Saturday, June 9, 2012

வெற்றி! வெற்றி !!வெற்றிலை!!!மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, 
சுபிட்சத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது. 
கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று.

வெற்றிலை பாக்கை எப்போது வலது கையால்தான் வாங்கவேண்டும். மங்களம், மகிமை, சுபிட்சம் இவற்றுக்கு மேலாக ஒற்றுமையை வலியுறுத்துகிறது என்றால் இந்த வெற்றிலை சாதாரண இலை அல்ல..
வெற்றி இலை!’

வெற்றிலைக்கு ஆன்மிகத்தில் அதிக இடமுண்டு. 

கம்பராமாயணத்தில் ராவணனால் சிறை எடுக்கப்பட்ட சீதை, அசோக வனத்தில் அனுமனை அருகில் இருந்த வெற்றிலைக்கொடியின் இலையை பறித்து அனுமனின் தலையில் இட்டு வெர்றி பெற வாழ்த்தியதாக கம்பர் கூறுவார்,, 

ஆகவே அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து 
பிரார்த்திக்கும் வழக்கம் வந்தது..
ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து அர்ச்சனை செய்தால் நினைத்த காரியங்கள் வெற்றி பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


“இளம் வெற்றிலையை யார் மடித்துக் கொடுக்க ராமன் உண்பான்’ 
என்று வருந்தியதாக ஒரு காட்சி உண்டு.

செவ்வாய் கிழமைகளில் விநாயகருக்கும் வெற்றிலை மாலை 
அணிவித்து திருமணப்பிரார்த்தனை செய்யும் வழக்கம் உண்டு..
வெற்றி தரும் வெற்றிலை மாலை!தருமன் ராஜசூய யாகம் நடத்திய போது, முதல் தாம்பூலத்தை கண்ணன் பெற்றுக்கொண்டான் என்று மகாபாரதம் சொல்கிறது.

திவ்ய பிரபந்தத்தில், “உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் எம்பெருமான்’ என்று கண்களில் நீர்மல்கி மனம் உருகிப் பாடுகிறார் நம்மாழ்வார்.

அம்பாளுக்கு தாம்பூல நைவேத்தியம் பிரசித்தம்..

வெற்றிலை இல்லாத விருந்து சிறக்காது..

பாமரர் முதல் பண்டிதர் வரை விரும்பும் 
தனிச்சிறப்பு பெற்றது வெற்றிலை..

தேள் கடி விஷம் இறங்க வெற்றிலைச் சாறை அருந்தியும், கடிவாயில் தடவி வந்தால் விஷம் எளிதில் நீங்கும்.புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு.

 வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து 
வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.
கடவுளுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. இந்துமதப் பண்டிகைகள், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது

 வெற்றிலையின் காம்பைக் கிள்ளி நீர் வார்த்து, 
கற்பூர தாம்பூலம் நிவேதன வடிவில் சமர்ப்பிக்கப்படுகிறது.

வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும், 
காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக ஐதிகம்

இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் 
முற்றுப் பெறுவதில்லை என்பர்.

திருமணம் நிச்சயமாவதை நிச்சய தாம்பூலம் என்கிறார்கள்.
வெற்றிலை பாக்கு கொடுத்து விட்டால் அது தாம்பூல சத்தியம்.
பிறகு அதை யாரும் மீறித் துணிய மாட்டார்கள்.

இவையெல்லாம் வெற்றிலை குறித்த ஆன்மிக நம்பிக்கைகள்.

வெற்றிலைக்கு ஜீரணத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. 

வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்குத் தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. 

எனவேதான், சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. 

இது வெற்றிலையின் மருத்துவக் குணம்.

வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு நல்லதல்ல என்கிறார்கள்.

வெற்றிலைப் பாக்கு வைத்திருக்கும் பெட்டியை
 வெற்றிலைச்செல்லம் என்பார்கள்..
அரசனுக்கு தாம்பூலம் மடித்துத்தரும் கலையில் 
வல்லவருக்கு அடைப்பக்காரன் என்பார்கள்..


