Friday, November 4, 2011

சங்கடங்கள் தீர்த்து அருளும் சக்குளத்தம்மன்தென்காசியில் நடைபெற்ற திருமணத்திற்கு கோவையிலிருந்து சிற்றுந்து அமர்த்தி உறவினர் குடும்பங்கள் இணைந்து சென்றிருந்தோம். 

கேரளா வழியாக நிறைய கோவில்களைப் பார்த்து பசுமையாக செல்வதென்று திட்டமிட்டு பல்வேறு ஆலயங்களுக்கு சென்றோம்

பாட்டுக்குப்பாட்டு, கொண்டாட்டம், குற்றாலத்தில் நள்ளிரவில் பாலாய் அமிர்தகிரணங்களை வர்ஷித்த நிலவொளியில், பட்டப்பகலாய் ஒளி சிந்திய சக்திமிக்க மின்னொளியில் ஐந்தருவியில் குளியல், குளியல் முடிந்ததும், பஜ்ஜி கடைக்காரர் பஜ்ஜிவேண்டுமா என்று கேட்டு சூடாக போட்டுக்கொடுத்த வாழைக்காய் மிளகாய் பஜ்ஜிகள், என்று என்றென்றும் பசுமையாக நினைவில் நிற்கும் பயணமாக ஆனந்தமாக அமைந்ததது.. .

இனி எந்த நாள் அது போலே வரும் என்று திகட்டத்திகட்ட தித்தித்த, தங்கமாய் நினைவில் தங்கிய நாட்கள் அவை...

சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று  ஸ்தல புராணம் வாங்கி கோவிலின் சிறப்புக்களை படித்துக்கொண்டோம்.
சிந்தனை விருந்தாகி ஜீவியக்கனலாக
விந்தைகள் புரிந்தாள் நாம் அறியாமலே!
அந்த அன்னை சக்குளத்துக்காவு பகவதி....


மார்கழி முதல் தேதியில் இருந்து 12ம் தேதி வரை, ஆண்களும், பெண்களும் இக்கோயிலுக்காக நோன்பிருக்கின்றனர். நினைத்த காரியம் நடக்க இந்த நோன்பு அனுசரிக்கப்படும். 

ஐயப்பன் கோயிலுக்கு செல்வது போலவே பிரம்மச்சர்யம் மேற் கொள்ளுதல் 
உள்ளிட்ட கடமைகளை சரிவர கடைபிடிக்க வேண்டும். 
[Image1]

இந்த சமயத்தில் பெண்கள் இருமுடி கட்டி கோயிலுக்கு வருகின்றனர். இவ்வகையில் இது "பெண்களின் சபரிமலை' என்றும் சிறப்பு பெறுகிறது. 
11ம் நாள் கலச அபிஷேகமும், 12ம் நாள் காவடி நிகழ்ச்சியும் நடக்கிறது.

மார்கழி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில், பெண்களை சக்தி வடிவமாக பாவித்து, அவர்களின் பாதங்களைக் கழுவும் "நாரி பூஜை' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ஆயிரக்கணக்கில் பெண்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

இதைப் பார்க்கும் ஆண்கள், தங்கள் மனைவி, தாய், சகோதரிகளுக்குரிய மரியாதையை தர வேண்டும் என்ற மனநிலையை அடைவதாக நம்புகின்றனர். 
“Yethra Naryasthu Poojayante
Remantha thathra Devatha”புரட்டாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நாகராஜா, நாகயட்சிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. ராகுதோஷம் உள்ளவர்கள் இந்த பூஜையில் பங்கேற்கலாம்.
Chakkulathukavu Sri Bhagavathi Temple , Neerattupuram 

கார்த்திகை மாதம் திருக் கார்த்திகையன்று பொங்கல் உற்சவம் நடக்கும். அன்று, ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வணங்குகின்றனர். அன்று இரவில் சொக்கப்பனை ஏற்றப்படும். கேரளாவிலுள்ள அம்மன் கோயில்களில் கார்த்திகை மாதத்தில் சொக்கப்பனை ஏற்றப்படும் கோயில் இது மட்டுமே.
The KarthikaPillar
 
தற்போது கோயில் இருக்கும் சக்குளம் பகுதி ஒரு காலத்தில் பெரும் காடாக இருந்தது. 

ஒருநாள், வேடன் ஒருவன் தன் மனைவியுடன் காட்டிற்கு விறகு வெட்ட 
வந்த போது, ஒரு பாம்பு சீறி வந்தது.

பயந்து போன வேடன், அதை தன் கோடரியால் வெட்ட முயன்ற போது, அது தப்பி ஓடியது.

கொல்லாமல் விட்டதால், பாம்பு தன்னை பழிவாங்கி விடும் என பயந்த வேடன் அதைக் கொல்லும் முடிவுடன் விரட்டினான்.

ஒரு புற்றை நோக்கி ஓடிய பாம்பு, அதன் மீது ஏறி புற்றில் இருந்த துளைக்குள் செல்ல முயன்ற போது, வேடன் அதை வெட்டினான்.

ஆனால், பாம்பு வெட்டுப்படவே இல்லை. மாறாக சீறீக்கொண்டு படமெடுத்தது. சற்று நேரத்தில் புற்றிலிருந்து ஒரு தண்ணீர் ஊற்று கிளம்பியது.
பாம்பு மறைந்து விட்டது.

இதைக் கண்டு நடுங்கிப் போன வேடனும், அவன் மனைவியும் செய்வதறியாது திகைத்த வேளையில், நாரதர் மாறுவேடத்தில் வந்தார்.

அவர், அந்த புற்றை வெட்டும்படி கூறினார்.

வேடனும் புற்றை வெட்டினான்.

அப்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவந்தது.

பின்னர் பாலும், தேனுமாய் மாறி வந்தது.

உள்ளே ஒரு அம்பிகை சிலை இருந்தது.

அதை நாரதர் எடுத்து பிரதிஷ்டை செய்தார்.

அந்தச் சிலையை பயபக்தியுடன் வேடன் குடும்பத்தினர் வணங்கி வந்தனர்.

பிற்காலத்தில் பட்டமனை வீட்டுக் குடும்பத்தார் இங்கு கோயில் எழுப்பினர்.

கோயில் அருகில் இருந்த குளத்தில், புற்றில் இருந்த தண்ணீர் நிரம்பி சர்க்கரை போல இனித்தது. இந்த சர்க்கரைகுளமே "சக்குளம்' என பெயர் மாறியது.
ஆதிபராசக்தியான வனதுர்க்கையே, சக்குளத்தம் மாவாக அருள்பாலிக்கிறாள். 1981ல் எட்டு கைகள் கொண்ட தேவியை பிரதிஷ்டை செய்தனர்.

இந்தக் கோவில் உருவாக காரணமான வேடன், தன் குடும்பத்துடன் சக்குளத்தம்மாவை வழிபட்டு வந்தான்.

வனத்தில் கிடைக்கும் பூக்கள், பழங்களை தேவிக்குப் படைத்து வழிபாடு செய்வது வேடன் குடும்பத்தின் வழக்கமாக இருந்தது.


ஒருநாள் தேவிக்கு படைக்கப் பழங்கள் பறிக்கச் சென்ற வேடனுக்கு எந்தப் பழமும் கிடைக்கவில்லை.

கால் கடுக்க நடந்ததுதான் மிச்சம்.

பழம் கிடைக்காமல் பெருத்த ஏமாற்றத்துக்கு ஆளான வேடன், வேறு வழியின்றி கோவிலுக்கு வந்து சேர்ந்தான். அங்கே சர்க்கரைப் பொங்கல் அம்மனுக்குப் படைக்க ஆவி பறக்க தயாராக இருந்தது.

நடுகாட்டிற்குள் இது எப்படி, எங்கிருந்து வந்தது...? என்று வேடன் தவித்தபடி நின்றிருந்த போது, அந்த தேவியே அசரீரியாக பேசினாள்.

சர்க்கரைப் பொங்கலைக் கண்டு குழப்பமடைய வேண்டாம் மகனே... அது நானே செய்ததுதான். இன்றும் நாம் எல்லோரும் அதை சாப்பிடுவோம்... என்றாள் தேவி.

தேவி தன்னிடம் பேசியதைக் கண்ட வேடன் மெய்சிலிர்த்துப் போனான்.
இன்ப வெள்ளத்தில் தத்தளித்தான்.

தன் பக்தனுக்காக அன்னை பராசக்தி பொங்கல் செய்து வைத்த நாள், கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர தினம். 

இந்த அற்புதத்தை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் 
அதே தினத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை 
வழிபாடு செய்கிறார்கள்.மேலும் சிவன், ஐயப்பன், விஷ்ணு, கணபதி, முருகன், யட்சி, நாகதேவதைகள், வனதேவதைகள் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மருந்து எனப்படும் 48 மூலிகைகளைக் கொண்டு தேவிக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

அபிஷேகத்திற்கு பிறகு அந்த மருந்து பக்தர்களுக்கு இலவசமாகவே தரப்படுகிறது.

அதை வாங்கிச் சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் என்கிறார்கள்.
Betel Astrology - Vettila Jyothisham 
மது போதைக்கு அடிமையானவர்களை திருத்தும் திருத்தலமாகவும் இது திகழ்கிறது. 

ஒவ்வொரு வெள்ளி அன்றும் இங்குள்ள தேவியின் வாள் மீது, இனி குடிக்க மாட்டேன்... என்று மது குடிப்பவர்களை சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். 

அவ்வாறு சத்தியம் செய்த ‘குடி’மகன்கள் அதன் பிறகு, தேவிக்கு பயந்து குடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள். 

இதற்காகவே இக்கோவிலுக்கு இந்திய முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் விருது வழங்கி சிறப்பித்துள்ளார்.
Special Treatment - Pledge against Intoxication

சக்குளத்துக்காவு பகவதி திருவல்லா என்ற இடத்திலிருந்து 12  கிலோமீட்டர் தொலைவில் நீராட்டுபுரம் ஜங்கஷனில் அமைந்துள்ளது. 

கோவிலின் இரண்டு பகுதியிலும் பம்பா , மணிமால 
என்ற நதிகள் ஓடுகின்றன. 

நவராத்திரியின் ஒன்பது நாட்களில் நடைபெறும் திருவிழாவில் ஏராளமான பெண்கள் விரதமிருந்து அம்மனை தரிசிக்க வருகிறார்கள்.  

விஜய தசமியன்று அக்ஷராப்பியாசம் என்று மலையாளத்தில் அழைக்கப்படும் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கும் சடங்கு நடத்தப்படும் 

ADDRESS
CHAKKULATHUKAVU SREE BHAGAVATHI TEMPLE
NEERETTUPURAM P.O
THIRUVALLA, KERALA, INDIA
TEL: 0477-2213550, 9447104242
Email: amma@chakkulathukavutemple.org
Chakkulathukavu Sree Bhagavathy Temple virtual tour 


http://www.p4panorama.com/panos/chakkulathukavu/index.html


  Chakkulathukavu First Friday

   Chakkulathu kavu Temple
Thrikkarthika
chakkulathukavu
 
Nirapara


 house near toChakkulathukavu temple.

44 comments:

 1. மிக இனிய காலை வணக்கங்கள்.

  ReplyDelete
 2. ஆஹா, சூடாக போட்டுக்கொடுத்த வாழைக்காய் மிளகாய் பஜ்ஜிகள்! நள்ளிரவில் இப்படிப்பசியைக் கிளப்பிவிட்டு விட்டீர்களே! ))

  ReplyDelete
 3. //சர்க்கரை போல் இனித்த நீர் என்பதால் சக்குளம் என்ற பெயர் பெற்றது//

  இந்தச் செய்தியும் சர்க்கரை போல் இனிக்கிறது.

  கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்திரம் சர்க்கரைப்பொங்கல்!

  பஜ்ஜியுடன் இது வேறா! நாக்கில் ஜலம் ஊறுகிறதே! நான் என்ன செய்வேன்?

  ReplyDelete
 4. நாளை முதல் ... குடிக்க மாட்டேன் சத்யமடி தங்கம் ... என்று சத்யம் வாங்கிக்கொள்ளும் சக்தி வாய்ந்த அம்மனா! ஆஹா!! அருமை.

  எப்படியோ ’குடி’ மக்கள் குடியை நிறுத்தினால் மகிழ்ச்சியே!!!

  ReplyDelete
 5. சங்கடங்கள் தீர்த்து அருளும் சக்குளத்தம்மன் பற்றிய அருமையான பதிவு. அழகான பல படங்கள்.

  எப்படியோ சங்கடங்கள் தீர்ந்தால் சரியே!
  அப்போது தான் நிம்மதியாகத் தூங்கலாம்.

  பதிவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
  பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். vgk

  ReplyDelete
 6. வணக்கம் சகோதரி தங்கள் சிறப்பான ஆக்கத்தின்மூலம் சக்குளத்து அன்னையின் தரிசனத்தைப் பெற்ற ஒரு மன திருப்தி உள்ளத்தில் தோன்றியது .நீங்கள் வெளியிடும்
  ஆன்மீகப் பகிர்வுகள் ஒவ்வொன்றும் சிறப்பான படங்களுடன் எம் சிந்தையை வியக்க வைக்கும் அரிய படைப்பாகவே தொடர்வது அற்புதம்!....உங்களுக்கு இறைவனின் அனுக்கிரகம் அதிகம் உள்ளதாகவே நான் கருதுகின்றேன் வாழ்த்துக்கள் .
  உங்கள் ஆக்கம் மென்மேலும் சிறப்புடன் தொடர்ந்து நற்
  பெயரையும் புகழையும் சேர்க்கட்டும் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

  ReplyDelete
 7. சக்குளத்து அம்மன் என்னை அவளது தலபுராணத்தை வாசித்து பயன் பெற நள்ளிரவு ஒரு மணிக்கு எழுப்பியிருக்கிறாள்
  வாசித்தபின் அவள் அருள் அடைந்தேன்

  ReplyDelete
 8. இவ்வளவு தகவல்களின் வழியே பெண்களின் சபரிமலை என்று சொல்லுவது 100% பொருத்தமானதே புரிகிறது, அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

  ReplyDelete
 9. எவ்வளவு அற்புதமான சமுதாய துன்பம் களையும் ஆலயம்...
  குடியைக் கெடுக்கும் குடியை அழித்தால் போதும்..

  அம்மனின் அருள் பெற்றோம் சகோதரி..

  ReplyDelete
 10. படங்களும் பதிவும் நல்லா இருக்கு. நன்றி

  ReplyDelete
 11. வை.கோபாலகிருஷ்ணன் said.../

  உடனடியாய் அருமையாய் அற்புதமாய் கருத்துரைகளும், வாழ்த்துகளும், பாராட்டுக்களும் இனிமையாய் வழங்கி உற்சாகப்படுத்தும் தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 12. அம்பாளடியாள் said...//


  சிந்தை நிறைந்த தங்களின் பராட்டுககளுக்கும், வாழ்த்துரைகளுக்கும் அருமையான கருத்துரைகளுக்கும் இனிய நன்றிகள் சகோதரி!

  ReplyDelete
 13. goma said...
  சக்குளத்து அம்மன் என்னை அவளது தலபுராணத்தை வாசித்து பயன் பெற நள்ளிரவு ஒரு மணிக்கு எழுப்பியிருக்கிறாள்
  வாசித்தபின் அவள் அருள் அடைந்தேன்

  அருளோடு கருத்துரைகளும் வழ்ங்கி இனிமை சேர்த்தற்கு நன்றி தோழி.

  ReplyDelete
 14. DrPKandaswamyPhD said...
  படங்கள் அருமை./

  அருமையாய் கருத்துரை வழ்ங்கி உறசாகமளிக்கும் தங்களுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 15. நம்பிக்கைபாண்டியன் said...
  இவ்வளவு தகவல்களின் வழியே பெண்களின் சபரிமலை என்று சொல்லுவது 100% பொருத்தமானதே புரிகிறது, அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!//

  அருள் நிறையும் அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 16. மகேந்திரன் said...
  எவ்வளவு அற்புதமான சமுதாய துன்பம் களையும் ஆலயம்...
  குடியைக் கெடுக்கும் குடியை அழித்தால் போதும்..

  அம்மனின் அருள் பெற்றோம் சகோதரி..


  சமுதாய சிந்தனையுடன் அருளுடன் அருமையான கருத்துரை வழ்ங்கிய தங்களுக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 17. ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன்..

  அழகான படங்களோட அருமையான பகிர்வு..

  ReplyDelete
 18. koodal bala said...
  நல்ல தகவல்கள் //

  கருத்துகளுக்கு இனிய நன்றி ..

  ReplyDelete
 19. Lakshmi said...
  படங்களும் பதிவும் நல்லா இருக்கு. நன்றி//

  கருத்துகளுக்கு இனிய நன்றி அம்மா..

