவேசயந்தம்!
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயாநம் பாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி!
ஆலோக்ய மாதுர் முகமாதரேண ஸ்தந்யம் பிபந்தம் ஸரஸீ ருஹாக்ஷம்!
ஸச்சிந்மயம் தேவமநந்த ரூபம் பாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி!
என்று பால முந்தாஷ்டகம் ஸ்தோத்தரித்து  வணங்கிப் பிரார்த்தித்தோம்..

 ஆலங்குடி ஸ்தலத்திலிருந்து திருக்கடையூர் செல்ல நாங்கள் திட்டமிட ,
காந்தமாக கவர்ந்து எதிர்த்திசையில் வாகனத்தை திருப்பி அழைத்தே தரிசனம் தந்து சந்தான கோபால கிருஷணனாக கைகளில் தவழ்ந்து மகிழ்ச்சி அளித்தார் மதிலழகு மன்னார்குடி ராஜகோபாலன் !
புனர்தரிசன வரமும் பிரார்த்தித்தோம் !

கண்ணன் ஸ்ரீவித்யா ராஜகோபாலனாக ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்யப்பட்டு த்ரிபங்க நிலையில் அருளாட்சி புரியும் சந்நதியில் உள்ள குழந்தை வடிவ கண்ணனை கையில் ஏந்தி சந்தான பாக்கியம் வேண்டிக்கொள்பவர்கள், தட்டாமல் அந்த பாக்கியத்தைப் பெறுகின்றனர்.
சகல நலன்களையும் சௌபாக்கியங்களையும் அருள்கிறான் கண்ணன் !
ரோகிணி நட்சத்திரத்தன்று பிரார்த்தனையை செய்தால் விசேஷமாம்.
துவாரகையில் கண்ணன் செய்த லீலைகளை நடத்திக்காட்டியதால் தட்சிண துவாரகை  என்று வணங்கப்படும் துவாரகைக்கு சமமான 
புனிதத் தலம் மன்னார்குடி...
மூலவர் பரவாசுதேவப் பெருமாள்.  
வேங்கடாஜலபதியை  போலவே பிரத்யட்சமாய் அருள்கிறார்..
துளசி மாடம்  பிரமாண்டமாக கருத்தைக்கவர்ந்தது...
அஷ்ட்டதிக்கஜங்கள் , அஷ்ட்ட லஷ்மிகள் அனைத்தும் 
பஞ்ச அங்கங்களையும் அடக்கிய ஆமையின் மேல் 
அமைந்த அற்புத அமைப்பு கவனத்தை ஈர்த்தது...

நீர் பாதி நிலம் மீதி  , கோவில் பாதி குளம் பாதி என்றழைக்கப்படும் மன்னார்குடியின் பெருமைமிக்க - இந்தியாவின் மிகப்பெரிய தெப்பக்குளமான ஹரித்ராநதி மன்னார்குடியில் அமைந்துள்ள பத்து புண்ணிய நீர்நிலைகளில் ஹரித்ராநதியும் ஒன்று

கோபியருடன் கோபாலன் ஜலக்கிரீடை செய்தருளியபோது,​​ கோபியர் உடலில் பூசியிருந்த மஞ்சள் (ஹரித்ரா)​ இக்குளத்தில் கலந்ததால் ஹரித்ராநதி என்ற பெயரைப் பெற்றது.

காவிரியின் மகள் எனவும்,​​ 66 கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஒன்றிணைந்தது எனவும் ஹரித்ராநதி பெருமை பெற்றது..

கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் .. யமுனை நதியாகவே கருதுவதால், "ஹரித்ரா நதி' என்றே அழைக்கிறார்கள். 

குளமாக இருந்தாலும் நதியின் பெயரில் அழைக்கப்படும் தீர்த்தம் 
ஆனி மாதம் பத்து நாட்கள்  தெப்பத்திருவிழாநடைபெறுகிறது. 
பத்தாம் நாளான பௌர்ணமியன்று தெப்பம் நடைபெறுகிறது. 
குளத்தின் நடுவே வேணுகோபாலன் சன்னதி அமைந்துள்ளது.
.
அனுமன் சந்நிதியில் இருந்த அர்ச்சகர் சுவாமியிடம வழக்கம் போல் விபரம் விசாரிக்க அவர் பேச்சு வராதவராம் .... 

இருந்தால் என்ன  அத்தனை அருமையாக தாயார் சன்னதி சேவிக்கச்செல்ல வழிகாட்டினார்....

கஜலஷ்மியாக அருள்பாலித்த செங்கமலவல்லித்தாயார் மனம் நிறைய அருள் பொழிந்தாள்..

சன்னதி முன் நிறைய வளையல்கள் கட்டித்தொங்கவிடப்பட்டிருந்த்து....

dsc02057


File:RajaGopalaSwamyTemple.JPG

33 comments:

 1. ”மதிலழகு மன்னார்குடி”

  தலைப்பே மிக அழகு! ;)

  ReplyDelete
 2. மிகவும் அற்புதமாக அழகழகான படங்கள். ஜோரான பதிவு.

  நேரில் மன்னார்குடி கோயிலுக்குச் சென்று வந்துள்ளதால் அதன் அருமையை வெகுவாக உணர முடிகிறது.

  ReplyDelete
 3. கண்ணன் பிறந்த தினத்தில் அற்புதமான பதிவு  பார்க்க

  கோகுலாஷ்டமி

  ReplyDelete
 4. தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

  வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

  தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

  ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

  அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


  மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
  95666 61214/95666 61215
  9894124021

  ReplyDelete
 5. தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

  வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

  தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

  ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

  அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


  மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
  95666 61214/95666 61215
  9894124021

  ReplyDelete
 6. அசத்தும் படங்கள்...

  நன்றி சகோதரி...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. Lakshmi has left a new comment on your post "மதிலழகு மன்னார்குடி":

  படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு. நன்றி. வாழ்த்துகள்.

  நன்றி அம்மா ...

  ReplyDelete
 8. அருமையான புகைப்படங்கள்! குறிப்பாக குளம் வெகு அருமையாக புகைப்படத்தில் அடக்கப்பட்டுள்ளது!

  ReplyDelete
 9. தலைப்பே அழகாயிருக்கு தோழி.குளமும் கோவிலும் ஊர் ஞாபகம் வருது.படங்கள் எப்பவும்போல !

  ReplyDelete
 10. சகல செளபாக்கியங்களும் அருள் வழங்கி விட்டார் உங்கள் பதிவின் மூலம் கண்ணன்.

  படங்கள் எல்லாம் தெய்வீகம்.
  நன்றி.

  ReplyDelete
 11. மாடுகள் மேய்த்தவண்ணம் கோபியர்கள் மனதினை கொள்ளை கொண்ட கண்ணன்,மன்னார்க்குடியில் குடிகொண்ட ராஜகோபாலன்!

  பார்க்க:பத்மா

  ReplyDelete
 12. மாடுகள் மேய்த்த கண்ணன்
  கேட்டு ரசிக்க :
  http://www.youtube.com/watch?v=KoGk4gBvDSU" MADU MEIKUM

  ReplyDelete
 13. இந்தப் பின்னூட்டம் இட என்னைத் தூண்டியதே பதிவின் தலைப்புதான். பல வருடங்களுக்கு முன் நண்பன் ஒருவன் திருமணத்துக்கு மன்னார்குடி சென்றிருந்தேன். திருமணத்துக்கு முதல் நாள் மாலையே அங்கிருந்தேன். விடிந்ததும் கோவிலுக்குச் செல்லுமுன் அதன் மதிலோரம் போக வேண்டி இருந்தது. அவ்வளவு சிறப்பான கோவிலின் மதிலை ஒட்டி ஒரே நரகல்தான். மன்னார்குடி நினைத்தால் அதுதான் நினைவுக்கு வருகிறது. இப்போது நிலைமை தெரியாது.

  ReplyDelete
 14. அடடா எங்கள் ஊர் மன்னார்குடி பற்றி அழகாக எழுதி உள்ளீர்கள் அக்கா. நீங்க மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருகோவிலுக்கு சென்று வந்த அனுபவத்தை அழகாக பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
  அனைத்து படங்களும் அருமை அக்கா... அக்கா கோவிலின் வெளிப்புறம் சுற்றிபார்த்தீர்களா எல்லாம் அருமையாக இருக்கும் பசுமையுடன்...

  ReplyDelete
 15. குளத்தின் நடுவே அழகான கோயில்.

  ReplyDelete
 16. மிகுந்த கூட்டம் எம்பெருமானை தரிசிக்க! அர்ச்சகர் கருவறையில் இருந்து நேரே எம்முன்னர் வந்து அழைத்தார். அருகிலிருந்து எம்பெருமானை சேவிக்கச் செய்ததுடன், எம் கிருஷ்ணனை கையில் வாங்கச் செய்து, கோயில் கட்டவேண்டும். அழைப்பு தருவேன். அங்கு வந்து, ஆலய நிர்மானப் பணி செய்ய ஆரம்பி என்று சொல்லப்பட்டது. எமை மெய்மறக்கச் செய்த இறைவனின் திருவிளையாடலை மீண்டும் நினைவுகூற வைத்த, அழகிய அற்புதப் பதிவினை பதிந்திட்ட எம் சகோதரிக்கு இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன். தொடரட்டும் உங்களின் இறை பணிகள்!
  http://www.krishnaalaya.com

  ReplyDelete
 17. அம்மா,

  படங்கள் அருமை...
  கருத்துக்கள் அற்புதம்...
  வாசிக்க ஆனந்தம்...

  மதிலழகு மன்னார்குடி.. வாசித்தேன் ஆனந்தமாக !

  அன்புடன், தமிழ் பிரியன்.

  ReplyDelete
 18. மனநிறைவைத்தரும்
  மகிழ்ச்சியான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 19. மன்னார்குடினு சொன்னாலே எனக்கு ரெண்டு பேர் ஞாபகத்துக்கு வருவா. ஒருத்தர் வேணுகோபாலஸ்வாமி & இன்னொருத்தர் மன்னார்குடி மைனர்வாள் RVS :) அழகான பதிவு!

  ReplyDelete
 20. எப்பங்க எங்க ஊருக்கு வந்தீங்க... கோபாலன் அழகு கொள்ளையழகு...

  ReplyDelete
 21. எப்பங்க எங்க ஊருக்கு வந்தீங்க... கோபாலன் அழகு கொள்ளையழகு...

  ReplyDelete
 22. அன்பின் இராஜ இராஜேஸ்வாரி - மன்னார்குடி இராஜ கோபால ஸ்வாமியின் திருக்கொவில் படங்களுடன் விளக்கங்களுடன் கூடிய உரை நன்று - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 23. அருமையான பதிவு.
  மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 24. The exquisite beauty of Sri. Rajagopalaswamy and his dharsanam on different Vahanams during the 18 days' Annual festival is unparelled.I had the privilege of enjoying this for many years during my student days which I can never forget in my life.

  ReplyDelete
 25. படங்களை ரசித்தேன். பதிவைப் படித்தேன். சந்தானகோபாலன் படம் அருமை.

  ஜி எம் பி ஸார் இங்கு இட்டிருக்கும் பின்னூட்டம்தான் நேற்றும் 'எங்கள்' பதிவில் இட்டிருக்கிறார்! :))))

  ReplyDelete