Friday, October 25, 2013

ஸ்ரீலட்சுமி வழிபாடுஓம் நமோ லட்சுமியை மகாதேவ்யை பத்மாயை சததம் நம!  
நமோ விஷ்ணு விலாசின்யை பத்மஸ்தாயை நமோ நம!! 

வெள்ளிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அமபிகைக்கு பொன்னிற ஆடை அணிவித்து, மல்லிகை மலர்கள் சூட்டி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து, முக்கனிகள், கல்கண்டு, பொங்கல் நிவேதனமாக வைத்து வழிபட திருமணத் தடைகள் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். வராக்கடன் வரும். 

ஸ்ரீ வித்யாம் சாந்தமூர்த்திம் ஸகல ஸுரநுதாம்
ஸர்வ ஸம்பத் ப்ரதாத்ரீம்  
ஸகுங்கும விலேபனா மளிகசும்பி கஸ்தூரிகாம்
ஸமந்த ஹஸிதேஷணாம் ஸசரசாபபாசாங்குசாம்!
அசேஷஜனமோஹினீ மருண மால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸுமபாஸுராம் ஜபவிதௌ ஸ்மரே   தம்பிகாம்II

மகாலட்சுமி சக்கரம்
பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது. 

ஸ்ரீசக்ர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு (16) நித்தியையாக மகா திரிபுரசுந்தரியாக பூரண ஒளியுடன் பௌர்ணமியன்று காட்சி தருவதாக புராணங்களும் சாத்திரங்களும் கூறுகின்றன.  
ஒளிமயமான அன்னை தேவி பராசக்தியை,  ஒளிமயமான பௌர்ணமி தினத்தில் பூசைகள் செய்து வழிபாடு செய்யும் போது அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று விசேடமான பலன்கள் கிடைக்கிறது. 

கிரங்களின் அதிர்வு பெற்ற நாள் பௌர்ணமி நாளாகும். 

பார்வதி தேவியின் தவத்துக்கு மகிழ்ந்து சிவபெருமான் கேதாரேஸ்வரராக தோன்றி அர்த்தநாரியாகவும், அர்த்த நாரீஸ்வரராகவும் காட்சி தந்த தினமே கேதார நோன்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. - 
நோன்பு நிறைவேறும் தீபாவளி திருநாளில் கும்பம் வைத்து காமாட்சி அம்மன் விளக்கு மற்றும் குத்துவிளக்கேற்றி பழவகைகள், விதவிதமான பூக்கள், தேங்காய், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம், சந்தனம், இனிப்பு வகைகள், நோன்பு கயிறு, 21 அப்பம், 21 அதிரசம் வைத்து வழிபட்டு எல்லோருக்கும் பிரசாதம் கொடுத்து உற்றார், உறவினர் எல்லோருக்கும் நோன்பு கயிறு கட்டி விடுவார்கள். 
பக்தி சிரத்தையுடன் கேதார கவுரி விரதம் இருந்து பூஜை செய்யும் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்யமும், சற்புத்திர யோகமும் உண்டு என்பது ஐதீகம். 
மாறாத அன்பு என்றென்றும் நிலைத்திருக்க, திருமண தடை, நவக்கிரக தோஷங்கள் விலகும். கேட்ட வரமெல்லாம் கிடைக்கும் என்பது காலம் காலமாக உள்ள நம்பிக்கை. 
அன்னை மஹாலக்ஷ்மி தாயாரை மனதார வழிபாடு செய்து அருள்கடாட்சத்தால் சகல நலன்களும் பெறலாம்..!. - 

ஸ்ரீலட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம். 

அருகம்புல்லால் அஷ்ட லட்சுமியை பூஜிப்பதால் நாம் அருகுபோல் வேரூன்றி ஆல்போல் தழைத்து பெருவாழ்வு வாழ்வோம் என்பது சான்றோர் வாக்கு! 

செல்வத்திற்கு அதிதேவதையாக விளங்கும் பிராட்டியாரை 
சுபலட்சுமி என்றும் ஸ்ரீதேவி என்னும் போற்றி வணங்குகிறோம்..!
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் தொடங்கி 16 தினங்கள் மகாலட்சுமியை பூஜிக்கும் லட்சுமி விரதம் 
ஏழு கிரகங்களிற்குரிய நாட்கள் சேரும்போது ( ஞாயிறு திங்கள் என்று எந்த நாளில் பௌர்ணமி வருகிறதோ ) அதற்கேற்ப மனிதனின் அறிவு, புத்தி, மனம் மற்றும் சரீரத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. 
பௌர்ணமியில் தேவி `ஸ்ரீசந்திரிகா' என்ற பெயர் கொண்டு பிரகாசித்து அருள்பாலிக்கிறார். 

துக்கங்களை அழிப்பவளான  துர்க்கா தேவியை பௌர்ணமியில் முறைப்படி வழிபட்டு வந்தால்  விரும்பியதெல்லாம் நிறைவேறும். 
 

25 comments:

 1. இதுவரை அறியாததைஅறியவேண்டியதை
  தங்கள் பதிவின் மூலம் அறிந்து மகிழ்ந்தோம்
  செல்வமகள் எங்கள் வீட்டினுள் நுழைந்த
  மகிழ்ச்சி தங்கள் பதிவின் மூலம் கிடைத்தது
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வழக்கம்போல வெள்ளிக்கிழமையில் மங்களகரமான பதிவு.

  ReplyDelete
 3. GOOD MORNING !

  HAVE A VERY NICE DAY !!

  இன்று என்ன இரண்டு வெளியீடுகளா?

  இரட்டைப்பிரஸவம் போல மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.

  1] ஸ்ரீ லட்சுமி பூஜை

  2] வீரம் விளங்கும் விஷ்ணு துர்க்கை !

  இரண்டையும் பொறுமையாகப் படித்துவிட்டு மீண்டும் வருவேன்.

  >>>>>

  ReplyDelete
 4. GOOD MORNING !

  HAVE A VERY NICE DAY !!

  இன்று என்ன இரண்டு வெளியீடுகளா?

  இரட்டைப்பிரஸவம் போல மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.

  1] ஸ்ரீ லட்சுமி பூஜை

  2] வீரம் விளங்கும் விஷ்ணு துர்க்கை !

  இரண்டையும் பொறுமையாகப் படித்துவிட்டு மீண்டும் வருவேன்.

  >>>>>

  ReplyDelete
 5. அருமையான படங்களுடன் பௌர்ணமியின் விளக்கத்திற்கு மிக்க நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. சிறப்பான பகிர்வு. படங்களும் கொள்ளை கொள்கிறது மனதை. நன்றி.

  ReplyDelete
 7. வெள்ளிக்கிழமை அதிகாலையில் அம்பாளின் அற்புத தரிஸனம். ;)

  >>>>>

  ReplyDelete
 8. முதல் படத்தில் செந்தாமரை நல்ல அழகோ அழகு.

  >>>>>

  ReplyDelete
 9. இரண்டாம் படத்தில் லக்ஷ்மியின் புடவைக்கட்டு கலரும், முகமும் நல்ல லக்ஷணமாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 10. ஸ்ரீசக்ரநாயகி பற்றியும் பெளர்ணமி வழிபாட்டு விளக்கங்களும் அருமை.

  >>>>>

  ReplyDelete
 11. சாளக்கிராமங்கள் நிறைந்த பஞ்சாயதன பூஜை செட், வெள்ளித்தட்டுடன், பார்க்கப் பரவஸம் அளிக்குது.

  >>>>>

  ReplyDelete
 12. கேதார கெளரி விரதம், அதன் மஹிமை, மாறாத அன்பு, ஸத்புத்ர லாபம், தீர்க்க சுமங்கலி பாக்யம், கேட்ட வரமெல்லாம், கிடைத்தல் .... ஆஹா படிக்கவே பரவஸமாக உள்ளதே.

  எல்லாம் ஒருங்கே அமைந்த புண்யவதீ கொடுத்துள்ள பதிவல்லவா ! அதனால் தான். சந்தோஷம் ... சந்தோஷம். வாழ்க !

  >>>>>

  ReplyDelete
 13. அஷ்டலக்ஷ்மியை அருகம்புல்லால் துதித்தால் ‘அருகுபோல் வேறூன்றி ஆல்போலத்தழைத்து பெருவாழ்வு வாழ்வோம்’ என்ற சொல்லாடலே மிக அருமை. ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

  >>>>>

  ReplyDelete
 14. கடைசியில் காட்டியுள்ள கோலம் உள்பட அனைத்துமே அழகோ அழகு. பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  [அப்பாடா ...... ஒன்று முடிச்சாச்சு ;) ]

  -oOo-

  ReplyDelete
 15. அழகான படங்களுடன் பெளர்ணமிவிரதம்,கேதாரகெளரிவிரத விளக்கங்கள் அருமை.நன்றி.

  ReplyDelete
 16. ஸ்ரீலக்ஷ்மிக்கு அருகம்புல் விஷேசம் என்பது இன்றுதான் அறிந்துகொண்டேன்...

  அன்னையை வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு பற்றிய விளக்கங்கள் சிறப்பு.
  படங்களும் அழகு!

  பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

  ReplyDelete
 17. அருமையான படங்களுடன் சிறப்பான பகிர்வு.

  ReplyDelete
 18. மஹாலக்‌ஷ்மிக்கே உகந்த இந்த நாளில் இந்த பகிர்வு மிக அழகாக அற்புதமாக இருக்கிறதுப்பா..

  சிவனின் அர்த்தநாரீஸ்வரர் அம்சம், மஹாலக்‌ஷ்மியின் கேதாரி விரதம், அழகு ஒளிரும் படங்கள், விளக்கங்கள், ஸ்லோகங்கள் எல்லாமே மிக அற்புதமாக பகிர்ந்திருக்கிறீர்கள்பா... மனம் நிறைவானது. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

  ReplyDelete
 19. ஸ்ரீலட்சுமிக்கு அருகபுல் விஷேசம்!
  புதுத்தகவல்.
  படங்களும், செய்திகளும் அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. அறியாத தகவல்கள் யாவையும் அசத்தலான படங்களுடன் கொடுத்து அமர்க்களம் படுத்தி விட்டீர்கள் சகோதரி. விளக்கங்களில் தொடங்கி அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றீங்க..

  ReplyDelete
 21. thanks for sharing a new info about arugampul grass worship of ashta lakhsmi

  ReplyDelete
 22. அழகான படங்களுடன் அருமையான தகவல்கள்!.. மகிழ்ச்சி!..

  ReplyDelete
 23. சிறப்பான பகிர்வு அம்மா..

  ReplyDelete
 24. அரிய தகவல்களை அருமையான படங்களுடன் பதிவுசெய்துள்ளமைக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete