Monday, February 4, 2013

உலக புற்றுநோய் தினம்


ஆண்டுதோறும் பிப்ரவரி நான்காம் நாள் உலக புற்றுநோய் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது ...


புற்று நோய் தொடர்பான நம்பிக்கையூட்டும் கருத்துக்களை ஏற்று, 
தவறான கருத்துக்களை புறந்தள்ளுவோம் எனும் நம்பிக்கை தருமாறு இவ்வருட புற்றுநோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 

மாறிவரும் சுற்றுப்புற சூழ்நிலை, சுகாதாரமற்ற உணவு, வாழ்க்கை முறை, உடற்பயிற்சி இல்லாமை, பாதுகாப்பற்ற உடலுறவு, வைரஸ் மற்றும் மரபணு கோளாறு போன்றவை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணமாகும். 

ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோயை கண்டறிந்தால் முழுவதுமாக குணப்படுத்திவிடலாம். 

முற்றிய நிலையில், அதனை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். 
  
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இன்று நாம் 
கடவுளிடம் வேண்டுவோம் அவர்கள் அனைவரும் சீக்கிரமே 
குணமடைய வேண்டுமென்று........

கூட்டுப்பிரார்த்தனை  கூடுதல் பலனும் கூட

இறுதி மூச்சு உள்ள வரை..
உறுதியாய் வைத்திடுவோம்  இறைநம்பிக்கை!! 
புற்று நோயையும் வெல்ல முடியும் ..

 தளரா இறைநம்பிக்கையுடன்
சரியான மருத்துவமும் துணை கொண்டு
புற்றுநோயை புறம்தள்ளூவ்வோம்..!!

வருமுன் காப்பதிலும் கவனமாக இருக்கமுயற்சிக்கலாம் ..
வளர்த்துவிட வேண்டுவது.. தன்னம்பிக்கை!!


World Cancer Day 2013 (4 February 2013) 21 comments:

 1. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. காலத்திற்கேற்ற அருமையான பதிவு,
  புற்று நோய் வந்தவர்கள் முதலில் அதை குணமாக்கி விட முடியும் என்று நம்ப வேண்டும். மனம் கூடாது. ஆரம்ப நிலையிலே கவனித்து விட்டால், பெரிய அபாயங்கள் தவிர்க்கப்படும். அதுபோல் புற்று நோய் வராமலும் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நல்ல விசயங்களை சொல்லி ஒரு இனிய நாளை துவக்கி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. http://jayarajanpr.blogspot.in/2013/02/38.html

  ReplyDelete
 4. புற்று நோய் உண்டாகும் அனைத்தையும் புறந் தள்ளுவோம்...

  ReplyDelete
 5. புற்று நோயை உண்டாக்கும் அனைத்தையும் புறந் தள்ளுவோம்...

  ReplyDelete
 6. புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்காக விரைவில் அவர்கள் பூரண குணமடைய வேண்டி உங்களுடன் இணைந்து பிரார்த்திக்கின்றேன்.

  பகிர்வுக்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 7. சிறப்பான தகவல் பதிவு. நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 8. வி்ழிப்புணர்வு ஏற்படுத்தும் அற்புதமான பதிவு.

  இத்தகைய பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு முதலில், கூடவே இருக்கும் நாமும் மருத்துவர்களும் முழு நம்பிக்கை தர வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும்.

  >>>>>

  ReplyDelete
 9. ஸ்ரீமந் நாராயணீயத்தில் 8 ஆவது தஸகத்தில்

  13 ஆவது ஸ்லோகமாக வரும்

  கீழ்க்கண்ட ஸ்லோகத்தினை தினமும் 16 அல்லது 32 அல்லது 48 அல்லது 64 அல்லது 108 தடவைகள் சொல்லி வந்தால் இது போல தீராத வியாதிகள் நம்மை விட்டு ஓடியே போய்விடும் என ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் எனக்குச் சொல்லி அருளியுள்ளார்

  இதை ஒருவர் தொடர்ந்து தினமும் 1008 முறைகள் உச்சரித்து வந்ததில் மருத்துவர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு MIRACLE நடந்துள்ளதாக அதே ஸ்வாமிகளே என்னிடம் கூறியுள்ளார்கள்.

  மணி மந்திர ஒளஷதம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.

  அதனால் அந்த மிகவும் சக்தி வாய்ந்த மிகச்சிறிய மஹாமந்திரத்தினை இங்கு கீழே பகிர்ந்துள்ளேன்.

  நம்பிக்கையுள்ள யாராவது ஒருவருக்கு அது பயன்பட்டாலும் எனக்கும் உங்களுக்கும் அதில் ஒரு சிறிய புண்ணியம் கிடைக்கக்கூடும்.

  அதனால் நீங்கள் அதை இங்கு அப்படியே வெளியிடுமாறு மிகத்தாழ்மையுடன் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்..

  >>>>>>

  ReplyDelete
 10. புற்று நோயாளிக்கு முதலில் வேண்டியது நம்பிக்கை என்பதை அழகாய் வலியுறுத்தி சொன்னதற்கு நன்றி.

  தளரா இறைநம்பிக்கையுடன்
  சரியான மருத்துவமும் துணை கொண்டு
  புற்று நோயை புறம் தள்ளூவ்வோம்..!!//
  நிச்சயமாக .

  நல்ல விழிப்புணர்வு பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 11. தொடர்ந்து உச்சரித்துக்கொண்டே இருப்பதால் பெரும் வியாதிகளைப் போக்கிக்கொள்ள உதவிடும் மஹாமந்திரம்:

  இது ஸத்தியம் .. நாம் மனது வைத்தால் இது ஸாத்தியமும் கூட.

  2
  =

  அஸ்மின் பராத்மன் நனு பாத்ம கல்பே

  த்வம் இத்தம் உத்தாபித பத்ம யோனி: !

  அனந்த பூமா மம ரோக ராஸிம்

  நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

  //சுபமஸ்து//

  [இரவு பூராவும் தூங்காமல் மிகவும் நம்பிக்கையுடனும் பக்தி ஸ்ரத்தையுடனும் இதை ஆஸ்பத்தரியில் படுத்த படுக்கையில் இருந்த ஒரு நோயாளி உச்சரித்ததில், மறுநாள் அவருக்கு நடக்க வேண்டிய அறுவை சிகித்சை தேவையில்லை என்று சொல்லி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாராம்.

  மிகப்பெரிய மருத்துவர்களுக்கே வியப்பளித்ததாம் அந்த இவர் சொன்ன நிகழ்ச்சி.

  இது ஸத்தியம்]

  ooooooo

  ReplyDelete
 12. வை.கோபாலகிருஷ்ணன் said...
  தொடர்ந்து உச்சரித்துக்கொண்டே இருப்பதால் பெரும் வியாதிகளைப் போக்கிக்கொள்ள உதவிடும் மஹாமந்திரம்:

  இது ஸத்தியம் .. நாம் மனது வைத்தால் இது ஸாத்தியமும் கூட.//

  அதி அற்புதமான ஸ்லோகப்பகிர்வுகளும் , அருமையான கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

  காஞ்சி மஹாப்பெரியவாளும் இந்த அருமையான ஸ்லோகத்தை பகிர்ந்திருக்கிறார் ..

  உலகத்தயே தூசி மாதிரி அநாயசமாக வராஹ அவதார்த்தில் தாங்கிய மஹாவிஷ்ணு நிச்சயம் நோயிலிருந்து காக்கும் தன்வந்திரியாக அருள்புரிவார் ..

  ReplyDelete
 13. நாராயணீய பாராயணத்தில் இந்த ஸ்லோகத்தை மூன்று முறை சொல்லும் வழக்கம் எங்கள் வகுப்பில் உண்டு ...ஒவ்வொருமுறை மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ளும்போதும் சொல்வது பலனளிக்கும் ..

  இரத்தப்புற்றுநோய் என்று அவதிப்பட்டஒருவர் நாரயணிய பாராயணத்தாலும் , தகுந்த மருத்துவ சிகிச்சையாலும் குணமடைந்ததை அவரே தெரிவித்தார் ..

  ReplyDelete
 14. மிக அருமையான, விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பதிவு.

  ஸ்ரீமந் நாராயணீயமே 'மோக்ஷ மந்திரம்' எனப் பெயர் பெற்றது. ஸ்ரீமத் பாகவதத்தின் ஸாரம். ஒவ்வொரு தசகமும், ஸ்லோகமும், ஸ்ரீமத் பாகவதத்தில் அமைந்துள்ளதைப் போல், சூக்ஷ்ம அர்த்தங்களுடனும், பீஜங்களுடனும் அமைந்துள்ளது. இந்த ஸ்லோகத்தைப் போல் பலன் தரும் ஏராளமான ஸ்லோகங்கள் உள்ள சுரங்கமே ஸ்ரீமந் நாராயணீயம்.

  தாங்கள் கூறியதைப் போல், எனக்குத் தெரிந்தவருக்கும் ஆச்சரியகரமான அனுபவம் ஏற்பட்டது. அவர் மகனுக்கு திடீரென தாங்க முடியாத‌ வயிற்றுவலி வந்து, உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழலில், மகனை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு வீடு வந்து, மனமாரப் பிரார்த்தித்துக்கொண்டு ஸ்ரீமந் நாராயணீயத்தை பாராயணம் செய்து விட்டு திரும்பவும் மருத்துவமனை போனால், அவர் மகன், எந்த வலியுமில்லாமல் உட்கார்ந்து கொண்டிருந்தான். ஆபரேஷனும் ரத்தாகிவிட்டது. இது போல் எத்தனையோ!!!. எல்லாம் ஸ்ரீ குருவாயூரப்பன் அருள்.

  ReplyDelete
 15. எனது தந்தை புட்ட்றுநோய் தாக்கி இறந்தது என்னை இப்போதும் அழச்செயகிறது.உங்களைப்போல நானும் எல்லோரும் நலம் வாழ வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 16. விழிப்புணர்வு பதிவு.
  உங்களுக்கும் வைகோ சாருக்கும் ஸ்லோகம் வெளியிட்டதற்காக நன்றி.

  ராஜி

  ReplyDelete
 17. //rajalakshmi paramasivam said...
  விழிப்புணர்வு பதிவு.
  உங்களுக்கும் வைகோ சாருக்கும் ஸ்லோகம் வெளியிட்டதற்காக நன்றி.

  ராஜி//

  கோ வை + வை கோ இருவருக்கும் நன்றி சொல்லியுள்ள உங்களுக்கு என் நன்றி.

  ReplyDelete
 18. //இராஜராஜேஸ்வரி said...
  நாராயணீய பாராயணத்தில் இந்த ஸ்லோகத்தை மூன்று முறை சொல்லும் வழக்கம் எங்கள் வகுப்பில் உண்டு ... ஒவ்வொருமுறை மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ளும்போதும் சொல்வது பலனளிக்கும் ..//

  பயனுள்ள உபரித்தகவல்கள் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.

  நாங்கள் ஒவ்வொருமுறை மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் போதும்

  “ஸ்ரீ வைதய நாராயணோ ஹரி:”

  என்றோ அல்லது

  “வாலாம்பிகேச் வைத்யேஸ .....
  மஹாரோஹ நிவாரணம்”

  என்ற ஏதாவது ஒன்றினைச் சொல்லிச் சாப்பிடுவது வழக்கம்.

  //இரத்தப்புற்றுநோய் என்று அவதிப்பட்ட ஒருவர் நாரயணிய பாராயணத்தாலும், தகுந்த மருத்துவ சிகிச்சையாலும் குணமடைந்ததை அவரே தெரிவித்தார் ..//

  நல்லவேளை. இதுவும் மகிழ்ச்சியான தகவலாக உள்ளது. ;)))))

  ReplyDelete

 19. @@ Parvathy Ramachandran said...
  மிக அருமையான, விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பதிவு.//

  @@ வை.கோபாலகிருஷ்ணன் said...//


  http://jaghamani.blogspot.com/2012/01/blog-post_28.html

  நேசம் மறப்பதில்லை நெஞ்சம் - என்னும் விழிப்புணர்வு கட்டுரைப்போட்டியிலும் இந்த சம்பவத்தைக்குறிப்பிட்டிருக்கிறேன் ...

  தங்களின் மேலான கருத்துரைகள் அனைத்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள்...

  ReplyDelete
 20. விழிப்புணர்வுப் பகிர்வு.

  ReplyDelete
 21. விழிப்புணர்வு பகிர்வு. என் தாயும் தந்தையும் புற்றுநோயால் தான் இறந்தார்கள், அவர்கள் பட்ட வேதனையை கண் முன்னே பார்த்து துடித்திருக்கிறேன். இனி ஒருவரும் இம்மாதிரி அவதிப்படக் கூடாது என்பது தான் என் வேண்டுதல்.

  ReplyDelete