Saturday, December 6, 2014

குருவாயூர் ஏகாதசி கொண்டாட்டம்


குருவாயூ ரேகாதசி தொழவே நடக்கின்றேன்
வழிகாட்டும் வழிகாட்டும் நாரயண னுருவம்
தளரும்போ தாத்மாவாம் பசுவேநின் நாவில்
அமுதம்போல் ஊறட்டும் நாராயண நாமம்
ஹரிநாராயண நாமம் (குருவாயூர்)

மாலைகள் உனக்காகப் பீதாம்பரம் நெய்யும்-அதி
காலைகள் உனக்காகப் பாலாகப் பொழியும் 
புல்லாங்குழல் நாதம்தான் காடெல்லாம் பகவான்
அணியும்மயில் பீலித் திருமுடியோகார் மேகம்
திருமுடியோகார் மேகம் (குருவாயூர்)

கருடன்தன் சிறகைவிரித் தாற்போலேவானம்-தன்
வில்வண்ணம் நின்மார்பில் மாலைகள் ஆக்கும்
கண்திறந்தால் காணுமிடம் எல்லாமே நீதான்
குருவாயூ ரப்பாநின் விளையாடல் கள்தான்
திரு விளையாடல் கள்தான் (குருவாயூர்)
 மலையாள விருச்சிக மாத (தமிழில் கார்த்திகை மாதம்) ஏகாதசி நாள் குருவாயூரைப் பொறுத்தவரை மிகவும் புனிதமான நாளாக குருவாயூர் ஏகாதசியாகக் கொண்டாடப்படுகிறது.

அன்று விடியற்காலை 3.00 மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்காக கதவுகள் திறந்த பிறகு, இரு நாட்கள் கழிந்து பன்னிரண்டாம் நாள் அன்றே அதாவது துவாதசியன்று காலை 9.00 மணிக்கே மீண்டும் கதவுகள் மூடப்படுகின்றன, இப்படியாக தசமி மற்றும் ஏகாதசி நாட்கள் அன்று பக்தர்கள் அனைவரும் தரிசனம் மேற்கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.

குருவாயூர் ஏகாதசி நாளன்று கஜராஜன் கேசவனின் நினைவு நாளாகவும்,
செம்பை வைத்தியநாத பாகவதர் தனது இறுதிக்காலம் வரை ஏகாதசி நாட்களில் குருவாயூரில் கச்சேரி நடத்தி வந்துள்ளார். அவரது நினைவாக ஆண்டுதோறும் 15 நாட்கள் இங்குசெம்பை இசை விழா- சங்கீத உற்சவ விழாவாக  நடக்கும்ஸ்ரீ வத்சம் பயணிகள் தங்குமிடத்திற்கு முன் அமைந்துள்ள கஜராஜன் கேசவனின் சிலைக்கு யானைகளின் கூட்டம் ஊர்வலமாக வந்து, யானைகளின் தலைவன் தனது தும்பிக்கையால் கேசவனின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்க, இதர யானைகள் கேசவனுக்கு மரியாதை செலுத்துவது  கண்கொள்ளா காட்சியாகும்.

ஏகாதசி நாளன்று, உதயாஸ்தமன பூஜை எனப்படும் (விடியற்காலை முதல் நள்ளிரவு வரையிலான பூஜைகள்) அனைத்து பூஜைகளும் குருவாயூர் கோவில் நிர்வாகமே (தேவஸ்வம்) மேற்கொண்டு வருகிறது. 

சீவேலி எனப்படும் யானைகள் பங்கு கொள்ளும் கோவிலை சுற்றிவரும் உற்சவ நிகழ்ச்சிக்குப்பிறகு, அந்நாள் கீதோபதேச நாளாகவும் கொண்டாடப்படுவதால், ஏகாதசியன்று யானைகளின் ஊர்வலம் ஒன்றும் கோவிலில் இருந்து அண்மையிலுள்ள பார்த்த சாரதி கோவில் வரை சென்று வருவதை வழக்கமாக உள்ளது.

ஏகாதசி நாளன்று இரவில், இறுதியாக ஏகாதசி விளக்குகள் ஏற்றப்பட்டு, யானைகளுடைய பிரம்மாண்டமான ஊர்வலம் ஒன்றும் நடைபெறும், அதுவே அன்றைய விழாவின் மகுடமான நிகழ்ச்சி ஆகும்..

.. 3.2 மீட்டர் உயரத்துடன் கம்பீரமான தோற்றம் கொண்ட கேசவன் மிகவும் கனிவான, பணிவான யானையாக மட்டுமல்லாமல் குருவாயுரப்பனிடம் மிகுந்த பக்தி கொண்டவனாகவும் இருந்த யானை கேசவன் நீலம்பூர் நாட்டு ராஜ வம்ச குடும்பத்தினரால், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு வழங்கப்பட்டதாகும்..

