Sunday, February 10, 2013

சீனாவில் வசந்த விழா


பூமி பூப்பூக்கும் இனிய வசந்தத்தில் புத்தாண்டு மலர்வது இயற்கை அன்னையே மலர்களால் பூமியை ஆசிர்வதித்து புதிய ஆண்டை தொடக்கி வைப்பது  இனிய வரவேற்பாக. சீனர்களின் வசந்த விழாவான சீன புத்தாண்டாகக்  கொண்டாடப்படுகிறது ...

ஒவ்வொரு வருடங்களையும் ஒவ்வொரு விலங்கினங்களைக் கொண்டு அழைக்கும் சீனர்கள் பிறக்கவுள்ள புத்தாண்டை பாம்பு வருடமாக அழைக்கின்றனர். 
சீனர்களின் நம்பிக்கைப்படி பாம்பு என்பது நெருப்பை குறிக்கிறதாம். ஆகையால் அதிக சக்தியை அளிக்கவுள்ளதாக மகிழ்கின்றனர் ...சீனா, ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளில் சீனர்களுடன்  அனைத்து மக்களும்  புத்தாண்டை மகிழ்ச்சியாக உற்சாகத்துடன் வரவேற்கிறார்கள்..
சீனாவில்  12 விலங்குகளின் பெயர்களை ஆண்டின் 
பெயராகச் சூட்டியுள்ளார்கள் ..

அவர்களுடைய புராணம் புத்தர் பூமியைவிட்டுப் பிரியும் வேளையில் எல்லா விலங்குகளையும் சந்திக்க அழைத்தாராம். ஆனால், வந்தது எலி, எருமை, புலி, முயல், பாம்பு, குதிரை, குரங்கு, சேவல், நாய், பன்றி!  
உட்பட மொத்தம்   12 விலங்குகள்தானாம். 

அதனால், அந்த விலங்குகளுக்கு நன்றிக்கடன் பாராட்டும் வகையில் அவை வந்து சேர்ந்த நேரப்படி வரிசைப்படுத்தி ஒவ்வொரு ஆண்டுக்கும் பெயர் சூட்டப்பட்டதாக  நம்பிக்கை ....


வீட்டு வாயில் கதவில் கெட்ட ஆவிகளின் வருகையைத் தடுக்கவும் அதிர்ஷ்ட தேவதையை வரவேற்கவும் இரண்டு கடவுள்களின் உருவங்களை ஒட்டி வைத்திருப்பார்கள்.

புத்தாண்டு அன்று புதிய உடைகள், புதிய காலணிகள் அணிவது ஆண்டு முழுவதும் அவை கிடைக்கும் என்ற உத்திரவாதத்தைத் தருமாம்.

அதிர்ஷ்ட தேவதையை வெளியில் தள்ள விரும்பாததால் .. புத்தாண்டு அன்று வீட்டைப் பெருக்க மாட்டார்கள்.  துடைப்பம், குப்பைத்தொட்டி, தூரிகை(Brush) போன்ற பொருள்களை எடுத்து மறைத்து வைத்துவிடுகிறார்கள். 

ஏனெனில், அன்றைய நாளில் வீடுகூட்டுதல், தூய்மைப்படுத்துதல் முதலான வேலைகளைத் தவிர்க்கிறார்கள். இப்படிச் செய்வதால் விட்டில் உள்ள நற்பேறு (Luck) விலகிப்போய்விடும் என்று நம்புகிறார்கள்...

கருப்புத் துணிகள் அணியக் கூடாது. கூர்மையான கத்தி, கத்தரிக் கோல் பயன்படுத்தக் கூடாது. அன்று கை தவறிப் பொருட்கள் விழுந்து உடைந்தால் அபசகுனம். 

அதை நிவர்த்தி செய்ய, வீட்டிலுள்ள பெரியவர்கள் "luo di kai hua" என்று 
சொல்லி விட்டால் விழுந்த பொருளின் சாபம் பலிக்காது.

புத்தாண்டு பிறப்பானது தங்களின் ஆற்றலைப் புதுப்பிக்கிறது; நம்பிக்கையை அதிகரிக்கிறது; புதிய எதிர்ப்பார்ப்புகளை உண்டாக்குகிறது என்று சீனர்கள் நம்புகிறார்கள். 

புத்தாண்டு வாழ்க்கையில் பல ஆக்கமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என எண்ணுகிறார்கள்.
புத்தாண்டு நாளில் சீனர்கள் தங்கள் வீடுகளைத் தூய்மைப்படுத்தி அலங்காரமும் செய்கின்றனர். 

சிவப்பு நிறத்திலான ‘தங்லுங்’ (காகிதத்தைக் கொண்டு அழகழகான வடிவத்தில் செய்யப்பட்டு உள்ளே மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்படும் ஒருவகை ஒளியணிப் பொருள்) வீட்டின் முன்னால் கட்டப்படும். வீட்டு நுழைவாயிலில் மங்கல வாழ்த்து பொறிக்கப்பட சிவப்புப் பதாகைகள் தொங்கவிடப்படும். இப்படிச் செய்வதால் வீட்டுக்குள் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.
,பட்டாசு வெடிப்பது சீனப் புத்தாண்டின் குறிப்பிடத்தக்க நிக்ழ்வாகும் . மனிதர்களைப் பிடித்து விழுங்கும் ‘நியன்’(Nian) என்ற ஓர் அரக்கனை விரட்டவே பட்டாசு வெடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 

, கெட்ட சத்திகளை விரட்டியடிக்கும் நோக்கத்திலேயே சீனர்கள் பெரிய அளவில் பட்டாசு கொளுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்காகவே, சீனாவில் மணிக்கணக்காக வெடிக்கும் சரவெடிகள் தயாரிக்கப்படுகின்றன. 

சீனநாக நடனமும் சிங்க நடனமும் புத்தாண்டின்போது சீன ஆலயங்களிலும் வீடுகளிலும் படைக்கப்படுகின்றன...
File:சீனப் புத்தாண்டு அலங்காரம் 2.JPG24 comments:

 1. Spot on with this write-up, I seriously think this
  web site needs much more attention. I'll probably be back again to read more, thanks for the info!
  Also visit my web page ; ray ban sale

  ReplyDelete
 2. அருமையான தகவல்கள்.

  ReplyDelete
 3. படங்கள் அத்தனையும் பளீச்சோ பளீச்!!

  >>>>>

  ReplyDelete
 4. கீழிருந்து ஏழாவது படம், தெருவையே அடைத்து வரும் பாம்பு ஊர்வலம் அட்டகாசமாக உள்ளது.

  நேராக எங்கள் எல்லோரையும் சீனாவுக்கு கூட்டிப்போய் விட்டீர்கள்.

  >>>>>>>

  ReplyDelete
 5. அன்பின் சீனா ஐயா செய்யாத, இந்த அதிசயமான காரியத்தை அனாயாசமாக உங்களால் செய்ய முடிகிறது. ;)))))

  நியாயமாகப்பார்த்தால் சீனா ஐயா தான் வலைச்சர ஆசிரியர்களாக இருந்த அனைவரையும், சீனா போன்ற இடங்களுக்குச் சுற்றுலா போல அழைத்துச்சென்று, இதையெல்லாம் காட்டி மகிழ்விக்க வேண்டுமாக்கும்.

  >>>>>>>>

  ReplyDelete
 6. ”சீனாவில் வசந்த விழா” என தலைப்பிட்டு, வெகு அழகாக பல தகவல்களை, உங்களுக்கே உரித்தான் ஸ்டைலில் எடுத்துரைத்து, அழகான படங்களுடன் விளக்கியுள்ளீர்கள்.

  ஒவ்வொரு நாட்டினரிடமும் உள்ள பல்வேறு கலாச்சாரம் + நம்பிக்கைகள் மிகவும் வியப்பளிப்பதாகவே உள்ளன.

  >>>>>>

  ReplyDelete
 7. ஏதேதோ சொல்லி பாம்பைப் படமெடுக்க வைத்துவிட்டது தான் சற்றே பயமாக இருக்கிறதூஊஊஊஊ.

  அடியில் தொங்கும் / தூங்கும் [கீழிருந்து இரண்டாவது] பாம்பு நத்தை போல சுருண்டுள்ளது சிறப்பாக உள்ளது.

  அதன் உடல் பூராவும் ஒரே பூக்கள் வேறு. ஜோர் ஜோர். ;)))))

  >>>>>>>>

  ReplyDelete
 8. ’பூமி பூப்பூக்கும்’ என்ற ஆரம்ப வரிகளுக்கு மேலே காட்டியுள்ள, அத்தனைப்பூக்களும் அழகோ அழகாக உள்ளன.

  IT IS A VERY BEAUTIFUL DISPLAY. ;)

  வசந்தமாய் இன்று தாங்களும், பாம்பு போல சீறிப்புறப்பட்டு, சீனர்களின் வசந்த விழாவான புத்தாண்டுக் கொண்டாட்டங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

  மனமார்ந்த பாராட்டுக்கள்.

  இனிய நல் வாழ்த்துகள்

  பகிர்வுக்கு நன்றிகள்.

  oooooo

  ReplyDelete
 9. சீனா, ஐப்பான், மலேசியா போன்ற நாடுகளில் சீனர்களின் புத்தாண்டைப் பற்றி அருமையான படங்களுடன் விரிவான பதிவுக்கு நன்றி.
  அவர்கள் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இறைவன் அவர்கள் வாழ்வில் எல்லா நலங்களை அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.

  இந்த ஆண்டு பாம்பு வருடம் அனைவருக்கும் நெருப்பு சகதியை அளிக்க வேண்டும்.
  வாழ்க வளமுடன்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. நம்பிக்கைகள் எங்கும் ஒன்றாகவே இருக்கின்றன .
  நல்ல தகவல்கள் கண் , மனம் இரண்டையும் கவர்ந்தன.

  ReplyDelete
 11. ஏராளமான புது தகவல்கள்... நன்றி...

  ReplyDelete
 12. சீனாவிற்கே சென்று விட்டது போல் இருந்தது.
  புத்தாண்டை எவ்வளவு விமரிசையாக உள்ளது?
  animated படங்கள் எங்கிருந்து கிடைக்கிறது? சொல்வீர்களா?
  வலிமை சேர்க்கும் வாழ் வழிபாடு படங்கள் பற்றித் தெரிந்து கொள்ள ஆசை.
  நான் Paatti stories என்ற தளத்தில் Rama story குழந்தைகளுக்காக ராமாயணம்
  எழுத ஆரம்பித்திருக்கிறேன். அதற்கு உதவியாக இருக்குமென்று நினைத்தேன்.

  ஆர்மையான பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 13. கண்ணைக் கவரும் படங்கள், சுவாரசியமான தகவல்கள் என பதிவு சிறப்பாக இருக்கு, மேடம்.

  ReplyDelete
 14. அருமையான தகவல்கள் . படங்கள் அருமை

  ReplyDelete
 15. அருமையான தகவல்கள். படங்கள் யாவும் மிக அழ‌கு. மிக மிக நல்ல பதிவுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 16. ஆன்மீகம் மட்டுமல்லாது மற்ற விஷயங்களையும் மிக விளக்கமாக அழகான படங்களுடன் பதிவாக்க முடியும் உங்களால் என்று புரிகிறது.
  எதைச் செய்தாலும் 'the Best' என்னும்படியாகச் செய்கிறீகள்.

  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 17. அறிந்திராத புதிய புதிய தகவல்கள்...:)
  அழகிய படங்கள். அருமை!

  இப்புத்தாண்டை கொண்டாடும் அத்தனை உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்!

  பகிர்வுக்கு மிக்க நன்றி சோதரி!

  ReplyDelete
 18. Attractive section of content. I just stumbled upon your website and in accession capital to claim that I get in fact
  loved account your blog posts. Any way I'll be subscribing for your feeds or even I achievement you get entry to persistently fast.

  Have a look at my site; buying a car
  Feel free to visit my website - buying a car with bad credit,buy a car with bad credit,how to buy a car with bad credit,buying a car,buy a car,how to buy a car

  ReplyDelete
 19. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. படங்களும் தகவல்களும் அருமை

  ReplyDelete
 21. சீனப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 22. சீனர்களின் புதுவருட கொண்டாட்டத்தைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள்.
  படங்களும் பதிவும் அருமை.

  ReplyDelete
 23. படங்கள் அத்தனையுமே சூப்பர்.

  ReplyDelete
 24. I have been surfing online more than 4 hours today, yet I never found any interesting
  article like yours. It's pretty worth enough for me.
  In my view, if all web owners and bloggers made
  good content as you did, the internet will be a lot more
  useful than ever before.

  Have a look at my web-site: TerranceNHoldvogt

  ReplyDelete