Saturday, June 2, 2012

பிரத்யட்சமாக அருளும் பேசும்பெருமாள்குலந்தரும் செல்வந்தந்திடும் அடியார்படுதுயராயின வெல்லாம்
நிலந்தரச் செய்யும் நீள்விசும்பருளும்அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்றதாயினும் ஆயனசெய்யும்
நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்நாராயணா என்னும் நாமம்.


நலமே நல்கும் நாராயணநாமத்தை நாத்தழும்பேற நவிலும் நல்லவர் நடுவில் பேசும்பெருமாள் பிரத்யட்சமாக பேசும் தோற்றத்தில் அருள்கிறார்..

பல்லவர்களின் தலைநகரான காஞ்சிபுரத்தில் இருந்து பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக இருந்த கும்பகோணத்துக்கு அருகிலுள்ள பழையாறை மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் போன்ற நகரங்களுக்கு இந்த ஊர் வழியாக நெடுஞ்சாலை இருந்ததாலும், இங்கு எள் பயிர் நிரம்ப விளைந்ததாலும் ‘கூழம் பந்தல்’ எனும் பெயர் பெற்ற ஊரில்பெருமாள் பக்தருடன் பேசும் பாவனையில் காட்சி தந்து
பேசும் பெருமாளாக பேசப்படுகிறார்..

கூழமந்தலில்‘கங்கை கொண்ட சோழீச்சுரம்’ என்னும் முழுவதும்  கருங்கற்களாலான அற்புத கற்றளி தெப்பக்குளத்தில் மிதப்பது போன்ற அமைப்புடன் இருப்பது வியப்புக்குரியது. 
கூழமந்தல் ஸ்ரீபேசும் பெருமாள் கோவிலில் ஸ்ரீ மகாலட்சுமி தாயார் சிலை பிரதிஷ்டை
ஒரு ஊரின் ஒரு புறத்தில் சிவாலயமும், மற்றொரு புறத்தில் விஷ்ணு ஆலயமும் இருப்பது அந்த ஊரின் இரு கண்கள்போல என்பார்கள். அதை அனுசரித்தாற்போல மேற்கில் ஒரு பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பெருமாள்தான் நம்முடன் பேசுகிறார்!


பூமியிலிருந்து பன்னிரெண்டு அடி உயர மகா விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இவர்தான் பேசும் பெருமாள். கங்கைகொண்ட சோழீச்சுரம் சிவன் கோயில் கட்டப்பட்ட காலத்திலேயே இப்பேசும் பெருமாள் கோயிலும் கட்டப்பட்டதாக வரலாறு...
[Image1]
பெருமாள் முன்பு நின்று அவரை சற்றே ஆர்வத்துடன் நோக்கினால், அவர் கருணையுடன் நம்மை நோக்கி புன்னகைக்கிறார். நம்முடன் பேசுகிறார். நமக்கு பதில் சொல்கிறார்! இது பக்தர்களின் நேரடி அனுபவம்.
பேசும் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் மிக கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். 


பின் இரு கைகளிலும் சங்கு சக்கரத்துடன், வலக்கை அருள்பாலிக்கும் வரதஹஸ்தமாக, இடக்கை தொடையில் பதிந்துள்ளதாக சேவை சாதிக்கிறார்.  
பெருமாள் கம்பீரமான தோற்றத்துடன்  சாந்தமூர்த்தியாக திகழ்கிறார். 
பெருமாளின் இருபுறமும்  ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் இருவருமே தங்கள் வலக்கையில் தாமரை மலர்களை பற்றியிருப்பது தனிப்பெருஞ் சிறப்பு
பிற கோயில்களில் ஒரு தேவி வலக்கையிலும், இன்னொரு தேவி இடக்கையிலும் தாமரை மலரை வைத்திருப்பார்கள்.
முதலில் பேசும் பெருமாளை தரிசித்துவிட்டு, பிறகு கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
 • பேசும் பெருமாள் அருளும்தலத்தில் விரதங்கள், தானம், வேள்வி, பிராயச்சித்தம் எது செய்தாலும், ஆயிரம் மடங்கு தருவதாக நம்பிக்கை...
 • கோவில் பட்டர் ஒருவர் தூய்மையற்ற பாலை, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்த புனிதமற்ற செயல்களால் கோபமடைந்த பெருமாள், பட்டரை அழித்ததுடன், ஊரையும் அழித்து விட்டார். அவரது கோபத்தால் வைகுண்டமே நடுங்கியதாம். பிற்காலத்தில், ஒரு கல்வெட்டு மூலம் இந்தத் தகவலை அறிந்த பெரியவர்கள் பெருமாளிடம் மன்னிப்பு கேட்டு, கோயில் எழுப்பி, சிறந்த முறையில் பராமரித்தனர். தவறைச் சுட்டிக்காட்டியதால் பெருமாளுக்கு பேசும் பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.
Perumaals during night
வைகாசி கருட சேவை!
கூழமந்தலில் 15 கருட சேவை உற்ஸவம் நடைபெறுகிறது. 


கூழமந்தல் ஸ்ரீபேசும் பெருமாள், 
பெருநகர் ஸ்ரீ வரதராஜப் பெருமாள்,
 மானம்பதி ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள், 
தண்டரை ஸ்ரீ லட்சுமிநாராயணப் பெருமாள், 
விசூர் ஸ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள், 
இளநீர்குன்றம் ஸ்ரீ வைகுண்ட ஸ்ரீநிவாசப்பெருமாள், 
சேத்துப்பட்டு கல்யாண வெங்கடேச பெருமாள், 
அத்தி கலியப்பெருமாள், 
சோழவரம் கரியமாணிக்கப் பெருமாள், 
இளநகர் ஸ்ரீநிவாச பெருமாள்
கூழமந்தல் வெங்கடேச பெருமாள், 
தேத்துறை ஸ்ரீனிவாசப்பெருமாள்
செல்லப்பெரும்புலிமேடு ஸ்ரீபிரசன்ன வரதராஜப்பெருமாள், 
உக்கல் வேணுகோபால சுவாமி 
ஆகியோர் கருட வாகனத்தில் இரவு ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி அரங்கேறும். விழா தினத்தன்று ஒவ்வொரு சுவாமிகளுக்கும் தனித்தனியாக விசேஷ திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் நடைபெறும்.

காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கூழமந்தல்.29 comments:

 1. பிரத்யட்சமாக அருளும் பேசும்பெருமாளுடன் பேசிவிட்டு பிறகு மீண்டும் மீண்டும் வருவேனாக்கும்.

  ReplyDelete
 2. கூழமந்தல் ஸ்ரீபேசும் பெருமாள்
  பெருநகர்
  மானம்பதி
  தண்டரை
  விசூர்
  இளநீர்குன்றம்
  சேத்துப்பட்டு ,
  அத்தி
  சோழவரம்
  இளநகர்
  கூழமந்தல் ஸ்ரீ வெங்க்டசர்
  தேத்துறை
  செல்லப்பெரும்புலிமேடு
  உக்கல்

  ஆக மொத்தம் 14 தானே ஆச்சு.

  கருடசேவை உற்சவத்தில் 15 க்கு
  இன்னொன்று எங்கே ???????

  ReplyDelete
 3. குலந்தரும் செல்வந்தந்திடும் அடியார் படுதுயராயின வெல்லாம் .........

  பாடலுடன் அழகிய ஆரம்பம். ;)

  ReplyDelete
 4. முதல் படத்தில் பாற்கடலில் மஹாவிஷ்ணு ஜொலிப்பது போலக் காட்டியுள்ளது அழகோ அழகு!

  ReplyDelete
 5. //எள் பயிர் நிரம்ப விளைந்ததாலும் ‘கூழம் பந்தல்’ என்னும் பெயர்.

  ஊரில் பெருமாள் பக்தருடன் பேசும் பாவனையில் காட்சி தருவதால்
  பேசும் பெருமாள் எனப்பேசப்படுகிறார்//

  ஆஹா! ;)))))

  பேசட்டும் பேசட்டும்.

  பெருமாளே திருவாய் மலர்ந்து பேசினால் தான் எல்லோருக்குமே நல்லது.

  ReplyDelete
 6. //கூழமந்தலில்
  ‘கங்கை கொண்ட சோழீச்சுரம்’ என்னும் முழுவதும் கருங்கற்களாலான அற்புத கற்றளி தெப்பக்குளத்தில் மிதப்பது போன்ற அமைப்புடன் இருப்பது வியப்புக்குரியது.//

  தூக்கத்தூக்க எடை அதிகரிக்கும், நாச்சியார்கோயில் கல்கருடன் போலவே, இதுவும் கேட்கவே மிகவும் வியப்பான செய்தியாகத்தான் உள்ளது.

  ReplyDelete
 7. இந்திராJune 2, 2012 at 7:17 PM

  யாம் பெற்ற இன்பம்பெறுக இவ்வையகம் என்ற கூற்றிற்கிணங்க தாங்கள் அறிந்த ஆன்மீக தகவல்களை எங்களுடன் பகிர்ந்து எங்களையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ பெருமாள் பேரருள் புரியட்டும் அம்மா.

  ReplyDelete
 8. இந்திராJune 2, 2012 at 7:17 PM

  யாம் பெற்ற இன்பம்பெறுக இவ்வையகம் என்ற கூற்றிற்கிணங்க தாங்கள் அறிந்த ஆன்மீக தகவல்களை எங்களுடன் பகிர்ந்து எங்களையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ பெருமாள் பேரருள் புரியட்டும் அம்மா.

  ReplyDelete
 9. இந்திராJune 2, 2012 at 7:17 PM

  யாம் பெற்ற இன்பம்பெறுக இவ்வையகம் என்ற கூற்றிற்கிணங்க தாங்கள் அறிந்த ஆன்மீக தகவல்களை எங்களுடன் பகிர்ந்து எங்களையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ பெருமாள் பேரருள் புரியட்டும் அம்மா.

  ReplyDelete
 10. //ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் இருவருமே தங்கள் வலக்கையில் தாமரை மலர்களை பற்றியிருப்பது தனிப்பெருஞ் சிறப்பு//

  ஆஹா, தாமரையே அழகு!

  இரு தேவியரும் வலக்கரத்திலேயே பற்றியிருப்பது அழகோ அழகு!!

  அதைத் தாமரை நெஞ்சம் கொண்ட தாங்கள் இங்கு சுட்டிக்காட்டியுள்ளது அதை விட அழகுக்கு அழகு சேர்ப்பதாக உள்ளதே!!!

  ReplyDelete
 11. கீழிருந்து நாலாவது படம் திறக்கப்படவே இல்லை.

  பேசும்பெருமாளிடம் சொல்லி திறக்க ஏற்பாடு செய்யுங்கோ, ப்ளீஸ்.

  ReplyDelete
 12. கீழிருந்து ஐந்தாவது படம் இரவில் இருட்டில் எடுக்கப்பட்டதாக இருப்பினும், அருமையாக் அமைந்துள்ளது.

  ஆற்றில் இறங்கி விசேஷ திருமஞ்சனம் முடிந்து அலங்காரமாக புறப்படுகிறார்களோ?

  சூப்பரோ சூப்பர்! ;)))))

  ReplyDelete
 13. மேலிருந்து இரண்டாவது படத்தில் ஜொலிக்கும் பெருமாள், அந்த பூமியையே பந்தாக FOOT BALL விளையாடுவது போல எனக்குத் தெரிகிறதே! ;)))))

  ஓங்கி அவர் உதைத்ததில் உத்திரியமே நழுவியுள்ளது பாருங்கோ! ;)))))

  பூமிப்பந்தும் சும்மா ஜில்லுனு சுழலுது பாருங்கோ!!

  ReplyDelete
 14. மேலிருந்து எட்டாவது படத்தில் பேசும்பெருமாள் மிகவும் கம்பீரமாக நிற்கும் திருக்கோலத்தை நானும் ஆர்வத்துடன் நோக்கினேன்.

  பேசும்பெருமாள் கருணையுடன் என்னை நோக்கி புன்னகைக்கிறார்.

  என்னுடன் பேசுகிறார்.

  எனக்கு பதில் சொல்கிறார்!

  இது நேரடி அனுபவமாகவே உள்ளது,

  தங்கள் பதிவுகள் மேலும் படங்களின் மேலும் எனக்குள்ள ஒருவித பிரமையாகவும் கூட இருக்கலாம்.

  நேரில் அந்தக்கோயிலுக்குச் சென்றால் இவை யாவும் உண்மையாகவே நடக்கலாம்.

  நல்ல அழகான அதிசயமான செய்திகளையே இன்று கொடுத்து மிகவும் அசத்தியுள்ளீர்கள்.

  ReplyDelete
 15. //பேசும் பெருமாள் அருளும்தலத்தில் விரதங்கள், தானம், வேள்வி, பிராயச்சித்தம் எது செய்தாலும், ஆயிரம் மடங்கு தருவதாக நம்பிக்கை//

  தினமும் கஷ்டப்பட்டு, மிகவும் சிரத்தையுடன், தாங்களும் எங்களுக்காகவே ஆயிரம் ஆயிரம் விஷயங்களை “அல்வா” போல பதமாகவும் இதமாகவும் சுவையாகவும் எடுத்துச் சொல்லுகிறீர்கள்.

  தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  பாராட்டுக்கள்.

  நன்றியோ நன்றிகள்.

  தொடரட்டும் தங்களின் இதுபோன்ற அன்றாட அருட்சேவைகள்.

  [எங்காத்தில் இப்போது தேங்காய்ச்சேவையும், எலுமிச்சை சேவையும், பருப்புசேவையும் ரெடியாகிக்கொண்டிருக்கின்றன. அதனால், இதுவரை சேவைசாதித்த ஸ்ரீதேவியாகிய தங்களிடமிருந்து, இத்துட்ன் முடித்துக்கொண்டு விடைபெறுகிறேன்.]

  ஏதாவது சொல்லவேண்டியது விட்டுப்போயிருந்தால் மீண்டும் வருவேனாக்கும். ஜாக்கிரதை.

  ReplyDelete
 16. பிரம்மாண்டத்தின் உச்சம் எம்பெருமான் ஸ்ரீவிஷ்ணு . :)

  ReplyDelete
 17. கண்களில் கண்ணீர் மல்க கண்ணான கண்ணனை காண வைத்த தங்களுக்கு நன்றி!

  ReplyDelete
 18. பிரத்யட்சமாக அருளும் பேசும்பெருமாள் பேசவைக்கும் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 19. 1 கூழமந்தல் பேசும்பெருமாள்,
  2 பெருநகர் வரதராஜப் பெருமாள்,
  3 மானாம்பதி சீனிவாசப் பெருமாள், 4 தண்டரை லட்சுமிநாராயணப் பெருமாள்,
  5 விசூர் புண்டரிகாட்சப் பெருமாள்,
  6 இளநீர் குன்றம் வைகுண்ட சீனிவாசப் பெருமாள்,
  7 சேத்துப்பட்டு கல்யாண வெங்கடேசப் பெருமாள்,
  8அத்தி கலிய பெருமாள்,
  9 சோழவரம் கரியமாணிக்க பெருமாள்,
  10 உக்கல் வேணுகோபால சுவாமி,
  11 இளநகர் சீனிவாசப் பெருமாள்,
  12 தேத்துரை சீனிவாசப் பெருமாள், 13 மகாஜனம்பாக்கம் வெங்கடேசப் பெருமாள்,
  14 வெள்ளாமலை வேணுகோபால சுவாமி,
  15 பெண்டை வெங்கடேசப் பெருமாள் ஆகியோர் செய்யாறில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார்கள்..

  ReplyDelete
 20. அருமையான பதிவு.
  அற்புதமான படங்கள்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 21. கீழிருந்து நாலாவது படம் தெரியவில்லை என்று சொல்லியிருண்தேன்.

  இப்போ அது தெரிகிறது.

  ஏற்கனவே இருந்த கீழிருந்து நாலுக்கும் ஐந்துக்கும் நடுவே புதிதாக ஒரு படம் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.

  அது மிகவும் அழகாக சூப்பராக உள்ளது.

  திவ்ய தரிஸனம் செய்ய முடிந்தது.

  இரவு வேளை புறப்பாட்டு ஸ்வாமிகள் இப்போது கீழிருந்து 5 க்கு பதில் ஆறாவது படமாகி விட்டது.

  ReplyDelete
 22. இராஜராஜேஸ்வரி said...
  1 கூழமந்தல் பேசும்பெருமாள்,
  2 பெருநகர் வரதராஜப் பெருமாள்,
  3 மானாம்பதி சீனிவாசப் பெருமாள், 4 தண்டரை லட்சுமிநாராயணப் பெருமாள்,
  5 விசூர் புண்டரிகாட்சப் பெருமாள்,
  6 இளநீர் குன்றம் வைகுண்ட சீனிவாசப் பெருமாள்,
  7 சேத்துப்பட்டு கல்யாண வெங்கடேசப் பெருமாள்,
  8அத்தி கலிய பெருமாள்,
  9 சோழவரம் கரியமாணிக்க பெருமாள்,
  10 உக்கல் வேணுகோபால சுவாமி,
  11 இளநகர் சீனிவாசப் பெருமாள்,
  12 தேத்துரை சீனிவாசப் பெருமாள், 13 மகாஜனம்பாக்கம் வெங்கடேசப் பெருமாள்,
  14 வெள்ளாமலை வேணுகோபால சுவாமி,
  15 பெண்டை வெங்கடேசப் பெருமாள் ஆகியோர் செய்யாறில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார்கள்..//

  ஆஹா!

  இப்போது கணக்கு சரியாகி விட்டது.

  எது விட்டுப்போனது என்று இனிமேல் தான் ஆடிட் செய்ய வேண்டும்.

  எப்படியோ எல்லாப் பெருமாள்களையும் கொண்டு வந்து நிறுத்தி, ஆடிட் அப்ஜெக்‌ஷனை சரி செய்து விட்டதற்கு நன்றிகள்.

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 23. Today you made me visit a new place i dontknow still.
  Thanks for the post dear.
  viji

  ReplyDelete
 24. அருமை அருமை. நன்றி.வைகாசி விசாகத்துக்கு இறை தரிசனம் கண்டேன்.

  ReplyDelete
 25. பேசும பெருமாளை உங்கள் இந்த அருமையான பதிவு மூலம் என்னுடனும் பேச வைத்து விட்டீர்கள்

  படங்களும், வர்ணனையும், தகுந்த பாடல்களும் ... மிகவும் ரசித்து தர்சனம் செய்தேன்

  ReplyDelete
 26. பேசும் பெருமாள் புதிய தகவல்.

  பார்க்க ஆவலை தூண்டும் விவரங்கள்.
  படங்கள் எல்லாம் அழகு.

  நன்றி.

  ReplyDelete
 27. சோழவரப் பெருமாளும் இந்தக் கருட சேவையில் கலந்துகொள்வதால் தற்போது 16 கருட சேவையாக நடைபெறுகிறது.

  சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல் வேறு திருநாமங்களைக் கொண்ட 16 பெருமாள் உற்சவர்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி ஒரே இடத்தில் காட்சி தருவது இவ்விழாவின் சிறப்பம்சமாகும்.

  ReplyDelete
 28. ஆஹா!

  பதினைந்து பதினாறு ஆகிப்போனதா!!

  ரொம்பவும் சந்தோஷம்.

  பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

  என்னையும் சேர்த்து ஆறு போக இன்னும் பத்தே பத்து தான் பாக்கி.

  மேலும் பத்தா?

  அது

  ஆ..பத்து

  என்கிறீர்களா?

  ”பத்து புள்ள தங்கச்சிக்குப் பொறக்கணும்......

  நான் பாவாடை சட்டை தைச்சுக் கொடுக்கணும்......

  என்னை மாமான்னு அழைக்கணும்

  மழலையெல்லாம் பேசணும் ............”

  என்ற அழகான பாடலை என் வாய் இப்போது முணுமுணுக்கிறது.

  ReplyDelete
 29. 3262+15+1=3278

  எத்தனை எத்தனை மணி நேரம் தங்களின் பதிவுகளுக்கு மிகப்பெரிய பின்னூட்டங்களிட மட்டுமே செலவழித்துள்ளேன் ! நினைத்தாலே மிகவும் மலைப்பாகவும் வியப்பாகவும் உள்ளது. கை விரலெல்லாம் வலிக்குது.

  ஏதோ போனாப்போகிறது என்று விட்டேத்தியாக ஒரு பதில் மட்டுமே ;(

  ReplyDelete