Monday, August 6, 2012

தவ தாடங்க மஹிமா !!


http://shaivam.files.wordpress.com/2011/01/a.jpg
http://shaivam.files.wordpress.com/2011/01/appar.jpg
Legend of the temple in a Sculpture in a Pillar in the templeThe Vimanam of Lord Shiva Sanctorum and the 'Venn Naaval' tree (which is thousands of years old)

http://shaivam.files.wordpress.com/2011/01/pushpam.jpg

http://lh6.ggpht.com/-wDX2zv1OraY/SGebLMZSq9I/AAAAAAAAACA/2YgfYr25h2Y/Thiruvanaika-VallabhaGanapathil.jpg

பரமதயாநிதே பார்வதி மாதா    அகிலாண்டேஸ்வரி சிவசரணம்


அளியார் கமலத்தில் ஆரணங்கே, அகிலாண்டமும் நின் 
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுதொறும்
களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரை புரண்டு
வெளியாய்விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே?



கோவையில் இருந்து கிளம்பி  முதலில் தரிசித்தது திருவானைக்கோவிலில் அன்னையின் ஆவேசத்தைத்தணிக்க ஆதிசங்கரரால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட வல்லபகணபதியை !

ஸுதாமப் யாஸ்வாத்ய ப்ரதிபயஜராம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விச்வேவிதிசதமகாத்யா திவிஷத:
  
கராளம் பத் க்ஷவேளம்கபளித வத: கால கலநா
நசம்போ: தந்மூலம்தவ ஜனநி தாடங்க மஹிமா

 அமிர்தத்தைச் சாப்பிட்டும்  ஆபத்தைச் சந்திக்கிறார்கள் தேவர்கள்... விஷமுண்ட பரமன்கூட மரணத்தை அடையவிடாமல் த்டுக்கும்   மகிமைமிக்க தாடங்கம் அணிந்த அற்புதக் கற்பகம் அன்னை அகிலாண்டேஸ்வரிக்குசூர்ய சந்திரர்களே இரண்டு தாடங்கமாகவிளங்குவதாக ஐதீகம் !

அகிலாண்டேஸ்வரி,  ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம்.  மதிய வேளையில்அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன்  திருச்சின்னங்களுடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு சென்றார்...

சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சன்னதி திரும்பும்  பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம்.  அர்ச்சகரை அம்பாளாக பாவித்து வணங்கி உடன் செல்லும் பேறு கிடைத்தது.

யானை முன்னே செல்ல அர்ச்சகர் சுவாமியை அம்பாளாகப் பாவித்து தொடர்ந்து சென்று ஜலகண்டேஸ்வரராக விளங்கும் தன் நாயகன் கறைக்கண்டரை பூஜிக்கும் அம்பாளைத் தரிசித்தோம் !


கோபூஜை செய்து அன்னை கருவறை அடையும் சமயம் 
யானை ஜம்பு என்ற சப்தத்துடன் பிளிறியது சிலிர்க்கவைத்தது...

குருவாயூரிலும் கேசவன் யானை நாராயணா
 என்ற சப்தத்தில் வணங்குமாம் ! 

 யானைக்கு பாகனின் அனுமதியுடன் இனிப்புப்பிரசாதம் கொடுத்தோம்... ரசித்து சப்பி சாப்பிட்டாள்  அந்த அழகு பெண்குழந்தை!!

 பிரகாரம் சுற்றிவந்து சற்று நேரம் அமர தேர்ந்தெடுக்கும் இடம் இந்த யானையின் முன்புதான் !!
துறு துறு என்று அசைந்துகொண்டு பார்க்கப்பார்க்க தெவிட்டாத தரிசன்ம் அளிப்பது இந்த யானைதான்  அகிலாண்ட நாயகிக்குப் பிறகு ! 

தொடர்புடைய பதிவுகள்..
http://jaghamani.blogspot.in/2012/08/blog-post_3.html
அற்புதங்கள் அருளும் அன்னை அகிலாண்டேஸ்வரி !


http://jaghamani.blogspot.in/2011/05/60.html
திரு ஆனைக்கா அண்ணல் !
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsW5GIRmXXSWb81Np2u1KDE_rtk4n9mSLoWx-I_bR8SZ8fHZLibKQfawVdNLhTcYCE_fcKSn5WAbZNVf4WM16It75Bt3_dKUO8j-dOiBaB2G1oJe5Updm0u7fpnONzW_ESPES3z_ORF1Y/s1600/Thiruvanaikaval+temple,+Thiruchipalli,+Tamil+Nadu1211.jpg
http://www.thiruvanaikoil.com/images/archakar.jpg
http://www.thiruvanaikoil.com/images/kopooja.jpg



http://www.cellphone-wallpapers.net/Wallpapers/User/21623-thiruvanaikoil000541.jpg
http://lh4.ggpht.com/-eNvvq1Ijn88/S_zVdYdKDSI/AAAAAAAADHM/r8wZbbsjOeU/akhilandeshwari-tiruannaika9.jpghttp://shaivam.files.wordpress.com/2011/01/chenkannan.jpg


