Wednesday, March 6, 2013

ஸ்ரீசைல நாயகி ஸ்ரீபிரம்மராம்பா தேவி
Bhramari Devi - Goddess of the Black Bees (Shrimad Devi Bhagavatam, Book Ten, Chapter 13)


ஸ்ரீசைல நாயகி ப்ரமராம்பிகை அம்மன் ..


 எங்கெங்கும் காணினும் சக்தியடா.... எனவும்

    ஆதிப்பரம் பொருளின் ஊக்கம்--அதை
    அன்னையெனப் பணிதல் ஆக்கம்
    மூலம் பழம்பொருளின் நாட்டம்--இந்த
    மூன்று புவியும் உனது ஆட்டம்     எனவும்

அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம் --

 பாரதியின் பாடல் நம்மை அன்னையிடம் சரணடைய  வைக்கிறது


ஸ்ரீசைலம்: ஆதிசங்கர் சக்ரபிரதிஷ்டை செய்த இடம்  -   ஸ்ரீ பிரமராம்பாள்.

ஸ்ரீசைல சிகரத்தைக் கண்ட மாத்திரத்திலேயே பாவம் தொலையும்

அம்பிகை த்ரய தலங்கள் என .அம்பிகையின் மூன்று
ஸ்தலங்கள் விசேஷமாக  மூகாம்பிகை, ஞானாம்பிகை,
பிரமராம்பிகை. எனத் திகழ்கிறாள்..
ஸ்ரீசைல நாயகியே ப்ரமராம்பிகை 

வடமொழியில் பிரமரம் என்றால் வண்டு .. மல்லிகார்ஜுனர்
என்ற இறைவன் மல்லிகை மலராகவும், அதனுடைய
 பக்கத்திலேயே ஹ்ரீம்கார சப்தம் செய்தவாறு
 (ப்ரமர)அம்பிகை சுற்றிச்சுற்றி வருகிறதாகவும் 
நினைத்துப் பார்க்கையில் சிவசக்தி ஐக்யமே 
இவ்வுலகம் நிம்மதியுடன் இயங்கக் காரணம் 
எனத் தெளிவு பெறலாம்.

காமம், குரோதம், மோஹம், லோபம், மதம், மாத்சர்யம் என்னும் ஆறு கால்களையுடைய மனம் என்னும் வண்டு பராம்பிகையின் பாதாரவிந்தம் என்னும் தாமரையின் ஞானம் என்னும் தேனை உண்ண வேண்டும்.

அப்போது ‘பவம்’ என்னும் பூர்வ ஜென்ம க்லேசங்களால் தபிக்கப்படும்
நாம் நிம்மதி பெறுவோம்.


இயற்கைக் காட்சிகளின் எழிலூட்டும்  திருத்தலப் பெருமைகளைக் கொண்டு   சிவபெருமானின் த்வாதச ஜோதிர்லிங்கங்களில்  ஒன்று ஸ்ரீசைலம்:
. இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாததாகவும்
கருதுபவனை பிரமை பிடித்தவன் என்கிறோம். 

நம் வீடு, நம் ஊர், நான், எனது என்று எதையும்
தன்னுடையவையாகக் கருதும் நிலையே பிரமை. 

உண்மையில் இவ்வீடு, பணம், முதலியன நமதானால்
நம் இறுதிக் காலத்திற்குப் பிறகும் பயன்படவேண்டுமே! 

அது நம் வாழ்நாளிலேயே சில சமயம் நம்மைவிட்டுப்
போய்விடுகிறது. அதனால் நமது என்ற வீண் மயக்கம் இங்கு ஏற்படுகிறது. 

இதுவே பற்றுக்கும் துன்பத்துக்குமே காரணம். 

 இவை யாவும் இறைவியாம் அன்னையுடையது. 

அவளுடைய குழந்தைகளே இவ்வையகத்துள்ளவர்கள். 

ஆகவே எல்லாரும் நமது சுற்றம் என்று பார்ப்போமானால் 
அது தெளிவு, அல்லது ஞானம்.

காக்கை குருவி எங்கள் சாதி -நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம் நாம் அன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்”
என்று ஆனந்தமாக மனத்தை விரிவாக்கி 
களிப்பெய்திப் பாடுகிறார்.முண்டாசுக்கவி பாரதியார் ...

