Thursday, June 14, 2012

மதுரமாய் அருளும் மதுர காளிஅம்மன்

Navarathi Nayaki Durga Devi
Hindu-Goddess-Devi-Durga-Maa-Photo-0002.gif
சீர் மதுர காளிதனை சிந்தையில் வைத்திடப்
பேர் விளங்கும் நற்பேறும் பெற்றிடலாம்- யார்க்கும்
கருணை புரிவாள் கழல் பற்ற நெஞ்சே
சிறுவாச்சூர் ஆலயமே சேர்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என முச்சிறப்பும் அமைந்த திருத்தலம் உலகை எல்லாம் காக்கும் அன்னை மதுர காளியாக எழுந்தருளி அருள் பாலிக்கும் சிறுவாச்சூர் திருத்தலம். காஞ்சி பரமச்சாரியாளான ஸ்ரீ சந்திரசேகர ஸ்வாமிகளின் குலதெய்வம் 
.
திருச்சி சென்னை வழியில் பெரம்பலூரிலிருந்து 
8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது 

சுற்றிலும் மலைகளும், ஏரிகளும், சூழ வளம் கொழிக்கும் தோப்புகளுமாக இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான சூழலில் சிறுவாச்சூர் என்னும் திருத்தலத்தில் மதுர காளியாக அன்னை சிறப்பாக கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றாள்
ஓதும் வேத உட்பொருளாவாய் தாயே மதுர காளி
உலகம் காக்க சிறுவாச்சூரில் ஒளிரும் தாயே மதுரகாளி
கசப்பில் இனிமை கலந்துற வாடும் காளித்தாயே சிறுவாச்சூரில் உந்தன்

கழல் பணிந்தாரைக் கை தூக்கும் கருணை உள்ளதாயே மதுரகாளி.


ஆதியிலே இங்கே அமர்ந்தவள் என்பதால் செல்லியம்மனுக்கே 
எப்போதும் முதல் மரியாதை செய்யப்படுகின்றது. 

பூசையின் போது தீபாரதனை காட்டும் போது முதலில் மலை நோக்கி தீபாரதனைக் காட்டப்பட்டு பின்னரே மதுர காளியம்மனுக்குத் தீபாரதரனை காட்டப்படுகின்றது. 

செல்லி அம்மனுக்கு குழந்தைப் பேறு இல்லாதவர்கள் குழந்தை பிறந்தால் "பால் முடி" கொடுப்பதாக வேண்டிக்கொண்டு தங்களால் இயன்ற காசினை மஞ்சள் துணியில் முடிந்து வைத்தால் அவர்களின் குறையை அன்னை தீர்த்து வைக்கிறாள் என்று நம்பப்படுகிறது.. 

அவ்வாறு அன்னையின் கருணையால் பலன் பெற்றவர்கள் குழந்தைக்கு மூன்று மாதத்திற்குள் சென்று முடி காணிக்கை செலுத்துகிறனர்.

மதுரை காளியம்மன் என்ற திருநாமமே பின்னாட்களில் மருவி மதுர காளியம்மனாக மாறியது என்று நம்பப்படுகின்றது. 

சினங்கொண்டு இங்கு வந்த மதுரை காளியம்மன் இங்கு வந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு எல்லாவித இனிய நிகழ்வுகளையும் அருளுவதால் மதுர காளியம்மன் (மதுரம் - இனிமை) என்ற திருநாமம் கொண்டாள்.
கற்புடை தெய்வம் சிலப்பதிகார நாயகி மதுரை கண்ணகி கணவருக்கு பாண்டியன் நெடுஞ்செழியனால் இழைக்கப்பட்ட அநீதியை கண்டு பொறுக்க முடியாது கோபம் கொண்டு மதுரையை எரித்த பின் மன அமைதியின்றி அலைந்த போது இத்தலம் அடைந்தபோது அமைதி கொண்ட அந்த மதுரை காளியம்மனே மதுர காளியானள் என்பது மற்றொரு ஐதீகம்,
The Curse of KannagiSilambu
ஒரு முறை ஆதி சங்கரர் இந்த மலைப் பிரதேசத்தின் வழியே வந்து கொண்டு இருந்தபோது களைப்பினால் ஒரு மரத்தடியில் இளைப்பாறினாராம். 

அவருக்கு தாகம் எடுத்தது, ஆனால் சுற்றிலும் எங்குமே 
தண்ணீர் கிடைக்கவில்லை. 

அப்போது அவர் தேவியை நினைத்து மனமுருகி வேண்டிக் கொண்டபோது, அங்கு இருந்த மதுர காளியம்மான் அவர் முன் தனது சுய ரூபத்தில் தோன்றி அங்கு ஒரு நீர் ஊற்றை வரவழைத்து அவர் தாகத்தைத் தீர்த்தாளாம். 