http://www.thehindu.com/multimedia/dynamic/00857/06dec_tymbg02_eleph_857651e.jpgElephant unfortunately cant enter the shrine,Thiruvanaikaval temple, Tiruchirapalli (Trichy)

https://lh6.googleusercontent.com/-Cn6_v0RMOY8/S3LfcVQKYWI/AAAAAAAADKo/eCKzNxoAP5k/7.jpg
http://shaivam.files.wordpress.com/2011/01/thiruvanaikovil-jambugeswarar.jpg
http://www.thehindu.com/multimedia/dynamic/01155/TY25FLOATFESTIVAL_1155767f.jpg
https://lh4.googleusercontent.com/-kGI39bJH3Fg/TVFdwfpF92I/AAAAAAAAB6c/B28FsCpmZIU/1.jpg

13 comments:

  1. எந்த கோவிலுக்குச் சென்றாலும் கொவிலின் தலவரலாறு குறித்த புத்தகம் வாங்குவது வழக்கம். தரிசனம் முடித்து வீடு திரும்பிவந்து கோவிலைப்பற்றிய புத்தகத்தை பார்த்தால் அக்கோவிலில் உள்ள அபூர்வமான கலைச்சிற்பங்கள் பார்க்காமல் வந்தது தெரியவரும்.

    அந்த குறையினை போக்குகிறது தங்களின் விசாலமான பல புகைபடங்களுடன் கூடிய பதிவு.

    ReplyDelete
  2. ”எங்களின் தெய்வீகப்பதிவரை இரண்டு நாட்களாகக் காணவில்லை.

    ஒரே கவலையாகவும் வருத்தமாகவும் உள்ளது.

    அவர்கள் எந்த ஊருக்குப் போயிருந்தாலும், அவர்கள் போன காரியம் வெற்றிகரமாக முடிந்து, சீக்கரமாக கோவை திரும்பி வந்து, நாங்கள் தினமும் கஷ்டப்பட்டுப் போட்ட பின்னூட்டங்கள் காணாமல் போய் விடாமல், அவர்கள் திருக்கரங்களால் வெளியிட அனுக்கிரஹம் செய்யுங்கள்”

    என உங்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி வேண்டிக்கொள்கிறோம் .....

    இப்படிக்கு,

    VGK"
    இதே கவலை தான் எனக்கும்!!!

    ReplyDelete
  3. பதிவு அருமை! படங்கள் அழகோ அழகு!

    ReplyDelete
  4. திரு ஆனைக்கா அண்ணல் பதிவில் உள்ள புகைப்படங்கள் திருத்தலத்தை பார்க்கத் தூண்டுகின்றன.அனைத்தும் அருமை.

    ReplyDelete
  5. துருதுரு யானையும், படங்களும் அருமை... நன்றி அம்மா…

    ReplyDelete
  6. படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. நன்றி.

    ReplyDelete
  7. ஆனைக்காவில் அருமையான தரிசனம் செய்து இருக்கிறீர்கள். புதிய குட்டி யானையின் அழகான கருமையும் அருகிலுள்ள குழந்தையின் தைரியமும் படத்தில் ” பளிச்” ’’பளிச்”.

    ReplyDelete
  8. அழகான படங்களுடன் அருமையான பதிவு!

    ReplyDelete
  9. Ahaa! Super post!!

    Again about my favourite

    "AHILAANDA KOTI BRAHMAANDA NAAYAKI"

    &

    about HER ear rings!!

    Excellent Article with very beautiful pictures.

    Congratulations & Thanks for Sharing.

    Affectionately yours,
    vgk

    ReplyDelete
  10. //சந்திர வம்சம் said...
    ”எங்களின் தெய்வீகப்பதிவரை இரண்டு நாட்களாகக் காணவில்லை.

    ஒரே கவலையாகவும் வருத்தமாகவும் உள்ளது.

    அவர்கள் எந்த ஊருக்குப் போயிருந்தாலும், அவர்கள் போன காரியம் வெற்றிகரமாக முடிந்து, சீக்கரமாக கோவை திரும்பி வந்து, நாங்கள் தினமும் கஷ்டப்பட்டுப் போட்ட பின்னூட்டங்கள் காணாமல் போய் விடாமல், அவர்கள் திருக்கரங்களால் வெளியிட அனுக்கிரஹம் செய்யுங்கள்”

    என உங்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி வேண்டிக்கொள்கிறோம் .....

    இப்படிக்கு,

    VGK"
    இதே கவலை தான் எனக்கும்!!!

    August 6, 2012 5:18 PM//

    Thanks a Lot for sharing this Madam.

    vgk

    ReplyDelete
  11. மேலிருந்து கீழாக ஆறாவது படத்தில், யானைத் தன் வாலைத்தூக்கும் போது, சரியாக படமெடுக்கப்பட்டுள்ளது, சிறப்பாகவும் சிரிப்பாகவும் உள்ளது. ;)

    ReplyDelete
  12. ஆனைக்கா பற்றிய அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete