Wednesday, November 16, 2011

செல்வ முத்துக்குமாரர்




சிவந்த கிரகமான செவ்வாயின் ஸ்தலம் வைத்தீஸ்வரன் கோவில்..

அங்காரகன்(செவ்வாய்) பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

சித்திரை நட்சத்திரக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று ஸ்ரீ அங்காரகனை வழிபட்டு வர ஏற்றம் பல உண்டாகும்.

எவ்வளவு சாதுர்யமாக விஞ்ஞானத்தை, ஆன்மிகத் தேனில் குழைத்துக் கொடுத்திருக்கிறார்கள் நம் பெரியவர்கள்!

நிலம் வாங்க, கடன் தொல்லை நீங்க, மூட்டு வலி குணமாக இவரை வணங்குவது சிறப்பு.

செவ்வாய் தோஷம் நீங்க, முருகன் வழிபாடு, கார்த்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது, துவரை, செப்பு பாத்திரம் ஆகிய பொருள்கள் தானம் செய்வது, அங்காரகனுக்கு அபிஷேகம் செய்து சிவப்பு நிற ஆடை அணிவித்து வழிபாடு செய்வது நல்லது.

செவ்வாய்க்கிழமைகளில் ஆடு வாகனத்தில் அங்காரகன் எழுந்தருள்வார். மருத்துவத்துறையில் படிப்பவர்கள் இங்கு வழிபாடு செய்ய ஏராளமாக வருகின்றனர்.

 அங்காரகனுக்கு ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும், அபிஷேகம் 
செய்து ஆலயம் முழுவதும் வலம் வருவார்கள்

முருகன் திருவடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

முருகனுக்கு முக்கியத்துவம் உள்ள தலம் என்பதால், இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமார சுவாமிக்கு தான்.

தினமும் காலையிலும், அர்த்தஜாம பூஜையின் போதும் முதலில் முருகனுக்கு பூஜை செய்த பிறகே, சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும்.

முத்துக்குமாசுவாமிக்கு தைமாதம் செவ்வாய்கிழமை ஆரம்பித்து 10 நாள் விழா நடக்கும். பங்குனியில் கோயிலின் பிரமோற்ஸவம் 28 நாள் நடைபெறும்.

வைத்தியக் கடவுள் தன்வந்தரியும், தமிழ்க்கடவுளாம் முருகன் முத்துகுமாரசாமியாகவும் எழுந்தருளியுள்ளனர்..

செல்வ முத்துக்குமாரர் : வைத்தியநாதருக்கும் தையல்நாயகிக்கும் செல்லப்பிள்ளையாதலால், இங்குள்ள முருகன்
"செல்வ முத்துக்குமாரர்' என அழைக்கப்படுகிறார்.

முருகன் செல்லக் குழந்தையானதால் அவரை தூங்க வைத்த
பின்புதான் சிவனுக்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறும்.

செல்வ முத்துக் குமாரராக இத்தலத்தில் முருகன் 
தன் தகப்பனாரைப் பூஜிக்கிறார். 

சூரபத்மனை அழிப்பதற்காக இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றுள்ளார்.


கண்ணொளியால் இருளகற்றிக் காப்பாற்றி சித்தமெல்லாம் நிறைந்திருந்து தன் சின்ன முல்லைச் சிரிப்பாலே பேரருளின் ஒரு துளியால் பித்தமெல்லாம் தெளிய வைக்கும் அன்னை தையல்நாயகி

வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்தபோது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைல நாயகி என்று பெயர் வந்தது.இங்கு மொத்தம் ஐந்து சந்நிதிகள் உள்ளன.

தங்க சித்திரமாய் முத்து நகை வடிவழகோடு வாதையெல்லாம் தீர்த்திடுவாள்
தாயின் வாஞ்சையுடன் அரவணைக்கும் அன்னை தைலநாயகி 

பச்சைக்கல்லாலான மரகத சிவலிங்கங்கள் தரிசித்தால் வாழ்வில் 
செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.

Maragatha Lingam


கற்பக விநாயகரை வழிபட்டால் 
கற்பகவிருட்சமாய் கோரிய வரம் அருள்வார்.

செவ்வாய் தோசம் உள்ளவர்கள் அங்காரகனை வழிபட்டால்
திருமண வரம் கிடைக்கப் பெறுவர் .

வைத்தியநாதசுவாமி சர்வ ரோக நிவாரணி.

இவரை வணங்கினால் தீராத பிணிகள் எல்லாம் தீரும்.

செல்வ முத்துக் குமரர் என்ற முருகப்பெருமானை வணங்கினால்
புத்திர பாக்கியம் தொழில் விருத்தி கிடைக்கும்.

தையல் நாயகி அம்பாளை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோசம் என்ற குறை நீங்கும்.

தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.

மகாலட்சுமிக்கு சன்னதி உள்ளது.

செல்வமுத்துக்குமாரர் சந்நிதியில் அர்த்தசாமபூஜையில் முருகனின் திருவடிகளில் சாத்தப்பெறும் நேத்திரப்படி சந்தனமும் திருநீறும் நோய்கள் தீர்க்க வல்லது.

மூலவர் வைத்தியநாத சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.

வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, திருமணவரம், குழந்தை வரம், தோச நிவர்த்தி ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

சுவாமிக்கு மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர்,இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் கண்கொள்ளாக்காட்சி..

மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி
மாறி யாடெ டுத்த சிந்தை யநியாய
மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி
வாரை யாயி னிப்பி றந்து இறவாமல்


வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎரித்து உன்றன்
வீடு தாப ரித்த அன்பர் கணமூடே
மேவி யானு னைப்பொல் சிந்தை யாகவேக ளித்துகந்த
வேளெ யாமெ னப்ப ரிந்து அருள்வாயே


காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
கால பாநு சத்தி யங்கை  முருகோனே
காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த
காளை யேறு கர்த்த னெந்தை யருள்பாலா


சேலை நேர்வி ழிக்க றம்பெ ணாசைதோளு றப்பு ணர்ந்து
சீரை யோது பத்த ரன்பி லுறைவோனே
தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த
சேவல் கேது சுற்றுகந்த பெருமாளே.


வைத்தீஸ்வரன் கோவிலுக்கே உரிய திருப்புகழ் பாடல்கள் பாடி பவரோக வைத்திய நாத பெருமாளை வணங்கினோம்.



தினமும் அர்த்த ஜாமத்தில் முருகனுக்கு முத்துகுமார சுவாமிகளுக்கு தீபாராதனை நடக்கும்.

புனுகு, பச்சை கற்பூரம், சந்தனம், எலுமிச்சை சாத்தி பன்னீர் புஷ்பம், பால் அன்னம், பால் நைவேத்தியம் இரவு 9 மணிக்கு விசேசமாக பூஜை நடத்தி வழிபடுகின்றனர்

தையல் நாயகிக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும்,சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.

கோளிலித்தலம் என்று அழைக்கப்படும் வைத்தீஸ்வரன் கோயிலில் நவக்கிரகங்கள் வக்கிரமில்லாமல் வரிசையாக ஈஸ்வரன் சந்நிதிக்கு பின்புறம் நோய்கள் தீர வேண்டி பிரார்த்தித்திருக்கும் காட்சியைக் காணலாம்.


அங்காரகனுக்குத் தனிச் சந்நிதி உண்டு.

மூல விக்கிரகத்தோடு உற்சவ விக்கிரகமான அங்காரகனும் உண்டு.
Vaitheeswaran Temple Photo - nataraja


Vaitheeswaran Koil wall painting





ganesh-statue-at-the-top-of-the-gopuram Vaitheeswaran Temple
Vaitheeswaran Temple Photo - ganesh statue at the top of the gopuram

Vaitheeswaran Temple Photo - detail of gopuram

27 comments:

  1. வைத்தியநாத சுவாமி சந்நிதி வாசலுக்குப்போனாலே மனசும் உடம்பும் புத்துணர்ச்சிபெற்ற மாதிரி இருக்கும் தையல்நாயகியின் அருள் பாலிக்கும் முகமும் அண்ணலின் சந்நிதியில் அவர்தம் அருள் நிறை விபூதியும் நம் வினை யாவையும் விலக்கி வியாதியின்றி வாழவைக்கும் ..நேர்த்தியான பதிவு புகைப்படங்கள்! ஆழ்ந்துபோனேன் நன்றி.

    ReplyDelete
  2. மிகவும் அழகிய சிறப்பான பதிவு.

    நேற்று யானையின் பின்னழகை மட்டுமே காட்டிய நீங்கள், அதே யானையின்? முன்னழகை இன்றாவது காட்டினீர்களே! நன்றி.

    பொறுமையாகப் படித்துவிட்டு நாளை வருவேன், பிராப்தம் இருந்தால்.

    vgk

    ReplyDelete
  3. அடடா!

    கிளியொன்று பறந்து வந்து இன்று என்னை முந்திக்கொண்டு விட்டதே.

    கிளி கொஞ்சும் பதிவல்லவா இது. அதனால் தானோ என்னவோ!!)))))

    ReplyDelete
  4. //எவ்வளவு சாதுர்யமான விஞ்ஞானத்தை, ஆன்மீகத் தேனில் குழைத்துக் கொடுத்திருக்கிறார்கள் நம் பெரியவர்கள்.// )))))))).

    தாங்கள் இதுபோலச் சொல்லியுள்ளது தான் அந்தத்தேனை விட எனக்கு இனிப்பாக ருசிக்கிறது.

    எதுவுமே யார் சொல்கிறர்கள் என்பது முக்கியமல்ல. என்ன சொல்கிறார்கள் என்பதே முக்கியம் என்பார்கள்.

    யார் சொன்னால் அழகாக மனதில் பதிவதாக இருக்கும் என்பதும் முக்கியம் என்பது எனது தனிப்பட்ட அபிப்ராயம்.

    மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
    சபாஷ்!

    ReplyDelete
  5. பச்சைக்கல்லால் ஆன மரகத லிங்கத்தை தரிஸித்தேன். மிக்க மகிழ்ச்சி.

    தொந்திப்பிள்ளையார் (கற்பக விநாயகர் அழகாக அமர்ந்திருக்கிறார். அருமையாகக் காட்டியுள்ளீர்கள்.
    கோபுர உச்சியில் முரட்டு மீஞ்சூரு மீது அமர்ந்துள்ள தொந்திப்பிள்ளையாரையும் அருமையாகக் காட்டியுள்ளீர்கள்.

    ReplyDelete
  6. எல்லாப்படங்களும் மிக அருமையாக உள்ளன.

    குணசீலம், மாந்துறை, சமயபுரம் தவிர நான்காவதாக இந்தக்கோயிலையும் என் முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர்.

    பலமுறை குடும்பத்துடன் சென்று வந்துள்ளேன். 5 சந்நதிகளிலும் அர்ச்சனை செய்து விட்டு வருவதுண்டு.

    இந்த மாதமே குடும்பத்துடன் போய்வர
    திட்டமும் போட்டுள்ளோம். பிராப்தம் எப்படியோ! ஒருவேளை போனால் நிச்சயம் உங்களை நினைத்துக்கொள்வேன். இந்த தங்களின் அழகான பதிவையும் நினைத்துக்கொள்வேன்.

    இத்துடன் எங்கள் குலதெய்வக் கோயில்கள்+கிராம தேவதை கோயில் அனைத்தையும் என் வேண்டுகோளுக்கு இணங்க பதிவிட்ட தாங்கள் இன்று என் முன்னோர்கள் வழிபட்ட இஷ்ட தெய்வமான வைதீஸ்வரன் கோயிலையும் பதிவாக வெளியிட்டு பரவசப்படுத்தி விட்டீர்கள். மிகவும் சந்தோஷம். நன்றி, நன்றி, நன்றி.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  7. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    அடடா!

    கிளியொன்று பறந்து வந்து இன்று என்னை முந்திக்கொண்டு விட்டதே.

    கிளி கொஞ்சும் பதிவல்லவா இது. அதனால் தானோ என்னவோ
    ///

    <<<<<:):)கிளிக்கு ரெக்கைமுளைச்சி்ட்டது அதான் பறந்துவந்துடுத்து உங்களுக்கு முன்னாடி வை கோ ஸார்!!!

    ReplyDelete
  8. இன்றைய உலகில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை ஆரோக்கிய குறைபாடுதான்! அதை போக்கும் ஆன்மீக வழிபாட்டுஸ்தலம் பற்றி குறிப்பிட்ட பதிவு மிகவும் சிறப்பு! வைத்தீஸ்வரர், முருகன்,அங்காரகன்,அனைவரின் சிறப்பையும் அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள்!

    ReplyDelete
  9. மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  10. வைத்யனாத சுவாமி கோவில் பற்றி நிறைய தகவல்கள் அறிந்து கொள்ள உதவியது. நன்றி.

    ReplyDelete
  11. நான் உங்கள் தளத்திற்கு நீங்கள் போடும் படங்களை பார்க்கவே அதிகம் வருவேன் மிகவும் சிறப்பாக இருக்கும் இன்றும் அப்படியே முதலாவது படமே மனதை கவர்ந்துவிட்டது

    ReplyDelete
  12. செல்வமுத்து குமரன் தரிசனம், மரகத லிங்க தரிசனம் மனதுக்கு இதமாய் இருந்தது.

    படங்கள் எல்லாம் அற்புதம்.

    ReplyDelete
  13. ஷைலஜா said...
    ///வை.கோபாலகிருஷ்ணன் said...
    அடடா!

    கிளியொன்று பறந்து வந்து இன்று என்னை முந்திக்கொண்டு விட்டதே.

    கிளி கொஞ்சும் பதிவல்லவா இது. அதனால் தானோ என்னவோ
    ///

    //<<<<<:):)கிளிக்கு ரெக்கைமுளைச்சி்ட்டது அதான் பறந்துவந்துடுத்து உங்களுக்கு முன்னாடி வை கோ ஸார்!!!//

    எனக்கு மிகவும் பிடித்த [சிவாஜி இரட்டை வேடங்களில் நடித்த] படமான ”கெள்ரவம்” என்ற படத்தில் சீனியர் சிவாஜி இதே போல் ‘கிளிக்கு ரெக்கை முளைச்சுடுச்சோள்யோ, அதான் ஆத்தை (வீட்டை விட்டு)விட்டு பறந்து போயிடுச்சு’ என்று தன் மனைவியிடம், ஜூனியர் சிவாஜியைப்பற்றி சொல்லுவார். அந்த ஞாபகம் வந்தது. மகிழ்ந்தேன்.

    கிளி எனக்கு மிகவும் பிடித்தமான பறவை. பார்த்தாலே சந்தோஷமும், பரவசமும் ஏற்படுத்தக்கூடியது. அதுபோலவே கிளிவந்து உட்கார்ந்து முதன் முதலில் பின்னூட்டம் கொடுத்ததில், எனக்கு மட்டுமல்ல, பதிவிட்டவர்களுக்கும் சந்தோஷமே ஏற்பட்டிருக்கும். அதிலும் எனக்கு மிக மிக சந்தோஷமே! என் சந்தோஷத்தை விட என் மனதுக்குப்பிடித்தமான பதிவரின் சந்தோஷமே எனக்கு மிக அதிக சந்தோஷத்தைக் கொடுக்கும்.

    கிளி வந்து அமர்ந்த வேளை, அவர்களின் சிறுகதைக்கு போட்டியொன்றில் பரிசு வேறு கிடைத்துள்ளது. இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கும்.

    கிளிக்கு என் நன்றிகள்!

    அன்புடன் vgk

    ReplyDelete
  14. ரெண்டாவது படமும், லிங்கமும் மிக மிக அருமை.

    ReplyDelete
  15. அழகான படங்களுடன்...குறிப்பா அந்த யானை நண்பனின் ஆசிர்வாதம்...பதிவு அருமைங்கோ!

    ReplyDelete
  16. படங்களும் பதிவும் ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  17. அருமையான படங்கள்.. அந்தத் தெப்பக்குளம் ரொம்ப அழகாருக்கு..

    ReplyDelete
  18. செல்வ முத்துக்குமரனை கண்டு களித்தேன்.

    படங்களுடன் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  19. அசத்தல் படங்களுடன் ஒரு பதிவு..
    பகிர்வுக்கு நன்றி சகோ..

    ReplyDelete
  20. விஞ்ஞானத்தை ஆன்மிகத் தேனில் // ஆமாம்.

    ReplyDelete
  21. சவால் சிறுகதைப் போட்டியில் ஒருவித சவாலுடன் கலந்துகொண்ட தங்கள் சிறுகதைக்கு பரிசு கிடைத்துள்ளதற்கு, என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    மேலும் பல வெற்றிகள் தொடர்ந்து பெற்றிட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    அன்புடன் vgk

    ReplyDelete
  22. அருமையான படங்களும் பதிவும் மனதை கொள்ளை கொண்டது, பக்தியில் பரம திருப்தியானது மனம்

    ReplyDelete
  23. வணக்கம் சகோதரி .தங்களை மழலைகள் உலகமே மகத்தானது என்னும் சிறப்புத் தொடரைத்
    தொடர மிகவும் பணிவன்போடு அழைக்கின்றேன் .உங்கள் ஆக்கத்தைக் காண ஆவலுடன் .மிக்க நன்றி
    இன்றைய உங்கள் ஆக்கத்திற்கு என் பாராட்டுகள் .
    http://rupika rupika.blogspot.com/2011/11/blog-post_16.html#comment-form

    ReplyDelete
  24. http://muruganirukkabayamen.blogspot.com/

    http://omsaravanabhavasecurities.blogspot.com/

    ReplyDelete
  25. http://muruganirukkabayamen.blogspot.com/

    http://omsaravanabhavasecurities.blogspot.com/

    ReplyDelete
  26. ;)
    ஹரே ராம, ஹரே ராம,
    ராம ராம ஹரஹரே!
    ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண,
    கிருஷ்ண கிருஷ்ண ஹரஹரே!!

    ReplyDelete