Thursday, February 21, 2013

உலக தாய்மொழி தினம்

 நீராரும் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் 
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த 
திராவிட நல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற, 
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே! தமிழணங்கே! 
நின் சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!
 வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே

(பிப்ரவரி 21) உலக தாய்மொழி தினமாக UNESCO ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகிறது.  
தாய் மொழியின் முக்கியத்துவத்தைப் பற்றிய யுனெஸ்கோவின் காணொளி பார்க்க: http://www.youtube.com/watch?v=Q-XozG0RSCo

இன்றைய தினத்தில் நம் குழந்தைகளுக்கு தாய்மொழியை கற்பதற்கு வேண்டிய சூழலை அளிக்கவேண்டிய கடமையை நாம் உறுதிபடுத்திக்கொள்வோம். 
நம் நண்பர்களையும் தம் குழந்தைகளை தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்ப ஊக்கப்படுத்துவோம்.

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்!

நாவினில் வேதமுடையாள் கையில்
நலந்திகழ் வாளுடையாள் – தனை
மேவினர்க்கு இன்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள்

அறுபது கோடி தடக்கைகளாலும்
அறங்கள் நடத்துவள் தாய் 


Bangladesh History Ekushe February wallpapers

File:Shaheed minar Roehl.jpg
24 comments:

 1. சரியாக ஐந்து மணிக்கு உங்கள் பதிவு வெளி வந்து விடுகிறது. பாராட்டுகள்.

  நல்ல விவரங்கள்.

  ReplyDelete
 2. உலக தாய்மொழித் தின நினைவூட்டலுக்கு நன்றிங்கம்மா

  ReplyDelete
 3. appadiyaa..!

  thakavalukku nantri!

  ReplyDelete
 4. தாய் மொழியை விட ஆங்கிலத்தையே விரும்பும் காலம் இது. இந்த நேரத்தில் தாய்மொழியை நேசிப்பை நினைவு படுத்த நிச்சயம் ஒரு "நாள்" அவசியம்தான்
  நல்ல பதிவு . தாய் மொழியை நேசிப்போம்.
  நன்றி.

  ReplyDelete
 5. Hiooooi
  This is the prayer song in our office and i who sings in every function.
  Now i sing loudly.....do you hear?????
  Felt very happy to sing again the Bharathiyar song.
  Do you know my friends grandson at London(2andhalf year old)sings this bharathiarsong............
  Nice post Rajeswari.
  viji

  ReplyDelete
 6. பகிர்வு மேலும் சிறப்பு... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 8. நல்ல பகிர்வு போற்றுவோம் நம் தாய்மொழியை

  ReplyDelete
 9. அவசியமானதொரு பகிர்வு.

  ReplyDelete
 10. எனது கைபேசியிலும் முகநூலிலும் என் தாய்மொழியான தமிழை பயன்பாட்டு மொழியாக வைத்திருப்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்! அனைவருக்கும் உலக தாய்மொழி தின வாழ்த்துக்கள்! இப்படிக்கு : நம்மால் முடியும் நட்பூஸ்

  ReplyDelete
 11. தாய் மொழி தினத்திற்காக சிறப்பான பதிவு.அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 12. தாய் மொழி பகிர்வு மிக அருமை.
  வாழ்த்துக்கள்.


  ReplyDelete
 13. தமிழின் பெருமை சொல்லும் பதிவு..

  ReplyDelete
 14. தமிழ் வாழ்க ! வளர்க !

  தமிழ் மொழி தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. தாய்மொழித்தினமாம் இன்று தமிழரே உணருங்களென்று
  தமிழ்மொழிச் சிறப்பதனை தமிழரெமக்குணர்த்திட்ட
  தமிழன்னையே! உன்சேவை தரணியிலே தமிழுள்ளவரை
  தணியாத தாகமாய் தடங்கள் பலபதிக்கும்! வாழ்க நின்புகழ்!

  வாழ்த்துகிறேன்... வணங்குகின்றேன்...

  ReplyDelete
 16. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 17. உலக தாய்மொழி தினத்துக்கான நினைவூட்டலுக்கு நன்றி.

  ReplyDelete
 18. ”உலக தாய் மொழி தினம்” பற்றிய தங்களின் இன்றைய பதிவு அருமை.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 19. தமிழ்த்தாய் வாழ்த்தும், காட்டியுள்ள படங்களும், UNESCO செய்திகளும் பதிவுக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது. ;)

  ReplyDelete
 20. மிக சிறப்பான பகிர்வுக்கு நன்றி...

  இந்த பதிவில் உள்ள ஆனானயமர் கருத்துரைகள் ஸ்பேம் கமென்ட்கள் அவற்றை அவற்றை முடிந்தவரை ஸ்பேம் செய்துவிடுங்கள்

  ReplyDelete
 21. தாய்மொழிக்கு தலை வணங்குவோம்

  ReplyDelete
 22. நல்லதொரு பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 23. அருமையான பகிர்வு ராஜராஜேஸ்வரி! நம் தாய்மொழிக்கு சிறந்ததொரு சமர்ப்பணம்!!

  ReplyDelete
 24. தமிழ்த்தாயை வணங்குகின்றோம்.

  ReplyDelete