Friday, June 5, 2015

காரண விநாயகர்



கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

 காரணவிநாயகர் கோயில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் ஏதோ காரணத்தால் விநாயகர் அமர்ந்த காரணத்தால் இவரை காரண விநாயகர் என்றே அழைக்கின்றனர்.

விவசாயிகள், விவசாயம் செழிக்க நந்தியுடன் இணைந்த விநாயகரைத் தரிசித்து செல்கின்றனர். புது வாகனங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது.

 பசு, காளைகளுடன் விவசாயப் பணிகளை நடத்தி வந்த மக்கள் கால்நடைகளின் விருத்திக்காகவும், நோயற்ற வாழ்வுக்காகவும் சிவனின் வாகனமான நந்தியை விநாயகரின் அருகில் வைத்தனர். கருவறையிலேயே விநாயகர் அருகில் நந்தி இருப்பது விசேஷ அம்சம்.விநாயகர் கோயில் அமைக்க விரும்பி ஒரு சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வந்தபோது வண்டியின் அச்சு முறியவே சிலையை இறக்கிவிட்டு, பழுது பார்த்தனர். 

மீண்டும் வண்டியில் சிலையைத் தூக்கி வைக்க முயன்ற போது அவர்களால் அசைக்கவே முடியவில்லை. அங்கேயே சிலையை வைத்து சிறு கோயிலும் கட்டினர்..

ஒருமுறை ஆங்கிலேயர்கள் அவ் வழியே ரோடு அமைப்பதற்காக கோயிலை அகற்றும்படி மக்களிடம் கூறினர். மக்கள் மறுக்கவே, தாங்களே கோயிலை அகற்ற ஏற்பாடு செய்தனர். 

அன்று இரவில் ஒரு ஆங்கில அதிகாரியின் கனவில் ஏராளாமான யானைகள் அவரை விரட்டுவது போல் கனவு வந்தது. இதனால் மனம் மாறிய அந்த அதிகாரி, கோயில் இருந்த இடத்தில் மட்டும் வளைவாக ரோடு அமைக்க ஏற்பாடு செய்தார். இப்போதும் இவ்விடத்தில் ரோடு வளைவாக இருப்பது  காணலாம் .. 


ஊட்டி போன்ற மலைவாசஸ்தலத்துக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள காரணவிநாயகர் ஆலயத்தில் வாகனத்தை நிறுத்தி ஆலயத்துக்குள் சென்று வணங்கி வாகனத்துக்கு சற்று ஓய்வு கொடுத்தபின்பே மலைப்பாதையில் வாகனத்தை செலுத்துவது எப்போதும் வழக்கமாக கொண்டிருக்கிறோம்..

ஒரு முறை  இந்த வழியில் பயணம் செய்து மலைப்பாதையில் சென்றபோது காரின் டயர் பஞ்சராகிவிட்டது .. அருகில் இருந்த ஒர்க்‌ஷாப்பில் கணவர் பஞ்சர் ஒட்டிக்கொண்டிருப்பதை மேற்பார்வையிட்டு உதவிக்கொண்டிருந்தார்..

நான் குழந்தைகளுடன் அருகில் இருந்த பாறைமீது அமர்ந்து இருந்தேன் .. அங்கிருக்கும் மின்மின்ப்பூச்சிகளைப்பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மகன்கள் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள்..

அந்த ஆளரவமற்ற கல்லட்டி மலைச்சாலையில் பறை ஒலி முழக்கிக்கொண்டு ஆதிவாசிகள் ஊர்வலம் ஒன்று பொன்னியின் செல்வன் கதையில் படித்த மாதிரி சுளுந்துகளையும் தீப்பந்தங்களையும் கைகளில் பிடித்தவாறு வந்த கூட்டம் .வட்டமாக நின்று நடுவில் தீப்பந்தகளை சுற்றி நடனமாடினார்கள்.. வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தோம்..
சற்று நேரத்தில் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்..
ஒர்க்‌ஷாப்காரரை விசாரித்தோம் . சுற்றியுள்ள மலைஜாதி மக்கள் திருமணச்சடங்கு என்று தெரிவித்தார்கள்..இந்தக்கண்கொள்ளாக்காட்சிகளைக் காணத்தான் வழிதவறி வந்து டயர் பஞ்சராகி நின்றதோ..! 
[Gal1]

 இப்பகுதியில் பேசமுடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தவர்களின் . ஊனத்தின் காரணமாக இவர்களால் இணைந்து தொழில் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. 

ஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக இருப்பவர் தவறாகப்புரிந்து கொண்டு களை பறிக்க சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான்.

ஒரு முறை சகோதரர்கள் கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருந்தனர். 

தண்ணீர் வற்றிப்போனதால், கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. 

உள்ளே கவனித்த போது, யானை முக கடவுள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்த சிலையை வெளியே எடுக்க ஊர் மக்கள் கடும் முயற்சி செய்தனர். முடியவில்லை. 

எனவே கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே பல்லாயிரம் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். அந்த இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. எனவே அவ்வூருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. 

பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகரைச்சுற்றி சன்னதி எழுப்பினர். நீண்ட காலத்திற்கு பின் தற்போதுள்ள கோயில் உருவானது.

விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று
[Gal1]
காரணமுருகன், ஆஞ்சநேயர் சன்னதிகள் உண்டு..

[Gal1]


[Gal1]



[Gal1]






37 comments:

  1. காணிப்பாக்கம் விநாயகர் பற்றி சிறப்புகளை அறிந்தேன்...

    மீண்டும் வலையில் கண்டதில் மிக்க மகிழ்ச்சி அம்மா... தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் ஆரம்பிக்கும் பதிவை விநாயகர் தரிசனத்துடன் ஆரம்பிப்பது பொருத்தம்தான். நலம்தானே மேடம்?

    ReplyDelete
  3. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (05/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/5.html#comment-form
    திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
    வலைத்தளம்: மணிராஜ்

    http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_05.html
    சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்-10http://jaghamani.blogspot.com/2011/03/blog-post_21.html

    மிடுக்காய் கடுக்காய்-11

    http://jaghamani.blogspot.com/2012/02/1.html

    மலர்களே மலர்களே-12

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    France.

    ReplyDelete
  4. விநாயகர்களில் மட்டுமே இவ்வாறாக வித்தியாசமான பெயர்களோடு இருக்கிறார்கள் என நினைக்கிறேன். இக்கோயில் சென்றதில்லை.அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  5. வலைச்சரத்தில் கண்டேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. உங்கள் வருக்கைக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  7. வணக்கம்..
    முழுமுதற்பொருளின் புகழ் பாடும் இனிய பதிவு..
    இன்னும் பல பதிவுகள் தந்திட நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  8. Vanakam ariya thagaval vaalthukal. suaiyabu vinayagar arumai.

    ReplyDelete
  9. காரண விநாயகரை தரிசிக்க தந்தமைக்கு நன்றி.
    - கில்லர்ஜி

    ReplyDelete
  10. மீண்டும் வலைப்பதிவு செய்ய வந்ததற்கு பாராட்டுக்கள். உங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொண்டு எழுதுவதை பொழுது போக்காக வைத்துக் கொள்ளுங்கள். சுவர் இருந்தால் தான் சித்திரம். உங்களுக்குத் தெரியாதது இல்லை.
    உங்கள் உடல் ஆரோக்கியம் காக்கட்டும் காரண விநாயகர்.

    ReplyDelete
  11. இறையறுள் என்ற காரணத்தால் இன்று காரண விநாயகர் பற்றி அறிய வாய்ப்புக் கிடைத்தது

    ReplyDelete
  12. கிளைக்கதைகள் உங்க பதிவுகளில் சுவாரசியம்.
    நலமா?

    ReplyDelete
  13. ஒரு இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவைக் காண்பதில் மகிழ்ச்சி. நலமோடு வாழ்க.

    ReplyDelete
  14. நல்வரவேற்பும் இனிய வாழ்த்துக்களும் உங்களைத்தொடரட்டும் ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  15. வணக்கம்
    அம்மா
    விளக்கமும் படமும் நன்று பகிர்வுக்கு நன்றி
    நீண்ட நாட்களின் பின் சந்திப்பது மகிழ்ச்சி... அம்மா...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. தகவல்களுடன் பகிர்வு அருமை.

    நீண்ட இடைவெளிக்குப் பின் பதிவு. மகிழ்ச்சி. தொடருங்கள். வாழ்த்துகள்!

    ReplyDelete
  17. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (06/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/6.html#comment-form
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  18. விநாயகர் அருளால் நீண்ட இடைவேளைக்குப் பின் வரும் பதிவால் மகிழ்வு. நலம் தானே தோழி...!

    ReplyDelete
  19. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (07/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு:
    http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  20. நானும் இவ்ழியே போகும்போது இந்த விநாயகரை வழிபட்டுவிட்டுப் போவது வழக்கம். இப்போது அந்த வழக்கம் விடுபட்டுப் போயிற்று.

    ReplyDelete

  21. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (10/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு:
    http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  22. அழகான படங்கள் அழகான விளக்கவுரைகளும்....
    தங்களது தளத்தில் இணைந்து கொண்ட 800 வது ந(ண்)பர் நான்
    - கில்லர்ஜி

    ReplyDelete
  23. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (12/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு:
    http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  24. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (13/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு:
    http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  25. அன்புடையீர்,
    வணக்கம்.
    தங்களின் வலைப்பதிவுகளில் சில,
    இன்று (14/06/2015), அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது
    அவரது வலை தளத்தில்: http://gopu1949.blogspot.in/
    என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  26. பழங்குடி திருமண விழவை சுருங்கக் கூறிய விதம் அருமை.

    ReplyDelete
  27. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (15/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு: http://gopu1949.blogspot.in/


    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  28. Anbulla Amma,

    Neendanaatkalukku piragu ungalai pathivai padithathil migavum magizhchi adaigiren.

    Mrs. Nandhini Muruganandam

    ReplyDelete
  29. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (17/06/2015)
    தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  30. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (19/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  31. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (22/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  32. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (23/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  33. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (24/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  34. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (26/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  35. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (27/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  36. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (28/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  37. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (30/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete