Sunday, February 24, 2013

தீர்த்தவாரித் திருநாள்


புனித நீர்நிலைகளில் மக நீராடலுக்கு மிகவும் புகழ்பெற்றது கும்பகோணம் மகாமகக்த்திருக்குளத்தில் இருபது புனித தீர்த்த  தேவதைகளின் தீர்த்த கிணறுகளில் .புண்ணிய நதிகள் அனைத்தும் அங்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.
மக நட்சத்திரத்தன்று மகாமகக் குளத்தில் நீராடி, குளத்தை மூன்று முறை வலம் வந்தால் கயிலாயத்தை வலம் வந்த பலன் கிட்டும்.

அன்று, மகாமகக் குளக்கரையில் வேதவிற்பன்னர் உதவியுடன் மறைந்த முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிட்டும்.

இதனால், குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும்.

மக நட்சத்திரத்தன்று  தீர்த்தவாரி நடைபெறும். 
குடந்தைத் திருத்தலத்தில் அருள்புரியும் எல்லா சிவாலயங்களிலிருந்தும் சுவாமியின் உற்சவத் திருமேனிகள் ஊர்வலமாக மகாமகக் குளத்திற்கு வருகை தந்து, சுபஓரையில் வழிபாட்டுடன் தீர்த்தவாரி காண்பார்கள்.  

பெருமாள் கோவில்களில் எழுந்தருளியுள்ள தெய்வத் திருமேனிகளும் சக்கரப் படித்துறைக்கு வந்துசேர, தீர்த்தவாரி மிகச்சிறப்பாக நடைபெறும்  சுபவேளையில் பக்தர் பெருமக்கள் தீர்த்த வாரியில் கலந்துகொண்டு நீராடி புனிதம் பெறுவார்கள்.
தங்கள் இல்லத்தில் வடக்கு திசை நோக்கி நின்று குளித்தாலும் புனிதம் கிட்டும் நாள் மகாமகம்  திருநாள்..

மயிலாடுதுறைக்கு  அருகிலுள்ள திருக்குறுக்கை வீரட்டானேஸ்வரத்தில் மாசி மகத்தன்று காம தகனவிழா நடைபெறும். 
சிவபெருமான் ஆழ்ந்த தியானத்திலிருக்கும்போது, தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் மீது மலரம்பு எய்தான் மன்மதன். 

கோபம் கொண்ட அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட தீப்பொறிகள் மன்மதனை எரித்து சாம்பலாக்கியது. 

மன்மதன் மனைவி ரதிதேவியின் வேண்டுதலால், மீண்டும் மன்மதன் அவள் கண்களுக்கு மட்டும் தெரியும் படி சிவபெருமான் அருளிய நிகழ்வை நினைவுபடுத்தும் விழாவாக காம தகனவிழா மாசிமகத்தன்று நடைபெறும்.
இரண்யன் என்ற அசுரன் பூமாதேவியைக் கடத்திச் சென்று
பாதாள லோகத்தில் ஒளித்து வைத்தான். 
இதனை அறிந்த மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அந்த அசுரனை வதம் செய்து, பூமாதேவியை வெளிக்கொணர்ந்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்று விஷ்ணு புராணம் கூறும்.
கன்னிப் பெண்ணான குந்திதேவி, சூரிய பகவானை நேரில் வரவழைக்கும் மந்திரத்தை உச்சரித்ததால், சூரிய பகவான் அவள்முன் தோன்றினார். அதன் விளைவால் குந்திதேவி குழந்தை பெற்ற பழிச்சொல்லுக்கு அஞ்சி அந்தக் குழந்தையை (கர்ணன்) ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள். 
அந்தப் பாவம் அவளை வாட்டியது. அதற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டி, உரோமச முனிவரைச் சந்தித்தாள். 

அவர், "மாசி மக நட்சத்திரத்தன்று ஏழு கடல்களில் ஒரே சமயத்தில் நீராடினால் உன் பாவம் நீங்கும்' என்று சொன்னார். "அது எப்படி ஒரே நாளில் ஏழு கடல்களில் நீராட முடியும்?' என்று பலத்த யோசனையில் ஆழ்ந்த குந்திதேவி, வழி காட்டியருளுமாறு இறைவனை இறைஞ்சினாள். 
அப்போது, "திருநல்லூர்  கோவிலுக்குப் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதை ஏழு கடலாக நினைத்து மாசி மகத்தன்று நீராடுவாயாக' என்று அசரீரி ஒலித்தது. குந்திதேவியும் அப்படியே செய்து தன் பாவத்திலிருந்து விடு பட்டாள். 
அவள் நீராடிய தீர்த்தம்- சப்த சாகர தீர்த்தம் என்று அழைக்கப் படுகிறது.
தட்சன், சிவபெருமானை நோக்கி பல வருடங்கள் கடுமையாக தவம் மேற்கொண்டான். 
அதன் பலனால் சிவபெருமான் அவன்முன் தோன்றி, "வேண்டும் வரம் என்ன?' என்று கேட்க, "உமையவள் எனக்கு மகளாகக் கிடைக்க வேண்டும். நான் உமைய வளை வளர்க்க வேண்டும். 
அதன்பின் தக்க பருவத்தில் தாங்கள் மணம்புரிய வேண்டும்' என்று வரம் கேட்டான். இறைவன் அருளிய வரத்தின் படி உமையவள் காளிந்தி நதியில் ஒரு தாமரைப் பூவில் வலம்புரிச்சங்கு வடிவாய் மாசி மக நட்சத்திரத்தன்று தோன்றினாள். 

அன்றைய தினம் தட்சன் தன் மனைவியுடன் அந்த நதியில் நீராட வந்தபோது, தாமரை மலரில் தோன்றிய வலம்புரிச்சங்கு குழந்தையாக மாறியது. அந்தப் பெண் குழந்தையைக் கண்டெடுத்து வளர்த் தான் தட்சன்.
மாசி மகத்தன்றுதான் சுவாமிமலை திருத் தலத்தில், தன் மகன் முருகனிடம் சிவபெருமான் உபதேசம் பெற்றார் என்று சிவபுராணம் கூறுகிறது.

அதனால் புதிதாகக் கல்வி கற்பவர்கள்- எந்தக் கல்வியாக இருந்தாலும்- அன்று தகுந்த ஆசிரியரிடம் கற்றால் சிறந்து விளங்கலாம் என்பர்.
வல்லாள மகாராஜனுக்கு இறைவனே மகனாக எழுந்தருளினார் என்பதால், ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலையார் மாசி மக நட்சத்திரத்தில் பள்ளிகொண்டாப் பட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி, அந்த மன்னனுக்காக நீத்தார் கடனுக்குரிய வழிபாட்டினை நடத்திவரும் விழா திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.
பல பெருமைகளைக் கொண்ட மாசி மக நட்சத்திரத்தன்று புனித நீர்நிலையில் நீராடி, விரதம் மேற்கொண்டு இறைவனை வழிபடுவோருக்கு புனிதம் கிட்டுவதுடன், பல பேறுகளும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழ்வர்.


தங்க கர்பகிரஹம-நிஜமந்திர், சோம்நாத், குஜராத்.

22 comments:

 1. அருமையான படங்கள்... நன்றி...

  ReplyDelete
 2. Aha Fentastic explanations. Very nice post asusual Dear.
  Thanks.
  viji

  ReplyDelete
 3. தீர்த்தவாரித் திருநாள் தலைப்பும் படங்களும் விளக்கங்களும் வழக்கம் போல் அருமை. ;)

  பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

  முடிந்தால் மீண்டும் பிறகு தாமதமாக வருவேன்.


  ReplyDelete
 4. மாசி மகத்த திரு நாளுக்கு இத்தனை
  மகிமையா? இத்தனை புராண சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.

  ஆச்சர்யமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது பதிவு.

  ReplyDelete
 5. தீர்த்தவாரி திருநாள் பற்றி அருமையான விளக்கங்களுடன் படங்களும் அழகு.

  வீட்டில் வடக்கு நோக்கி நின்று குளித்தால் புனிதம் கிட்டும் என்று சொல்லிவிட்டீர்கள் ,மகாமக குளத்திற்கு போக முடியாவிட்டாலும் வீட்டில் வடக்கு நோக்கி குளித்து புனிதம் பெற்றுக் கொள்கிறேன். நன்றி.

  ReplyDelete
 6. மாசிமகம் குறித்து இத்தனைத் தகவல்களா? ஆச்சர்யம் அளித்தது! தொகுத்து புகைப்படங்களுடன் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 7. சிவனின் படங்களுடன் அழகிய மக்கள் கூட்ட கட்சிகள் விரிகிறது பாராட்டுகள் ....

  ReplyDelete
 8. நல்ல பதிவு கண்நிறைத்த இறைஅருள் நன்றி நான் பதிவுலகதிற்கு புதிது

  ReplyDelete
 9. மிகவும் அருமை அம்மா... நன்றி...

  ReplyDelete
 10. பக்திக் குளியல்.

  ReplyDelete
 11. கடைசியிலிருந்து இரண்டாவது படம் + அந்தப்பாலம் மிக அருமை. எவ்ளோ ஜனங்கள்?

  அது எந்த ஊரோ?

  >>>>>>

  ReplyDelete
 12. தீர்த்தவாரி பற்றிய பதிவு அருமை.
  நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன் அயோத்தி போயிருந்தபோது அங்குள்ள அம்மாஜி மந்திரில் ஐந்து நாட்கள் பிரம்மோத்சவம் நடந்து கடைசி நாளன்று சரயு நதியில் தீர்த்தவாரி நடந்தது. முதல் முறையாக அன்று தான் தீர்த்தவாரி விழாவில் கலந்து கொண்டேன்.

  அதேபோல திருக்கண்ணபுரம் சௌரிப் பெருமாளும் தீர்த்தவாரிக்கு திருமலைராயன் பட்டினம் என்கிற கடற்கரை ஊருக்குப் போகிறார். அங்கிருக்கும் மீனவர்கள் பெருமாளுக்கு எல்லாவிதமான மரியாதைகளும் செய்து அனுப்புகிறார்கள். கண்கொள்ளாக்காட்சி!

  தீர்த்தவாரி அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

  ReplyDelete
 13. பள்ளிக்கொண்டா பட்டுக்கதைக்கு ஒரு ஷொட்டு.

  வேலூர் பக்கத்தில் பள்ளிகொண்டா என்ற ஒரு ஊரும் அங்கு நம் ஸ்ரீரங்கம் போல பிரபலமான ஓர் பெருமாள் கோயிலும் உள்ளது என கேள்விப்பட்டேன்.

  >>>>>>

  ReplyDelete
 14. ஸ்வாமிமலையில் தந்தைக்கு உபதேசம் நடந்ததும் மாசி மகத்தன்று தானா? பேஷ் பேஷ்.!

  மாசிமகம் >>> காளிந்தி நதி >>> தாமரை மலர் >>> வலம்புரிச்சங்கு >>> அதில் பார்வதி தேவி >>> தட்சன் மகள்

  ஆஹா, இவள் தான் தக்ஷன் மகள் தாக்ஷாயணியானாளா? ;)

  கன்னிப்பெண் குந்தி தேவி >>> சூர்ய பகவான் >>> கர்ணன் >>> பாவம் >>> பிரயசித்தம் >>> உரோமச முனிவர் >>> ஏழு கடல் >>> இறைவன் >>> 7 கடல்கள் போன்ற திருநல்லூர் சப்த சாகர தீர்த்தம் >>> பாப விமோசனம். !!!!!!!

  சூப்பரான குட்டிக்குட்டிக்கதைகள் கேட்க ஜாலியாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 15. இரண்யன் அசுரன் >>> பூமாதேவி கடத்தல் >>> பாதாள லோகத்தில் அடைத்தல் >>> மாசி மகம் >>> வராஹ அவதாரம் >>> அசுரனை அழித்தல் >>> தேவியை மீட்டல்

  பெண்களைக்கடத்துதல் எப்போதோ ஆரம்பித்துள்ளது பாருங்கோ.

  ----

  மலர் அன்பு >>> மன்மதன் >>> சிவன் >>> நெற்றிக்கண் திறத்தல் >>> மன்மதன் சாம்பல் ஆதல் >>> ரதி தேவியின் புலம்பல் >>> மாசிமகம் >>> காம தகன விழா

  காமமே தகனம் என்றால் போச்சு எல்லாமே போச்சு ...... ;)

  நல்லவேளையாக ரதி தேவிக்கு மட்டுமாவது மன்மதனைக்காண அருளினாரே.

  ->>>>>>

  ReplyDelete
 16. இல்லத்திலேயே வடதிசை நோக்கி நின்று ஸ்நானம் செய்தால் மாசி மகத்தன்று புனிதம் கிட்டும் .....

  ஆஹா, இது நல்ல தகவலாக உள்ளது. செய்வதும் சுலபம்.

  >>>>>

  ReplyDelete
 17. தீர்த்தவாரி பற்றி வெகு அழகாக நிறைய விளக்கங்களுடன் சொல்லியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

  இன்றைய படங்கள் தகவல்கள் குட்டியூண்டு கதைகள் எல்லாமே சூப்பர் தான்.

  வழக்கப்படி அசத்தியுள்ளீர்கள்.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.

  ooooo

  ReplyDelete
 18. மாசி மகத்திற்கு இதனை சிறப்புக்களா ?
  தெரிந்து கொண்டேன்.
  அருமை.

  ReplyDelete
 19. மாசி மகத்தின் மாகத்மியத்தை அறிய வைத்தமைக்கு நன்றி பல ....

  ReplyDelete
 20. படங்கள் வழக்கம் போல் பரவசம் தருகின்றன.

  ReplyDelete
 21. மாசி மகத்தின் மாகத்மியத்தை அறிய வைத்தமைக்கு நன்றி பல...

  ReplyDelete
 22. தீர்த்தவாரி பற்றி அருமையான செய்திகள்.

  ReplyDelete