Wednesday, November 2, 2011

அச்சம் தீர்க்கும் அஞ்சு வட்டத்தம்மன்மின்னு லாவிய சடையினர் விடையினர் மிளிர்தரும் அரவோடும் 
பன்னு லாவிய மறையொளி நாவினர் கறையணி கண்டத்தர் 
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர் புகழ்மிகு கீழ்வேளூர் 
சீரு லாவிய சிந்தையர் மேல்வினை யோடிட வீடாமே.

-திருஞானசம்பந்தர்
 • கந்தசஷ்டியின் போது முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்து, பின் மிகவும் களைப்பாகி சோர்ந்து விடுகிறார். கொல்வது என்பது யாராயிருந்தாலும் ஹத்திதோஷம் பிடிக்கும். ஆகையால் பரமேஸ்வரன் ஆனாலும் அல்லது பரந்தாமன் ஆனாலும் அவர்களும் பரிகாரம் செய்துக்கொள்கின்றனர். 
 • முருகனும் ஹத்தி தோஷம் போக்க கீழ்வேளூர் என்ற இடத்திற்கு வந்தார். இது நாகப்பட்டினம் அருகில் இருக்கிறது. அழகான ஆறு ஒன்றும் அங்கு ஓடுகிறது. இங்கு இருக்கும் ஈச்வரன் அட்சயலிங்கர் க்ஷ்யம் ஒழிப்பவர், கெடுதலை ஒழிப்பவர், வியாதியை ஒழிப்பவர். 
 • மூலவர் கேடிலியப்பர்
 • [Gal1]
 • அம்பாள் பெயர் சுந்தரகுஜாம்பிகை.
 • [Gal1]
[Gal1]


[Gal1]
 • முருகன் இந்தத் தலத்திற்கு வந்து தன் வேலை ஊன்ற, அந்த இடத்திலிருந்து புனிதநீர் பீச்சியது, அதுவே தீர்த்தமானது. அந்த தீர்த்தத்தில் நீராடி, பின் தியானத்தில் அமர்ந்தார். 
 • பிரணவமே ஓதிய அழகன் தானே தியானத்தில் இருக்கிறார், அப்போதும் சூரசம்ஹாரக் காட்சிகள் அவர் தியானத்தைக் கலைத்தனவாம். தன் அன்னை உலகமாதாவை வணங்கினார், பின் வேண்டிக் கொண்டார், "தாயே, உலக நன்மைக்காக சூரசம்ஹாரம் செய்து விட்டு வந்தேன், ஆனாலும் என் மனம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறது, தாங்கள் தான் அருள் புரிய வேண்டும்".

 • முருகனைச் சுற்றிப்பல பயங்கர முகங்கள் தாண்டவமாடின, எல்லாம் பார்க்க முடியாதபடி கோர உருவங்கள். அன்னை இதைப் பார்த்தாள். தானும் அவைகளை விரட்டி அடிக்க தன்னை மிக்வும் கோரமாக்கிக்கொண்டார். 
 • எல்லா திசைகளிலும் தன் உருவத்தைப் பரப்பி ஒரு வேலி போல் போட்டு நின்றாள். அவள் பெயர் அஞ்சு வட்டத்தம்மன் ஆயிற்று. அவள் முழு வட்டமாக தன் உருவத்தை பரப்பி நின்று முருகனைக் காத்ததால் இந்தப்பெயர்.
 • அஞ்சு வட்டத்து அம்மன்
 • அந்த உருவத்தைக்கண்டு பிரும்மஹத்திகள் ஓடிப்போயின. 
 • முருகனும் தவத்தை முடித்து அருள் பெற்றார். 
 • இந்த இடம் கீழ்வேளூர் என்று ஆனது.தலவிருட்சம் இலந்தைநந்தி

குபேரன்
[Gal1]

[Image1]


39 comments:

 1. நள்ளிரவில் வெளியிட்டுள்ள நல்லதொரு பதிவு. முதன் முதலாகப் பின்னூட்டம் தர வேண்டும் என்ற ஆசையில் ஓடிவந்தேன். மீண்டும் பொறுமையாகப் படித்து விட்டு வருவேன். vgk

  ReplyDelete
 2. முதல் படத்தில் உள்ள அம்மன் அழகோ அழகு. உற்றுப்பார்த்து ரஸித்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து கண் சிமிட்டினாள். நான் மெய் சிலிர்த்துப் போய் விட்டேன்.

  அம்பாள் அனுக்கிரஹம் கிடைத்தது போன்ற பூரிப்படைந்தேன்.

  எப்படித்தான் இப்படிப்பட்ட மிகச் சிறப்பான படங்களைத் தேடிப்பிடித்துத் தந்து அசத்துகிறீர்களோ!