  ReplyDelete
 20. சங்கடங்கள் தீர்க்கும் சக்குளத்தம்மனின் ஆலயம் பார்த்தாலே மனதில் சந்தோச பக்தி பரவசம் எழுகிறது... சக்களத்தம்மன் கோவில் பற்றிய விரிவாக்கமும், அதன் முகவரியும் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி... சக்களத்தம்மனை காண மனதுக்குள் ஆவல் எழுகிறது.. அம்மனின் அருள் கிடைத்தால் சென்று வரவேண்டும்...

  ReplyDelete
 21. முதல் அனிமேசன் படம்.. மிக அற்புதம்

  ReplyDelete
 22. கோவில் சம்பந்தபட்ட எத்தனைப்படங்கள்... அருமை.. சந்தோசமாக இருக்கிறது... பகிர்வுக்கு மனம் கனிந்த நன்றி சகோ!.

  ReplyDelete
 23. சக்களத்துக்காவு பகவதி கோவிலின் படமே மனதை அமைதிபடுத்துகிறது... படங்களை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 24. அசத்தலான படங்களுடன் அற்ப்புதமான பதிவு..
  நன்றி சகோ..

  ReplyDelete
 25. ஆன்மீக உலகம் said...
  சக்களத்துக்காவு பகவதி கோவிலின் படமே மனதை அமைதிபடுத்துகிறது... படங்களை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது பகிர்வுக்கு மிக்க நன்றி./

  ஆன்மீக உலகத்தின் உற்சாகமூட்டும் பரவசமான கருத்துரைகள் அனைத்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

  ReplyDelete
 26. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  அசத்தலான படங்களுடன் அற்ப்புதமான பதிவு..
  நன்றி சகோ..//

  அசத்தலான கருத்துரைகளுக்கு நிறைந்த நன்றிகள்.

  ReplyDelete
 27. வாவ் அந்த லிங்கில் சென்றால்... இமேஜ் ரொட்டேட் எஃபெக்டில் கோவிலை சுற்றி உள்ள படங்கள் வீடியோ எபெஃக்ட்டில் பேக்ரவுண்டில் பாட்டுடன் சூப்பரா இருக்கிறது... மிக்க நன்றி

  ReplyDelete
 28. புத்தகத்தில் படித்ததை விட, தொலைக்காட்சி மூலம் அறிந்து கொண்டதைவிட மிகத்தெளிவாக படத்துடன் விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 29. படங்களும் பதிவும் அருமை ஆனால் வழமையாக உங்கள் பதிவுகள் நீளமாக இருக்கின்றது..பதிவின் அளவை கொஞ்சம் குறைத்து...எழுதினால் சிறப்பாக இருக்கும்.....

  ReplyDelete
 30. சக்குலத்தம்மா பிள்ளையை காப்பாற்று

  ReplyDelete
 31. சக்குளம் அம்மன் கோவில் ஸ்தல புராணம் அருமை.

  அழகிய படங்களுடன் அருமையான பதிவு.நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 32. அருமையான ஆன்மிகப் பதிவு. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 33. செம அசத்தல் படங்கள்..

  ReplyDelete
 34. சூப்பர் படங்ககள்.புதிய தகவல்கள்.நன்று.

  ReplyDelete
 35. அருமையான பதிவு.
  அற்புதமான படங்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 36. அருமையான தகவல்களுடன் அழகிய படங்களும்!

  ReplyDelete
 37. சக்குளத்தம்மன் பெருமை அறிந்தேன். நல்ல படங்களுடன் மிக மகிழ்ச்சி. இறை ஆசி கிட்டட்டும். வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www,kpvaikkavi.wordpress.com

  ReplyDelete
 38. I had gone to this place. The eyes of the Devi.........
  I cannot forget it. So So powerfull. Thanks for the post dear.
  viji

  ReplyDelete
 39. உங்கள் பயணக் கட்டுரைகள் பற்றி இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்

  http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_09.html

  ReplyDelete
 40. ;) ஓம் பாலசந்த்ராய நம:

  ;) ஓம் ஸூர்பகர்ணாய நம:

  ;) ஓம் ஹேரம்பாய நம:

  ;) ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:

  ;) ஓம் வரஸித்தி விநாயகாய நம:

  ReplyDelete
 41. 1262+6+1=1269 ;)))))

  மகிழ்ச்சியுடன் அளித்துள்ள பதிலுக்கு நன்றிகள். ;)

  ReplyDelete