Saturday, February 16, 2013

அல்லல் அகற்றும் அனுமன்
ஆஞ்சநேய வீரா, அனுமந்த சூரா!

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டுஅயலார் ஊரில் 
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக்காப்பான்.

அற்புதமான பாடல் இது. பஞ்ச பூதங்களைக் குறிக்கும் முகமாக ‘அஞ்சிலே’ என்ற சொல்லை, ஐந்து முறை சொல்லியிருப்பதைக் கவனிக்க வேண்டும். 

 பஞ்ச பூதங்களையும் ஆஞ்சநேயரோடு தொடர்புபடுத்தி இருப்பதையும் உணர வேண்டும்.

 பாடலின் கருத்து;வாயு பகவானின் மகனான ஆஞ்சநேயன், கடலினை (நீரை)த்தாண்டி, ஆகாயத்தின் வழியாக ராமருக்காக இலங்கைக்குத் தூது சென்று, பூமா தேவியின் மகளான சீதாதேவியைக் கண்டு, ராவணன் நகரான லங்கா நகரத்தில் தீயை வைத்தார். அவர் நம்மைக் காப்பார்.

Animated Spirits Fire Hanuman
சுந்தர காண்டத்தை முழுவதுமாகப் பாராயணம் செய்ய இயலாதவர்கள் ஆஞ்சநேயரைத் துதிக்கும் இந்த  கம்ப ராமாயணப் பாடலை மட்டுமே பாடினால் போதும்.ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பகுதி முழுவதும் ஆஞ்சநேயரின் ஆற்றலையும் பண்புகளையும் விளக்குகிறது.

ஆஞ்சநேயரின் புகழ்பாடும் அந்த சுந்தர காண்டம் ஒரு சர்வ ரோக நிவாரணி. சுந்தர காண்டப் பாராயணம், எல்லாத் துயரங்களையும் நீக்கி மங்கலங்களை அருளும். தூய்மையான பக்தியின் வடிவம், எந்த விதமான பிரதிபலனும் எதிர்பாராத உத்தமமான தொண்டின் வடிவம்; இசை நுணுக்கத்தின் எல்லை கண்டவர்; 

எவ்வளவுதான் தகுதி, திறமை என்று புகழ் மாலைகள் சூட்டினாலும் அவற்றை எல்லாம் தாண்டி நிற்கும் அடக்கத்தின் வடிவம் - ஆஞ்சநேயர்.
சிவ அம்சமே ஆஞ்சநேயராக அவதரித்தது. பரவாசுதேவனின் அவதாரமான ராமருக்குப் பணிவிடை செய்தது என்று தியாகராஜ ஸ்வாமிகள் எடுத்துரைக்கிறார்:
அந்தகாரி நீ செந்த ஜேரி அனுமந்துடை கொலுவலேதா’ (எந்தராதி - எனும் பாடலில்) ‘‘கால காலனான சிவபெருமான், உன்னருகில் அனுமனாக வந்து, பணிவிடை செய்யவில்லையா?’’ என்பது கருத்து. 
அருணகிரிநாதரும் இதே கருத்தை, ருத்ரர் சிறந்த அனுமன் என்கிறார். (கருவடைந்து-திருப்புகழ்) 

 ஆஞ்சநேயர் சூரிய பகவானிடம் அனைத்து வேத சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்ததற்காக ஆஞ்சநேயர், குருதட்சிணை கொடுக்க விரும்பியபோது, சூரிய பகவான், ‘‘மாருதியே! என் மைந்தனான சுக்ரீவனுக்கு நீ மந்திரியாக இருந்து நல்வழிகாட்டு!’’ என்றார். அதன்படியே ஆஞ்சநேயர் சுக்ரீவனுக்கு மந்திரியாக நல்வழி காட்டினார்.
மனைவி, அரச போக வாழ்க்கை என அனைத்தையும் இழந்து, காட்டில் மலைக்குகையில் வாழ்ந்து கொண்டிருந்த சுக்ரீவன், ஆஞ்சநேயர் மூலமாக ராமரின் நட்பைப் பெற்று, மனைவியுடன் அரச வாழ்வையும் திரும்ப 
அடைந்தான். 

பரிதி மகன் வாசல் மந்திரி அனுமன் என அனுமனைப் புகழ்கிறார், அருணகிரிநாதர். 

ஆஞ்சநேயரின் ஆற்றலை ஆதிகவியான வால்மீகி தொடங்கி, அண்மைக்காலக் கவிஞர்கள் வரை பலர் பாடியிருக்கிறார்கள். 


23 comments:

 1. ஸ்ரீராம தூதர் ஸ்ரீஆஞ்சநேயசுவாமியின் தரிசனம் அதுவும் அவருடைய உயிரினும் மேலான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் பட்டாபிஷேக தரிசனமும் கண்டு மெய்சிலிர்த்தேன். மிக நன்றி சகோதரி. ஒரு அன்பான வேண்டுகோள்! மிக அருமையான உயிர் ஓட்டத்துடன் உள்ள ஸ்ரீராமர் பட்டாபிஷேக படத்தை எனக்கு மின்னஞ்சலில் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு

  ReplyDelete
 2. பஞ்ச பூத தத்துவ விளக்கம் சிறப்பு !

  ReplyDelete
 3. பழனி. கந்தசாமி said...
  ரசித்தேன்...


  வணக்கம் ஐயா,, நன்றி ,,

  ReplyDelete
 4. Ram Ram Lakshmi Narasimhan V said...
  ஸ்ரீராம தூதர் ஸ்ரீஆஞ்சநேயசுவாமியின் தரிசனம் அதுவும் அவருடைய உயிரினும் மேலான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் பட்டாபிஷேக தரிசனமும் கண்டு மெய்சிலிர்த்தேன். மிக நன்றி சகோதரி. ஒரு அன்பான வேண்டுகோள்! மிக அருமையான உயிர் ஓட்டத்துடன் உள்ள ஸ்ரீராமர் பட்டாபிஷேக படத்தை எனக்கு மின்னஞ்சலில் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு//

  வணக்கம் ...

  மெய்சிலிக்கும் கருத்துரைக்கு
  இனிய நன்றிகள்..

  தயவு செய்து தங்கள் மின் அஞ்சல் முகவரி தாருங்கள் ..
  அனுப்பிவைக்கிறேன் ..

  ReplyDelete
 5. ஸ்ரவாணி said...
  பஞ்ச பூத தத்துவ விளக்கம் சிறப்பு !//

  வாருங்கள் ஸ்ரவாணி..
  வணக்கம் ..

  சிறப்பான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 6. Pretty! This has been an extremely wonderful post.
  Thanks for providing this information.

  Here is my web page; Ray Ban Sunglasses

  ReplyDelete
 7. இறவன் ராமதூதன் அத்தனையும் அருமை

  ReplyDelete
 8. அளவிடற்கரிய ஆஞ்சநேயர் பெருமையை அழகுற எடுத்து இயம்பிய பதிவு!

  ReplyDelete
 9. ஆற்றலும் அற்புதமுமிக்க ஆஞ்சநேயர் பற்றிய அழகிய பதிவு.

  அழகழகான சாந்தஸ்வரூபரின் அரிய பல படங்கள்!
  நல்ல பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி சோதரி!

  ReplyDelete
 10. அருமையோ அருமை... விளக்கங்களும் அம்மா... நன்றி...

  ReplyDelete
 11. நல்ல விளக்கம் . அனுமன் படங்கள் அருமை

  ReplyDelete
 12. ஆஞ்சநேயரின் படங்கள் அத்தனையும் உயிரோட்டமானவை.

  " அஞ்சிலே ஒன்று பெற்றான் " நன்கு விளக்கியுள்ளீர்கள்.

  நன்றி பகிர்விற்கு.

  ReplyDelete
 13. 2
  =
  ஸ்ரீராமஜயம்
  ===========

  ”அல்லல் அகற்றும் அனுமன்” என்ற தலைப்பும், காட்டியுள்ள படங்களும், கொடுத்துள்ள விளக்கங்களும் மிகச் சிறப்பாக உள்ளன.

  இன்று சனிக்கிழமைக்கு ஏற்ற பகிர்வு.

  கடைசிபடமும்,கீழிருந்து ஆறாவது படமும் திறக்கப்படவில்லை.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  ooOoo

  ReplyDelete
 14. I could not resist commenting. Very well written!

  Also visit my webpage - how to buy a car

  ReplyDelete
 15. அழகிய படங்கள் , நல்ல விளக்கங்கள். ஆஞ்சநேயரை வழிபட்டால் வெற்றிதான் கிடைக்குமாம்.

  ReplyDelete
 16. நான் திறக்காமல் உள்ளதாகச்சொன்ன இரண்டு படங்களும் இப்போது திறந்து விட்டன.

  நல்ல அருமையான தரிஸனம், அதுவும் என் மடியில் என் அருமைப்பேரன் அநிருத்துடன்.

  கண்சிமிட்டிடும் குண்டு அனுமன் [ஓம் போல வாலை வளைத்துள்ளவர்] +

  ஸீதா லக்ஷ்மண ஹநூமத் ஸமேத ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி படம்

  இரண்டும் அழகாக இப்போது தரிஸனம் செய்தோம். ;)

  நன்றிகள்.

  ReplyDelete
 17. jai Anjaneya.
  Every Saturday, I am fortunate enough to worship Lord Anjaneya through your blog before going to the temple to do the archana.

  will you kindly send me also an image of Ram Pattabisheka by email

  Advance thanks.

  subbu rathinam
  meenasury@gmail.com

  ReplyDelete
 18. அனுமனை பற்றிய அற்புத தகவல் பகிர்வு! படங்கள் வெகு சிறப்பு! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 19. Hi there, I read your new stuff daily. Your writing style
  is awesome, keep up the good work!

  Visit my web blog: Oakley Sunglasses Cheap

  ReplyDelete
 20. சகோதரி! தங்களின் அன்பான பதிளிற்கு மிக நன்றி. எனது மின்னஞ்சல் - sri4genius@gmail.com ஸ்ரீ ராமச்சந்திரமுர்த்தியின் பட்டாபிஷேக படத்தை பெற மிக ஆவலாய் உள்ளேன். பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு

  ReplyDelete
 21. //காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்...
  மிகச் சரி.
  மிக எளிமையான பழக்கம் - மூச்சை ஆழமாக உள்ளிழுத்து விடுவது - இதன் பலன்களை விளக்க இரண்டு பதிவெழுதலாம். மூச்சைக் கூட அவசரமாக இழுத்து விடுகிறோம், நேரமில்லை. ஒரு நாளைக்கு ஆறு தடவை ஒவ்வொரு முறையும் ஐந்து நிமிடங்களுக்கு மூச்சை இழுத்து விட்டு வந்தால் இரண்டே வருடங்களில் உடலில் அதன் நற்பாதிப்புகளைக் காணலாம் என்கிறார்கள். (நான் நேரில் கண்டிருக்கிறேன்). ஆனால் இதை பழக்கப்படுத்த முடியாமல் போகிறது. நான்கு வாரங்கள் வரை செய்வேன், பிறகு மெள்ள தவறி விலகி மறந்து விடுவேன்.

  ReplyDelete
 22. 'அஞ்சிலே ஒன்று பெற்றான்' - வீட்டில் நாங்கள் எல்லோரும் தினமும் சேவிக்கும் ஸ்லோகம்.

  அனுமனின் பெருமைகளை எத்தனை சொன்னாலும் போதாதுதான்!

  அருமையான பதிவு!

  ReplyDelete