Tuesday, December 4, 2012

அபூர்வ அவதாரங்கள்.. ஸ்ரீமத் பாகவதத்தில் வியாச முனிவர் மகாவிஷ்ணு எடுத்த  எண்ணற்ற அவதாரங்களில் முக்கியமான அவதாரங்களை விவரிக்கும் பகுதி சுவாரஸ்யமானது..

பிரம்மச்சரியத்தை அனுஷ்டிக்கும் விரதத்தை விளக்கிக் காட்ட, நான்முகனை சரீரமாகக் கொண்டு அவரது புத்திரர்களாக அவதரித்தவர்கள் சனக, சனந்தன, சனத்குமார, சனத்சுஜாத (நால்வர்) அவதாரம்.


சிவபெருமான் சனகாதி நால்வருக்கும்  சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று மார்க்கங்களையும் விளக்கிக் கூறினார். 
இதில் பரப்ரம்ம தத்வத்தைச் சொல்வது வயதில் சிறியவராக உள்ள தக்ஷிணாமூர்த்தி. அவர் தத்துவம் கூறிய விதம் மௌனமொழி. சிறந்ததான சிஷ்யர்கள் நால்வருக்கும் அது எளிதில் விளங்கிவிட்டது. 
அற்புதமான ஓர் ஆசிரியரல்லவா தென்திசைக்கடவுள் தட்சிணாமூர்த்தி..

இரண்யாட்சகனால் பாதாளலோகத்திற்கு கவர்ந்து செல்லப்பட்ட பூமியை மீட்டு வெளிக்கொண்டுவர எடுத்தது வராக அவதாரம்.

பக்தியே முக்கியம் என்ற பாஞ்சராத்ர சாஸ்திரத்தை விளக்குவதற்காக எடுத்தது நாரதர் அவதாரம்.

புலனடக்கம் செய்து தவமியற்றுவது எப்படி என்பதை நிரூபிக்க எடுத்தது 
நர- நாராயணர்களின் அவதாரம்.
தன் தாய்க்கு நற்கதியடையும் வழிகளை உபதேசிக்க எடுத்தது 
கபில அவதாரம்.
தாய் தேவஹூதிக்கு உபதேசிக்கும் கபில முனிவர்

அத்திரி முனிவருக்கும் அனுசூயா தேவிக்கும் மகனாகத் தோன்றி, 
பிரகலாதனுக்கும், அலர்க்கனுக்கும் உபதேசிக்க எடுத்தது 
தத்தாத்ரேயர் அவதாரம்.

ஒரு தேசத்தை நன்றாக ஆளும் விதத்தை ருசி என்னும் முனிவருக்கு விளக்கிக் கூற எடுத்தது யக்ஞ அவதாரம்.
சுருதிகளின் சாரமாகிய பகவத் கீதையிலும் கண்ணனும், "அதி யஜ்ஞோ அஹம் ஏவ" [அதியக்ஞம் எனப்படுவதும் நானே --என்றான். 

ஸ்வாயம்பு மனுவின் பேரனுக்கு புத்திரனாகப் பிறந்து, தருமங்களை நிலைநாட்ட எடுத்தது ரிஷபதேவ அவதாரம்.

தவ முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கொடியவனான வேனனை அழிக்க எடுத்தது பிருது அவதாரம்.

 •   பிருது  மன்னன் அவதாரத்தில்  எல்லாத் தலங்களுக்கும் பறக்கும் விமானத்தில் சென்று வழிபட்டுவரும் சமயத்தில் கூடல் மாநகரத்தின் மீது பறக்கும் போது அஷ்டாங்க விமானத்தின் சக்தியால் விமானம் பறக்க முடியாமல் போக இறங்கி வணங்கினார் 

மனுவாகப் போகும் சத்தியவிரதனை ஓடத்திலேற்றி, ஹயக்கிரீ அசுரனை க் கொன்று வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுக்க எடுத்தது 
மச்ச அவதாரம்.

தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்துக்காக பாற்கடலைக் கடைந்தபோது, அதைத் தாங்க கடலடியில் போய் எடுத்தது கூர்ம (ஆமை) அவதாரம்.

