Friday, March 22, 2013

உலக தண்ணீர் தினம்
நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், 1993 ஆம் ஆண்டு தொடங்கி, உலக நாடுகள் முழுவதும் உலக தண்ணீர் தினம் விழிப்பு உணர்வு தினமாகக் கொண்டடப்பட்டு வருகிறது, 

திரவத் தங்கம் என்று  பாதரசத்தை அறிவோம் ..
இனி தண்ணீரை தான் சொல்ல வேண்டிய நிலை வெகு தொலைவில் இல்லை . 
வறண்டிருக்கும் ஆறுகளையாவது பார்த்திருக்கிறோம் ...

 அடுத்த தலைமுறைக்கு ஆறு என்பதை  காட்டுவது கடினம் ..

. ஆறு தன் வரலாறு கூறும் கேள்வி, பாடப்புத்தகங்களில் இடம் பெற்றால்  விடையெழுதும்; அனுபவம் கூட அடுத்தலைமுறைக்கு கிடைப்பது சந்தேகம்தான் ..

?நீரை காப்போம் நீடுழி வாழ்வோம் நீரின்றி அமையாது உலகு ... ...
"சுத்தமான நீர் சுகாதார வாழ்வு" என்ற வாசகம் உறுதிமொழியாக ஏற்போம்....

கோயில்கள் தோறும் குளம் வைத்திருக்கும் மரபின்படி
இன்றும் பெரும்பாலான குளங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இவற்றில் எத்தனை குளங்கள் சுத்தமாக இருக்கின்றன?

புனித நதிகள் அனைத்தையும்  சமயச் சடங்குகள் என்ற பெயரால் தொலைக்கின்றோம்.

உயிர் வாழ்வதற்குச் சுத்தம் முதலாம் பட்சம் சமயச் சடங்குகள் இரண்டாம் பட்சம் என்ற நிலையை உணர்தல் அவசியம் ..


\


17 comments:

 1. நீங்கள் சொல்வது போல் புனித நதிகள் மட்டுமல்ல அவர் அவர் ஊரில் இருக்கும் நீர் நிலைகளையும் புனிதமாய் கருதி அவற்றில் கல்யாண மாலைகள், மற்றும் இறைவனுக்கு சாற்றி களைந்த மாலைகள், அவற்றுக்கு வழிபாடு என்று பூக்கள் எல்லாம் போட்டு வந்தவர்கள் இப்போது வீட்டு குப்பைகள், எல்லாம் போட்டு நீர் நிலைகளை தூர்த்து வரும் அவலம் நடக்கிறது.

  மக்கள் விழித்துக் கொண்டால் நல்லது அல்லது திரவதங்கமாய் தான் நீர் மாறிவிடும்.

  நல்ல பயனுள்ள பதிவு.


  ReplyDelete
 2. //அடுத்த தலைமுறைக்கு ஆறு என்ற ஒன்றைக் காட்டுவது கடினம்//
  வேதனையுடன் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை...

  ReplyDelete
 3. வரும் உலகம் சந்திக்க போகும் மிகப்பெரிய சவால் இது தான்...

  படங்கள் பலவற்றை பேசுகின்றன...

  ReplyDelete
 4. ”உலக தண்ணீர் தினம்’

  பற்றிய மிக அருமையான படைப்பும் பதிவும்.

  >>>>>

  ReplyDelete
 5. //அடுத்த தலைமுறையினருக்கு ஆறு என்பதைக்காட்டுவது கடினம்//

  மிகவும் வருத்தமான விஷயம்.

  இதைப்படித்தால் மனம் ’ஆறு’வதும் இல்லை. ;(

  >>>>>

  ReplyDelete
 6. //உயிர் வாழ்வதற்கு சுத்தம் முதலாம்பட்சம், சமயச்சடங்குகள் இரண்டாம் பட்சம் என்பதை உணர்தல் வேண்டும்.//

  மிகவும் நியாயமான அறிவுரை.

  >>>>>>

  ReplyDelete
 7. படங்களெல்லாம் வழக்கம் போல அழகாக உள்ளன.

  கடைசியில் காட்டியுள்ள பூனைகளின் செயல்கள் வேடிக்கையாக உள்ளன.

  நல்லதொரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

  ooooo

  ReplyDelete
 8. அழகிய கருத்துக்கள். நல்ல படங்கள். சிறந்த சிந்தனை.

  நீரும் காற்றும்தான் மனிதனுக்கு உயிர்வாழ மிகமிக இன்றி அமையாதவை.

  யாவரும் உணர்வில் இதனைக்கொண்டாலே உய்ந்திடலாம்.

  பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 9. சிந்திக்கவைக்கும் நல்லதொரு பதிவு.அழகான படங்களுடன். பூஸார் ஏன் கண்ணைச்சிமிட்டிக்கொண்டு இப்படி ஓடுகிறார்.

  ReplyDelete
 10. மனிதன் இயற்கையோடு போராட வேண்டிய கால கட்டம் வந்து விட்டது. எங்கு பார்த்தாலும் ஆழ்துளை போட்டு தண்ணீர் உறிஞ்சி கொண்டிருக்கிறார்கள். கடைசி சொட்டையும் உறிஞ்சி விட்டு பிறகு என்ன செய்ய போகிறோம்?

  ReplyDelete
 11. அப்பப்பா பக்திதான் என்றாலும் அது தண்ணீர் தொடர்பான செய்தியாக இருந்தாலும் சுவிபட கூறும் விதம் சிறப்பு

  ReplyDelete
 12. போகிற போக்கைப்பார்த்தால் ...தண்ணீர்தான் பெரிய பிரச்சினைகளுக்குக் காரணமாகும் போல!

  ReplyDelete

 13. ஆறுகளை இணைப்பதில் ஆகட்டும். அவற்றை பேணிக் காப்பதில் ஆகட்டும் ஏன் ஒரு ஒருங்கிணைந்த கருத்து உருவாவதில்லை. நீர் என்பது வாழ்வாதாரம். சிக்கனமாக உபயோகிக்க வேண்டும். .ஒரு விழிப்புணர்வு கட்டுரைக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 14. பாதுகாக்க போராடுவோம் நீங்கள் சொல்வது போல் நீரின்றி எதுவோமே இல்லை இருக்கவும் முடியாது

  ReplyDelete
 15. எப்போதும்போல இப்போதும் அருமை

  ReplyDelete
 16. உலக தண்ணீர் தினத்துக்கு வாழ்த்துக்கள்.

  எதெதுக்கெல்லாமோ தினம் வச்சுக் கொண்டாடீனம்.. ஏன் உலக அதிரா அதினம் என ஒன்று வச்சுக் கொண்டாடக்கூடாது...:))..

  சூப்பர் பூஸாரின் படங்கள்..

  ReplyDelete
 17. மிக மிக அருமையான பதிவு!

  ReplyDelete