  மிக்க நன்றி!

  ReplyDelete
 3. இரண்டாவது படமும் கடைசிக்கு முந்திய படமும் கோபுர தரிஸனம் கோடி புண்ணியம் என்பார்கள். இல்லை உங்களால் இரண்டு கோடி புண்ணியம் கிடைக்கப்பெற்றோம்.

  கடைசிபடம் மிகவும் பளிச்சென்று உள்ளது.

  ReplyDelete
 4. அம்மன் பெயர் ’சுந்தரகுஜாம்பிகை’ அடடா! பெயரே சுந்தரமாக உள்ளதே!

  நடுவில் நடு நாயகமாகக் காட்டப்பட்டுள்ள அஞ்சுவட்டத்தம்மனின் முகத்தில் தான் எத்தனைப் பொலிவு?

  சமயபுரம் குளக்கரையில் வழுக்குமோ என்ற பயத்தில் ஒரு அம்மன் ஒரு கையைத்தரையில் ஊன்றி காலை மட்டும் நனைக்கக் குனிந்து, ஒரு அருள் பார்வை வீசினார்களே, அந்த ஞாபகத்தை வரவழைத்தது.

  ReplyDelete
 5. படங்கள் நன்று :)

  ReplyDelete
 6. அஞ்சு வட்டத்தம்மனின் கண்களில் ஒளி வீசுகிறது. வானவில் போன்ற பெரிய அழகிய புருவங்கள், கண் இமைகளின் மேலும் கீழும் உள்ள முடிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம் போல் உள்ளதே! செவ்விதழ்களுடன் கூடிய அழகான வாய், நெற்றித்திலகம் என அனைத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கணும் போல ஒரு ஆவலைத் தூண்டும் வசீகரமாக உள்ளது, அந்தப் படம்.

  நல்லதொரு பதிவு. அழகழகான படங்கள். அருமையான விளக்கங்கள். இதைப்படிப்பவர்களுக்கும் ஹத்தி முதலான அனைத்து தோஷங்களும் விலகட்டும். அமைதி நிலவட்டும்.

  பகிர்வுக்கு நன்றிகள், மேடம். vgk

  ReplyDelete
 7. முருகனும், அம்பாளும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 8. முதல் படம் ஆங்காரக் கோலம் ஆனால்
  கருணை பொங்கும் முகம்.
  படங்கள் வெகு அருமை சகோதரி.

  ReplyDelete
 9. பக்தி மணம் வீசுகின்றது

  ReplyDelete
 10. முருகனின் அழகு முகம்.பார்க்க கண்கோடி வேண்டும். நன்றி

  ReplyDelete
 11. @வை.கோபாலகிருஷ்ணன் said.../

  உற்சாகப்படுத்தும் அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 12. மழை said...
  படங்கள் நன்று :)/

  மழையின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 13. N.H.பிரசாத் said...
  முருகனும், அம்பாளும் அருமை. பகிர்வுக்கு நன்றி.//

  அருமையான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 14. மகேந்திரன் said...
  முதல் படம் ஆங்காரக் கோலம் ஆனால்
  கருணை பொங்கும் முகம்.
  படங்கள் வெகு அருமை சகோதரி./

  அருமையான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 15. DrPKandaswamyPhD said...
  ரசித்தேன்./

  கருத்துரைக்கு மகிழ்ந்தேன்..

  ReplyDelete
 16. K.s.s.Rajh said...
  பக்தி மணம் வீசுகின்றது//

  அருமையான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 17. விச்சு said...
  முருகனின் அழகு முகம்.பார்க்க கண்கோடி வேண்டும். நன்றி//

  அருமையான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 18. பொலிவுடன் கூடிய பதிவுக்கு நன்றிகள் மேடம்!

  ReplyDelete
 19. புண்ணியத்தல வரலாறுகளை அருமையாக எழுதி வருகின்றீர்கள். அவ்வரிசையில் இதுவும் சிறந்த பதிவு.

  ReplyDelete
 20. முதல் அம்மன் படன் மிக அழகு.ஸ்தல புராணக்குறிப்புகள் அருமை.

  ReplyDelete
 21. இனிய காலை வணக்கம் அம்மா,
  நலமா?

  அஞ்சுவடத்தம்மனின் பெருமைகளை ஆன்மீக உணர்வு கூட்டி அருமையாகச் சொல்லி நிற்கிறது இப் பதிவு.

  ReplyDelete
 22. வழக்கம் போல் அருமை!!

  இருந்தாலும் கிறுக்குப் பிடித்த மனதுக்கு ஒரு சின்ன சந்தேகம் - இறைவிக்கு கண் சிமிட்டுமா? தேவர்களுக்கு கண் சிமிட்டாது என்று நள-தமயந்தி கதையில் படித்ததாக ஞாபகம்! தவறாயிருந்தால் மன்னிக்க!

  ReplyDelete
 23. middleclassmadhavi said...
  வழக்கம் போல் அருமை!!

  இருந்தாலும் கிறுக்குப் பிடித்த மனதுக்கு ஒரு சின்ன சந்தேகம் - இறைவிக்கு கண் சிமிட்டுமா? தேவர்களுக்கு கண் சிமிட்டாது என்று நள-தமயந்தி கதையில் படித்ததாக ஞாபகம்! தவறாயிருந்தால் மன்னிக்க!/

  நிமிஷாம்பாள் அன்னை தன் கண்களை இமைத்தே அசுரர்களை சாம்பலாக்கியதாக வரலாறு உண்டு.

  அவள் இமையாமல் காக்கிறாள் தன் பக்தர்களை.

  அசுரர்களை தன் கண் இமைக்கும் சிறு செயலாலேயே அழிக்கும் வல்லமை பெற்றவள்..

  தவறாயிருந்தால் மன்னிக்க!//

  தவறென்ன தோழி இதில் நம்பும் முன் ஆயிரம் கேள்விகள் கேட்க வேண்டும்..

  சரணாகதிக்குப்பின் சந்தேகம் வரக்கூடாது..

  ReplyDelete
 24. http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_22.html
  நொடியில் கோடி வரமருளும் நிமிஷாம்பாள்

  இந்தப்பதிவைப் படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்..

  இமையோர்.. இமைக்கும் அவசியம் இல்லாதவர்கள் பகதனுக்காக இமைத்த பரம் தயாள அம்பிகை..

  ReplyDelete
 25. மிக அருமையா இருக்குங்க. இந்த கோவிலை பத்தி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 26. //சரணாகதிக்குப்பின் சந்தேகம் வரக்கூடாது//

  ஆஹா! அப்படியே சந்தேகம் ஏதும் இல்லாமல் சரணடைந்து விட்டேன் இந்த வரிகளில்.vgk

  ReplyDelete
 27. அருமையான பதிவு.
  அருமையான படங்கள்.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. பகிர்வுக்கு நன்றி சகோ..

  ReplyDelete
 29. சர்வம் சக்தி மயம்....!!!

  ReplyDelete
 30. அம்மன் அருள் பரிபூரணமாகக் கிடைக்கட்டும்!

  ReplyDelete
 31. This is the first time I am hearing this story and learning. ,
  Very nice pictures as usual and writeup.
  I enjoyed well.
  viji

  ReplyDelete
 32. அஞ்சுவட்டத்தம்மன்.பெயரைக் கேட்கவே ஒரு
  பயமும் பக்தியும் வருது !

  ReplyDelete
 33. கீழவேளுர் சென்று ஈஸ்வரனை தரிசிக்க வேண்டும் தகவலுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 34. சூரசம்ஹார நாயகன் முருகன் தியானம் செய்யும் போதே தீயசக்திகள் கலைக்க முற்படுகிறதென்றால்... நாமல்லாம் அற்ப மனிதர்கள்... நாம் எந்நேரமும் தியானம் செய்து கடவுளை நினைத்துகொண்டே இருந்தால் தான் இக்கலிகாலத்தில் கொஞ்சமாவது நிம்மதி அடைய முடியும் போல... அழகான செய்தி.. நன்றிகள்.

  ReplyDelete
 35. தாண்டவமாடிய தீய சக்திகளின் கோர உருவங்களை விரட்ட... தானும் கோர உருவம் எடுத்தாள் அஞ்சு வட்டத்தம்மன்.. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது... அஞ்சு வட்டத்தம்மனை வணங்கி தீயவர்கள் எதிர்க்க நாமளும் மாற வேண்டும்.. நல்லவனுக்கு நல்லவனாகவும்..கெட்டவனுக்கு கெட்டவனாகவும் மாறவேண்டும்... படங்களுடன் விளக்கங்கள் பயனுள்ளதாக இருந்தது... அஞ்சு வட்டத்தம்மனை வணங்குவோம்.

  ReplyDelete
 36. ;) ஓம் பாலசந்த்ராய நம:

  ;) ஓம் ஸூர்பகர்ணாய நம:

  ;) ஓம் ஹேரம்பாய நம:

  ;) ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:

  ;) ஓம் வரஸித்தி விநாயகாய நம:

  ReplyDelete
 37. 1246+7+1=1254 ;)

  குட்டியூண்டு பதிலுக்கு நன்றி.

  ReplyDelete