Sunday, June 10, 2012

வரம் அருளும் வராஹர்"தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" "தாயிற் சிறந்த கொயிலுமில்லை", "மூத்தோர் சொல்வார்த்தை அமிர்தம்" எங்கின்ற புனித மொழிகளைப் பொக்கிஷமாகக் கொண்டு வாழ்க்கையில் சாதித்துக்காட்ட வேண்டும் என்கின்ற ஓர் உன்னதமான 
உணர்வினைத் தூண்டக்கூடிய அவதாரம் தான் பரவச்த்தில் ஆழ்த்தும் பரசுராமவதாரம்.

மன்னர்களுடன் போரிட்ட பரசுராமர், தான் பெற்ற 
இடங்களை கஷ்யபருக்கு தானமாக வழங்கினார். 
பின் தவம் செய்வதற்காக இடம் தேடினார். கடலை நோக்கி தனது பரசுவை (கோடரி) எறிந்தார். அது விழுங்கியிருந்த இடத்தை மீட்டார். 
அந்த இடம் தான் கேரளதேசம். 
கடலில் இருந்து வந்த அந்த பூமி, திடமாக இல்லாமல் 
இங்குமங்கும் நகர்ந்து கொண்டிருந்தது. 
அதனைச் சரிப்படுத்த எண்ணிய பரசுராமர், நாரதரின் உதவியை நாடினார்
அவரின் வழிகாட்டுதலால் விஷ்ணுவை எண்ணி தவமிருந்தார்.

விஷ்ணு நேரில் காட்சியளித்து, "" பூமியைக் காப்பதற்காக, நான் எடுத்த வராஹமூர்த்தி கோலத்தை இங்கு பிரதிஷ்டை செய்தால் பிரச்னை தீரும்,'' என்று அருள்புரிந்தார். 
மஹா விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராஹ அவதாரம் . 

பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.
Visit Us @ www.MumbaiHangOut.Org

அதன்படி வராஹர் சிலையை பரசுராமர் பிரதிஷ்டை செய்தார். 

இதன் காரணமாக இங்கு வழிபட்டால், நிலப்பிரச்னையில் 
நல்ல தீர்வு கிடைக்கும் என்கின்றனர். 

மேலும், வராஹரின் மடியில் பூமாதேவியும் இருப்பதால், 
இவ்விஷயத்தில் இரட்டிப்பு நன்மை கிடைக்கும்.
வழக்கில் வெற்றி பெற கேரளம், பாலக்காடு மாவட்டம் பன்னியூர் ஆனக்கரை வராஹமூர்த்தி கோயிலில் உள்ள வராஹர் லட்சுமிக்கு பதிலாக பூமாதேவியை மடியில் தாங்கியிருக்கிறார்.

மூலவர் நான்கு கைகள் உடையவர். வலது கீழ்கையில் தாமரை, இடது கீழ்கையில் கதை உள்ளது. "வராஹம்' என்றால் "பன்றி'. 

இதை அனுசரித்து ஊரின் பெயரும் பன்னியூர் ஆனது. 

சிறப்பம்சம்: கேரளத்தில் வராஹ வடிவில் மகாவிஷ்ணுவின்
பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரே கோயில் இது. 
மாலை நேரத்தில் குடும்பத்துடன் வராஹ மூர்த்தியை வழிபடுவது விசேஷம். 
இவர் மூன்றரை அடி உயரம் உள்ளவர். மனதில் நினைத்தது நடக்கவும், திருமணத்தடை நீங்கவும், மூன்று மாதங்கள் அவரவர் பிறந்த நட்சத்திர நாட்களில் ருக்மணி கிருஷ்ண பூஜை செய்யலாம். 

வேலை கிடைக்கவும், வீடு கட்டவும் நிலத்திலுள்ள மண்ணை எடுத்து "அபீஷ்ட சித்தி பூஜை' நடத்துகின்றனர். 

சிவன் சந்நிதியில், மார்கழி மாத முதல் திங்கள்கிழமை 
ஆயிரம் குடம் புனிதநீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. 

லட்சுமி நாராயணர், விநாயகர், ஐயப்பன், துர்க்காதேவி, முருகன் சந்நிதிகளும் உள்ளன. 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த கோயிலில் திருப்பணி துவங்கியுள்ளது. 

திருவிழா: தை அஸ்வினி பிரதிஷ்டா நாள் (வராஹர், சிவன்), 
தைப்பூசம், வராஹ ஜெயந்தி, சித்திரை விஷூ.

திறக்கும் நேரம்: காலை 6- 10, மாலை 5.30- 7.30. 

இருப்பிடம்: பாலக்காட்டில் இருந்து ஒற்றப்பாலம் வழியாக 
கும்பிடி 65 கி.மீ., பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் உள்ளது.
[Sri+Varaha+swami.JPG]

Shree Adbhut Mahavirat Varaha Lakshmi
File:Panniyur Varahamoorthy Temple1.JPG
Varahamoorthi Temple, Panniyoor, Kerala

File:Panniyur Sri Vamanamoorthy Temple.JPG
File:Panniyur Sri Varahamoorthy Temple.JPG
File:Panniyur.JPG
Scenes from a Festival ground, Kerala

6 comments:

 1. ஸ்ரீஹரியின் நாமம் வாழ்க ..!

  ReplyDelete
 2. வண்ண வண்ண அழகுப் படங்களுடன், எம் பெருமானின் திருக்கோலங்களுடன் ஒரு அழகிய அருமையான பதிவினைத் தந்தமைக்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 3. வரம் அருளும் வராஹர்
  என்ற இந்தப்பதிவினில்
  பரசுராமர் பற்றி ஒருசில தகவல்களும்,
  பெருமாளின் மூன்றாவது அவதாரமாகிய வராஹ அவதாரச் சிறப்புகளும், பூமாதேவியுடன் வீற்றிருக்கும் இவரை வழிபட்டால் கிடைக்கும் நன்மைகளும் பற்றி சிறப்பாக எல்லாம் தெரிவித்து, அழகான படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

  சந்தோஷம்.

  ReplyDelete