Sunday, November 20, 2011

மழலைகள் உலகம் மகத்தானது


Cute Romantic Babies

Animated Baby
குழந்தைகள் தினம்
Children's Day India
"இந்தியாவில் ஆசிய ஜோதியாக, ரோஜாவின் ராஜாவாக, குழந்தைகளின் அன்புக்குரிய நேருமாமாவாக,சாச்சா நேருவாகத் திகழ்ந்த ஜவகர்லால் நேரு பிறந்த நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடுகிறார்கள் 
Cute Romantic Babies
குழந்தைகள் மீதான நேருவின் அன்பை நினைவுகூறும் வகையில் தான் அவரது பிறந்த தினம்குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 
 குழந்தைகள் பற்றி நேரு குறிப்பிட்ட போது, ""குழந்தைகளுக்கு பாதுகாப்பான அன்பான சூழ்நிலையை அளித்து, அவர்கள் வளர்ந்து வரும் வேளையில் சமமான வாய்ப்புகளை வழங்கும் போதுதான் அவர்கள் தேசத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்பவர்களாக வளர்வார்கள்'' என்றார். குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தனர். 
நேரு இயற்கையிலேயே குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்டவர். அத்துடன், முதல் பிரதமரானதால் சுதந்திர இந்தியாவின் பெருமை மிகு குழந்தையாக நேருவைத் தலைவர்கள் போற்றினர். இதன் காரணமாகவே அவரது பிறந்த நாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பள்ளி மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாறுவேடப் போட்டிகள் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இந்த தினத்தில் நடைபெறும். இந்த தினத்தில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதிநிலை குறித்து அரசு தரப்பில் அறிவுறுத்தப்படும்.

குழந்தைகள் நாள் (Children's Day) உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
Mega Children’s Day at Kristu Jyoti College (Bangalore)
அனைத்துலக குழந்தைகள் நாள் (Universal Children's Day) டிசம்பர் 14, 1954 இலிருந்து, ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் 20 அன்று கொண்டாடுகின்றன. 
Bus
இறைவன் படைத்த படைப்பில்..அருமையானது குழந்தை பருவம்!!

ஓடி விளையாடு பாப்பா,- நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா,- ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா.-------

என்று குழந்தைகளுக்காக பாப்பா பாட்டு படியவர் பாரதியார்..
JRope
வருங்கால இந்தியாவின் தூண்கள் குழந்தைகள் 

தீரச் செயல் புரியும் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு வீர விருது அளித்து கெளரவிக்கிறது.
குழந்தைகள்...விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் நேசிக்கப்படும் வெள்ளை உள்ளங்கள்! 
வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே! இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?” என்றார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

animated gif of weaponry - baby on seasaw
வெறும் புத்தகப்படிப்பை திணிக்காமல் வாழ்க்கைக் கல்வியும் அளிப்போம்...
புத்தகங்களே! ஜாக்கிரதை !!
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்!!!
animated gif of weaponry - baby reads
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் முக்கியமான அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே என்பதை யாராலும் மறுக்க முடியாது சிறு வயதில் அவர்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களை பொறுத்தே அவர்கள் பெரியவர்களானதும் அதன் விளைவுகள் தெரியவரும். எனவே சிறு வயது முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறையவே உண்டு. முக்கியமாக பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை மற்றும் அன்பு செலுத்துதல், சகிப்புத்தனமை மற்றும் பொறுமை போன்ற பல நல்ல பழக்கங்களை தங்களது குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்
animated gifs of babies- baby write using pencilanimated gifs of babies- baby climbs on stair animated gifs of babies- baby bunny
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே..!!

கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம் 
கடமை இருந்தால் வீரன் ஆகலாம் 
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம் 
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம் 
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்


orkutpix.com™orkutpix.com™
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்

அன்பில் உயர்ந்தவர் யாரு? வள்ளலார்
ஆமா.. வள்ளலார்
அறிவில் உயர்ந்தவர் யாரு?வள்ளுவர்
ஆமா.. வள்ளுவர்
பாட்டில் உயர்ந்தவர் யாரு?பாரதியார்
ஆமா.. பாரதியார்


மகிழ்ச்சியின் எல்லை
தேடலின் பொருள்
தெய்வத்தின் வரம்
அன்பின் ஊற்று
ஆனந்தப் பூங்காற்று
இன்பத்தின் பரிசு
ஈர்க்கும் சிரிப்புடன்
உவப்பின் உலகம்
ஊக்கத்தின் உற்சாகம்
என்றென்றும் கொண்டாட்டம்
ஏற்றிப் போற்றுவோம்
குழந்தையும் தெய்வமும் ஒன்று!!!"
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள்..
வாய் பேசிடும் புல்லாங்குழல்
வாழ்வின் வசந்தக்கடல் அல்லவா குழந்தைகள்!


 //அம்பாளடியாள் said...



வணக்கம் சகோதரி .தங்களை மழலைகள் உலகமே மகத்தானது என்னும் சிறப்புத் தொடரைத்

தொடர மிகவும் பணிவன்போடு அழைக்கின்றேன் .உங்கள் ஆக்கத்தைக் காண ஆவலுடன் .மிக்க நன்றி //
வல்லமை மின் இதழில் குழந்தைகள் தின சிறப்பு மலராக மலர்ந்த ஆக்கம்
மகத்தான மழலைகள் உலகத்திற்கும் பொருத்தமாக அமைந்ததால் பகிர்கிறேன்.. நன்றி..

Rain Graphic #17
தொடர அசாதாரண பன்முகத்திறமையாளரான 
திருவாளர் .வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களையும்
கவி அழகன் அவர்களையும் தொடரக் கேட்டுக்கொள்கிறேன்.

 தாமரை மதுரை.சந்திர வம்சம்  ,,,,அவர்களையும்


thirumathi bs sridhar  ஆச்சி ஆச்சி அவர்களையும் அன்புடன் தொடர அழைக்கிறேன்.. நன்றி..

JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codesJellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codesJellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codesJellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes

40 comments:

  1. VERY VERY BEAUTIFUL POST WITH CUTE PHOTOS. VERY HAPPY. THANKS FOR SHARING. vgk

    ReplyDelete
  2. குழந்தைகள்தினப்பதிவு அசத்தலான அனிமேசன் மற்றும் படங்களுடன் கண்ணைக் கவருகிறது.

    ReplyDelete
  3. Thanks for the kind invitation from my favourite Extraordinary Lady.
    I shall try for the same.

    From Very Ordinary man - vgk

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரம்..

    மீண்டுமொரு அருமையானதொரு படைப்பு.குழந்தைகளின் படங்கள் கலக்கல் தொகுப்பு..

    பாடல்கள் தேர்வும் கூட..

    நன்றி பகிர்விற்க்கு..

    ReplyDelete
  5. மிக மிக அருமையான புகைப்படங்கள், எழுத்துக்களுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது!

    ReplyDelete
  6. குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு எழுதப்பட்ட இடுகை அருமை. படங்களும் தேர்ந்தெடுத்துப் போடப்பட்ட படங்கள் அனைத்தும் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. படங்களுடன் பதிவு மிக மிக அருமை
    குழந்தை மனதுடைய பெரியவர்களாய்
    என்றும் இருக்க முயல்வோம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அம்பலத்தார் said...
    குழந்தைகள்தினப்பதிவு அசத்தலான அனிமேசன் மற்றும் படங்களுடன் கண்ணைக் கவருகிறது./

    அசத்தலான கருத்துரைக்கு நன்றி..

    ReplyDelete
  9. வை.கோபாலகிருஷ்ணன் said...
    Thanks for the kind invitation from my favourite Extraordinary Lady.
    I shall try for the same.

    From Very Ordinary man - vgk/

    அருமையாக கட்டுரை தொடர
    அன்புடன் ஏற்புரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  10. சம்பத் குமார் said...
    வணக்கம் சகோதரம்..

    மீண்டுமொரு அருமையானதொரு படைப்பு.குழந்தைகளின் படங்கள் கலக்கல் தொகுப்பு..

    பாடல்கள் தேர்வும் கூட..

    நன்றி பகிர்விற்க்கு../

    அருமையானதொரு கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  11. நம்பிக்கைபாண்டியன் said...
    மிக மிக அருமையான புகைப்படங்கள், எழுத்துக்களுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது!//

    அருமையான பொருத்தமான கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  12. cheena (சீனா) said...
    குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு எழுதப்பட்ட இடுகை அருமை. படங்களும் தேர்ந்தெடுத்துப் போடப்பட்ட படங்கள் அனைத்தும் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    நல்வாழ்த்துகளுடன்
    நட்புடன் அளித்த கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  13. Ramani said...
    படங்களுடன் பதிவு மிக மிக அருமை
    குழந்தை மனதுடைய பெரியவர்களாய்
    என்றும் இருக்க முயல்வோம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்/

    மனம் கவர்ந்த கருத்துரையுடன் வாழ்த்துரைக்கும் மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  14. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    அருமை.அருமை .அழகு./

    நன்றி! நன்றி!!

    ReplyDelete
  15. ராமலக்ஷ்மி said...
    அருமையான பதிவு.//

    அருமையான கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  16. அப்பப்பா கண்ணடிக்கும் குழந்தை கண்சிமிட்டும் குழந்தை பார்க்கப் பார்க்க ஆனந்தம் இனம் புரியா மகிழ்ச்சி சிறந்த நறுக்கு ஆக பாராட்டுகள்

    ReplyDelete
  17. நல்ல அலசல்... நல்ல பதிவு.. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  18. அழகான படங்களுடன் பதிவு ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  19. உண்மை தான். குழந்தைகள் நம்மை எப்போதும் மிக மகிழ்விப்பர்

    ReplyDelete
  20. அருமையான பகிர்வு,
    குழந்தைகளின் மகத்தான உலகத்தை உன்னதமான பல தகவல்களுடன் பகிர்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  21. குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

    படங்களும், பாடல்களும், கவிதையும், குழந்தைகளை எப்படிப் வளர்க்க வேண்டும் என்ற செய்திகளும் அருமை.

    ReplyDelete
  22. படங்களுடன் அருமையாக குழந்தைகள் தினம்பற்றி மிகச் சிறப்பாகச் சொன்னீர்கள் சகோதரி .என் வேண்டுகோளுக்கு
    இணங்கி தாங்கள் படைத்த இந்தச் சிறப்புப் பகிர்வுகண்டு உள்ளம் குளிர்கின்றது .வாழ்த்துக்கள் மிக்க நன்றி சகோதரி அருமையான படைப்பைத் தந்தமைக்கு..........

    ReplyDelete
  23. படங்களும,பதிவும் நல்லாயிருக்கு மேடம்.அழைப்பிற்கு நன்றி,விரைவில் தொடருகிறேன் மேடம்.

    ReplyDelete
  24. அழகிய படங்களுடன் அருமையான தகவல்கள் மேடம்.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  25. அருமையான படங்களுடன் நல்ல அலசல்...

    பகிர்வுக்கு நன்றி... சகோ..

    ReplyDelete
  26. cho cute... குழந்தைகளை பார்க்க பார்க்க என்ன ஒரு உற்சாகம்

    ReplyDelete
  27. //புத்தகங்களே ஜாக்கிரதை,
    குழந்தைகளை கிழித்து விடாதீர்கள்.//

    எவ்வளவு பெரிய சங்கதி..
    5 வார்த்தைகளில்..

    புத்தகங்களிடம் குழந்தைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளன!!

    ReplyDelete
  28. படங்கள் அசத்தல்! உங்ககிட்ட யாரும் போட்டிபோட முடியாது!

    ReplyDelete
  29. அழகிய படங்களுடன் அருமையான பகிர்வு.

    ReplyDelete
  30. அருமையான பதிவு .வல்லமை இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் .
    படங்கள் அசத்தல் .நானே குழந்தையாகிப்போனேன் அனிமேஷன் படங்களை பார்த்து

    ReplyDelete
  31. புத்தகங்களே,குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்.. எதிர்பாராத தாக்கம்.
    இந்தியாவின் 6-14 வயது வரையிலான மக்கள் தொகை இன்றைக்கு உலகிலேயே அதிகமானது. strategically இது ஒரு வளர்ச்சி ஆயுதம். அரசியல்வாதிகளும் அரசாங்கமும் பெற்றோர்களும் புரிந்து கொண்டால் சரி.

    ReplyDelete
  32. சிறப்பான படங்கள் சுவையான செய்திகள் உளப்பூர்வமான பாராட்டுகளும் நன்றியும் இதுவரை இந்த வலைபூ பக்தியைத்தான் தரும் என எதிர்பார்த்தால் இப்படிப்பட்ட சிறப்ப ஆக்கங்களும் பாராட்டுகள் நன்றி .

    ReplyDelete
  33. நல்ல படங்களுடன் கூடிய அருமையான் பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. ;)
    ஹரே ராம, ஹரே ராம,
    ராம ராம ஹரஹரே!
    ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண,
    கிருஷ்ண கிருஷ்ண ஹரஹரே!!

    ReplyDelete
  35. தங்களில் அன்புக்கட்டளை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_4556.html

    தங்களின் தகவலுக்காக மட்டுமே.

    >>>>>

    ReplyDelete
  36. 1369+3+2=1374 ;))

    இரண்டு பதில்களுக்கும் நன்றிகள்.

    ReplyDelete