பாற்கடலிலிருந்து அமிர்தம் வெளிவந்த போது, அதை பாத்திரத்தில் எடுத்து தேவர் களிடம் கொடுப்பதற்காக எடுத்தது தன்வந்திரி அவதாரம்.

அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு அமிர்தத்தைப் பங்கிட எடுத்தது 
மோகினி அவதாரம்.

தன் பக்தன் பிரகலாதனைத் துன்புறுத்திய இரண்ய கசிபுவைக் கொல்வதற்காக எடுத்தது நரசிம்ம அவதாரம்.

தன் பக்தனான மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனைப் பாதாள லோகத்திற்கு போகச் செய்ய எடுத்தது வாமன அவதாரம்.

ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் புதல்வனாகப் பிறந்து, 21 தலைமுறை க்ஷத்திரியர்களை அழிக்க எடுத்தது பரசுராம அவதாரம்.

வேதங்கள் மிகவும் விஸ்தாரமாய் இருந்ததால், அவற்றை நான்காக வகுத்து பரவச் செய்யும் பொருட்டும், தருமங்களை எல்லாருக்கும் உபதேசிக்கும் பொருட்டும் எடுத்தது வியாச அவதாரம்.

இராவணன், கும்பகர்ணன் மற்றும் அரக்கர்களைக் கொன்று, முனிவர்களைக் காப்பாற்றி சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக எடுத்தது ராம அவதாரம்.

கம்சன், சிசுபாலன், தந்த வக்ரன் முதலிய அரக்கர்கள் நீண்டநாள் வாழ்ந்ததனால்,அவர்களைக் கொன்று பூமி பாரத்தைக் குறைக்க எடுத்தது பலராம- ஸ்ரீகிருஷ்ணஅவதாரங்கள்.
அஹிம்சை தத்துவத்தை மறுபடியும் பூமியில் நிலைநாட்டி வேரூன்றச் செய்ய எடுத்தது புத்தர் அவதாரம்.

கலியுகத்தில் அதர்மம் மேலிட்டு தர்மம் அழியும்போது அந்த தர்மத்தை மறுபடியும் நிலைநாட்ட பகவான் எடுக்க இருப்பது கல்கி அவதாரம்.

எந்தெந்த சமயத்தில் என்னென்ன குணங்கள் குறைந்து, கெட்ட குணங்களும் அதர்ம மும் மேலிடுகின்றனவோ, அவ்வப்பொழு தெல்லாம் தோன்றி அவ்வக்குறைகளைத் தீர்த்து உலகத்தை பகவான் உய்வித்திருக்கிறார்.

இந்த அவதாரங்களில் பகவான் முழுஅம்சத்துடன் அவதரித்தது ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் நோக்கம்- நடக்கும் கலியுகத்தில் இன்று வாழும் மானுடர்களுக்கும் பிறக்கப்போகும் மானுடர்களுக்கும் நல்வழிகாட்டி தர்மத்தை உபதேசிப்பதேயாகும்!
படிமம்:தசவதாரத்தில் புத்தர்.jpg
திருமால் பெருமைக்கு நிகரேது - 
உன்றன் திருவடி நிழலுக்கு இணையேது!


பெருமானே உன்றன் திருநாமம் - 
பத்து பெயர்களில் விளங்கும் அவதாரம் 

கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் - 
தனைக் காப்பதற்கே கொண்ட அவதாரம்  - மச்ச அவதாரம்!


அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் - 
எங்கள் அச்சுதனே உன்றன் அவதாரம்  கூர்ம அவதாரம்!


பூமியைக் காத்திட ஒரு காலம் -

நீ புனைந்தது மற்றொரு அவதாரம் வராக அவதாரம்!

நாராயணா என்னும் திருநாமம் - 
நிலை நாட்டிட இன்னும் ஒரு அவதாரம் நரசிம்ம அவதாரம்!

மாபலிச் சிரம் தன்னில் கால் வைத்து - 

இந்த மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம- வாமன அவதாரம்!

