Friday, December 28, 2012

மார்கழியில் மஹா உற்சவம்



ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன் 
ஆதிரை தானதில் அபயமென்றருளுவன் 
ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில் ஆதிரு 
ஆதிரை ஆலமர் ஆரணா! 

 மதிநிறைந்த நன்னாளாம மார்கழித்திங்கள் முழு நிலவு நன்னாளில் உற்சவமாகக் கொண்டாடப்படும்  திரு நாளாகத்  திருவாதிரை திகழ்கிறது.....

சிவனது முக்கண்ணிலும் ஒளிரும் ஒளியான  ரைவதம் என்னும் சக்தியின் வடிவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தார். 
பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகியோர்  அருவமாக அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்வதாக நம்பிக்கை ....

ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் சித்தர்கள்  அரூப வடிவில் வழிபாடு செய்வதாக ஐதீகம் 


திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை நாளில் அபயவரதீஸ்வரர்   வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும். 

அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர். 
பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளிலும், சிவபெருமான் உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்று. அங்கு சென்று சரணடைந்தவர்களை சிவபெருமான்  அபயம் தந்து காப்பாற்றுவார்.

திருவாதிரை நட்சத்திர  மண்டலத்தில் நுழையவே அசுரர்கள் பயப்படுவர்.  

இதனால் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர் 


ஆயுஷ் ஹோமமும், மிருத்யுஞ்ஜய ஹோமமும் திருக்கடையூருக்கு அடுத்தபடியாக அபயவரதீஸ்வரர் ஆலயத்தில் அதிக அளவில் செய்யப்படுகிறது. 

திருவாதிரை நட்சத்திர பெண்களுக்கு எந்த தோஷத்தினால் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.

திரிநேத்ர சக்தி கொண்ட தலம் தன்னை நம்பியவருக்கு அபயம் தரும் அபயவரதீஸ்வரராக  இறைவன் விளங்குகிறார். 
அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. 

அருள்மிகு அபயவரதீஸ்வரர் திருக்கோயில் 
அதிராம்பட்டினம்-614 701 
பட்டுக்கோட்டை தாலுக்கா, 


போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ 
போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ 
கங்காதர ஷங்கர கருணாகரா மாமவ பவசாகரா தாரகா 
நிர்குண பரப்ரம்மா ஸ்வரூபா கமகம பூதா பிரபஞ்ச ரஹிதா
நிஜ குஹநிஹித நிதாந்தகனந்த ஆனந்த அதிசய அக்ஷய லிங்க 
திமித திமித திமி திமிகிட கிடதோம் 
தோம் தோம் கிடதக தரிகிட கிடதோம் 
மதங்க முனிவர வந்தித ஈசா 
சர்வ திகம்பர மேச்டிதவேசா 
நித்ய நிரஞ்சன நித்ய நடேஷா 
ஈசா சபேஷா சர்வேஷா 
போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ 
போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ 
-- தயானந்த சரஸ்வதி சுவாமிகள் இயற்றிய பாடல் கேட்கத் திகட்டாத்து ..

Lord Shiva Sleeping20Shiva.gif

21 comments:

  1. போ சம்போ பாடல் வரிகள் படிக்கும் போதே மனதில் அதிர்கிறது. கானொளியில் எத்தனை முறை கண்டு கேட்டாலும் சலிக்காதது. எழுதியவர் தெரியாமலே இத்தனை நாள் லயித்திருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  2. திருவாதிரை அன்று திருவாதிரையைப் பற்றிய பதிவைப் பார்த்து இன்புற்றேன்.

    ReplyDelete
  3. வலைபக்க சுப்ரபாதமே ,இன்று எனது நட்சதிரமணா திருவாதிரைப்பற்றி இவ்வளவு அருமையாக நட்சத்திரத்தின் இன்றுதான் தெரிந்து இன்பமாய் உணர்ந்தேன்

    ReplyDelete
  4. வணக்கம் ராஜராஜேஸ்வரி மேடம்.படங்கள் நன்று.படங்களை எப்படி அசைய வைப்பது என கொஞ்சம் சொல்லாமா?ப்ளீஸ்,,,,,/

    ReplyDelete
  5. போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ மஹாராஜபுரம் சந்தானம் கணீர்குரலில்இந்த பாட்டை பலமுறை கேட்டு ரசித்திருக்கேன்.பகிர்வும் படங்களும் நல்லா இருக்கு

    ReplyDelete
  6. நல்ல பதிவு . நன்றி

    ReplyDelete
  7. அபயவரதீஸ்வரர் வழிபாடு திருக்கடையுருக்கு இணையானது என்ற தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  8. சிவ பெருமானின் உக்கிர தாண்டவ கோலம், மெல்ல பனி விலகுவதை உணர்த்துகிறது...

    ReplyDelete
  9. ஈசனே அழகு. அம்மையுடன் சேர்ந்து கட்சி கொடுக்கும் திருவாதிரை திருநாள் படங்கள் மிக அருமை. சொல்லி இருக்கும் செய்திகளும் பயனுள்ளவை. நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete

  10. நம்பிக்கை வைக்க எத்தனை சுவாரசியமான கதைகள். கதைகள் கேட்போர் எல்லாம் அதன் உட்கருத்தைப் புரிந்து கொண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும். ஆனால் நம்மில் பலரும் சக்கையையே சுவைக்கிறார்கள். வழக்கம் போல் படங்கள் அருமை.விமலனுக்கு என்ன பதில் கூறப் போகிறீர்கள்.?

    ReplyDelete
  11. திருவாதிரை ஆருத்ராதரிசன விளக்கம் அருமை.

    ருத்ரதாண்டவ சிவன் அழகான அருமையான ஓவியம். ஏனைய படங்களும் அழகு.

    பகிர்விற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  12. திமித திமித என்ற பாடலுக்குக் கீழேயுள்ள சிவன் படம் இந்தப் பாடலுக்காகவே காத்திருப்பது போலுள்ளது.

    மிகவும் உபயோகமான பஹ்டிவு.
    நன்றி.

    ராஜி

    ReplyDelete
  13. Thiruvathirai thirunalil oru arputhamana koil parrti thakval....
    Really it is new to me. Thanks Rajeswari for the post and pictures.
    viji

    ReplyDelete
  14. திருவாதிரை நட்சத்திரத்தின் அருமை பற்றி அழகான படங்களுடன் கூடிய
    நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  15. உற்சவத்தில் பங்கு கொண்டு இறை தரிசனம் பெறவைத்தமைக்கு நன்றி! லயித்தேன் பதிவு கண்டு! வாழ்த்துக்கள் ஆன்மீகச் செம்மல் சகோதரிக்கு!

    ReplyDelete
  16. நித்தமும் ஆன்மீகம்.எப்படித்தானென்று நினைப்பேன்.ஆனாலும் வெள்ளியன்று உங்கள் பக்கம் வர நினைக்கிறேன்.நன்றி ஆன்மீகத்தோழி !

    ReplyDelete
  17. சின்ன வயதில் திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில் அதிகார நந்தியில் ஸ்வாமி உலா தரிசித்த நினைவுகள் மனதில் ஓடுகின்றன உங்கள் பதிவைப் படித்த பின்.

    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  18. அன்பின் இராஜ ராஜேஸ்வரி - அருமை அருமை - பதிவு அருமை - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  19. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  20. மிகவும் பயனுள்ள விஷயங்கள்.

    வழக்கம்போல அருமையான படங்கள்.

    அசத்தலான பதிவு.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete