Tuesday, June 26, 2012

ஆனந்தத் தேனே! அருள் விருந்தே!!குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே!’
திருநாவுக்கரசரின் அற்புதத் திருப்பாட்டு நடராஜரை 
அழகாக நெஞ்சினிக்கும் தமிழில் நிழற்படம் பிடித்துக்காட்டும் !
மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றாலும் சிறப்பிடம் பெறுவது சிதம்பரம்..
தீர்த்தம் என்பது சிவகங்கையே!
ஏத்தரும் தலம் எழில் புலியூரே!
மூர்த்தி அம்பலக் கூத்தனது உருவே!
கனக சபை மேவி அனவரதம் ஆடும் கடவுள்’ 
ஜகஜோதியாக விளங்குகிறார் என்கிறார் அருணகிரி நாதர்

நம் பலம் எல்லாமே அம்பலம் தானே!
அதனால்தானே நிகழ்ச்சிகளின் ஆரம்பத்திலும் 
முடிவிலும் ‘திருச்சிற்றம்பலம்’ என திசை அதிர முழங்குகிறோம்!!!.
அன்பர்களின் இதயகமலத்தே வீற்றிருக்கும் இறைவனே 
இதயமாக விளங்கும் சிதம்பரத்திலும் திருவருள் வழங்குகிறான்.

இருதயத்திற்குப் பக்கவாட்டின் மூலமாகவே இரத்தம் பாய்வது 
போல் சிதம்பரம் கோவிலிலும் வழி நேராக இல்லாமல் 
இரு பக்கங்களிலும் அமைந்திருக்கிறது. 

கர்ப்ப கிருகமும் நடுவில் இல்லாமல் மனித இதயம் 
போலவே சற்றுத் தள்ளி அமைந்துள்ளது.
சஞ்சித வினைகளைப் போக்கும் குஞ்சித பாதனைக் கும்பிட்டு 
குறை அனைத்தும் நீங்கப் பெறுகிறோமே !
கோவில்’ என்று சொன்னாலே அந்தத் தமிழ்ப் பதம்-அழகுப்பதம் 
தூக்கி ஆடும் -என்றும் புதுமையாக தகதகக்கும் தங்கப் பந்தலுடன் விளங்கும் சிதம்பரத்தையே குறிக்கும்.
 
பிரம்மா, திருமால், சிவன் என மும் மூர்த்திகளும் 
முறையாகப் பூசை ஏற்கும் திருத்தலம்

தில்லை அம்பலத்தில் நடனம்புரியும் கூத்தப் பெருமான் சந்நிதியை அடைந்து தென்புறமாக எதிரிலுள்ள படிகளில் ஏறி நின்றால் நடராஜர் திருத்தோற்றத்தையும், உறங்குவான் போல் யோகு செய்யும் பெருமாள் தோற்றத்தையும் ஒருங்கே காணலாம்.


தில்லையில் ஓரிடத்தில் நின்று சைவ, வைணவ தெய்வங்களைத் தரிசித்த அப்பைய தீட்சிதர் சமரச பாவத்தில் வடமொழித் தோத்திரங்கள் பாடியுள்ளார் 


காலையில் கதிரவன் உதிப்பதைக் காண்கிறார் கம்பர். 
சூரியனின் வீரியக் கதிர்கள் சுற்றி விரிகின்றன. 
நடராஜர் வடிவத்தை அதில் கண்டு ஆனந்திக் கிறார் கவியரசர் கம்பர்.
‘கண்ணுதல் வானவன் கனகச் சடை விரிந்தால் என விரிந்த கதிர்கள் எல்லாம்’ என்கிறார். 
சிதம்பரம் ஆகாயத் தலம் என்பதால் நடராஜரை ‘வானவன்’ என பொருத்தமுறப் பெயரிட்டு அழைக் கிறார் கவிச்சக்கரவர்த்தி அல்லவா கம்பர் !
அம்பலத்தரசே! அருமருந்தே!
ஆனந்தத் தேனே! அருள் விருந்தே!
எனக் கைத் தாளமிட்டுக் களிக்கிறார் வள்ளற் பெருமான்.
‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா?
இடதுபதம் தூக்கி ஆடும் நடராஜன் அடிபணிவையே!’

சிதம்பரம் பெருவெளியாகிய ஆகாயத்தலம் என்பதால் சிதம்பர ரகசியச் சந்நிதியில் ‘அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு விளங்கும்’ அருவ இறைவனுக்கு வில்வப் பொன்னிதழ் மாலை சார்த்தப் பெற்றுள்ளது. 

