Thursday, December 18, 2014

லிங்கா -பிரமிக்கவைக்கும் சுற்றுலா..!
ஆஸ்திரேலியாவில் குவீன்ஸ்லாந்து பல்கலைகழக வளாகத்தில்
லிங்கா படம் பார்க்கச்சென்றிருந்தோம்..

ரஜினியின் எந்திரன் படம் வெளியான நேரத்திலும் இதே யுனிவர்சிடியில் பார்த்த நினைவலைகள் மலர்ந்தன.

டிக்கெட் விலை 25 டாலர்கள்..

எவ்வளவு உயரத்துல வாழ்ந்தாலும் நாம படுக்குறதுக்கு தேவை
நம்ம உயரம் அளவுக்குத்தான்..
.
ஒரு காரியம் நடக்க ஆயிரம் பேர் துணையா இருக்கலாம்..
ஆனால், ஒரே ஒரு எதிரி தான் காரணமாக இருப்பான்!”

இந்தியர்கள்ன்னு யாரெல்லாம் நினைக்குறாங்களோ அவங்க வந்தா போதும்..

எங்க இருந்தாலும் தன்கிட்ட இருப்பதை இல்லாதவர்களுக்கு தர்ற எல்லோருமே மனதளவில் ராஜாதான்..

“சுதந்திரம் வேணும்னு போராடணும்னு நினைச்சீங்கன்னா காந்தி பின்னாடி போங்க.. அஹிம்சை வழில போராடுங்க. இல்லைன்னா சுபாஷ் சந்திரபோஸ் வழில போங்க..” என்கிறார்..

அக்காவிடம் தம்பி கம்மல் கேட்பதும் , பிரியும் நேரத்தில் அக்கா தம்பிக்கு கம்மல் அணிப்பதும் அந்த கம்மலுடன் விஸ்வநாத ரஜினியிடம் அடையாளம் காட்டுவதுமாக  சிறப்பான டைரக்‌ஷன்..

பைக் நல்லாயிருக்குது ..ஆனா அதுக்கு இறக்கை இல்லை போன்ற வசனங்கள் ரசிக்கவைத்தன..

வண்ண வண்ண பாடல் காட்சிகளின் பிரம்மாண்டம் ,ரஜினியின் பிறந்தநாள்விழாக்கொண்டாட்டம் , பிண்ணணியில் காட்சிப்பட்ட மயிலாசனம் எல்லாம் குழந்தைகளை குதூகலப்படுத்தியது..

நிறையப்பேர் முதல் காட்சியியிலிருந்து படம் முடியும் வரை செல்போனில் காட்சிகளைப்பதிவு செய்துகொண்டார்கள்..பல்கலைக்கழக நீச்சல்குள வளாகத்தில் குழந்தைகளோடு நீந்திவிளையாடிக்கொண்டிருந்தார்கள்..


பல்கலைகழக வளாகத்தில்  ருத்ராக்ஷமரங்கள் நிறைய இருந்தன..
நீலவண்ண ருத்ராக்ஷபழங்கள் மரத்தைச்சுற்றி விழுந்து கவனத்தை ஈர்த்தது..

அருணாசலம் படத்தில் ருத்ராட்சம் திருப்புமுனை தருவது போல, 
லிங்கா படத்திலும் ருத்ராட்சத்தினுள் மறைத்து 
வைக்கப்பட்ட பென்ட்ரைவ் திருப்பம் தருகிறது..


பிரிஸ்பேன் நதி அமைதியாக  நடந்துகொண்டிருந்தது..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா படத்தில் காட்டப்படும் சில இடங்கள் பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன.

படம் பார்க்கும் போதே இந்த இடங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன, இந்த மாதிரி இடங்கள் எல்லாம் உண்மையிலேயே இருகின்றனவா என்று வியக்கும் அளவிற்கு இதுவரை  அதிகம் கண்டிராத இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. 

முழுவதுமாக கர்னாடக மாநிலத்தில் படம் பிடிக்கப்பட்ட இந்த படத்தில் வரும் சில பிரமிப்பூட்டும் கர்நாடகாவில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களுக்கு ஒரு சுற்றுலா  அழைத்துச்செல்லும் திட்டம் செயலாக்கப்பட்டிருக்கிறதாம்..

மைசூர் அரண்மனை: ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் பொது விடுமுறை நாட்களிலும் மாலை 7 மணி முதல் 7:45 மணி வரை வண்ண விளக்குகளால் தங்க நிறத்தில் ஒளிர்கிறது.

லிங்கா படத்தில் முதல் பாதியில் வரும் பெரும்பாலான காட்சிகள்
 ராமோஜி பிலிம் சிட்டியில்: தான் படமாக்கப்பட்டிருக்கிறது.

