Wednesday, July 29, 2015

அகிலம் காக்கும் அன்னையின் அருந்தவம்












ஸூலம் சக்ரம் பாஞ்சஜன்யம் கபாலம் தததம் கரை: 
ஸ்வஸ்வபூஷார்த்த நீலார்ததேஹம் ஹரிஹரம் பஜே.                 

 ஈசனும் திருமாலும் ஒருவராய் அமைந்த அற்புத வடிவினரான சங்கர நாராயணரே நமஸ்காரம். சூலம், சக்கரம், பாஞ்சஜன்யம் என்ற  சங்கு, கபாலம் ஆகிய சிவ-விஷ்ணு அம்சங்களை ஒருங்கே தாங்கி நிற்கும் சங்கரநாராயணரே நமஸ்காரம். 

சிவனும் விஷ்ணுவும் ஒரு சக்தியே  என்பதை இந்தத் திருவடிவத்தால் விளக்கும் சங்கர நாரயணரே நமஸ்காரம்.  இந்த ஸ்லோகத்தை ஜபித்தால் பரமேஸ்வரன்,  திருமால் இருவரின் திருவருளையும் பெற்றலாம்.  

அகிலம் ஆளும் உமாதேவியார் சிவபெருமானிடத்தில், ஹரியும் சிவனும் ஒன்று என உணர்த்தும்விதமான திருக்கோலத்தைக் காட்டவேண்டுமென வேண்டிக்கொண்டாள். 
"பொதிகை மலையின் பக்கத்தில் புன்னைவனத்தில் தவமிருந்தால்  ஆசை நிறைவேறும்' என சிவன் பார்வதியிடம் கூறினார். 
அதுபோலவே பார்வதி சுழல் நடுவே ஒற்றைக் காலில் ஊசிமுனையில் நின்று தவம்புரிந்ததுதான் ஆடித்தபசு ஆகும். இது ஆடிப் பௌர்ணமியன்று நடந்தது.
தேவியின் தவத்தைக் கண்டு கருணைகொண்டு, அன்று உமாதேவிக்கு இடப்பாகம் தந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனதுபோல், இன்று திருமாலுக்கு இடப்பாகம் தந்து சங்கரநாராயணராக காட்சிகொடுத்தார்.
ஆடிப் பௌர்ணமி அன்று காலை 9.00 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் விசேஷ ஆராதனைகள் நடைபெறும். 

பகல் 12 மணியளவில் கோமதியம்மன் தங்கச்சப்பரத்தில் புறப்பட்டு வீதியுலா வந்து, தெற்கு ரத வீதியிலுள்ள தபசு மண்டபத்திற்கு எழுந்தருள்வாள். 
மாலை 4.00 மணிக்கு கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் சிவன் சங்கரநாராயணராக அலங்கரிக்கப்பட்டு, காட்சி மண்டபம் வந்துசேர்வார். அங்கிருந்து காட்சிப் பந்தலுக்கு போவார்.
தபசு மண்டபத்தில் இருந்து அம்பாள் புறப்பட்டு காட்சிப் பந்தல் வந்தவுடன் பட்டு, பரிவட்டம், மாலை மரியாதை நடைபெறும். 
அம்பாள் சுவாமியை மூன்று முறை வலம்வருவாள். சிவன் அம்பிகைக்கு 6.15 மணிக்கு சங்கர நாராயணராக காட்சிதருவார். இது சைவ- வைணவ ஒற்றுமையைக் குறிக்கும் காட்சி. கண்டுமகிழ்ந்த அம்மை, தபசு மண்டபம் அடைவாள். பின் சுவாமி ஆலயத்திற்குச் செல்வார்.
இரவு சுவாமி சங்கரலிங்கராக ஆலயத்தினின்று புறப்பட்டு யானைவாகனத்தில் வீதியுலாவாக வந்து காட்சிப் பந்தல் அடைவார். அப்போது இரவு 12.00 மணியாகிவிடும். அம்பிகை சுவாமி அருகே வந்து காட்சிப் பந்தலில் மகிழ்வுடன் திருக்கண்மாலை மாற்றிக்கொள்வாள்.

அதன்பிறகு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். விழாக்காட்சிகாண திருநெல்வேலியே திரண்டுவரும்.
சங்கரநாராயணர்- கோமதியம்மன் முன் உள்ள ஸ்ரீசக்கரம் அருகே மாவிளக்கேற்றி வைத்து சக்கரத்தின்மேலமர்ந்து தவம்செய்தால் பிணிகள் அனைத்தும் நீங்கிடும் சக்தி மிக்கது..

5 comments:

  1. அன்னையின் தவம் பற்றி அரிய செய்திகள் அறிந்தேன்.நன்றி.

    ReplyDelete
  2. ஒவ்வொரு நிகழ்வும் படங்களோடு... அருமை அம்மா... நன்றி...

    ReplyDelete
  3. ஸ்ரீசங்கர நாராயணர் பற்றியும் அன்னை கோமதியாளைப் பற்றியும் அழகிய படங்களுடன் - இனிய பதிவு!..

    ReplyDelete
  4. படங்களுடன் சிறந்த பக்திப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  5. ஆடித்தபசு பற்றிய அருமையான தகவல்கள்! நன்றி!

    ReplyDelete