Saturday, December 20, 2014

ஸ்ரீ,அனுமன் ஜெயந்தி
அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !வெஞ்சினைக்கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி !
மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி !
எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் ! போற்றி !
அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்
செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன்
வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும்
அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே

 எந்தத் துன்பம் வந்தாலும் நினைத்த மாத்திரத்திலேயே வாயுவேகமாக வந்து நமக்கு உறுதுணையாக நிற்பவர் வாயுபுத்ரன் அனுமன். 

ராமாயணத்தில் அனுமனுடைய பராக்கிரமங்களை விளக்க மட்டுமே 'சுந்தர காண்டம்' என்று ஒரு தனிப்பகுதி உண்டு. 

சூரியனுடைய சக்தியையும், சந்திரனுடைய குணத்தையும், வருணனின் கருணையையும், வாயு பகவானின் வேகத்தையும், பூமியின் பொறுமையையும் ஒருங்கே பெற்றவர் ஆஞ்சநேயர். 

அவதாரங்கள் - தசாவதாரம். சிவபெருமானும், விஷ்ணுவும் பல்வேறு காரணங்களுக்காக பல அவதார வடிவங்களை எடுத்து இருக்கிறார்கள். 

அதன்படி தூய்மையான பக்தி, ஞானம், வீரம், விவேகம், போன்றவற்றை எடுத்துக்காட்ட சாட்சாத் சிவபெருமான் எடுத்த அவதாரமே ஆஞ்சநேயர் என்பது சாஸ்திரங்கள் . 

மார்கழி மாதம் மூல நட்சத்திரம், தனுசு ராசி, மேஷ லக்னம், அமாவாசை திதியில் அனுமன் அவதாரம் நிகழ்ந்த தினம் அனுமன் ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 

 விஷ்ணு தலங்களில் அஞ்சனை புதல்வனாகிய அனுமனுக்கு தனி சந்நதி  இருக்கும்.  ஆஞ்சநேயருக்கு பிரசித்தி பெற்ற தனிக்கோயில்களும் உள்ளன. 

  வடஇந்தியாவில் அனுமனுக்கு அதிக ஆலயங்கள் உள்ளன. அனுமன் சர்வ தேவதா சக்திகளின் அம்சம். புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், மனோபலம்  போன்றவற்றை அருளுபவர். தடைகளை உடைக்கும் வடை மாலை ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபடுவது விசேஷமானதாகும். 

கிரக தோஷத்தை நீக்குவதற்காக வடை மாலை சாற்றுவது என்பது காலம் காலமாக இருந்து வரும் வழிபாடாகும்.  அனுமன் கோவிலுக்கு சென்று வெண்ணெய், வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.  

சனிப் பெயர்ச்சி நடப்பவர்கள் அனுமனை வணங்கி வருவது பல சங்கடங்களைப் போக்கும். 

Hanumanji 8 heads with Lingam


108 வெற்றிலை மாலை-மலர் அலங்காரம்
ஸ்ரீ ராமபக்த பால ஹனுமான் தரிசனம்.
ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ ஸ்வாமி திருக்கோயில்
இந்திராநகர், நியூ ஹாரிசான் ஸ்கூல் பின்புறம்
பெங்களூர், கர்நாடகா

 ஸ்ரீஸ்ரீ வியாஸராய மஹான்  பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேய சிலைகளுள்  சென்னை, கிண்டியிலுள்ள எம்.கே.என். சாலையில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது.

. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் மேற்கு திசை நோக்கி திருமுக மண்டலம் தந்தருள்வது தனிச்சிறப்பு. 

திருமுக மண்டல தரிசனம் செய்தால் தீராத நோய்கள் தீரும். பாத கமலங்கள் தென்திசை நோக்கி அமைந்துள்ளன. இவரது வாலில் மணி அமைந்துள்ளது விசேஷம். சந்தான பாக்கியம் தந்தருளும் ஸ்ரீவேணுகோபாலன் தனித்து சன்னிதி கொண்டு அருள் பாலிக்கிறார். 

இராகு-கேது தனித்து அருள்புரியும் பரிகார ஸ்தலம்.

திருமணத் தடைகள் நீங்க செய்ய வேண்டிய திருக்கல்யாண பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது.

அருள்மிகு வீர ஆஞ்சநேயரை தொடர்ந்து ஒன்பது வாரங்கள், வாரத்துக்கு ஒருநாள், வெற்றிலை மாலை சாற்றி, அணையாவிளக்கில் நெய் செலுத்தி, அர்ச்சனை செய்து, ஒன்பது முறை வலம் வந்து வழிபடவேண்டும்

 ஒன்பதாவது வாரம் ஞாயிற்றுக் கிழமை வடைமாலை, வஸ்திரம், வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி திருமண யோகம் கைகூடும்.

வியாழக்கிழமைதோறும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு சாற்றப்படும் சமயத்தில் செய்யப்படும் எந்தப் பிரார்த்தனைக்கும் வெண்ணெயைப் போலவே மனமுருகி செவி சாய்ப்பார் இந்த அழகிய ஹனுமான்

14 comments:

 1. வீர அனுமனைப் போற்றுவோம்
  வணங்குவோம்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 2. அனுமன் துணை என்றும் வேண்டும்...

  ReplyDelete
 3. படங்களும் பகிர்வும் அருமை.

  ReplyDelete
 4. அனுமன் தரிசனம் இனிமை!..
  அனுமனைப் போற்றி வணங்குவோம்!..

  ReplyDelete
 5. ஆஞ்சநேயர்தான் அவர்பெயர். தாடை முறிந்தபிந்தான் அனுமன் என்றாயிற்று. சூரியபகவாந்தான் அனுமனின் குரு. அனுமனின் தரிசனம் நன்றாக கிடைத்தது.

  ReplyDelete
 6. படங்களுடன் அனுமன் தரிசனம் அருமை அம்மா...

  ReplyDelete
 7. அனுமன் ஜெயந்தி,வீர அனுமார் கோவில் பற்றிய தகவல்கள் ,படங்கள் எல்லாமே அருமை.அனுமனின் அருள் கிடைக்கட்டும்.நன்றிகள்.

  ReplyDelete
 8. அற்புதமான தகவல்களுடன் படங்களும் வெகு சிறப்புங்க.

  ReplyDelete
 9. அஞ்சனை மைந்தனின் ஆசி பெறுவோம்.

  ReplyDelete
 10. அழகிய படங்கள். ஜெய் ஆஞ்சனேயா.....

  ReplyDelete
 11. ஆஞ்சனேய தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.

  ReplyDelete
 12. ஆஞ்சனேயனின் வித விதமான தோற்றமும், அவரின் சகதிகளையும், அருளும் தன்மையையையும் அழகாய் கூறும் பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. வித விதமான ஆஞ்சனேயர் தரிசனம் கிடைக்கப்பெற்றேன்
  அவர் பிறந்த நாளுமதுவுமாக மகிழ்ச்சி,தஙள்தளம் இன்றுதான்
  வந்தேன் இனித்தொடருவேன்.சிவனின் அவதாரம் இவர் என்பதை
  இன்றுதான் அரிந்துகொண்டேன்

  ReplyDelete
 14. அனுமன் தரிசனமும் அழகிய படங்களும் மிக அருமையாக பதிவிட்டிருக்கிறீர்கள்.

  ReplyDelete