தாய் தந்தை சொல்லே உயர் வேதம் - 
என்று சாற்றியதும் ஒரு அவதாரம் - பரசுராம அவதாரம்!


ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் - 
எனும் உயர்வினைக் காட்டிய அவதாரம்  - ராம அவதாரம்!


ரகு குலம் கொண்டது ஒரு ராமன் - 
பின்பு யது குலம் கண்டது பலராமன் - பலராமன்


அரசு முறை வழிநெறி காக்க - 
நீ அடைந்தது இன்னொரு அவதாரம் - கண்ணன் அவதாரம்


விதி நடந்ததென மதி முடிந்ததென வினையின் பயனே உருவாக,
நிலைமறந்தவரும், நெறியிழந்தவரும் உணரும் வண்ணம் தெளிவாக,


இன்னல் ஒழிந்து புவி காக்க - 
நீ எடுக்க வேண்டும் ஒரு அவதாரம் கல்கி அவதாரம்!

25 comments:

 1. Anaithu Avatharankalum edutha antha por padham.....
  Athuve nam saran adaiye vendiya idam.
  Very nice post Rajeswari.
  viji

  ReplyDelete
 2. ஓம் ஹரி ஓம் நமோ நாராயணாய..
  அவதாரப்பெருமையும் கூடவே அருமையான கவிதையும் அழகான படங்களும் புருஷோத்தமனை தரிசிக்க உதவியது.
  தினமும் காலையில் உங்களது பதிவுகள் அம்மா, ஒரு நல்ல தரிசனமாக காட்சித்தருகிறது.தொடர்ந்து வழங்கும் தங்களது கரங்களுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. நமக்குத்தெரிந்த 10- அவதாரங்களுடன் கூடவே நல்லதகவல்களுடன் படங்களும்சிறப்பு. நன்றி

  ReplyDelete
 4. ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே....

  ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே....

  பகவானே பகவானே... இன்றையப்பொழுது இத்தனை அற்புதமாக புலரும்னு நான் நினைக்கவே இல்லைப்பா இராஜேஸ்வரி...

  அப்பப்பா எத்தனை அவதாரங்கள்... நான் தசாவதாரம் என்று மட்டும் தான் நினைத்துக்கொண்டு இருந்தேன்....

  புத்தரும் ராமனின் அம்சம் தானா?
  நாரதரும் ராமனின் அம்சம் தானா?
  கபிலர்... ஆஹா ஆஹா மனித ரூபத்தில் இந்த உலகில் அவதரித்து மக்களுக்கு முக்தி அளித்த பரந்தாமன் காக்கும் கடவுளாக இருந்து தீயவை அழித்து நல்லவை நிலைக்க எடுத்த அத்தனை அவதாரங்களையும் கண்முன்னே கொண்டு வந்து காமிச்சிட்டீங்கப்பா....

  இருந்த இடத்தில் அத்தனை அவதாரங்களையும் கண்கொள்ளாமல் மனம் கொள்ளாமல் பெருகும் பக்தியின் பரவசத்தில் இருக்கிறேன்....

  படங்களின் அழகோ கொள்ளைக்கொள்கிறது மனதை....

  எத்தனை ஹோம்வர்க் பண்ணினீர்களோ...

  எத்தனை முயற்சி, சிரமங்கள் இத்தனை படங்களையும் கண்டுப்பிடித்து அதை நேர்த்தியாக வடிவமைத்து அதை அழகாக ஸ்லோகங்களுடன் தொகுத்து...

  ஆஹா மோகினி அவதாரம் எடுத்த பரந்தாமனின் அழகை விவரிக்க இயலவில்லை... அத்தனை சௌந்தர்யம்.....

  குரு தட்சணாமூர்த்தியும் இவர் அவதாரம் தானா...

  ஆஹா சர்வம் பரந்தாமனின் அருள் நிறைந்து எல்லாமே சடுதியில் அழகாகிவிட்டது போன்று இருக்கிறதுப்பா....

  எத்தனை அழகு... எத்தனை சௌந்தர்யம்.... எத்தனை அற்புதம்.... பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே....