லிங்கனமக்கி அணை: மேல் சுற்றுலாப்பயணிகள் சென்று பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை 
லிங்கா படத்தின் பல முக்கிய காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் இந்த லிங்கனமக்கி : அணையில் தான் படம் பிடிக்கப்பட்டது 

ஜோக் அருவி: ஷிமோகா மற்றும் உத்தர கன்னடா மாநிலங்களின் எல்லையில் அமைந்திருக்கும் இந்த அருவியானது சாராவதி ஆற்றின் போக்கில் 830 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது. 

ஜோக் :அருவியை சுற்றியுள்ள பகுதி எப்போதும் பசுமை நிறைந்து காணப்படுகிறது. இந்த அருவியில் குளிக்க முடியாது என்றாலும் கர்நாடக மாநில சுற்றுலாத்துறையால் இந்த அருவியின் கீழ்ப்பகுதி வரை சென்று அருவியின் பிரவாகத்தை அதற்க்கு எதிர்பக்கத்தில் இருந்து பார்க்கவும்,  இயற்கையின் பிரமாண்டமான அழகை ரசிக்கவும்  வசதி செய்யப்பட்டுள்ளது.

22 comments:

 1. முதன்முதலாய் உங்கள் தளத்திலும் சினிமா விமர்சனம் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்.எப்போதும்போல படங்கள் அருமையாய் இருக்கிறது

  ReplyDelete
 2. சூப்பர் போட்டோ கலெக்‌ஷன். நிறைய தகவல்களோடு அருமை.

  ReplyDelete
 3. விமர்சனம் அருமை.
  படங்கள் அழகு.

  ReplyDelete

 4. விமர்சனத்தில் இது ஒரு புது மாதிரி
  மிகவும் ரசித்தோம்
  படங்கள் மிக மிக அற்புதம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. முதன் முதலாய் தங்கள் தளத்தில் சினிமா விமர்சனம்
  படங்கள் ஒவ்வொன்றும் அழகு
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 6. பல்கலைக் கழகத்தில் திரைப்பட வளாகமா? வாவ்

  ReplyDelete
 7. ஜோக் அருவி கொட்டுவதை ரசித்து இருக்கிறேன். 1987 ல்.

  ரஜனி யும் அவர்தம்
  ரசிகர் அன்புள்ளமும் அதுவாரே இருக்கிறது.
  படங்கள் விமர்சனம் அருமை.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 8. அழகான அருமையான விமர்சனம்...

  ReplyDelete
 9. உங்களுக்கும் உதவலாம் அம்மா...

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Speed-Wisdom-10.html

  ReplyDelete
 10. நிறைந்த தகவல்கள்.. இனிய சுற்றுலா சென்றதைப் போல் இருக்கின்றது.
  வாழ்க நலம்..

  ReplyDelete

 11. அழகான படங்களுடன் அருமையான தகவல்கள். நல்ல வேளை. 1978 ஆம் ஆண்டிலேயே லிங்கனமக்கி அணையை சுற்றிப்பார்த்துவிட்டேன்.

  ReplyDelete
 12. சுருக்கமான அழகான விமர்சனம். சுற்றுலா தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 13. அருமையான விமர்சனம், நன்றி

  ReplyDelete
 14. லிங்கா விமர்சனத்தை சுற்றுலாத் தளங்களுடன் விவரித்துவீட்டீர்கள். வித்தியாசமான உங்கள் கண்ணோட்டம் ரசிக்க வைத்தது.

  ReplyDelete
 15. Simply Superb....As our SuperStar....!!!

  ReplyDelete
 16. நிறைவான தகவல்கள்... அழகான படங்கள்.

  ReplyDelete

 17. வண்ணமிகு வலைச் சரத்தில்

  வாசமிகு பூ வானீர்!
  அருந்தேன் அமுதமென அற்புத
  படைப்பினை படைத்தமைக்கு!

  வாழ்த்தும் நெஞ்சம்;
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.FR

  ReplyDelete
 18. பதிவு பார்த்து வியந்தேன்-ரசித்தேன்.
  மிக்க நன்றி.
  இனிய பாராட்டுகள்.
  வேதா. இலங்காதிலகம்:

  ReplyDelete
 19. ப்டங்கள் மிகவும் அழகு! லிங்கா பயணம் நிஜமாகவே பிரமிக்க வைக்கின்றது. அருமையான வித்தியாசமான தகவல்களுடன் கூடிய விமர்சனம் சகோதரி!

  ReplyDelete
 20. உங்க பக்கத்தில் வித்தியாசமான பகிர்வு. மிக நன்றாக இருக்கு. ருத்ராட்ச மரங்கள் மனதை கொள்ளை கொள்கிறது. வித்தியாசமாக லிங்கா விமர்சனம். படங்கள் எல்லாமே அழகு.நன்றி.

  ReplyDelete
 21. லிங்கா உங்களையும் விமர்சனம் எழுத வைத்து விட்டாரே. அதிலும் ஆன்மிகம் சம்பந்தப் பட்ட வசனங்களை குறிப்பிட்டது நன்று.படங்களும் தகவல்களும் கூடுதல் சிறப்பு

  ReplyDelete
 22. அருமையான விமர்சனம்.
  படங்கள் வெகு அழகு.

  ReplyDelete