அதன் பின் அங்கேயே அவள் ஒரு நான்கு அடி உயர கல் சிலையாக மாறிவிட, ஆதி சங்கரர் அந்த சிலையை எடுத்து அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம்.
சிறுவாச்சுருக்கு வெள்ளியன்று வந்த அம்மன் திங்களன்று பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தாள் என்பதனால் வெள்ளி மற்றும் திங்கள் மட்டுமே அன்னையின் சன்னதி திறக்கப்பட்டு பூசை செய்யப்படுகின்றது. 
 • வடக்கு நோக்கிய சந்நிதியில் அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளாள்.  வட்க்கு நோக்கிய அம்மன் சந்நிதி மிகவும் விஷேஷமானது..
மற்ற நாட்களில் செல்லியம்மனுடன், மதுர காளியம்மனும் பெரிய சாமி மலையிலே தங்குவதாக ஐதீகம்
ஜ்வாலா மகுடத்துடன், அடியார்களின் துயர் தீர்த்து காக்கின்ற அருள் பொழியும் திருமுக மண்டலத்துடன், வலது மேற் கரத்தில் உடுக்கையும் கீழ் கரத்தில் திரி சூலமும், இடது மேல் கரத்தில் பாசமும், கீழ் கரத்தில் அக்ஷ்ய பாத்திரமும் தாங்கி, மார்பிலே ரத்ன பதக்கமாட,பொன் தாலியும், காதிலே தடாகங்களும், கைகளிலே கங்கணமும், இடுப்பிலே ஒட்டியாணமும், பாதட்திலே சிலம்பும் மின்ன, தன் வாகனமாம் சிங்கத்தின் மேல் வலது திருப்பாதம் தங்கத் தாமரை பீடத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் இருக்க இடது திருப்பாதத்தை மடக்கி அமர்ந்த கோலத்தில் அருட்காட்சி தருகின்றாள் அன்னை. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் 
திருவடியில் அரக்கன் இல்லாததால் அழிக்கும் தொழிலில் காட்சி தராமல் அருளும் நிலையிலே தரிசனம் தருகின்றாள் 
[Gal1]செல்லியம்மனை மந்திரத்தால் கட்டிப் போட்ட  பில்லி, சூனியம் வைத்த மந்திரவாதியை அன்னை அழித்ததால் பில்லி, சூனியம் போன்றவைகளால் ஏற்படும் பாதிப்புகள் இத்தலம் வந்து அன்னையை வழிபட விலகி சென்று விடுகின்றன. 
ஊமை, செவிடு போன்ற குறைகள் எல்லாம் மனமுருக அன்னை முன் முறையிட கரைந்து காணாமற் போய் விடுகின்றன. 
குழந்தைப் பேறும் கிட்டுகின்றது. கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக அன்னை மதுர காளி ஆட்சி செய்து வருகின்றாள். 
சதாசிவ பிரம்மேந்திராள் இத்தலத்திற்க்கு எழுந்தருளி 
அன்னை சன்னதியில் ஸ்ரீ சக்ரம் ஸ்தாபித்ததாக கூறுகின்றார்கள். 
தல விருட்சம் மருத மரம் தீர்த்தம் ஈசான திலையில் உள்ள திருக்குளம்.
 • சிறுவாச்சூர் காளியம்மன் என்றாலே 
 • மாவிளக்கு நேர்த்திகடன்  மிகவும் பிரபலம்
 • சித்திரை மாதத்தில் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. அப்போது மலை வழிபாடு, திருக் கல்யாணம், வெள்ளிக் குதிரை வாகனம், தேர் இழுத்தல் முதலிய திருவிழாக்கள் நடைபெறும்.
[Gal1]
[Image1]

வடக்கே ஆலயத்தின் முன்புறம் சோலைமுத்து அய்யனார் ஆலயம்,


தெற்கில் ஊர்சுத்தியான் கோயில் அமைந்துள்ளது..

19 comments:

 1. வருடாவருடம் சமயபுரம் அம்மனை தரிசிக்கும் வழக்கம் உண்டு. ஒரு முறை திருச்சியிலிருந்து சிறுவாச்சூர் கிளம்பிவிட்டோம். கோவில் வாரத்தில் இரண்டு நாட்களே திறந்திருக்குமென்று அறியாது கிளம்பிவிட்டோம். நல்ல வேளை நாங்கள் போயிருந்த நாள் கோயில் திறந்திருந்தது, தரிசனம் செய்து திரும்பினோம்.

  ReplyDelete
 2. வாரத்தில் இரண்டு நாட்கள் தான் திறந்திருக்கும் என்பதால் இந்தப் பயணத்தின் போது பார்க்கமுடியவில்லை....