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் இராஜேஸ்வரி இத்தனை தெய்வீகமான தொகுப்பை வலையுலகில் நான் உங்க தளத்தில் மட்டுமே இதுவரை கண்டு வந்துக்கொண்டு இருக்கிறேன் என்பதே உண்மை....

  தொடர்க தெய்வீக பணி....

  உங்கள் ஆயுள், ஆரோக்கியம் என்றும் நலம்பெற இறையிடம் பிரார்த்திக்கிறேன்...

  அத்தனை அவதாரங்களையும் ஒருசேர பார்த்த ஆனந்தத்தில் நான்....


  ReplyDelete
 5. You have compiled great pictures together, thanks for all the explanations.. Parashuramar avataram picture looks very powerful!

  ReplyDelete

 6. நான் எதுவும் சொல்லாதிருப்பதே நல்லது...! except that the posting and pictures are of good quality..

  ReplyDelete
 7. அருமையான பகிர்வு.

  ReplyDelete
 8. viji said...
  Anaithu Avatharankalum edutha antha por padham.....
  Athuve nam saran adaiye vendiya idam.
  Very nice post Rajeswari.
  viji ..

  அன்பு வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் இனிய நன்றிகள்...

  ReplyDelete
 9. Thava Kumaran said...
  ஓம் ஹரி ஓம் நமோ நாராயணாய..
  அவதாரப்பெருமையும் கூடவே அருமையான கவிதையும் அழகான படங்களும் புருஷோத்தமனை தரிசிக்க உதவியது.
  தினமும் காலையில் உங்களது பதிவுகள் அம்மா, ஒரு நல்ல தரிசனமாக காட்சித்தருகிறது.தொடர்ந்து வழங்கும் தங்களது கரங்களுக்கு நன்றிகள்./

  அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 10. Lakshmi said...
  நமக்குத்தெரிந்த 10- அவதாரங்களுடன் கூடவே நல்லதகவல்களுடன் படங்களும்சிறப்பு. நன்றி ..//

  சிறப்பான கருத்துரைக்கு
  இனிய நன்றிகள்..

  ReplyDelete
 11. மஞ்சுபாஷிணி said...
  ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே....

  ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே..../

  குரு தட்சணாமூர்த்தியும் இவர் அவதாரம் தானா...//

  சனகாதியர் நால்வரின் விஷ்ணு அவதாரத்திற்கு சிவபெருமானின் அவதாரமான தட்சிணாமூர்த்தி உபதேசம் அருள்கிறார் ..

  தெய்வீகமான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 12. padmaja said...
  You have compiled great pictures together, thanks for all the explanations.. Parashuramar avataram picture looks very powerful!

  சிறப்பான கருத்துரைக்கு
  இனிய நன்றிகள்.

  ReplyDelete
 13. G.M Balasubramaniam said...

  நான் எதுவும் சொல்லாதிருப்பதே நல்லது...! except that the posting and pictures are of good quality..


  சிறப்பான கருத்துரைக்கு
  இனிய நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 14. கோவை2தில்லி said...
  அருமையான பகிர்வு.

  அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்.

  ReplyDelete
 15. great compilation - is visnu had taken avatar of buddha ? this is new thing

  ReplyDelete
 16. பகவானின் பல்வேறு அவதார விளக்கமும் அதற்கான படங்களிலும் உங்களின் உழைப்பு மிளிர்கிறது! அருமை! நன்றி!

  ReplyDelete
 17. பல்வேறு அவதாரங்களின் விளக்கம் நன்று. படங்களும் அருமை.

  ReplyDelete
 18. கொலுப் படிகளில் அடுக்கும் பொழுது அவதாரங்களின் வரிசை சரியாக இருக்கிறதா என்று ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்வதுண்டு.

  உங்கள் பதிவுச் சிறப்பும், படங்களும் அற்புதம்.

