Showing posts with label கிறிஸ்து. Show all posts
Showing posts with label கிறிஸ்து. Show all posts

Sunday, December 30, 2012

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட்ம்..




Merry Christmas animated with many colors

 ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்

 செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்லக் குருடனின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்



xmas glitter graphics, christmas comments, graphics, images for Orkut, Myspace, Facebook, friendster

  மக்களுக்கு நல்வழி காட்ட வந்த மகான் இயேசு கிறிஸ்துவின் தியாக குணமும் மன்னிக்கும் மாண்பும் பாரதியைக் கவர்ந்தன. நல்லவை எங்கு இருந்தாலும் யாரிடம் இருந்தாலும் அதைப் பாராட்டத் தயங்காத பாரதி இயேசுவை வணங்குகிறார். ஒரு கிறித்தவர் எப்படி உருகிப் பாடுவது போல் பாரதியின்  விளங்கும் பாடல்....


ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் 
எழுந்து உயிர்த்தனன் நாள்ஒரு மூன்றில் 



நாசம் இன்றி நமைநித்தம் காப்பார் 

     நம்அகந் தையை நாம்கொன்று விட்டால்!


வானம் வால் நட்சத்திரம் இட்டு மகிழ்ச்சி காட்ட, ஏஞ்சல் பண் இசைத்து வாழ்த்த, நடுங்கும் குளிர் இன்பம் பொழிய என காட்சிப் பிம்பம் செதுக்கிய அற்புத திருவிழா கிறிஸ்துமஸ். உலகின் மிகப் பரவலான கொண்டாட்டம்


கிறிஸ்து பிறப்புவிழா கிறிஸ்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். 

பெரும்பாலான கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது .

மாட்டுக் குடிலில் வைக்கோல் படுக்கையில் அன்பான மரியன்னைக்கு கிடைத்த பரிசுதான் யேசு எனும் இறைமகன்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை வண்ணமயமாக, கேளிக்கைகள், உறவினர், நண்பர்களுடனும் விருந்துகளுடனும் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்..
Santa playing with an elf. animated
ஒளிரும் நட்சத்திரங்களை வீட்டின் முன்பு தொங்கவிட்டும், பல வகை வண்ண விளக்குகளால் வீடுகள், கடைகள், அலுவலகங்களை அலங்கரித்தும் பிரியமானவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பியும், பரிசு வழங்கியும் சுவை மிகுந்த கேக்குகள், பலகாரங்கள் வழங்கியும் அறுசுவை உணவுகளை உண்டும் ஆனந்தமாகக் கொண்டாடுவார்கள்.
Christmas comments, orkut scraps, glitter graphics, images for Orkut, Myspace, Facebook, friendster, tagged
இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள் உதயத்தோடு ஒப்பிட்டு


ஓ, எவ்வளவு அதிசயச் செயல் சூரியன் பிறந்த நாளில்…கிறிஸ்துவும் பிறந்தது”என்பார்கள்..


டிசம்பர் 25 குளிர்கால சம இரவு பகல் நாள்..


அன்பின் திருவுருவம், கருணையின் வடிவம், தேவகுமாரன் இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாள் ஆகும். 

இயேசுபிரான் “அன்பே வாழ்வின் நெறி” என்று வாழ்ந்து காட்டிய திருமகன், இன்னா செய்தவர்கள் நாணும்படி அவர்களுக்கு நன்னயம் செய்த பெருமகன். 

அவர் அன்பை போதித்தார். 
அந்த போதனைகளுக்கு தனது வாழ்க்கையையே முன்னுதாரணமாக ஆக்கினார். 

அன்பு வார்த்தையாலும், அன்பு வாழ்க்கையாலும் உலகை ஆட்கொண்ட இரக்கத்தின் வடிவமாம் இயேசுபிரான் பிறந்த நன்னாளாம்  இனிய திருநாளில் உலகமெங்கும் அன்பு தவழவும், அமைதி நிலவவும்,சத்தியம் நிலைக்கவும், சகோதரத்துவம் தழைக்கவும் பிரார்த்திப்போம்..


அன்பின் ஒளியாய் கருணையின் வடிவாய் அவதரித்த இயேசுபிரான் பிறரின் பாவங்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர். 

தன்னை சிலுவையில் அறைந்தவர்களைக் கூட மன்னிக்கும்படி பரமபிதாவிடம் மன்றாடியவர். 

மன்னிப்பதன் மூலம் மன்னிக்கிறவர் மட்டுமல்லாமல், மன்னிக்கப்படுகிறவரும் உயருகிறார் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் இயேசுபிரான் அவர்கள் அவதரித்த  கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

ஒவ்வொரு குடும்பமும் தன் உறவுகளோடும் நட்புகளோடும், நேசங்களோடும் பகிர்ந்து கொள்கிற இதுபோன்ற விழாக்கள் ஒருநாட்டின் பண்பாட்டையும் கலாச்சார உறவுகளையும் வெற்றிடமின்றி நிரப்பிட உதவுகிறது ..

இயேசு கிறிஸ்து ஏழைகளிடம் இயலாதவர்களிடம் கருணை கொண்டவர். 

அன்பு, மனிதநேயத்தை உலகுக்குஉணர்த்தி தானும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர். 

அன்பும் விட்டுக் கொடுக்கும் தன்மையும் பெருமைக்குரியது. 
அது நன்மை மட்டுமே செய்யும், பொறாமைப்படாது, தற்புகழ்ச்சி கொள்ளாது. ஏசுகிறிஸ்து அன்பே உருவானவர், நிபந்தனை இல்லாத அன்பு தான் அவருக்கு ஆயுதமாய், கேடயமாய், அனைத்துமாய் இருந்தது. 

அப்படி, அன்பால் மக்களின் வாழ்வை நெறியாக்க இறைவனின் மகனாய் இயேசு கிறிஸ்து மண்ணில் உதித்த இந்த புனித நாளே கிறிஸ்துமஸ் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 


மக்களின் வாழ்க்கையின் பின்னிப் பிணைந்த ஒரு அம்சமாக   கிறிஸ்துமஸ் பண்டிகையில் கிறிஸ்துமஸ் மரம் மணிகள், எடை குறைந்த வர்ண உருண்டைகள், நகைகள், இனிப்புகள், மலர்கள், வண்ண அலங்காரங்கள், சிறிய தேவதைகளின் திரு உருவங்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப் படுகின்றது. 
கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியில் ஒரு உலோகத்தால்/ரப்பரால் ஆன ஒரு நட்சத்திரம் அல்லது ஒரு தேவதையின் உருவம் வைக்கப்படும். இது தேவ குமாரனாம் இயேசு பெத்லகேமில் பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தை - தேவதைகளை 'சம்மனசுகள்'- நினைவூட்டுவதற்கான சின்னமாகும்.
உலகம் முழுவதும் குளிர்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் போது ஆஸ்திரேலியாவில் மட்டும் உச்ச வெப்பகாலமாக இருக்கிறது ...

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கிறிஸ்மஸ் தாத்தா போன்று வேடம் அணிந்து கலந்துகொண்டனர்.

தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் ஓட்டபந்தயத்தில் பங்கேற்றனர்.

கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடம் அணிந்த பலர் நீரில் சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினர்.


 இந்த ஆக்கத்தை வெளியிட்ட வல்லமை மின் இதழுக்கு நன்றி ..
http://www.vallamai.com/literature/articles/30004/
வணக்கம். தங்களுடைய சிறிஸ்மஸ் தின சிறப்பு படைப்பை நம் வல்லமையில் பிரசுரித்திருக்கிறோம். நன்றியும்,  வாழ்த்துக்களும்.

Wednesday, December 26, 2012

வசீகரிக்கும் மீட்பர் கிறிஸ்து சிலை





Christ the Redeemer – High Resolution View of Brazil's Iconic Statue on Corcovado Mountain in Rio de Janeiro

உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் 
துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்"

என்று போதித்த  சுயநலமற்ற அன்பின் சுய உருவம் இயேசு.

நல்ல விதைகள் எப்போதுமே பயன் தராமல் போவதில்லை
நிரந்தர மீட்பைத் மக்களுக்குத் தரவே மீட்பரின் உயிர்ப்பு வரமானது.

மண்ணில் விழுந்து
மனதில் முளைக்கும் விதை.

கேட்கச் செவியுள்ளவன் 
கேட்கட்டும்.


புதிய உலக அதிசயமாகக்கொண்டாடப்படும் பிரம்மாண்டமான இயேசு சிலை பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனீரே (Rio de Janeiro) என்னுமிடத்தில் அமைந்துள்ளது..

வசீகரிக்கும் பிரம்மாண்டமான சிலையின் உயரம் 130 அடி...இயேசு சிலையின் சிறப்பம்சமே அது ஒரு மலையின் உச்சியில் இருக்கிறது என்பது தான்.

வானத்திற்கும் பூமிக்கும் இடையே கம்பீரமாய் நிற்கும் இந்தச் சிலை தரையிலிருந்து 2296 அடி உயரத்தில் கொர்கோவாடோ (Corcovado) மலையில் 1931ம் ஆண்டு கட்டப்பட்டது.. 

எட்டு மீட்டர் உயரமுள்ள பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையில் இரண்டு கைகளின் விரல்களுக்கும் இடையே உள்ள தூரம் 28 மீட்டர்கள் !

சிலையின் அடியில் சுமார் நூற்று ஐம்பது பேர் அமரக்கூடிய வகையில் ஒரு ஆலயமும் அமைந்துள்ளது. 


பெட்ரோ மரியா பாஸ் எனும் பாதிரியார் இந்த மலையின் அழகில் சொக்கிப் போய் இந்த மலையில் ஒரு மிகப்பெரிய நினைவுச் சின்னம் உருவாக்க எண்ணிய சிந்தனையே விதையாக அமைந்தது ..

ரியோ டி ஜெனீரோ கத்தோலிக்க மறைமாவட்டம் சார்பில் இயேசுவின் சிலை ஒன்றை கலை நயத்துடனும், பொருளுடனும், கற்பனை வளத்துடனும் நிறுவும் கனவு நனவானது ...

சிலுவை வடிவிலான இயேசுவின் சிலை கான்கிரீட் கொண்டு  கட்டி சிலையின் வெளிப்பாகம் காலநிலை மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் விதமாக மார்பிள் கொண்டு வடிவமைக்கலாம் என தீர்மாணிக்கப்பட்டு பிரஞ்ச் சிற்பி பால் லாண்டோஸ்கி  கை வண்னத்தில் எழிலாக உருவாக்கம் கொண்டது ...

சிலை பல பாகங்களாகச் செய்யப்பட்டு மலையுச்சிக்கு ரயில்வே பாதை மூலம் கொண்டு சென்று ஒன்று சேர்க்கப்பட்டு பணி நிறைவுற்றது.
1931 அக்டோபர் 12 சிலை திறப்பு விழா கொண்டாடப்பட்டது ...
அதன் பின் காலமாற்றத்துக்கு ஏற்ப இடமும் எஸ்கலேட்டர்  வசதிகளும் நவீன மயமாக்கப்பட்டன.

பத்து கோடிக்கும் அதிகமான பேர் கலந்து கொண்ட சுவிட்சர்லாந்திலுள்ள நியூ ஓப்பன் வேர்ல்ட் கார்ப்பரேஷன் எனும் அமைப்பினால் ஜூலை 7, 2007ம் ஆண்டு போர்ச்சுக்கல்லில் அறிவிக்கப்பட்ட வாக்கெடுப்பில் உலக அதிசயம் எனும் சிறப்பைப் பிடித்திருக்கிறது  இயேசு சிலை



Christ the Redeemer was struck by lightning. 



Tuesday, December 25, 2012

கிறிஸ்துமஸ் திருநாள் ...



Jesus Stars Light Green

வானளந்த திருக்குமரா!மனிதகுல மருத்துவனே!
தேனளந்த திருவாயில் சித்திரங்கள் தீட்டவந்தாய்!

மாணிக்கத் தொட்டிலுக்கு வாய்க்காத பெருமையெல்லாம்
ஆநிரைக் கொட்டிலுக்கு யார்கொடுத்தார் எங்கோவே!

தச்சனுக்குப் பிள்ளையென்றும் தாயொருத்தி கன்னியென்றும்
இச்சனங்கள் சொன்னாலும் இறைவனது திருக்குமரா

கண்ணதாசன்  இயற்றிய இறவாக்காவியம் ஏசு காவியத்தில் ஏசுநாதர் அவதாரம் செய்யும் நிகழ்வை அருமையான தாலாட்டுப் பாடலாய் அலங்கரிக்கிறார் ...

தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது யூத நிலத்தினிலே
சத்திய வேதம் நின்று நிலைத்தது தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது  இயேசுவின் வார்த்தையிலே!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார் என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து  தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவதும் இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே இயேசுவை நம்புவமே!"

கவியரசு கண்ணதாசன் இயற்றிய 

இயேசு காவியம் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கவிதை வடிவில் அழகாகக் கூறும்  நூல் 
Jesus animated gif
 ஏசு காவியத்தை கவிஞர் நிறைவு  செய்து  நம்பிக்கைக்கு அரண் சேர்க்கிறார்..

குளிர்காலம் நீங்குவதை சிறப்பிப்பதோடு  எதிர்வரும் வசந்தகாலத்தை வரவேற்கத் தயாராகின்றஎழுச்சியோடும்மகிழ்ச்சியோடும்,
அமர்க்களமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும்திருநாள்கிறிஸ்துமஸ்திருநாள்...

கிறிஸ்துமஸ் மரம் மணிகள், எடை குறைந்த வர்ண உருண்டைகள், நகைகள், இனிப்புகள், மலர்கள், வண்ண அலங்காரங்கள், சிறிய தேவதைகளின் 
திருஉருவங்கள் போன்றவற்றால் 
அலங்கரிக்கப்படுகின்றது. 


“ஜிங்கிள் பெல்ஸ், ஜிங்கிள் பெல்ஸ், ஜிங்கிள் ஆல் த வே”

universe glittering stars explosion graphicuniverse glittering stars explosion graphicuniverse glittering stars explosion graphic