Tuesday, March 19, 2013

ஜெயமளிக்கும் அபராஜிதா -மஹா பிரத்யங்கிரா தேவிLakshmi PoojaLakshmi Pooja
hd wallpapers of mahalaxmi


ஆஜ்ஞா அநுக்ரஹ பீம கோமல பூரி பாலா பலம் போஜுஷாம்
யா அயோத்த்யா இதி அபராஜிதா இதி விதிதா நாகம் பரேண ஸ்த்திதா
பாவை: அத்புத போக பூம கஹநை: ஸாந்த்ரா ஸுதா ஸ்யந்திபி:
ஸ்ரீரங்கேச்வர கேஹலக்ஷ்மி யுவயோ: தாம் ராஜதாநீம் விது:

 ஸ்ரீரங்கநாதனுடைய பெரியகோயில் என்னும் இல்லத்து மஹாலக்ஷ்மியே!
ஸ்ரீரங்கநாயகியும், நம்பெருமாளும் வேதங்களில் அயோத்யை என்றும், அபராஜிதா என்றும் பெயர் கொண்ட நகரத்தை தலைநகரமாகக் கொண்டுள்ளார்கள். (அயோத்யை என்றால் யாராலும் எளிதாக நெருங்க இயலாத என்று பொருள்,

அபராஜிதா என்றால் யாராலும் வெல்ல இயலாதது என்று பொருள்). 

அந்த நகரம் ஆகாயத்திற்கும் மேலே ஸ்வர்கத்திற்கும் மேலே உள்ளது.
அங்கு அன்னையின் ஆணைப்படி பயங்கர ஆயுதம் உடைய காவலர்களும்,  இனிய கருணை மூலம் காவல் காத்துவரும் துவாரபாலகர்களும் உள்ளனர்.

அந்த இடம் அடியார்களுக்கு மிக்க பயன்கள் அளிக்கவல்ல
பல பொருள்களையும் கொண்டதாக  சிறப்புகளுடன் திகழ்கிறது ..

இதனை திவ்யதம்பதியரின்  தலைநகராகப் பெரியவர்கள் அறிவர்.


அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் திகழும் மஹா பிரத்யங்கிரா தேவி சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து, ஆயிரம் சிங்கமுகங்கள், இரண்டாயிரம் கைகளுடன் தோன்றியவள். 

இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை விழுங்கி ஜெயித்தவள். 
இவளுக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு. 

இவளே யந்தர, மந்திர, தந்திரங்களுக்கு அதிபதியான 
அதர்வண பத்ரகாளி ஆவாள்.
இவளது மந்திரத்தை "அங்கிரஸ்' "பிரத்திரயங்கிரஸ்' என்ற இரு ரிஷிகள் சேர்ந்து உருவாக்கியதால் அவர்களது பெயராலேயே "பிரத்யங்கிரா' என அழைக்கப்படுகிறாள். இவள் அனுமாரை காவலாக கொள்பவள்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த பிரத்யங்கிரா தேவிக்கு புதுச்சேரி அருகில் 72 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான உருவத்துடன் கூடிய கோயில் அமைந்துள்ளது.

மொரட்டாண்டி சித்தர் என்றழைக்கப்படும் தொல்லைக்காது சாமிகள் வாழ்ந்த புதுச்சேரி மாவட்டம் மொரட்டாண்டி என்னும் தலத்தில் பிரளய விநாயகர், பாதாள பிரத்யங்கிரா தேவி, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, ஹயக்கிரீவர், சண்டிகேஸ்வரர், அஷ்டதிக் பாலகர்களான இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், வாஸ்து பகவான், தன்வந்திரி, பிராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டீ, உக்ர நரசிம்மர், மகாலட்சுமி, சக்கரத்தாழ்வார், காலபைரவர் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி சன்னதி உண்டு.
அக்னி
பாதாள பிரத்யங்கிரா தேவி,
தன்வந்திரி
சண்டிகேஸ்வரர்,சந்நிதிகள் உண்டு..!
சரபேஸ்வரர்
நாகர்
மனத்தெளிவு, நோய்கள் குணமாதல், குடும்ப பிரச்னை தீர்தல், பைத்தியம் தெளிதல், விரைவில் திருமணம், புத்திர பாக்கியம், வியாபாரத் தடை நீங்குதல், கைவிட்டுப்போன பணம் கிடைத்தல் போன்ற சகல விதமான தொல்லைகள் நீங்க இங்கு பிரார்த்திக்கலாம்.
நீல நிற ஆடைகள், சர்க்கரைப்பொங்கல், எள்ளு சாதம், புளியோதரை, தயிர்சாதம், எள்ளுருண்டை, பானகம், கிழங்குவகைகள், உளுந்த வடை, வெண்ணெய், திராட்சை ஜூஸ், ஏலக்காய், ஜாதிக்காய் மாலைகள், நீலம் சிகப்பு நிற பூக்கள், எள்ளுப்பூ, செந்தாமரை போன்ற மலர்களில் பிரத்யங்கிராவுக்கு அதிக விருப்பம். 

