Tuesday, December 2, 2014

தீபப் பிரகாசர்.


 திருமலைத் திருப்பதியில் கார்த்திகை தீபம்  பெருமாள் வீதியுலா வர ,மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகி றது.. "திருப்பு மண்டபம்' என்ற இடத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப் பார். 

 கோவிலுக்கு  எதிரே உள்ள ஆலய நுழைவாயிலுக்கு அருகே சொக்கப் பானை கொளுத்துவதைக் கண்டு களித்த பின் ஆலயம் செல்வார். அப்போது பக்தர்களுக்கு லட்டும், கார்த்திகைப் பொரியும் பிரசாத மாகத் தருவார்கள்.

மோட்சபுரியில் ஒன்றான காஞ்சிபுரத்தில் உள்ள தீபப் பிரகாசர் என்ற விளக்கொளிப் பெருமாள் ஆலயத்தில் கார்த்திகை தீப விழாவை சிறப்பாகச் செய்கின்றனர்.

பிரம்மன் சரஸ்வதியை விட்டு விலகி இருந்த நேரத்தில் ஒரு யாகம் செய்தார். அதனால் கோபம் கொண்ட சரஸ்வதி வேகவதி நதியாக மாறி வந்து தடுத்தாள். பிரம்மன் யாகத்தைக் காக்க எண்ணிய பெருமாள் பெரிய ஒளிப் பிழம்பாக மாறினார்.

அந்த ஒளிப்பிழம்பின் பெயரே தீபப் பிரகாசர். இவர் ஒளி வடிவில் இருந்து பிரம்மனின் யாகத்தைக் காக்கவும் இடையூறுகளைத் தடுக்கவும் முதற்கடவுளான சிவ லிங்கத்தை நிறுவி வழிபட்டார். 

அந்த லிங்கத்தின் பெயரே விளக்கொளி நாதர், தீயேஸ் வரர். இவ்வாலயத்தில் கார்த் திகை தீபத்தன்று தீபமேற்றி சிறப்பு வழி பாடுகள் செய் கின்றனர். இப்ப டித்தான் பெருமாள் தீபப் பிரகாசராகத் தோன்றியதுடன் தீயேஸ் வரரையும் பிரதிஷ்டை செய்தார்.


காசியிலும் தீபப் பிரகாசர்

காசியில் மணிகர்ணிகா துறை அருகில் மணிகர்ணிகேஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோவிலின் அருகேயுள்ள வீட்டு முற்றத் தில் தீபப் பிரகாச லிங்கம் உள்ளது. இதனை ஜோதி தீபேஸ்வரர் என அழைப்பர். இச் சந்நிதியில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லா வகையான செல்வங்க ளும் பெறலாம் என்பது நம்பிக்கை.

தேவலோக அழகி களான அப்சரஸ் பெண்கள் இங்கு வந்து தீபமேற்றி வழிபட்டு பெரும் பேறு பெற்றனர் ..

திருப்பெருந்துறை (ஆவுடையார் கோவில்)

ஆத்ம ஒளியை அதிகரிக்கச் செய்யும் திருவாசகத்தை அருளியவர் மாணிக்க வாசகர். இவரை ஈசன் குருவாக வந்து திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஆட்கொண்டார்.
இக்கோவிலில் ஆகம தத்துவங்களை விளக்கும் வகையில் தீபங்களை அமைத்துள்ளனர். இது வேறெங் கும் இல்லாத அமைப்பாகும்.

எல்லா நட்சத்திரங்களையும் காட்ட முடியாது. எனவே, 27 நட்சத்திரங்கள் கரு வறையில் தீபமாக எரிகின்றன.

உலகைப் படைத்து, காத்து, அழித்து வழிநடத்தும் மும்மூர்த்திகளைக் காட்டும் வகையில் மஞ்சள், பச்சை, சிவப்பு என மூன்று வண்ணக் கண்ணாடி சட்டங்கள் இட்ட மூன்று விளக்குகள் கருவறையில் எரிகின்றன.

36 தத்துவங்களைக் குறிக்கும் தீபமாலை விளக்கை தேவ சபையில் ஏற்றி வைத்துள் ளனர்.

ஐந்து வகை கலைகளைக் குறிக்கும் ஐந்து விளக்குகளைக் கருவறையில் ஒன்றின்கீழ் ஒன்றாக ஏற்றி வைத்துள்ளனர்.

51 எழுத்துகளைக் கொண்டது வர்ணம். இதனைக் குறிக்கும் 51 விளக்குகள் கருவறைமுன் உள்ள அர்த்தமண்டபத்தில் உள்ளன. 

உலகங்கள் 87. இதனைக் குறிப்பதற்கு கனக சபையில் குதிரைச் சாமிக்குப்பின் 87 விளக்கு கள் உள்ளன.

11 மந்திரங்களைக் குறிக்கும் 11 விளக்குகளை நடனசபையில் ஏற்றி வைத்துள்ளனர்.ஸ்ரீமன் நாராயணன் கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு வீட்டிலுள்ள நீரிலும் ஆவிர்பவிக் கிறார். அப்போது செய்யப்படும் சாளக்ராம பூஜை ஆயிரம் மடங்கு பலன் தரும். பாவம், வறுமை போன்றவற்றைப் போக்கி வளமான வாழ்வு பெறலாம்.
Manikavasagar in Avudaiyar Kovil Shiva temple
இப்படி 27 நட்சத்திரங்கள், மும்மூர்த்திகள், 36 தத்துவங்கள், ஐந்து கலைகள், 51 வர்ணங்கள், 87 உலகங்கள், 11 மந்திரங்கள் என ஒவ்வொன்றையும் விளக்கும் வண்ணமுள்ளன இவ்விளக்குகள். இப்படிப்பட்ட அதிசய அமைப்பு ஆவுடையார் கோவிலின் மட்டுமேதான் உள்ளது.


ஒரு லட்சம் விளக்குகளால் ஆலயத்தை அலங்கரிப்பது லட்சதீபம் எனப்படும். மயிலாப்பூ ரில் ஆண்டுதோறும் லட்சதீப விழா நடக்கிறது. திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை லட்சதீபம் ஏற்றுகின்றனர். 
7 comments:

 1. அனைத்தும் சிறப்பான தகவல்கள்... படங்கள் அனைத்தும் மிகவும் அருமை...

  ReplyDelete
 2. சிறந்த தகவல்கள்
  அருமையான படங்கள்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 3. தீபப் பிரகாசர் தகவல்கள்,ஆவுடையார் கோவில் சிறப்புகள் அருமை. படங்கள் அனைத்தும் அழகு.

  ReplyDelete
 4. சிறப்பான தகவல்களுடன் பதிவு அருமை.

  ReplyDelete
 5. தகவல்களும் படங்களும் அருமை அம்மா...

  ReplyDelete
 6. கார்த்திகை தீப வழிபாடு நடக்கும் ஆலயங்கள்குறித்தபதிவு நன்று.

  ReplyDelete
 7. தீப பிரகாசர் பற்றிய தகவல்கள் சிறப்பு! கார்த்திகை மாதத்திற்கேற்ப தீப தகவல்களை தொடர்ந்து பகிர்ந்துவருவது பாராட்டுக்குரியது! வாழ்த்துக்கள்!

  ReplyDelete