  ReplyDelete
 19. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - இறைவனின் பல்வேறு அவதாரங்கள் - தெய்வீகத் திருக் கோலங்கள் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றன. உழைப்பின் பெருமை இங்கு தான் தெரிகிறது - மிளிர்கிறது. இத்தனை படஙகலாஇயும் தேடி எடுத்து - விளக்கங்களூடன் - பிழையின்றி பதிவாக்குவது எளிய செயலல்ல. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 20. அருமையான பதிவு.
  அற்புதமான படங்கள்.
  நன்றி & வாழ்த்துகள் அம்மா.

  ReplyDelete
 21. மச்சம்,

  கூர்மம்,

  வராஹம்,

  நரசிம்ஹம்,

  வாமனம்,

  பரசுராமன்,

  ஸ்ரீராமன்,

  பலராமன்,

  ஸ்ரீ கிருஷ்ணன்

  கல்கி

  ஆகிய தஸாவதாரங்களையும் தவிர,

  சனக, சனந்தன, சனத்குமார, சனத்சுஜாத (நால்வர்) அவதாரம்.

  நாரதர் அவதாரம்.

  நர-நாராயணர்களின் அவதாரம்.

  கபில அவதாரம்.

  தத்தாத்ரேயர் அவதாரம்.

  யக்ஞ அவதாரம்.

  ரிஷபதேவ அவதாரம்.

  பிருது அவதாரம்.

  தன்வந்திரி அவதாரம்.

  மோகினி அவதாரம்.

  வியாச அவதாரம்.

  புத்தர் அவதாரம்.

  என மேலும் சுமார் 12 அவதாரங்களைப்பற்றி அழகான விளக்கங்கள் கொடுத்து, அற்புதமான படங்களுடன் கொடுத்துள்ள ”அபூர்வ அவதாரங்கள்” என்ற பகிர்வுக்கு மிக்க நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்,

  ooooo

  ReplyDelete
 22. ஓ வியாசரும் கூடத் திருமால் தானா ?
  இந்த இணைப்பை அன்புடன் தந்து என்னை
  அறிய வைத்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 23. அபூர்வ அவதாரங்கள்! அழகு, அருமை, அபூர்வம்.

  ஆச்சிரியமான பல அரிய தகவல்கள். அனைத்து அவதாரங்களும் அழகாக கண் முன்னே அவதரிகின்றன.

  வாழ்த்துகள். பாராட்டுக்கள். நன்றி அம்மா.

  ReplyDelete
 24. ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்பட்ட 24 அவதாரங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன்.

  1 சனகன் 2 சனந்தன் 3 சனத் குமாரன் 4 சனத் சுஜாத 5 வராக அவதாரம் 6, நர நாராயணர் அவதாரம் 7 கபில அவதாரம் 8 தத்தாரேயர் அவதாரம் 9 யக்ஞ அவதாரம் 10 ரிஷபதேவ அவதாரம் 11 பிருது அவதாரம் 12 மச்ச அவதாரம் 13 கூர்ம அவதாரம் 14 தன்வந்திரி அவதாரம் 15 மோகினி அவதாரம் 16 நரசிம்ம அவதாரம் 17 வாமன அவதாரம் 18 பரசுராம அவதாரம் 19 வியாச அவதாரம் 20 இராம அவதாரம் 21 பலராம அவதாரம்
  22 கிருஷ்ண அவதாரம் 23 புத்தர் அவதாரம் 24 கல்கி அவதாரம்

  அவதாரம் என்றாலே அழிப்பது என்ற பொருளில்தான் எடுத்துக் கொள்ளப்படும். அந்த வகையில் திருமால் பெருமை பேசும் அவதாரங்கள் பத்து என்பதே சரி. மற்றவை திருமாலின் வெவேறு அம்சங்கள். நவ நாராயணர்கள் அவதாரம் என்பது ஒருவரா இருவரா என்று பார்க்க வேண்டும். இருவர் என்றால் ஒரு அவதாரம் எண்ணிக்கையில் அதிகமாகும்.

  கடுமையான உழைப்பு உங்களுடையது. விரிவான விளக்கமான தங்களது பதிவிற்கு நன்றி.  ReplyDelete
 25. பகவானுக்கு இத்தனை அவதாரங்கள் இருப்பதைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி அம்மா.

  ReplyDelete