Thursday, October 24, 2013

தீபங்கள் திகழும் திருவிழா


மொகலாய மன்னர்களிடமிருந்து தப்பி, பொற்கோவிலுக்கு வந்த ஆறாவது குருவான குருநாதர் கோவிந்தசிங் அவர்களை வரவேற்க, தீபங்களை வரிசையாக ஏற்றினர்.சீக்கியர்கள்... 

அதுமுதல், தீபாவளி சீக்கியர்களுக்கும் உரிய திருவிழாவாக விளங்குகிறது.
ஜைன (சமண) மதத்தைத் தோற்றுவித்த குருநாதர் மகாவீரரின் முக்தி தினத்தில், ஜைனர்கள் தீபங்களை ஏற்றுவார்கள். 
தீபங்களைப் போல் மகாவீரரின் போதனைகள் தங்கள் உள்ளத்தில் பிரகாசிக்க வேண்டி அவர்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

 உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்தன் தன்னுடைய எதிரிகளை வென்று, பேரரசனாக முடிசூட்டிக் கொண்ட நாளே தீபாவளி என்ற கருத்தும் நிலவுகிறது.


நரகாசுரனை வதம் செய்ய, திருமால் புறப்பட்டவுடன் அசுரர்கள் பெரிதும் சினம் அடைந்தார்கள். அவர்கள் தனியே இருந்த மகாலட்சுமியைக் கடத்திச் செல்ல முற்பட்டனர். அப்போது திருமகள் தீபத்திற்குள் ஐக்கியமாகிவிட்டாள். அதனால், தீபங்களை, திருமகளின் அம்சமாகக் கருதி வழிபாடுகள் செய்யும் மரபு தோன்றியது ...
மராட்டிய மன்னன் வீரசிவாஜி தன்னுடைய எதிரிகளை வென்ற பிறகு பெரிய கோட்டையைக் கட்டினான். அதனுள் வரிசையாக தீபங்களை ஏற்றினான். அதனால் இன்றும் மராட்டியர்கள் மண்ணால் கோட்டைகள் கட்டி, தீபங்கள் ஏற்றி வழிபடுகின்றனர்
diwali-golden-temple-30 comments:

 1. தீபங்களுக்குப் பின்னனியில் இப்படி ஒரு வரலாறு வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறதா. படங்களும் செய்திகளும் அருமை. நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 2. தீப ஒளித் திருநாள் தீபாவளி பற்றிய செய்திகளும் படங்களும் மிக அருமை.....

  ReplyDelete
 3. படங்களும் தகவல்களும் மிகவும் அருமை... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. தீபாவளியின் பன்முகங்களையும் கொண்ட பதிவு!..நன்று!..

  ReplyDelete
 5. அரிய தகவல்களை பல பல படங்களுடன் பதிவிட்டிருக்கிறீர்கள்.உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. தீபாவளி பற்றிய சிறப்புகளை அறிந்துகொண்டேன்.நன்றி,வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. தீபங்கள் திகழும் திருவிழா! அனைத்து படங்களும் ஒளிர்கின்றன. அழகு!அருமை!
  அழகான பதிவு. வாழ்த்துகள்.நன்றி அம்மா.

  ReplyDelete
 8. அழகான புகைப்படங்கள் ரசித்தேன்...

  ReplyDelete
 9. தீபாவளி பற்றியும் அதைக் கொண்டாடுபவர்கள் சிறப்பினையும் அழகாகக் கூறினீர்கள். படங்களும் கண்களைக் கவர்கின்றன.

  பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

  ReplyDelete
 10. அருமையான படங்களுடன், அழகான பகிர்வு.

  ReplyDelete
 11. ’தீபங்கள் திகழும் திருவிழா’ என்ற இந்தப்பதிவு மிகவும் அழகாக உள்ளது.

  தீபங்கள் ஏற்றி [மன] இருளை அகற்றி [ஞான] ஒளியைப் பாலாக, அமுதமாக பீய்ச்சியுள்ளீர்கள். ;)

  >>>>>

  ReplyDelete
 12. முதல் படத்தில் உள்ள தனலக்ஷ்மி மகிழ்வளிக்கிறாள்.

  நாணயமாக அவள் நாணயங்களைக் கொட்டி அருள்வது அழகோ அழகு.

  >>>>>

  ReplyDelete
 13. இரண்டு மற்றும் மூன்றாவது படங்களில் ஏற்கனவே ஜொலிக்கும் சீக்கியர்களின் பொற்கோயில் தீபங்களால் மேலும் அழகாக ..... ;)

  >>>>>

  ReplyDelete
 14. அசுரர்களால் கடத்தப்பட இருந்த மஹாலக்ஷ்மி தீபங்களுக்குள் ஐக்கியமானதாகச் சொல்லியுள்ள படம் சூப்பரோ சூப்பராக உள்ளது.

  பெண்களைக் கடத்திச் செல்லும் வழக்கம் எப்போதோ பல யுகங்களுக்கு முன்பாகவே தோன்றி இன்றும் நீடிக்கிறது பாருங்கோ.

  அதுவும் ’அம்பாளை’யே கடத்துவது என்பது சாதாரணமாக நடக்கக்கூடிய எளிதான காரியமா என்ன ? ;)

  >>>>>

  ReplyDelete
 15. மராட்டியர்களின் மண் கோட்டைகள் தீபங்களால் ஜொலிப்பது அழகாகவே பார்க்க ஆனந்மாகவே உள்ளன. ;)

  >>>>>

  ReplyDelete
 16. கடைசியில் காட்டப்படுள்ள GOLDEN TEMPLE படமும் அதற்கு முன்பு உள்ள படங்களும் அருமையோ அருமை. ;) Very Good Photography !

  >>>>>

  ReplyDelete
 17. பேஷ், பேஷ் ! தீபாவளிக்கான சரவெடிகளை இப்போதே கொளுத்திப்போடத் துவங்கி விட்டீர்கள்.

  தினமும் வரிசையாக ஆனந்தமான பகிர்வுகள் தந்து அசத்தப்போகிறீர்கள் என்பது தெளிவாகி விட்டது.

  ஜாமாயுங்கள்.

  தங்களின் தினசரி வான வேடிக்கைகளைக்கண்டு களிக்கத் தயாராகிவிட்டோம்.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

  நேற்று போல இல்லாமல் இன்று போல சுருக்கமான செய்திகளுடன் சுவையான படங்களுடன் பதிவுகள் தொடரட்டும்.

  [நேற்று ஸ்ரீரங்கம் மிகப்பெரிய கோயில் என்பதால் .... அங்கு பெரிய பெருமாளில் ஆரம்பித்து .... எல்லாமே பெரிதோ பெரிது தான். அவை மோத மொழங்கத்தான் பிரும்மாண்டமாக இருக்கும். அதனால் பரவாயில்லை]

  தீபாவளி நல்வாழ்த்துகள்.

  அன்புடன் VGK

  ReplyDelete
 18. thanks for sharing info about lighting lamps

  ReplyDelete
 19. உள்ளத்தில் இருள் அகன்று ஒளிவெள்ளம் பாய உற்ற நாள் தீபாவளி எனக் கொள்வோம். மகால்க்ஷ்மி தீபத்தினுள் புகுந்த கதை கேட்காத ஒன்று. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 20. தீபங்களின்ஒளி என்றுமே அழகுதான்
  ஒற்றை தீபம் துளசியின் முன் மாலைநேரத்தில் எரியும்போது நெஞ்சை அல்லும்
  அதே தீபங்கள் இங்கு நிறைய காணும்போது நிஜமாகவே உள்ளம் துள்ளும் காட்சி தான்
  அழகு படங்கள் அற்புத வர்ணனைகள்
  நன்றி இராஜேஸ்வரி.

  ReplyDelete
 21. மிகவும் அருமையான அழகான படங்கள். சீக்கியர்களின் பொற்கோவில் தீப ஒளியில் மின்னுகிறது. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 22. தீபஒளி அழகுகொஞ்சும் காட்சிகள்.
  அனைவர் மனங்களிலும் அன்பு என்னும் ஒளிபரவட்டும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 23. தீபஒளி திருநாள் படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.
  தீபஓளி பரவி உலகம் முழுவதும் நலம் பெறட்டும்.

  ReplyDelete
 24. தீபாவளிக்கு இத்தனை காரணங்களா? வியக்க வைத்தது! நன்றி!

  ReplyDelete
 25. தீபாவளி இப்பவே ஆரம்பமாகிட்டுதோ.. சூப்பர்ர்..

  ReplyDelete
 26. தீபாவளி பற்றிய விபரங்களும் புகைப்படங்களும் மிக அருமை!

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 27. செய்திகளும் படங்களும் சிறப்பாக இருந்தன...

  ReplyDelete
 28. அழகான செய்திகள். அழகான படங்கள்.
  கார்த்திகையும் பொங்கலும் வீட்டிற்கு மிகுந்த அழகு சேர்ப்பதாய் உணர்கிறேன்
  தீபாவளியை திரியை மட்டுமே ஏற்றி விளையாடும் பண்டிகையாக மாற்றிவிட்டோம். அதுவும் வெடிச்சத்தத்தில் இரத்த அழுத்தம் ஏறி பரபரவென அலைவதால் தீபாவளி என்றாலே ஒரு வித பயம் வந்துவிடுகிறது

  ReplyDelete
 29. படங்களோடு தங்கள் தகவல்களும் ஜொலிக்கிறது அம்மா. புதிய தகவல்களைத் தெரிந்த கொண்ட மனநிறைவு ஏற்பட்டுள்ளது. பகிர்வுக்கு நன்றீங்க அம்மா.

  ReplyDelete
 30. ரசித்தேன். பொற்கோவில் போட்டோ அற்புதம்.

  ReplyDelete