வாழை நாரில் கட்டப்பட்ட வாழைப்பூ மாலை. பிரத்யங்கிரா தேவிக்கு மிக மிக விருப்பமான இவற்றை நேர்த்திக்கடனாக செலுத்தலாம்.

இங்குள்ள பிரளய விநாயகருக்கு 1008 தினங்கள் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் கணபதி ஹோமம் நடந்துள்ளது. 

 1008 தேன் கலச அபிஷேகம், ஒரே இடத்தில் 108 விநாயகர் சிலைகளுக்கு நடத்தப்பட்டது. 

பாதாள காளிக்கு உரிய கருவறை விமானம் "மகா மேரு' வடிவில் அமைக்கப்பட்டிருப்பது எங்குமில்லாத சிறப்பம்சமாகும்.

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் ராகு காலம், அமாவாசை, பவுர்ணமியில் நடத்தப்படும் விசேஷ பூஜைகள், தேய்பிறை அஷ்டமி யாகம், நடுநிசி வேளை ஆகியவை பிரத்யங்கிராவுக்கு விருப்பமானவை.

இங்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசி வேளையில் பிரத்யங்கிரா தேவிக்கு செய்யப்படும் யாகத்தில் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மகான்கள் ஆகியோர் சூட்சும (கண்களுக்கு புலப்படாத) ரூபத்தில் கலந்து கொள்கிறார்கள் என்பது ஐதீகம்.
இந்த யாகத்தினால் நாம் நினைத்த காரியங்கள், நீண்ட நாள் நிறைவேறாத ஆசைகள், லட்சியங்கள் ஆகியவற்றை அடையலாம். 

அத்துடன் இந்த யாகத்தில் பற்பல மூலிகைகள் அளிப்பதால் அதிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்கள் நம் உடலில் பாய்வதால், மனத்தெளிவு, நோய்கள் குணமாதல், குடும்ப பிரச்னை தீர்தல், பைத்தியம் தெளிதல், விரைவில் திருமணம், புத்திர பாக்கியம், வியாபாரத் தடை நீங்குதல், கைவிட்டுப்போன பணம் கிடைத்தல் போன்ற சகல விதமான தொல்லைகள் நீங்குவதாக புராணங்கள்,வேதங்கள், சாஸ்திரங்கள் கூறுகிறது.

ஸ்ரீராமரையும், லட்சுமணனையும் தன் படைபலத்தால் போரிட்டு வெற்றி பெற முடியாது என்பதை அறிந்தான் ராவணனின் மகன் இந்திரஜித். 

எனவே நிரும்பலை என்ற இடத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசியில் மிக ரகசியமாக மஹா பிரத்யங்கிரா யாகம் நடத்தி, ராம லட்சுமண சகோதரர்களை அழித்து விடலாம் என நினைத்தான்.

இந்த விஷயத்தை இந்திரஜித்தின் சித்தப்பா விபீஷணனின் 
உதவியால் ஆஞ்சநேயர் அறிந்தார். 

இந்திரஜித் இத்த யாகத்தை பூர்த்தி செய்து விட்டால், அவனை 
வெல்ல யாராலும் முடியாது என அறிந்து, முதலில் யாகத்தையும், 
பின் இந்திரஜித்தையும் அழித்தார்.
இந்த யாகம் செய்த இடத்தில் தான் பிரத்யங்கிரா தேவிக்கு 
தற்போது கோயில் கட்டப்பட்டுள்ளது.

17 comments:

 1. I had not seen this temple. The pictures are all very nice.
  Seeing the pictures itself feeling like gone to the temple.
  Sure i will visit over here oneday. Thanks for the post dear.
  viji

  ReplyDelete
 2. விளக்கமான தகவல்கள் அம்மா...

  படங்கள் வழக்கம் போல் அருமை...

  ReplyDelete
 3. செவ்வாய்க்கிழமை தினத்தில், பிரத்தியங்கிரா தேவியின் தரிசனம் கிடைக்கப்பெற்றேன். அழகான படங்களுடன் அருமையானதொரு பதிவு. மிக்க நன்றி.

  ReplyDelete
 4. ஸ்ரீப்ரத்யங்கராதேவி பற்றி முன்பே அறிந்திருந்தாலும் இத்தனை விபரமாக இன்று உங்கள் மூலமாகவே தெரிந்துகொண்டேன்.

  அரிய பல விஷயங்களையும் வழமைபோல அழகிய படங்களையும் இனைத்து அருமையாகத்த தந்துள்ளீர்கள்.

  பகிர்தலுக்குக் மிக்க நன்றி சகோதரி!

  ReplyDelete
 5. பிரத்தியங்கிரா தேவியைப் பற்றிய படமும் தகவல்களும் எப்பொழுதும் போல் மிக மிக அருமை.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. இன்று தேவியின் தரிஸனத்தில் ஏனோ மிகவும் தாமதம்.

  என்னால் மதியம் 12 மணிக்குத்தான் தரிஸிக்க முடிந்தது.

  >>>>>

  ReplyDelete
 7. //அபராஜிதா என்றால் யாராலும் வெல்ல இயலாதது என்ற பொருள்// ;)))))


  பிரயாணம் புறப்படும் போது சொல்ல வேண்டிய ஸ்ரீ ஹனுமான் ஸ்லோகத்தில் இடம் பெறும் இந்த ”அபராஜித பிங்காக்ஷ” என்பது மிகவும் முக்கியமான ஸ்ரீ ஆஞ்சநேயரின் நாமம் ஆகும்..

  ஸ்லோகம் முழுவதுமாக கீழே கொடுத்துள்ளேன்:
  http://gopu1949.blogspot.in/2012/03/8-of-8.html
  ==========================================

  ஹனுமான் அஞ்ஜனாஸூனு: வாய்புத்ரோ மஹாபல:

  ராமேஷ்ட: பல்குணஸக: பிங்காக்ஷ: அமிதவிக்ரம:

  உததிக்ரமணஸ்சைவ சீதாசோகவினாசன:

  லக்ஷ்மணப்ராணதாதாச தசக்ரீவஸ்ய தர்பஹா:!

  த்வாதசைதானி நாமானி கபீந்த்ரஸ்ய மஹாத்மன:

  ஸ்வாபகாலே ப்டேந்நித்யம் யாத்ராகாலே விசேஷத:

  தஸ்யம்ருத்யு பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீபவேத்!

  அ ப ரா ஜி த பி ங் கா க்ஷ நமஸ்தே ஸ்ரீராம பூஜித!

  பிரஸ்தானம் ச கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா!!

  >>>>>>

  ReplyDelete
 8. மஹா பிரத்யங்கிரா தேவியின் தோற்றம், சக்தி முதலியனபற்றி மிகவும் விரிவாக அறியத்தந்துள்ளீர்கள்.

  //இவளே யந்த்ர, தந்த்ர, மந்த்ரங்களுக்கு அதிபதியான அதர்வன பத்ரகாளியும் ஆவாள்//

  நினைத்துப்பார்த்தாலே படு பயங்கரமாக உள்ளது.

  //இவள் அனுமாரைக் காவலாகக் கொள்பவள்//

  பிறகு இவள் சக்தியைக்கேட்கவும் வேண்டுமோ!!!!!!

  >>>>>>

  ReplyDelete
 9. கோயில் கொண்டுள்ள இடம், அதன் சிறப்புகள், அங்கு நடைபெற்ற 1008 தொடர் கணபதி ஹோமங்கள், 108 விநயகர்களுக்கு நடந்த தேன் கலசாபிஷேகங்கள், அம்பாளுக்கு சிறப்பாக செய்யப்படும் விசேஷ பூஜைகள், நடுநிசி பூஜைகள், இந்திரஜித் மேற்கொண்ட யாகம் என பலவிதமான தகவல்களை அள்ளி அள்ளி அக்ஷயபாத்திரம் போலத்தந்து அசத்தியுள்ளீர்கள்.

  படிக்கப்படிக்க ஏதோ ஓர் மர்மக்கதையை திகிலுடன் படிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

  >>>>>>

  ReplyDelete
 10. தேவிக்கு விருப்பமான பிரஸாத வகைகள், வாழைநாரில் கட்டப்பட்ட வாழைப்பூ மாலைகள் ..... அடடா, அற்புதம் அற்புதம்.!!!!!

  கம்பீரமான மிகப்பெரிய படங்களுடன், மிகச்சிறப்பான தகவல்களுடன் பதிவு அசத்தலாக உள்ளது.

  மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

  ooooo

  ReplyDelete
 11. பிரத்யங்கிரா தேவி பற்றியும் மொரட்டாண்டி சித்தர் பற்றிய குறிப்புக்கும் அறியாதது நன்றி படங்களுக்கும் அருமை

  ReplyDelete
 12. நல்ல தகவல்களுடன் விளக்கம் அருமை.

  ReplyDelete
 13. It's a great info I have to visite all this temple on my next visite to India

  ReplyDelete
 14. நல்ல தகவல்கள் மற்றும் படங்கள்.

  ReplyDelete
 15. அபராஜிதா..பற்றிய விளக்கமும் மற்றைய விளக்கங்களும் நானறியாதது.
  அப்படி ஓர நகரம் இருப்பதும் அறியாததே.
  மிக்க நன்றி.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 16. நானறியாத பல தகவல்கள்.
  தகவல்களுக்கும், அருமையான புகைப்படங்களுக்கும் நன்றி!

  ReplyDelete
 17. ஸ்ரீப்ரத்யங்கராதேவி பற்றி அறியாத பலதகவல்களை, அழகிய படங்களுடன்
  அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல.

  ReplyDelete