Tuesday, December 25, 2012

கிறிஸ்துமஸ் திருநாள் ...



Jesus Stars Light Green

வானளந்த திருக்குமரா!மனிதகுல மருத்துவனே!
தேனளந்த திருவாயில் சித்திரங்கள் தீட்டவந்தாய்!

மாணிக்கத் தொட்டிலுக்கு வாய்க்காத பெருமையெல்லாம்
ஆநிரைக் கொட்டிலுக்கு யார்கொடுத்தார் எங்கோவே!

தச்சனுக்குப் பிள்ளையென்றும் தாயொருத்தி கன்னியென்றும்
இச்சனங்கள் சொன்னாலும் இறைவனது திருக்குமரா

கண்ணதாசன்  இயற்றிய இறவாக்காவியம் ஏசு காவியத்தில் ஏசுநாதர் அவதாரம் செய்யும் நிகழ்வை அருமையான தாலாட்டுப் பாடலாய் அலங்கரிக்கிறார் ...

தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது யூத நிலத்தினிலே
சத்திய வேதம் நின்று நிலைத்தது தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது  இயேசுவின் வார்த்தையிலே!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார் என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து  தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவதும் இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே இயேசுவை நம்புவமே!"

கவியரசு கண்ணதாசன் இயற்றிய 

இயேசு காவியம் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கவிதை வடிவில் அழகாகக் கூறும்  நூல் 
Jesus animated gif
 ஏசு காவியத்தை கவிஞர் நிறைவு  செய்து  நம்பிக்கைக்கு அரண் சேர்க்கிறார்..

குளிர்காலம் நீங்குவதை சிறப்பிப்பதோடு  எதிர்வரும் வசந்தகாலத்தை வரவேற்கத் தயாராகின்றஎழுச்சியோடும்மகிழ்ச்சியோடும்,
அமர்க்களமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும்திருநாள்கிறிஸ்துமஸ்திருநாள்...

கிறிஸ்துமஸ் மரம் மணிகள், எடை குறைந்த வர்ண உருண்டைகள், நகைகள், இனிப்புகள், மலர்கள், வண்ண அலங்காரங்கள், சிறிய தேவதைகளின் 
திருஉருவங்கள் போன்றவற்றால் 
அலங்கரிக்கப்படுகின்றது. 


“ஜிங்கிள் பெல்ஸ், ஜிங்கிள் பெல்ஸ், ஜிங்கிள் ஆல் த வே”

universe glittering stars explosion graphicuniverse glittering stars explosion graphicuniverse glittering stars explosion graphic

20 comments:

  1. அன்பு நண்பர்களுக்கு கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள். அழகான படங்கள்.

    ReplyDelete
  2. மனம் கவர்ந்த படைப்பு!..அனைவர்க்கும் என் சார்பிலும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். மிக்க நன்றி சகோதரி பகிர்வுக்கு .

    ReplyDelete
  3. நீங்க ஐந்து கடவுளைபற்றிதான் நிறைய தெரிந்து வைத்துள்ளதாக நினைத்தேன் ,இந்த பதிவை பார்த்தபின்பு இதை சேவையாகவே செய்து வருகிறீர்கள் என்பது புரிகிறது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. வர்ண ஜாலங்கள் கண்ணைக் கவர்கின்றன.

    ReplyDelete
  6. கண்ணதாசனின் ஏசு காவிய வரிகளை எடுத்துக்கூறி அருமையான படங்களுடன் கிறிஸ்துமஸ் நாளில் பகிர்ந்தது பாராட்டத் தக்கது.

    ReplyDelete

  7. நீக்கமற எங்கும் நிறைந்திருப்பவன் இறைவன் என்று நம்புவோருக்கு ஏசுவும் ஒன்றுதான் கண்ணனும் ஒன்றுதான்.நம்மையும் மீறிய சக்தியை இன்று ஏசுவின் பிறந்த நாளில் எண்ணி வணங்குவோம். படங்கள் அற்புதம்.!

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. ஏசு காவியம் இவ்வளவு அழகா. நான் படித்ததில்லை அம்மா.
    வெகு நிறைவான பதிவு .இறைத்தூதன் நம் எல்லோருக்கும் நிறை மங்களங்களை அளிக்கட்டும். தேனினிமையுலும் ஏசுவின் நாமம் திவய மதுரம் ஆமே'' பள்ளிப்பாடல் காதுகளில் கேட்கிறது.

    ReplyDelete
  10. நீண்ட நாட்களாக வாசிக்க துடிக்கும் புத்தகங்களில் இயேசு காவியமும் ஒன்று.ரசிக்கும் வகையில் ஒவ்வொரு படங்களும் கவிஞரின் வரிகளும் மகிழ்ச்சியை ஊட்டுகின்றன.இந்தப்பதிவை சிறந்த இடமாக கருதி, உலகமெங்கும் வாழும் கிறிஸ்த்துவ அன்பர்களுக்கு மனமார்ந்த கிறிஸ்த்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
    நல்ல பதிவுகளை தொடருங்கள்..மிக்க நன்றி.

    ReplyDelete
  11. இயேசு காவியம் நல்ல பகிர்வு. படங்கள் யாவும் அருமை.

    நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறுஸ்துமஸ் வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. Merry Christmas!
    very nice post...

    ReplyDelete
  13. Merry Christmas!
    very nice post...

    ReplyDelete
  14. அனைவருக்கும் என் இதயங்கனிந்த இனிய நத்தார் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    அருமையான அழகான சிறப்பான பதிவு சகோதரி...
    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  15. அழகான படங்களும், அருமையான கவிதையும், கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. அன்பின் இராஜ ராஜேஸ்வரி - இனிய கிருஸ்துமஸ் திரு நாள் நல்வாழ்த்துகள் - படங்களும் ஏசு காவியக் கவிதைகளும் அருமை -

    குளிரும் பனியும் கொட்டிலிலே
    கோமான் மகன் தொட்டிலிலே !

    எப்பொழுதோ படித்த பாடல் வரிகள்.

    சட்டென் இரு வரிகள் மட்டும் நினைவிற்கு வந்தது.

    நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  17. அழகானதும் அருமையானதும் உள்ள பதிவு.மனதை தொட்டு விட்டது.கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

    ReplyDelete
  18. உங்களுடைய ஏசு காவிய படைப்பு மிக அருமையாக இருக்கிறது.
    அதுவும் வசந்தத்தை வரவேற்கும் விழா என்பது புதுமையான சிந்தனை.

    பகிர்விற்கு பாராட்டு.

    ராஜி

    ReplyDelete
  19. அருமை. அற்புதமான படங்கள்.
    ஏசு காவியம் படித்திருக்கிறேன்.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. அசத்தலான படங்களுடன் கூடிய அழகான பதிவு.

    ReplyDelete