இப்படிப்பட்ட பல ஜென்ம பழக்கமான பிரமை நீங்கி ப்ராந்தி ஒழிந்து தெளிவு அடைந்து அஸங்கனாக இருக்க வேண்டுமானால் வண்டுகள்போல் முன்கேசம் நெற்றியில் புரளும் பிரமராம்பிகையைத் தரிசனம்செய்” என்றார் ஸ்ரீகாவ்ய கண்ட கணபதி முனிவர்.
ஸ்ரீசைல ச்ருங்கஸ்ய விலோகனேன 
ஸங்கேன ஹீனோ பவிதா மனுஷ்ய:
தாமஸ்தி யத்ர ப்ரமராலகாயா: சாந்த ப்ரமம் 
தத் ப்ரமராம்பிகாயா: பத்ரகர்ணீ - 

நமக்கு மங்களம் வேண்டுமென்றால் அமங்களமானவற்றை நீக்க வேண்டும்  மஹாதபஸ்விகளும், புத்திமான்களும் அனுஷ்டித்த உயர்வழியே நமக்கு மங்களத்தையும் அருளும்......


ஸ்ரீசைலத்தில்  சிவன் சன்னதி கீழே இருக்க, பிரமராம்பாள் சன்னதி
 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது விசேஷமாகும்.

ஸ்ரீபிரம்மராம்பா தேவி பதினெட்டு மஹாசக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்குகிறாள்.

சித்தி பெறுபவருக்கும், சாமான்ய பக்தருக்கும் அபூர்வமான அனுபவத்தை இந்த ஷேத்திரம் கொடுக்கின்றது.
Sri Bhramarambika Devi
ஸ்ரீ பிரம்மராம்பாதேவி பவானி வடிவத்தில் சிவாஜிக்கு காட்சி தந்தருளி திவ்யகட்கத்தை (பெரிய வாள்) அளித்து கடமை உணர்வை போதித்து, பகைவரை அழித்து வெற்றி யாத்திரையை நடத்திட வாழ்த்தினாள். 

தனது பக்தியின் நினைவாக இத்தலத்தில் வடக்கு கோபுரத்தையும்,
தியான மந்திரையும் உருவாக்கி அன்று முதல் பல வெற்றிகள் பெற்று
சத்ரபதி சிவாஜி என்ற பெயருடனும் பெருமையுடனும் திகழ்ந்தார்...
Sri Malligajuna Swamy
தொடர்புடைய பதிவு ..
http://jaghamani.blogspot.com/2012/06/blog-post_18.html
மகிழ்ச்சிதரும் மல்லிகார்ஜுனசுவாமி  


22 comments:

 1. தகவல் ,படங்கள் , விளக்கம் அருமை

  ReplyDelete
 2. தகவல் ,படங்கள் , விளக்கம் அருமை

  ReplyDelete
 3. thanks for sharing info about first mahasakthi peedam

  ReplyDelete
 4. நீங்கள் சொன்னது போல் உடல், பொருள், ஆவி எல்லாம் அனனையுடையது தான். இந்த தெளிவு, ஞானம் வந்து விட்டால் வாழ்வில் வேறு என்ன வேண்டும். அருமையான பதிவு.
  படங்கள் அருமை.

  ReplyDelete
 5. ஸ்ரீசைல நாயகி பற்றிய தகவல்கள் அருமை.
  படங்கள் அனைத்தும் மிக அழகு.

  ReplyDelete
 6. படங்களும் பதிவும் வெகு சிறப்பு.
  ஒருமுறை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது.

  ReplyDelete
 7. நான் ஸ்ரீ சைலம் இன்னும் பார்த்தது இல்லை போகணும் என்று வெகுநாள் ஆவல் இங்கு ஸ்ரீ சைலம் பற்றி நீங்கள் கொடுத்துள்ள குறிப்புகள் விவரங்கள் முக்கியமாய் படங்கள் அனனத்தும் அருமை பாரதியின் வரிகளை காண்பித்துள்ளது அருமை

  ReplyDelete
 8. ஸ்ரீபிரம்மராம்பா தேவி பற்றி அருமையான தகவல்கள். அழகான அற்புதமான படங்கள்.

  எத்தனை வரலாறுகளை உங்களிடமிருந்து அறிந்துகொள்கிறோம்.
  அற்புதமான ஆன்மீக களஞ்சியமம்மா நீங்கள்.

  அருமை. மிக்க நன்றி உங்கள் அயராத முயற்சிக்கும் பகிர்வுக்கும் சகோதரி!

  ReplyDelete
 9. படங்களும் விளக்கமும் நல்ல தெளிவு தரும் விதமாக இருந்ததுங்க. நன்றி.

  ReplyDelete
 10. ஆதிசேஷனின் தலை அகோபிலத்திலும் உடல் திருப்பதியிலும் வால் ஸ்ரீசைலத்திலும் படர்ந்திருப்பதாக ஐதீகம். அத்தகைய பெருமை வாய்ந்த திவ்ய க்ஷேத்திரத்தைக் கண்முன் கொண்டு வந்து தரிசிக்கச் செய்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் பணிவான வணக்கங்களும் அம்மா.

  ReplyDelete
 11. சிறப்பான பதிவுக்கு பனிவான வணக்கங்கள்...

  ReplyDelete
 12. ஸ்ரீசைல நாயகி ப்ரமராம்பிகை அம்மன் ..

  மிகவும் அழகான தலைப்புடன் கூடிய அற்புதமான பதிவு.

  இந்த அம்பாளின் பெயரை என்னால் என்றுமே மறக்க முடியாது.

  இந்த அம்பாளின் பெயருடன் கூடிய ஒரு பெங்களூர்வாசி எனக்கு மங்கையர் மலர் பத்திரிகை மூலம் பழக்கமாகி இன்றுவரை எங்கள் நட்பு [மின்னஞ்சல் மூலம் மட்டுமே] தொடர்ந்து வருகிறது.

  நேரில் இதுவரை எங்களால் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியவில்லை.

  அவர் ஒரு கர்நாடக இசை மேதையும் கூட.

  நான் எழுதிய “உடம்பெல்லாம் உப்புச்சீடை” கதையை மங்கையர் மலர் பத்திரிகையில் படித்த இவர், அதில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, மங்கையர் மலர் அலுவலகத்தைத் தானே தொடர்பு கொண்டு, எங்கள் விலாசம் வாங்கி, எங்களைத்தொடர்பு கொண்டு பாராட்டினார்கள்.

  பிறகு எங்கள் அனுமதியுடன், அதை கன்னடத்தில் மொழிபெயர்த்து. ”மெய்யெல்லா கண்டு” என்ற தலைப்பில் அதை ”கஸ்தூரி” என்ற பிரபல கன்னடப்பத்திரிகையில் வெளியிட்டு உதவினார்கள் / மகிழ்ந்தார்கள்..

  அதன்பிறகு என்னுடைய வேறு சில கதைகளையும் இதுபோல மொழியாக்கம் செய்து கன்னடத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

  >>>>>>>

  ReplyDelete
 13. வெளியிட்டுள்ள படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

  ஸ்ரீசைல நாயகி ப்ரமராம்பிகை அம்மன் ..

  ஸ்ரீ மல்லிகார்ஜுன ஸ்வாமி..

  ஆகிய இரண்டும் மிகச்சிறப்பாக உள்ளன.

  >>>>>>

  ReplyDelete
 14. //ஸ்ரீசைலம்:

  ஆதிசங்கர் சக்ரபிரதிஷ்டை செய்த இடம் - ஸ்ரீ பிரமராம்பாள்.

  ஸ்ரீசைல சிகரத்தைக் கண்ட மாத்திரத்திலேயே பாவம் தொலையும்

  அம்பிகை த்ரய தலங்கள் என அம்பிகையின் மூன்று
  ஸ்தலங்கள் விசேஷமாக மூகாம்பிகை, ஞானாம்பிகை,
  பிரமராம்பிகை எனத் திகழ்கிறாள்..

  ஸ்ரீசைல நாயகியே ப்ரமராம்பிகை //

  கேட்கவே மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

  >>>>>>>

  ReplyDelete
 15. //வடமொழியில் பிரமரம் என்றால் வண்டு .. //

  ஆஹா, வண்டு போல நாங்களும் தங்களின் தகவல்களை இன்று இங்கு,தேனாக உறிஞ்சிக்கொள்ள முடிகிறது. ;)

  >>>>>>>

  ReplyDelete
 16. //மல்லிகார்ஜுனர் என்ற இறைவன் மல்லிகை மலராகவும், அதனுடைய
  பக்கத்திலேயே ஹ்ரீம்கார சப்தம் செய்தவாறு (ப்ரமர)அம்பிகை சுற்றிச்சுற்றி வருகிறதாகவும்
  நினைத்துப் பார்க்கையில் சிவசக்தி ஐக்யமே இவ்வுலகம் நிம்மதியுடன் இயங்கக் காரணம் எனத் தெளிவு பெறலாம்.//