தில்லை வாழ் தீட்சதர்கள் திரை விலக்கிக் கற்பூர தீபம் காட்டுவார்கள். பலகணி மூலமாகவே பக்தர்கள் தரிசிக்க முடியும். 
அம்பலத்தில் ஒரு ரகசியம் அமைந்திருப்பது ஆச்சரியம்

திறந்திருக்கும் திருக்கோவிலுக்குள் நுழைந்து இறைவனை இதயபூர்வமாக வழிபட்டு நற்பண்புகள் வளரப்பெற்றால் திறக்காத சிறைக்குள் அகப்பட்டுத் தவிக்கிற அவலநிலை மக்களுக்கு ஏற்படாது. ஆலயம் தொழுவது சாலவும் நன்றே!

 நம்மேல் நடராஜர் காட்டும் கருணைக்கு அற்புத  உதாரணமாக 
ஆனித் திருமஞ்சனத்தின் போதும், மார்கழி ஆருத்ரா தரிசனத்தின் போதும்தான்  கருவறையை விட்டு மூலவரான ஸ்ரீநடராஜ மூர்த்தியே ஆண்டுக்கு இருமுறை தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளிலும் 
உற்சவராக உலா வருகிறார்.
கருவறை மூலவர் தெரு வரை உலாவருவது 
வேறெங்கும் காண முடியாத எட்டாவது அதிசயம்.
எல்லையை மிதித்தாலே நம் தொல்லை வினைகளை இல்லை என்றாக்கும் தில்லை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜரைச் சிதம்பரத்தில் வழிபட்டு வாழ்வில் சிறந்து விளங்கலாம்..

18 comments:

 1. ஆனந்தத் தேனே! அருள் விருந்தே!!
  ஆனந்தத்தேன் இன்று ....
  இந்த் ஆண்டின் 199 ஆவது பதிவு!

  அருள் விருந்தாகிய இந்த ஆண்டின்
  200 ஆவது பதிவு நாளை!!

  அப்படித்தானே?

  மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்பான வாழ்த்துகள்.
  vgk

  ReplyDelete
 2. முதல் படத்தில் தில்லை நடராஜாவும் அன்னை சிவகாம சுந்தரியும் வெள்ளிக்கவசத்துடனும், அழகிய ஜவ்வந்தி போன்ற மலர்களுடனும் அற்புதமாக தரிஸனம் அளிப்பது அழகோ அழகு .....
  மனதுக்கு மகிழ்வோ மகிழ்வு.

  ReplyDelete
 3. ‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் ...


  என்கிற திருநாவுக்கரசரின் அற்புதத் திருப்பாட்டுடன் ஆரம்பமே ஜோர் தான்.

  இரண்டாவது படத்தில் காட்டியுள்ள ஆடலரசனின் தனிச்சிலை பிரமாதமாகவும், பிரும்மாண்டமாகவும், நெஞ்சுக்கு நிறைவாகவும் உள்ளது.

  ReplyDelete
 4. மூர்த்தி, தலம், தீர்த்தம்
  என மூன்றாலும் சிறப்பிடம் பெறுவது

  சிதம்பரம்..

  தீர்த்தம் என்பது சிவகங்கையே!

  தனது தேச வறட்சியாலும், தனது வெண்குஷ்ட நோயாலும் சிரமப்பட்ட கெள்டதேச அரசன் ஸுதேசவர்மன் இதே சிவகங்கைத் தீர்த்தத்தில் மூழ்கி ஆரோக்யமடைந்ததாக, நேற்று தான் தபாலில் வந்த ஓர் ஆன்மிக இதழில் படித்து மகிழ்ந்தேன்.

  இன்று தங்கள் மூலமும் இதன் சிறப்பை அறிய முடிந்தது.

  ReplyDelete
 5. அடுத்தடுத்த இரண்டு படங்களில் கோயிலின் மொத்த அழகும்,
  கோபுர அழகும் அம்சமாகக் காட்டப்பட்டுள்ளன.

  /நம் பலம் எல்லாமே அம்பலம் தானே!

  அதனால்தானே நிகழ்ச்சிகளின் ஆரம்பத்திலும் முடிவிலும் ‘திருச்சிற்றம்பலம்’ என திசை அதிர முழங்குகிறோம்!!!/

  வெகு அழகான சொற்களை பிரயோகித்து அம்பலப்படுத்தியுள்ளதும் தங்களின் தனித்தன்மையும், சாமர்த்தியமும் தான். சபாஷ்!

  ReplyDelete
 6. /கோயில்’ என்று சொன்னாலே
  அந்தத் தமிழ்ப் பதம் -

  அழகுப்பாதம் தூக்கி ஆடும் -

  என்றும் புதுமையாக தகதகக்கும் தங்கப் பந்தலுடன் விளங்கும்

  சிதம்பரத்தை மட்டுமே குறிக்கும்./

  அதுபோல பதிவு என்று சோன்னாலே

  அதுவும் ஆன்மிகப்பதிவு என்று தேடினாலே

  தினமும் புதுமையாக

  தகதகவெனப் பிரகாசமாக தந்திடும்

  எங்கள் கொங்கு நாட்டுக்

  கோவைத் தங்கத்தின்

  மணிமணியான “மணிராஜ்”

  என்ற பதிவையே குறிக்கும்.

  ReplyDelete
 7. /கருவறை மூலவர்
  தெரு வரை உலாவருவது
  வேறெங்கும் காண முடியாத
  எட்டாவது அதிசயம்./

  இந்த எட்டாவது அதிசயத்தை,
  தட்டாமல் அனைவரும் கண்டு களிக்கத் தாங்கள் இங்கு அதைப் பதிவாகத் தந்துள்ளது, ஒன்பதாவது அதிசயம். ;)))))

  ReplyDelete
 8. //
  எ ல் லை யை

  மிதித்தாலே நம்

  தொ ல் லை

  வினைகளை

  இ ல் லை

  என்றாக்கும் தில்லை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜரைச் சிதம்பரத்தில் வழிபட்டு வாழ்வில் சிறந்து விளங்கலாம்//

  அடடா ! எவ்வளவு அழகியதொரு சொல்லாடல்!, வாக்தேவியிடமிருந்து புறப்பட்டு வந்துள்ளது. .

  காட்டப்பட்டுள்ள நந்தியைப்போலவே நச்சென்ற வார்த்தைகள்!

  பிரயோகிக்கும் சொற்களில் அந்த “ஓம்” என்ற ம்ந்திரத்தை நெற்றியில் சுமந்து நிற்கும் யானையின் கம்பீரம்!!

  படித்ததும் அந்தக்கடைசிபடமான சிவகங்கைக்குளத்தில் குளித்ததொரு புத்தணர்ச்சியைத் தருகிறதே!!!

  அசத்தலான பதிவுக்கும், கடுமையான உழைப்பிற்கும்,

  என் அன்பான

  பா ரா ட் டு க் க ள்,

  வா ழ் த் து க ள்,

  ந ன் றி க ள்.

  ReplyDelete
 9. நாளைய தினம் தாங்கள் வெற்றிகரமாக வெளியிட உள்ள இந்த 2012 ஆம் ஆண்டின் 200 ஆவது பதிவுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள். vgk

  ReplyDelete
 10. வை.கோபாலகிருஷ்ணன் said...
  முதல் படத்தில் தில்லை நடராஜாவும் அன்னை சிவகாம சுந்தரியும் வெள்ளிக்கவசத்துடனும், அழகிய ஜவ்வந்தி போன்ற மலர்களுடனும் அற்புதமாக தரிஸனம் அளிப்பது அழகோ அழகு .....
  மனதுக்கு மகிழ்வோ மகிழ்வு.

  ரசனையான கருத்துரைகளும் , வாழ்த்துகளும் , பாராட்டுக்களும் ஆனந்தத்துடன் அருளி பதிவைப் பெருமைப்படுத்தியமைக்கு இனிய மனம் நிறைந்த நன்றிகள் ஐயா. ,

  ReplyDelete
 11. திருச்சிற்றம்பலம்


  கண்டேன் கண்டேன் அம்பலத்தரசின் திருத்தாள் கண்டேன்!!!


  மிக மிக நன்றி

  தில்லை அம்பலம் தரிசித்த மகிழ்ச்சி

  திருச்சிற்ரம்பலம்

  ReplyDelete
 12. another beautiful post.

  Padavaravada puliyadhalaada.... nice songs

  Ambalatharase is my favourite one which I sing in every shiva temple (ofcourse in my mind) :)

  Mira’s Talent Gallery

  :-) Mira

  ReplyDelete
 13. it also reminds me another old tamizh song but golden one.... "thillai ambala nataraja..."

  ReplyDelete
 14. தில்லை நடராஜனின் திவ்ய தரிசனம் கண்டேன். புண்ணியம் பெற்றேன்.

  ReplyDelete
 15. அப்பரின் தேவாரத்தோடு சிற்றம்பலத்தின் சிறப்புச் செய்திகள்!

  ReplyDelete
 16. சிதம்பரம் கோவில் பற்றிய விளக்கங்கள் நன்றாக உள்ளது. நன்றி சகோ.

  ReplyDelete
 17. ஆமா தில்லை அம்பல நடராஜா பாட்டுதான் நினைவுக்கு வருது. படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு .னன்றி

  ReplyDelete
 18. 3511+9+1=3521 ;)))))

  ஓர் பதில் ... ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. நன்றி.

  ReplyDelete