Monday, November 21, 2011

பாலுண்ணி போக்கும் பால்வண்ண நாதர்
ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே 
ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய
ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றாலும் சிறப்புறத் திகழும் தலம் கரிவலம்வந்தநல்லூர்.

நெல்லை மாவட்டம், சங்கரன் கோவிலிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியில், பதினோரு கிலோமீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது இத்தலம்.


இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் அருள்மிகு பால்வண்ண நாதர் என்றும்; இறைவி அருள் மிகு ஒப்பனையம்மை என்றும் அழைக்கப் பெறுகின்றனர்.


தம்பிரான் தோழர் என்றழைக்கப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்தை மிகச்சிறப் பாகப் போற்றிப் பாடியுள்ளார். இத்தலத்திற்கு சிவசக்திபுரம், அமுதாசலம், சிவன்முக்திபுரி, கரிபுரம், அம்பரபுரம், திருக்காளவனம் போன்ற பெயர்களும் உள்ளன.

சாபத்தின் காரணமாக இந்திரனும் அவன் மகன் ஜெயந்தனும் பூவுலகில் வேடுவர் குலத்தில் பிறந்தபோது அவர்கள் காளவனத்தில் வேட்டையாட வந்தபோது பால் வண்ண நாதரின் லிங்கத் திருமேனியைக் கண்டு பக்தியுடன் வழிபட்டுவரத் தொடங்கினர். 

அப்போது வாயு, வருணன், குபேரன், காமதேனு, விஞ்ஞையர், சித்தர்கள் உள்ளிட்டோரும் மிருகங்களாகத் தோன்றி இறைவனை வணங்கி வந்தனர்.

இந்திரனின் வாகனமான ஐராவதம் என்னும் யானையும் அங்கு வந்து பால் வண்ண நாதரைப் பூஜித்து வந்தது. அவர்கள் பூஜையில் மகிழ்ந்த இறைவன் அனைவருக்கும் சாபவிமோசனம் கொடுத்து நற்கதி அருளினார்.
கரி என்றால் யானை. இந்திரனின் யானை வழிபட்டமையால் இத்தலம் கரிவலம் வந்த நல்லூர் எனப் பெயர் பெற்றது.

"
" தென்பாண்டி நாட்டை  ஆண்ட வீரபராக்கிர புத்திரன் வீரபாண்டியன் மன்னனுக்கு  வரதுங்கன், அதிவீரன் என்னும் இரு புதல்வர்களில்  இளைய மகன் அதிவீரனை தென்காசி மன்னன் காசி கண்ட பராக்கிர பாண்டியனுக்கு சுவீகாரம் கொடுத்து விட்டான் வீரபாண்டியன். 

மூத்த மகன் வரதுங்கன் உரிய பருவம் அடைந்ததும் அவனுக்குப் பட்டம் சூட்டி, அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களில் பிறந்த 27 பெண்களைத் திருமணம் செய்து வைத்தும் பிள்ளைப் பேறின்றித் துன்புற்றான் வரதுங்கன்.
"தனக்கு கொள்ளி வைக்கக்கூட ஒரு மகனில்லையே' என்று ஈசனிடம் மனமுருக வேண்டி நின்றான் பால்வண்ண நாதரின் பக்தனான வரதுங்கன் ....

"இப்பிறவி யில் உனக்கு பிள்ளைப்பேறு இல்லை. எனினும் உன் உயிர் பிரிந்தபின் நானே உனக்கு மகனாக இருந்து கொள்ளி வைக்கிறேன்' 
என்று கூறினார்.அவன் கனவில் தோன்றிய ஈசன்....


அதனால் மனநிறைவுற்ற மன்னன் மிகச் சிறப்பாக அரசாட்சி நடத்தி அறவாழ்க்கை வாழ்ந்து தன் இறுதிக்காலம் நெருங்கிய போது தனது செல்வங்கள் அனைத்தையும் பால்வண்ண நாதர் ஆலயத்திற்கு எழுதி வைத்துவிட்டு உயிர் துறந்தான்.

அப்போது ஈசனே மகன் வடிவில் அங்கு வந்து, ஒரு தந்தைக்கு மகன் செய்யும் ஈமக்கிரியை கள் அனைத்தையும் வரதுங்கனுக்குச் செய்து முடித்தார்; முக்தியும் அளித்தார். எப்பேர்பட்ட அற்புதம் நடந்து பூமி இது'!' 

பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை தேவர்கள் உண்டுவிட்டதால், அமிர்தம் கிடைக்காமல் வருந்திய அசுரர்கள் தங்கள் குருவான சுக்ராச்சாரியாரிடம் சென்று முறையிட்டனர். 

உடனே சுக்ராச்சாரியார் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு ஒரு பால் தடா கத்தை உருவாக்கினார். ஈசன் அசுரர் களின் இன்னலைப் போக்குவதற்காக அந்தப்   பால் தடாகத்திலிருந்து ஜோதி வடிவமாய் வெளிப்பட்டு சிவலிங்கத்தில் கலந்தார். 


சிவலிங்கம் பால் வண்ணமாகி யது; பால் தடாகம் நீர் வண்ணமாகியது. இதன் காரணமாகவே இத்தல ஈசன் பால்வண்ண நாதர் என்றும்; இங்குள்ள தடாகம் சுக்கிர தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகிறது.

""ஈசனின் திருக்கல்யாணத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் கயிலைக்குச் சென்றதால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதைச் சமன் செய்யும் பொருட்டு தென்னகம் வந்த அகத்தியர் மீண்டும் திரும்பிச் செல்லும்போது இத்தலம் வந்து ஸ்ரீசக்கர பீடத்தை அமைத்தார்.

48 நாட்கள் விரதமிருந்து, பௌர்ணமி நாளில் ஸ்ரீசக்கர பீடத்திற்கும் பாலாபிஷேகம் செய்தால், திருமணத் தடை, குடும்பப் பிரச்சினை போன்ற எல்லா துன்பங்களும் நீங்கும். நல்ல மகப்பேறும் வாய்க்கும். அவ்வாறு நலமடைந்த பக்தர்கள் பலருண்டு.
சிலருக்கு முகம் மற்றும் இதர பகுதிகளில் திட்டுத் திட்டாக பாலுண்ணி நோய் இருக்கும். அத்தகையவர்கள் ஈசனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பாலை பக்திச் சிரத்தை யுடன் பூசி வந்தால் அந்த நோய் நீங் கும். இதுவும் பலரது அனுபவத்தில் கண்ட உண்மை!'
அமிர்த வடிவாய் விளங்கும் பால்வண்ண நாதரை வழிபட்டால் விலகாத துன்பம் இல்லை!

 

சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு 
அபாயம் ஒருகாலும் இல்லை 
ஓம் நம: சிவாய ஓம் ஹ்ரீம் நம

ஸ்ரீ ருத்ர காயத்ரீ

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்
24 comments:

 1. As usual Very Good Post.
  Good message with Beautiful pictures.
  Thanks for Sharing.
  vgk

  ReplyDelete
 2. அழகான கருத்துரைக்கு
  மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 3. படங்கள் மிக அருமை மேடம்

  ReplyDelete
 4. பால்வண்ண நாதர் பற்றி அறிந்து கொண்டேன்


  ஓம் நம சிவாய

  ReplyDelete
 5. அழகான படங்கள்...கூடவே விளக்கமும்...அருமை..சகோதரி....

  ReplyDelete
 6. பார்த்து, ரசித்தேன்.

  ReplyDelete
 7. மிக அருமையான பதிவு. எனக்கு இது முற்றிலும் புதிய பகிர்வு மிக்க நன்றி..

  ReplyDelete
 8. ஆஹா இன்று கார்த்திகை திங்கள்.அனைத்து சிவன் கோவில்களிலும் விஷேசமான நாள்.சிவ பெருமானை தரிசிக்க வைத்தமைக்கு நன்றி.

  தங்கள் அழைப்பினை ஏற்று மழலைகள் உலகம் மகத்தானது தொடர் பதிவை வெளியிட்டுள்ளேன்.என் தளத்திற்கு வருக வருக என அழைக்கிறேன்.

  இன்று தங்கள் பதிவிற்கு வரும் அனைத்து வாசகர்களுக்கும் என் வலைதள வருகைக்கு அழைப்பினை தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 9. புதிய தகவல்கள் அருமையான படங்கள்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 10. பால் வண்ணநாதர் பற்றிய நல்ல பதிவு.

  ReplyDelete
 11. படங்கள் அனைத்தும் அருமை... சகோ...

  ReplyDelete
 12. கடைசிப் படம் அப்படியே மனதுக்குள் ஊடுருவிப் பாய்கிறது
  சகோதரி...
  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 13. வழக்கம் போல அருமையான படங்களுடன், அசத்தலான ஆன்மீகப் பதிவு..

  ReplyDelete
 14. நல்ல பகிர்வு.

  ReplyDelete
 15. அசத்தலான் படங்களுடன் பதிவு அருமை. பால்வண்ண நாதரின் அருள் பெற்றேன். நன்றி

  ReplyDelete
 16. மனம் கவரும் படங்களுடன் முழுமையான தகவல்கள் நன்று

  ReplyDelete
 17. கரிவலம் வந்த நல்லூர் சென்றிருக்கிறேன். ஆனால் கோவிலைப் பற்றிய தலவரலாறு உங்களது பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.
  கோவிலைப் பற்றி இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. மிகப் பெரிய கோவில்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. பால் வண்ண நாதர் போற்றி போற்றி ... பால் வண்ண நாதரை வணங்குவோம்.

  ReplyDelete
 19. பால் வண்ண நாதரை வணங்கி துன்பமில்லா வாழ்வை வாழ்வோம்... ஓம் நம சிவாய.

  ReplyDelete
 20. ஸ்ரீ சக்கர பீடம் என்பது? எதை குறிக்கிறது சகோ!

  ReplyDelete
 21. 1374+2+1=1377 ;)

  பதிலுக்கு நன்றி.

  ReplyDelete