  ”சிவசக்தி ஐக்யம்” மிகவும் அருமையான விளக்கம்.
  மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள். ;)))))

  >>>>>>

  ReplyDelete
 17. //காமம், குரோதம், மோஹம், லோபம், மதம், மாத்சர்யம் என்னும் ஆறு கால்களையுடைய மனம் என்னும் வண்டு பராம்பிகையின் பாதாரவிந்தம் என்னும் தாமரையின் ஞானம் என்னும் தேனை உண்ண வேண்டும்.

  அப்போது ‘பா வ ம்’ என்னும்

  பூர்வ ஜென்ம க்லேசங்களால்
  த வி க் க ப் ப டு ம்
  நாம் நிம்மதி பெறுவோம்.//

  தங்களின் பதிவென்னும் பாதாரவிந்தமான தங்கத் தாமரையின் ஞானம் என்னும் தேனில் ஓரிரு சொட்டுக்கள் கிடைத்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம். ;)))))

  >>>>>>

  ReplyDelete
 18. //நம் வீடு, நம் ஊர், நான், எனது என்று எதையும் தன்னுடையவையாகக் கருதும் நிலையே பிரமை.

  உண்மையில் இவ்வீடு, பணம், முதலியன நமதானால்
  நம் இறுதிக் காலத்திற்குப் பிறகும் பயன்படவேண்டுமே! //

  அ தா னே ! ;)

  //அது நம் வாழ்நாளிலேயே சில சமயம் நம்மைவிட்டுப் போய்விடுகிறது.

  அதனால் நமது என்ற வீண் மயக்கம் இங்கு ஏற்படுகிறது. //

  அற்புதமான விளக்கம்மம்மா !

  //இதுவே பற்றுக்கும் துன்பத்துக்குமே காரணம்.

  இவை யாவும் இறைவியாம் அன்னையுடையது.

  அவளுடைய குழந்தைகளே இவ்வையகத்துள்ளவர்கள்.

  ஆகவே எல்லாரும் நமது சுற்றம் என்று பார்ப்போமானால்
  அது தெளிவு, அல்லது ஞானம்.//

  சூப்பரோ சூப்பர்.

  யாதும் ஊரே யாவரும் கேளிர் ! இதை எல்லோரும் கேளீர்.

  >>>>>>>>>

  ReplyDelete
 19. //ஸ்ரீ பிரம்மராம்பாதேவி பவானி வடிவத்தில் சிவாஜிக்கு காட்சி தந்தருளி திவ்யகட்கத்தை (பெரிய வாள் - அதாவது நீண்ட கத்தி - போர் வாள்) அளித்து கடமை உணர்வை போதித்து, பகைவரை அழித்து வெற்றி யாத்திரையை நடத்திட வாழ்த்தினாள்.

  தனது பக்தியின் நினைவாக இத்தலத்தில் வடக்கு கோபுரத்தையும், தியான மந்திரையும் உருவாக்கி அன்று முதல் பல வெற்றிகள் பெற்று ”சத்ரபதி சிவாஜி” என்ற பெயருடனும் பெருமையுடனும் திகழ்ந்தார்...//

  சரித்திரக்கதைகள், பாரதியார் கவிதைகள் என பல்வேறு விஷயங்களை இன்று அள்ளித்தெளித்து அசத்தியுள்ளீர்கள்.

  அழகான பதிவாக மெருகேறி ஜொலிக்கிறது.

  மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்பான இனிய நல்வாழ்த்துக்கள்.

  பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

  oooooo

  ReplyDelete
 20. சிறப்பானதோர் கோவில் பற்றிய தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 21. படங்கள்,விளக்கங்கள் எல்லாம் அருமை

  ReplyDelete
 22. வாழ்நாளுக்குள் 12 ஜோதிர்லிங்கங்களையும் தரிசிக்க பேராவல். புனேயில் இருந்த போது 4 ஜோ.லிங்கங்கள் தரிசித்தேன். இராமநாதரை அடிக்கடி தரிசிக்கும் பேறு பெற்றேன். ஸ்ரீசைலம் தரிசிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு.அது மேலும் பலமாகியது.
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete