Friday, November 11, 2011

ஸ்ரீலட்சுமி சிங்கிரிகுடி சிம்மன்

                                      


ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே 
விஷ்ணு பத்ந்யை தீமஹி 
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்’ 


என்பது ஸ்ரீமகாலட்சுமியின் காயத்ரி. இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து,  ஆராதித்தால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம்..


வாளொடு தோளும், கையும், மகுடமும், மலரோன் வைத்த
நீளிருங் கனக முட்டை நெடுஞ்சுவர் தேய்ப்ப, நேமி
கோளடும் திரிவது என்ன, குலமணிக் கொடும்பூண் மின்ன,

தாளினை இரண்டும் பற்றிச் சுழற்றினன் தடக்கை ஒன்றால்.

கம்பர் வருணித்தபடி
கடலூர் மாவட்டம் சிங்கிரி குடியில், 16 திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் உக்கிரமாக அருள் பாலிக்கிறார்.
ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.
"நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை' என்னும் வாக்கிற்கு ஏற்ப, சரணடைந்த உடனேயே அருள்பாலிப்பவர் 
திருவோணத்திருவிழவில் 
அந்தியம் போதிலரியுருவாகி அரியையழித்தவன்


ராஜராஜ சோழன் மற்றும் விஜயநகர மன்னர் களால் திருப்பணி செய்யப்பட்ட கோயில் இது. 

ஐந்து நிலை, ஏழு கலசங்களுடன் மேற்கு பார்த்த ராஜகோபுரமும், மிகப்பெரிய கொடி மரமும் உள்ளது.

தாயார் கனகவல்லி தனி சன்னதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். 

பிரகாரத்தில் ராமர், ஆண்டாள், கருடன், விஷ்வக்சேனர், 12 ஆழ்வார்கள், மணவாள மாமுனிகள், தும்பிக்கை ஆழ்வார், விஷ்ணு துர்க்கை, ஆஞ்சநேயர் ஆகியோர் தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.

அகோபிலம் 4வது ஜீயரின் பிருந்தாவனம் உள்ளது. 

திருவிழா காலங்களில் கோயிலின் பின்புறம் உள்ள பத்து தூண் மண்டபத்தில் தாயாருக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 

வைகானஸ ஆகமப்படி பூஜை நடக்கிறது.

மன நிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 

வேண்டுதல் நிறைவேற செவ்வாய்க் கிழமைகளில் நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.

 பிரகலாதனின் விருப்பப்படி நரசிம்மர், மூலஸ்தானத்தில் 16 திருக்கரங் களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் மிகப்பிரமாண்டமாக அருள் பாலிக்கிறார்.

இரணியனை மேற்கு பார்த்து நின்று நரசிம்மர் வதம் செய்ததைக் குறிக்கும் வகையில் ,  மேற்கு பார்த்த நிலையில் உள்ளார்.

நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர்.

வடக்கு நோக்கி சிறிய வடிவில் யோக நரசிம்மர், பாலநரசிம்மர் ஆகியோரும் உள்ளனர். 

இவ்வாறு ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதை காண்பது அரிது.

இவ்வகை அபூர்வ நரசிம்மர் தலங்கள் ராஜஸ்தானிலும், 
தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார்கள்.
 
மற்ற நரசிம்மர் தலங்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப் படும் தலம் 

உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பாவன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
மூலவர் நரசிம்மர்
[Gal1]
நரசிம்மர் தன் 16 திருக்கரங்களில் பதாகஹஸ்தம், பிரயோக சக்கரம், க்ஷீரிகா எனப்படும் குத்து கத்தி, பாணம், சங்கு, வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவை ஏந்தி யுள்ளார். 

மற்ற கரங்களால் இரணிய சம்ஹாரம் நடக்கிறது.

குடலைக் கிழிப்பது, குடலை மாலையாகப் பிடித்திருத்தல், இரணியனின் தலையை அழுத்தி பிடித்திருப்பது ஆகிய சாகசங்களைச் செய்கிறார்.
ஓம் நமோ நாராயணாய! 
ஓம் நமோ நாராயணாய!! 
ஓம் நமோ நாராயணாய!!!
ஆண்டாள்
[Gal1]


கனகவல்லி தாயார்
[Gal1]
ராமர்
[Gal1]

Ugra Narasimhar on the Rajagopuram
Inner Mandapam26 comments:

 1. படங்களும் விளக்கங்களும் எப்பவும்போல.நரசிம்மன் படம் பயமாத்தான் இருக்கு !

  ReplyDelete
 2. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. கோயிலின் சிறப்புகள் படங்கள் அருமை.

  ReplyDelete
 4. முதல் தரிசணம்

  படங்கள் மிக தெளிவாக இருக்கு சகோ

  ReplyDelete
 5. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. படங்களுடன் அருமையான பதிவு நன்றி மேடம்!