கேசவரின் இறைபணியை போற்றும் வகையில் குருவாயூர் தேவஸ்தானம், யானைகளின் ராஜா என்று போற்றப்படுபோற்றப்படும் கஜராஜன் பட்டத்தை அந்த யானைக்கு வழங்கியது 
[Guruvayur+Temple+Festival.jpg]
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் 55 ஆண்டுகள் சேவையாற்றிய கேசவன் கடந்த 1976ம் ஆண்டு குருவாயூர் ஏகாதசி தினத்தன்று உயிர் நீட்டது. இதனையடுத்து கேசவனின் நினைவு நாள், ஆண்டு தோறும் குருவாயூர் ஏகாதசி அன்று அனுசரிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் கஜராஜன் கேசவனின்  நினைவு தினத்தை ஒட்டி குருவாயூர் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள ஸ்ரீவல்சன் வளாகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி  ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் 40 யானைகள் கேசவணனின் சிலையை சுற்றி வந்து மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தின. ஒரு மறைந்த யானைக்கு மற்ற யானைகள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நெகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

கஜராஜன் என போற்றப்பட்ட கேசவன்.  கேசவன் குருவாயூருக்கு வந்தபோது அதன் வயது பத்து. 54 ஆண்டுகள் தினமும் குருவாயூரப்பனை சீவேலி நேரத்தில் சுமந்து வந்த யானை இது.
குருவாயூர் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டபோது கேசவன் யானை கோயில் மணியை அடித்து ஊர் மக்களைக் கூட்டி தீயை அணைக்கச் செய்தது.
கேசவன் ஒருபோதும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில்லை.

1973&ல் கேசவனுக்கு ஆலய நிர்வாகம் ‘கஜராஜன்’ பட்டம் வழங்கியது.

 1976 டிசம்பர் 2&ஆம் நாள் குருவாயூர் ஏகாதசி அன்று 72 வயதான கேசவன், இறைவனை தரிசித்தபடி அதன் தும்பிக்கை சந்நிதியை நோக்கியவாறே உயிர் துறந்தது. அதன் நினைவாக ‘பஞ்ச ஜன்யம்’ தங்குமிடம் அருகில் 12 அடி உயர கான்கிரீட் சிலை நிறுவப்பட்டது.

ஆண்டுதோறும் கேசவனது நினைவு நாளில் கோயிலின் எல்லா யானைகளுக்கும் விசேஷ உணவு அளிக்கப்படுகின்றன.  மண்டலம்  41 நாளும் கொண்டாடப்படுவது மண்டல விழா. கார்த்திகை 28& ஆம் நாள் நாராயண பட்டத்திரி, நாராயணீயத்தைப் பாடிய நன்னாள். இதை நாராயணீய தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

12 comments:

 1. குருவாயூர் ஏகாதசியின் சிறப்பை அறிந்தேன்... நன்றி அம்மா..

  ReplyDelete
 2. குருவாயூர் ஏகாதசியின் சிறப்பினையும்
  கேசவனின் மாண்பினையும் அறிந்தேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 3. கஜராஜன் கேசவன் - வாழ்ந்த காலத்தில் அவனை அங்கிருப்போர் யாரும் சரிவர புரிந்து கொள்ளவில்லை - என்று ஒரு தகவல் உண்டு..

  கஜராஜனை நினைவு கூரும் - இனிய பதிவு.. வாழ்க நலம்!..

  ReplyDelete
 4. பிரமிப்பும் அழகும் நிறைந்த படங்களும் அறியாத தகவல்களும்
  மிக அருமை சகோதரி!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. குருவாயூர் ஏகாதசிக் கொண்டாட்டம் கண்டு மகிழ்ந்தேன். கேசவனைப் பற்றி நாளிதழ்களில் படித்துள்ளேன். பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 6. இந்த ஆண்டு குருவாயூர் ஏகாதசியன்று குருவாயூர்க் கோவிலில் எங்கள் உறவினர் ஒருவரின் சுற்று விளக்கு ஏற்றும் வேண்டுதல் நடை பெறுவதாக அறிந்தேன் கஜராஜன் பற்றிய செய்திகள் அறிந்தேன்.

  ReplyDelete
 7. ஏகாதசி
  அறிந்து கொண்டேன்.
  மிக்க நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 8. குருவாயூர் ஏகாதசி தகவல்கள் அறிந்தேன். நன்றி.

  ReplyDelete
 9. குருவாயூர் ஏகாதசி மற்றும் குருவாயூர் கேசவன் பற்றிய தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 10. குருவாயூர் ஏகாதசி விழா பற்றியப் படங்களும், தகவல்களும் அருமை.

  ReplyDelete
 11. குருவாயூர் ஏகாதசிபற்றி தெரியாத தகவல்கள். அறிந்துகொண்டேன். அழகான படங்களுடன் பகிர்வு சிறப்பு.நன்றி

  ReplyDelete
 12. குருவாயூர் ஏகாதசி திருவிழா பற்றிய அரிய தகவல்களையும் அழகிய படங்களையும் மிக அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள்.

  ReplyDelete