வெற்றிலைப் பிரி திருவிழா’ என்பதன் மூலம் மதுரை மாவட்டத்தில் ஒற்றுமைக்கும் வழி வகுக்கிறது, வெற்றிலை.

சித்திரை முதல் நாளில் தும்பைப் பட்டி ஊராட்சி தியாகி கக்கன் பிறந்த ஊரில் வாழும் மக்கள் “நாங்கள் சாதி, மத வேற்றுமை பாராமல் ஒற்றுமையாக இருக்கிறோம்’ என்பதை சித்திரை முதல்நாள் வெற்றிலை கொடுத்து, கொண்டாடுவதன் மூலம் நிரூபிக்கிறார்கள்.

“வெற்றிலை பிரி திருவிழா’ என அழைக்கப்படும் இந்த நடைமுறையானது எண்ணூறு ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம். இஸ்லாமிய பள்ளி வாசல் சார்பில் வழங்கப்படும் வெற்றிலையை, இந்து மதத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பிரித்துக் கொடுத்து வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள்.

“ஆண்டு முழுவதும் அனைத்து சமூதாயத்தினரும் ஒற்றுமையுடன், சிறப்புடனும் வாழ வேண்டும் என்பதற்காக இவ்விழா நடத்தப்படுகிறது. இதில் ஆன்மிகமும் இருக்கிறது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அக்கறையும் இருக்கிறது’

. மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தில் சித்திரை முதல்நாள் அன்று வெள்ளலூர் மந்தைக் கருப்பணசாமி கோயிலில் அம்பலக்காரர்கள் கூடி நூற்றைம்பது கிலோ எடை உள்ள வெற்றிலைக் கட்டுகள் குவித்து
 பிரிக்கப்பட்டு,பல்வேறு விவசாயப் பணியாளர்களுக்கும் வெற்றிலை வழங்கி மரியாதை செலுத்தப்படுகிறது..

23 comments:

 1. வெற்றிலை பற்றிய மங்களகரமான பதிவுகள் அனைத்தும் அருமை..படங்களும் அருமை.அதுவும் தட்டில் அழகாக வரிசையாக அடுக்கப்பட்டுள்ள வெற்றிலை தாம்பூலம் ஒரு தாம்பூலம் எடுத்துக்கோங்க என்று சொல்ற மாதிரி இருக்கு.கடைசி வண்டு படம் இயற்கையின் அற்புதம்.ஒரு முனிவரின் முகத்தை வண்டின் முதுகில் பெயிண்டிங் செய்த மாதிரி அற்புதமா இருக்கு...

  ReplyDelete
 2. வெற்றிலையில் உருவான ஆண்டாள் கிளியும் நல்லா இருக்கு..

  ReplyDelete
 3. வெற்றிலைக்கு இவ்வளவு மகத்துவம் இருக்கிறதா., வியக்கிறேன் ..!

  ReplyDelete
 4. வெற்றிலை பற்றிய சிறப்புகளை அறிந்து கொண்டேன்.

  நன்றி'

  ReplyDelete
 5. வெற்றிலை குறித்து ஒரு பதிவு எழுத இருந்தேன். இனி சிறுகுறிப்புத் தகவலாகத் தான் பதிவில் இடமுடியும். அந்தளவிற்கு விரிவாக அற்புதமாக அழகுப் படங்களோடும், புராணத் தகவலோடும் பகிர்ந்தமை அருமை! வாழ்த்துக்கள் சகோதரி!
  வேண்டுதலுக்கு வெற்றிலைப் பாக்கு வைக்கவேண்டும், பரிகாரத்திற்கு வெற்றிலைப் பாக்கு வைக்கக் கூடாது. இதனையும் பதிவில் இணைத்து விடுங்கள். நன்றி சகோதரி!

  ReplyDelete
 6. வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தல் என்று தமிழர் வாழ்வியலோடு ஒன்றிய வெற்றிலையைப் பற்றி கம்பனின் இலக்கிய செய்தியோடு நிறைய தகவல்கள். “ வெத்தலெ வெத்தலெயோ கொழுந்து வெத்தலையோ “ என்று பாடும் வண்ணம் விதம் விதமான வண்ணப் படங்கள். உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் கிடைக்கின்றதோ?

  ReplyDelete
 7. வெற்று இலை எனப் பெயர் கொண்ட வெற்றிலைக்குள்
  இத்தனை மகத்துவமா ?
  அறியாத பல தகவல்களை அறிந்து கொண்டேன்
  மனம் கவர்ந்த படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. வெற்றிலையைப் பற்றி அருமையான பதிவு. அரிய தகவல்கள்.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. வெற்றிலையில் இவ்வளவு தகவல்களா!!! என ஆச்சரியப்பட வைக்குது. அந்த வெற்றிலை பிள்ளையார் மனம் கொள்ளையிட்டார்.

  ReplyDelete
 10. வெற்றிலையைப் பற்றி எவ்வளவு தகவல்கள்! பிரமிப்பாகத்தான் இருந்தது!

  நன்றி.

  ReplyDelete
 11. உங்கள் பதிவில் ( வெற்றிலை ) எனது கருத்துரை இரண்டுமுறை பதிவான படியினால் ஒன்றை நீக்கி விட்டேன். மன்னிக்கவும். நீங்கள் அதனை முழுமையாக நீக்கி விடவும். ப்ளாக்கரில் இதுபோல் அடிக்கடி இப்போது நிகழ்கிறது.

  ReplyDelete
 12. வெற்றிலையைப் பற்றி விளக்கமான பதிவு ! படங்கள் மிக அருமை !

  ReplyDelete
 13. வெற்றிலை [வெற்றி+இலை] பற்றி மிகவும் அழகான பதிவு.

  திண்டுக்கல் துளிர் வெற்றிலையை நன்கு அலம்பித் துடைத்துவிட்டு, அதன் காம்பினைக்கிள்ளி எறிந்து, நரம்பினை நகர்த்திவிட்டு, அடியினை அகற்றித் துண்டித்து, மிதமான அளவில் ரோஸ் கலர் மூன்றாவதைத் தடவி, அதில் வாசனை மிகுந்த ருசியான [எனக்கு மிகவும் பிடித்தமான] ரக்ஷிக்லால் பாக்கு வைத்து, நம் மனதுக்குப்பிரியமானவர் கையால் அழகாக மடித்து நம் வாய்க்குள் ஊட்டிவிட, அதை வாயில் கடித்து ருசித்து, அந்தச்சாறினை விழுங்கும் போது, அடடா .... அந்த சுகமே சுகம் தான். ;)

  ReplyDelete
 14. மெல்லிய கழுத்துடன் சிவந்த நிறமுள்ள பெண்களை வர்ணிக்கும் போது நான் கூறுவேன்:

  “இவள் வெற்றிலைச் சாற்றை விழுங்கினால், தொண்டை வழியே அது உள்ளே உணவுக்குழாய்க்குப் போவது Transparent ஆக நமக்கு வெளியே தெரியும்” என்பேன்.

  அவ்வளவு ஒரு Soft ஆனவள், மிருதுவானவள், சிவப்புத்தோல் அழகி, வாழைக்குருத்து என்றெல்லாம் நான் என் எழுத்துக்களில், கதைகளில் வர்ணிப்பது உண்டு.

  ReplyDelete
 15. வெற்றி .. வெற்றி .. வெற்றிலை
  என்ற தலைப்புடன் கூடிய
  இந்தத்தங்கள் பதிவினில் எல்லாமே மங்களகரமான தகவல்கள்.

  படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளன.

  கொடிக்கால் வெற்றிலை,
  செங்காம்பு வெற்றிலை,
  திண்டுக்கல் வெற்றிலை
  போன்ற பலரகங்கள் இங்கு எங்கள் ஊரில் உண்டு.

  திண்டுக்கல் வெற்றிலை என்பது சிறியதாகவும், வெளிர்பச்சை நிறத்திலும், சும்மா ஸில்க் போலவும் இருக்கும்.

  விலை ஒரு கவுளி ரூபாய் 80 முதல் 100 வரை தற்போது விற்கப்படுகிறது.

  இதில் ஒரு 10 வெற்றிலைகளை வாயில் போட்டாலும் நாக்கு தடித்துப்போகாமலும், மரத்துப்போகாமலும் இருக்கும்.

  அதுவே இதன் சிறப்பு அம்சம்

  ReplyDelete
 16. வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும்,
  காம்பில் பார்வதிதேவியும்
  இருப்பதாக ஐதிகம்.

  சூப்பரான தகவல்.

  ReplyDelete
 17. வெற்றிலையையோ, பாக்கையோ, மூன்றாவது எனச் சொல்லப்படும் சுண்ணாம்பையோ தனியாக சாப்பிடக்கூடாது.

  அது உடலுக்குக் கெடுதல்.

  பச்சை நிற வெற்றிலையும்,
  அரக்கு நிறப் பாக்கும்
  வெண்மை நிறச் சுண்ணாம்பும்
  சேர்ந்து மென்று தின்னும் போது
  நம் நாக்கும் வாயும் இந்த மூன்று நிறங்களும் இல்லாத புது நிறமான
  சிவப்பாகிப் போய்விடுகிறது.

  வாய் மணக்கிறது. ஜீர்ண சக்தியை அதிகரிக்கிறது.

  ReplyDelete
 18. ”கொ ட் ட ப் பா க் கு ........
  கொ ழு ந் து
  வெ த் த ல ....
  போ ட் டா
  வா ய் சி வ க் கு ம் ...

  ம ச் சா ன் நீ யு ம்
  ம ச் சி னி நா னு ம்
  சே ர் ந் தா தூ ள்
  ப ற க் கு ம் .......”

  என்ற பாடல் வரிகளை ஏனோ என் வாய் முணுமுணுக்குது.

  ReplyDelete
 19. சுமங்கலிகளும், திருமணம் ஆன ஆண்களும் தினமும் தாம்பூலம் தரித்தால் பலவிதமான நன்மைகள் ஏற்படுவது உண்டு.

  பிரஸவித்த தாய்மார்கள் வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்வது அவர்களுக்கும், பிறந்த குழந்தைக்கும் நல்லது என்பார்கள்.

  ReplyDelete
 20. //இந்துமதப் பண்டிகைகள், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது

  திருமணம் நிச்சயமாவதை
  நிச்சய தாம்பூலம் என்கிறார்கள்.

  வெற்றிலை பாக்கு கொடுத்து விட்டால் அது தாம்பூல சத்தியம் ஆகிவிடுகிறது.

  பிறகு அதை யாரும் மீறித் துணிய மாட்டார்கள்.//

  ஆமாம். ஆமாம்.

  இதுபோல பாக்கு வெற்றிலை கொடுத்து நிச்சயம் செய்யப்பட்ட
  திருமணத்தை நேரில் காண வெளியூர் சென்று வந்ததால் பின்னூட்டமிட தாமதம் ஆகிவிட்டது.

  நீங்கள் இந்தப்பதிவினில் எனக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்திருந்தும்
  என்னால் உடனடியாக வந்து கருத்துக்கூற முடியவில்லையே என வருத்தம் ஏற்பட்டது.

  பிறகு கடைசிவரை பொறுமையாக இருந்து, முஹூர்த்தத் தாம்பூலமே தங்களின் தெய்வீகத்
  திருக்கரங்களால் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது,
  தங்களின் இந்தப்பதிவினை லயித்துப்படித்து மகிழ்ந்ததும். ;))))).

  ReplyDelete
 21. 3359+8+1=3368

  ஒரு பதிலையும் காணோம். வாயில் என்ன வெற்றிலை பாக்கோ ?

  ReplyDelete