  ReplyDelete
 7. மிகவும் அழகான பதிவு.

  கோயில் கோபுரங்கள் பலவும் அருமையாக பளிச்சென்று காட்டப்பட்டுள்ளன. பார்த்ததுமே பரவசம் ஏற்படுகிறது.

  ReplyDelete
 8. கடைசியில் காட்டியுள்ள கலர் கலரான டைமன் கோலம் நல்ல அழகு தான்.
  பளிச் பளிச் தான்.

  ReplyDelete
 9. இடையிடையே 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இங்கு மின்தடை ஏற்பட்டு பாடாய்ப் படுத்துகிறது.

  மணிகள் கட்டியுள்ள உயரமான த்வஜஸ்தம்பம் போன்ற தூணும் அருகே பெரியதாக்கிக் காட்டியுள்ள கருடாழ்வார் சிலையும் அற்புதம்.

  கருடன்+ஸ்ரீசக்ரம்+நாமம்+சங்கு+ஹனுமன் காட்டியுள்ள நுழைவாயிலின் டாப் ரொம்ப டாப் தான்.

  ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் காயத்தி மந்திரத்துடன் கூடிய துவக்கம் வெள்ளிக்கிழமைக்கு நல்ல பொருத்தம்.

  ஆங்காங்கே தங்களின்
  அருமையான விளக்கங்கள், வழக்கம்போல மிகச்சிறப்பு தான்.

  கோயில் கோபுரச்சிலைகள் யாவும் பேசுவதாக உயிர்ப்புடன் விளங்குகின்றன.

  அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்.
  பகிர்வுக்கு நன்றிகள். vgk

  ReplyDelete
 10. பகிர்வுக்கு நன்றி

  சின்கிரி குடி, பூவரசன்குப்பம், பரிக்கல் ஆகிய நேர்க்கோட்டில் அமைந்த இந்தத் தலங்களை இதே வரிசையில் சேவித்தல் சிறப்பு

  ReplyDelete
 11. கோயிலின் சிறப்புகள் படங்கள் அருமை.  இதுவரை தெரிந்திராத பல கோவில்கள் தரிசனம்.

  ReplyDelete
 12. படங்களும் பதிவும்
  மனதில் குடிகொண்டுவிட்டன சகோதரி...

  இன்றைய சிறப்பு தினத்தில் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும்
  வாழ்வில் எல்லா நலனும் பெற்று இன்புற்றிருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக...

  ReplyDelete
 13. இவ்வளவு தகவல்களையும், புகைப்படங்களையும் நீங்க திரட்டி தருவது, எனக்கு வியப்பை அளிக்கிறது. அருமை.

  ReplyDelete
 14. நரசிம்மரின் படங்கள் எல்லாம் உயிர்ப்புடன் அருள் பாலிக்கின்றன.

  சிங்கிரிகுடி இறைவனை தரிசிக்க ஆசை வந்து விட்டது.

  நன்றி.

  ReplyDelete
 15. படங்களும் விளக்கங்களும் மிக் மிக அருமை
  குறிப்பாக கோபுரங்களின் படம்
  அருமையான பதிவைத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 16. படங்களும் விளக்கங்களும் எப்பவும் போல அருமை...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 17. நல்ல படங்கள்.சிங்கிரிக்குடி பார்க்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறது.

  ReplyDelete
 18. வழக்கம்போல் அருமையான படங்களுடன்,மங்களகரமான பதிவு!

  ReplyDelete
 19. அருமையான படத்தொகுப்பு

  http://sparkkarthikovai.blogspot.com/2011/11/002.html#comments

  ReplyDelete
 20. அருமை !...படங்களைப் பார்த்தாலே போதும் கோவிலுக்குப் போன
  உணர்வு தன்னாலே வரும்படி செய்துள்ளீர்கள் .வாழ்த்துக்கள் சகோ
  மிக்க நன்றி பகிர்வுக்கு .......

  ReplyDelete
 21. கோவில் படங்களுடன் கோயில் இருக்கும் இடத்தையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லி ஐஸ்வர்யம் பெருவோம்... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. எனக்கு ஒரு சந்தேகம்? இத்தனை போட்டோக்களை எப்படி சேகரிக்கிறீர்கள்? எங்கு சேமித்து வைக்கிறீர்கள்?

  ReplyDelete
 23. சிங்கிரிக்குடி அருமையான பகிர்வு.

  ReplyDelete
 24. ;) ஓம் ஸுமுகாய நம:

  ;) ஓம் ஏகதந்தாய நம:

  ;) ஓம் கபிலாய நம:

  ;) ஓம் கஜகர்ணகாய நம:

  ;) ஓம் லம்போதராய நம:

  ReplyDelete