
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன் துளி கசிந்தது எந்தன் ராகத்தில்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் புத்தாண்டு பிறந்து செய்த மாயம் ...
நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்.
பொங்குக புத்தாண்டே ..!
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்.
வருக புத்தாண்டே ..!
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...!!!
வெற்றி நம்மை தேடி வரும் நன்னாள் இது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாள் இது
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ..!
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
விளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
ஆனந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
காலமும் கடலலையும் யாருக்காவும் காத்திருக்காது ..
காலடிச்சுவடுகள் கூட வராது ...
காலம் ஒரு போதும் நிற்காது கடந்து செல்லும் நதி
“ஒரே நதியில் இருமுறை குளிக்க இயலாது”