  அடுத்த முறை செல்லவேண்டும்.

  ReplyDelete
 3. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா!

  கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா!!

  06.06.2012 அன்று தங்களின்
  ”ஞான உலா” என்ற பதிவினில்
  திருப்பட்டூர் செல்லும் வழியில் உள்ள பெரியய்யா கோயிலைப்பற்றி எழுதியிருந்தீர்கள்.

  அதற்கு நான் கொடுத்த என் பின்னூட்ட்த்தில் இந்த சிறுவாச்சூர் மதுர காளியம்மனைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

  உடனே இன்று ஒரு தனிப் பதிவாகவே கொடுத்து அசத்தி விட்டீர்களே!

  தங்கச்சுரங்கம் போல தகவல் சுரங்கத்திடம் எல்லாத்தகவல்களும், படங்களும், ஏராளமாக தாராளமாக எப்போதுமே அக்ஷயமாக இருக்கும் போலிருக்கு!

  சந்தோஷம்.

  ReplyDelete
 4. மூக்குத்தி,
  தோடுகள் என
  சர்வாங்கமும்
  ஜொலித்திடும்
  முதல் படம்
  ஜோராக இருக்கு!  இரண்டாவது சிம்ஹ வாஹிணியும், மூன்றாவது சுழலும் பின்னனியுடன் கூடிய சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மனும் அழகாகவே காட்டப்பட்டுள்ளன.

  ReplyDelete
 5. //சிறுவாச்சூர் திருத்தலம். காஞ்சி பரமச்சாரியாளான ஸ்ரீ சந்திரசேகர ஸ்வாமிகளின் குலதெய்வம் //


  ஆச்சர்யம் அளிக்கும் நல்லதொரு புதுத்தகவல்.

  ReplyDelete
 6. சிறுவாச்சூர் மதுர காளியம்மன் பற்றிய தங்களது கட்டுரை அருமை. நானும் ஒரு பதிவு போட்டுள்ளேன். http://tthamizhelango.blogspot.com/2012/01/blog-post_08.html
  நான் அப்போது சிறுவாச்சூரில் எடுத்த படங்கள் கூகிள் மூலம் எல்லோருக்கும் பயன்படுகின்றன. எனக்கும் மகிழ்ச்சிதான். நன்றி!

  ReplyDelete
 7. //சினங்கொண்டு வந்த மதுரை காளியம்மன், இங்கு வந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு எல்லாவித இனிய நிகழ்வுகளையும் அருளுவதால் மதுர காளியம்மன் (மதுரம் = இனிமை) என்ற திருநாமம் கொண்டாள்.//

  சினங்கொண்ட அம்மன் இனி வேண்டாம்.

  சாந்தஸ்ரூபியான மதுரமான [இனிமையான] அம்மன் தான் எனக்கு வேண்டும்.

  ReplyDelete
 8. // வெள்ளி மற்றும் திங்கள் மட்டுமே அன்னையின் சன்னதி திறக்கப்பட்டு பூசை செய்யப்படுகின்றது //
  .
  இது மிகவும் முக்கியமான பயனுள்ள தகவல்.

  தகவல் சரிவரத் தெரியாமல் மற்ற தினங்களில் செல்வோருக்கு பெருத்த ஏமாற்றமே ஏற்பட்டு வருகிறது.

  அதுவும் வெளியூரிலிருந்து புறப்பட்டு வருவோருக்கு மிகவும் கஷ்டமாகி விடுகிறது என்பதே உண்மை,

  ReplyDelete
 9. //பில்லி, சூனியம் போன்றவைகளால் ஏற்படும் பாதிப்புகள் இத்தலம் வந்து அன்னையை வழிபட விலகிச் சென்று விடுகின்றன.

  வாய்பேச வராதவர்கள், காது சரிவர கேட்காதவர்கள் போன்ற குறைகள் எல்லாம் மனமுருக அன்னை முன் முறையிட கரைந்து காணாமற் போய் விடுகின்றன.

  குழந்தைப் பேறும் கிட்டுகின்றது.

  கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக அன்னை மதுர காளி ஆட்சி செய்து வருகின்றாள்.//

  கேட்கவே மகிழ்ச்சியும் மனநிம்மதியும் ஏற்படுத்தும் அற்புதத் தகவல்களாக உள்ளன.

  ReplyDelete
 10. //சிறுவாச்சூர் காளியம்மன் என்றாலே மாவிளக்கு நேர்த்திகடன் மிகவும்
  பிரபலம்.//

  ஆமாம் ஆமாம்.

  நாங்கள் சென்ற தினத்தில்

  நூற்றுக்கணக்கானவர்கள் அங்குள்ள பல ஆட்டுக்கல்களில் மாவு
  இடித்து சலித்து, மடி ஆச்சாரமாக மாவிளக்கு ஏற்றி வழிபட்டுக்கொண்டிருந்தனர்.

  பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

  சில மாமிகள் எனக்குக் கொடுத்த மாவிளக்கு பிரஸாத மாவு
  உருண்டைகள் கையில் ஒட்டாமல் கசகசப்பு இல்லாமல் ஜோராக
  ருசியாகவும் நெய் மணமாக இருந்தது.

  இப்போது நினைத்தாலும் நாக்கில் நீர் ஊற்கிறது.

  ReplyDelete
 11. தேரும் கோயில் கோபுரங்களும் அழகாகவே காட்டியுள்ளீர்கள்.

  அந்த நுழைவாயில் வளைவு அடடா.... சூப்பர் போட்டோ
  கவரேஜ்! சபாஷ் !!

  ReplyDelete
 12. கடைசி நான்கு படத்தில் உள்ள குதிரை சிலைகள் அற்புதம்.

  ”ஊர்சுத்தியான்”

  என்ற பெயரைப் படித்ததும் சிரித்து விட்டேன்.

  ஊர்சுத்தியானைப்போய் எப்படியோ துரத்திப்பிடித்து ஒரே அமுக்காக அமுக்கி போட்டோ எடுத்துக் காட்டிவிட்டீர்களே.

  [திறமைசாலி..புத்திசாலி..]

  ReplyDelete
 13. ”மதுரமாய் அருளும்
  மதுர காளி அம்மன்”

  ஐப் பற்றிய மகத்தான
  விஷயங்களை தங்களின்

  வெற்றிகரமான 5 6 7 ஆவது பதிவாகத் தந்துள்ள தங்களின் கடும் உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது.


  [கூட்டினால் நவக்கிரஹமான
  9 என்ற எண் வரக்கூடிய
  5 6 7 என்ற தொடர் எண் மிகச்சிறப்புடையது தானே!

  அந்தச்சிறப்பினை பெற்றுள்ளது உங்களின் இந்தப்பதிவு ;))))) ]


  ம ன மா ர் ந் த

  ந ன் றி க ள்.

  பா ரா ட் டு க் க ள்.

  வா ழ் த் து க ள்.


  பிரியமுள்ள
  vgk

  ReplyDelete
 14. //காஞ்சி பரமாச்சாரியாளான
  ஸ்ரீ சந்திரசேகர ஸ்வாமிகளின் குலதெய்வம்//

  -- இதைத் தொடர்ந்து நிறைய இதுவரைத் தெரியாத தகவல்கள் தெரிந்து கொண்டேன். 'மதுர' வுக்கு இனிமை என்று பொருள் கொண்டது பொருத்தமாக இருந்தது.

  அன்னையின் திருக்கோலத்தை வார்த்தைகளில் வர்ணித்து வழிபட்ட அழகை வாசிக்கக் கொடுத்து வைத்திருக்கிறோம்.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 15. வழக்கம் போல படங்களுடன் பதிவுகளும் அருமை அம்மா, தேவியின் பதத்தில் அரக்கன் இல்லாததால் இங்கு அளிக்கும் தொழில் செய்யாமல் நம்மை காக்கிறாள் என்ற தகவல் வரை நீங்கள் திரட்டிய உங்கள் தகவல் சேகரிப்பை எண்ணி வியக்கிறேன்

  ReplyDelete
 16. இன்று
  வெள்ளிக்கிழமை
  காலை
  மீண்டும்,
  அம்பாளின்
  திவ்ய
  தரிஸனம்.


  விழித்திருப்பினும்
  தூங்கினாலும்
  கனவிலும்
  கூட ....

  எப்போதுமே
  எனக்கு
  அம்பாள்
  ஞாபகமே!

  -o-o-o-o-o-o-

  //யாருக்கும் கருணை புரிவாள்
  கழல் பற்ற நெஞ்சே
  சிறுவாச்சூர் ஆலயமே சேர்//

  அழகான வரிகள். ;)))))

  ReplyDelete
 17. மதுரம் தேன் சுவை கொண்டது இனிப்பானது சிறப்பானது தேபோல மதுர காளியம்மனும் எங்கள் தமிழன்னை சிலம்பு செல்வியும் இந்த இடுகையை அலங்கரிக்கிறார்கள் அதுமட்டுமா நாட்டைக் காக்கும் எங்களது காவல் தேவன்கள் நாட்டார் கடவுளால் எல்லாமே சிறப்பு ...

  ReplyDelete
 18. அறியாத பல தகவல்களை அறிந்து கொண்டேன். நன்றி ! வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 19. 3404+11+1=3416

  ஒரு பதிலையும் காணோம். வாயில் என்ன மாவிளக்கு மாவோ ? ;)

  ReplyDelete