Tuesday, July 3, 2012

நிஷாகந்தி- பூப்பூக்கும் ஓசை


Trippy Flower GIF by ~pessoadapaz on deviantARTTrippy Flower GIF by ~pessoadapaz on deviantARTTrippy Flower GIF by ~pessoadapaz on deviantART




மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே!
பலர் போற்றிப் பாராட்டும் குணம் வேண்டும் தாயே!
வரம் தரும் அன்னையே! வணங்கினோம் உன்னையே…

ஒரு நோயும் தீண்டாமல் அணைபோடு தாயே!
நதி காய நேராமல் நீருற்று தாயே! நல் நிலம் பார்த்து தாயே!

எளியோர்கள் மகிழ்வாக்க வழிகாட்டு தாயே!
வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே! என் வளமான தாயே!

பசி தாகம் காணாமல் பயிராக்கு தாயே!
ரசிப்போர்கள் செவி தேடி இசையூட்டு தாயே!
இசைப் பாட்டை என்றென்றும் இனிப்பாக்கு தாயே!

புகழ் செல்வம் நலம் கல்வி குறைவின்றி வாழ
புவி மீது இறைஞானம் எமை என்றும் ஆள ஓர் குறையாமல் வாழ

அருளோடு பொருள் பேத அறிவோடு ஞானம்
தெளிவோடு தினம் காணும் நிலை வேண்டும் வேண்டும்
அது திரளாக வேண்டும் பல வீடு பல நாடு பல தேசம் 
என்றுஉணராமல் வாழ்வோரை ஒன்றாக்கு தாயே!

உறவோடு மகிழ்வோடு எனை மாற்று தாயே!
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே!
வரம் தரும் அன்னையே! வணங்கினோம் உன்னையே
Trippy Flower GIF by ~pessoadapaz on deviantARTTrippy Flower GIF by ~pessoadapaz on deviantART
பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை

சிட் சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி 
சிறகுலர்த்தும் ஓசை சங்கீதம்

கரைக்கொண்ட பாறைமேல் கடல் பொங்க அலைவந்து 
கைத்தட்டும் ஓசை சங்கீதம்

காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை சிருங்கார சங்கீதம்

முத்தாடும் நீரின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும்
தவளைகள் ஓசை சங்கீதம்

சித்ரா பௌர்ணமியை ஒட்டி பத்துப் பூக்கள் பூத்து சந்தோஷம் கொண்டாடிய எங்கள் இல்ல நிஷாகந்திப்பூக்கள் ஆனி பௌர்ணமியையும் சிறப்பிக்க பதினைந்து பூக்கள் வரை பூத்து சங்கீதம் இசைத்து ஆனந்தப்படுத்தின.செடியை எனக்குப் பரிசளித்த மகன்களின் வருகையை மலர்ந்து கொண்டாடி நடனமாடிக் களித்தன ...

http://jaghamani.blogspot.in/2011/05/blog-post_12.html
 நிஷாகந்திப்பூ

முதலில் மலர்ந்து மணம் பரப்பிய மூன்று பூக்களையும் 
குடும்பத்தோடு கண்டு களித்து வீடியோ படமும் எடுத்தோம்..  
அடுத்த நாள் மலர்ந்த மலர்களையும்  படம் எடுத்தோம் ..!

நாகலிங்கப்பூக்களின் நடுவில் சிவ லிங்க தரிசனம் காண்பது போல நிஷாகந்திப்பூக்களின் நடுவே மஹாவிஷ்ணு ஆயிரம் தலைகளைகளைக் கொண்ட ஆதிசேஷனின் மேல் அறிதுயில் கொள்ளும் திருமாலின்
ஆனந்த சயனத் தரிசனம் காணக் கிடைப்பதால் 
அனந்த சயனப் பூ என அழைக்கப்படுகிறது..

ஊட்டி தாவரவியல் பூங்காவில், இரவில் மட்டுமே பூக்கும்
 சிவப்பு நிற நிஷாகந்தி மலர்கள் பூத்துள்ளன.

இரவிலும் மின்னிடும் நிஷாகந்தி மலர்.கள் வெள்ளை நிறம், 
மஞ்சள் நிறத்தில் மட்டுமே காணப்படும்.

சிவப்பு நிற பூக்கள் குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் மட்டுமே மலரும். "கேக்டை' தாவர குடும்பத்தை சார்ந்த "எப்பி-பிள்ளம்' என்பது  தாவரவியல் பெயர்...

ஜப்பானியர் இந்த மலரை "வளம் கொழிக்கும்' மலராக நம்புவதால்,
 வீடுகளில் அதிகளவில் வளர்க்கின்றனர்.

சில நம்பிக்கைகளின் அடிப்படையில் வீடுகள்; ஓட்டல்கள் 
ஆகியவற்றில் வளர்க்கிறார்கள்..

இரவில் மட்டுமே பூ மலர்வதால், நைட் குயின்' என அழைக்கப்படுகிறது..
இனிய மணம் வீசுகிறது..

நிலாவின்றே நாட்டிலே நிஷாகந்தி பூத்தல்லோ 

மானச மைனே வரூ.. மதுரம் நுள்ளி தரூ..



 Bud of Nishagandhi
The flower can be seen only at night.Its the most beautiful flower in my house

Queen of the Night
Dutchman's Pipe
Night-blooming Cereus
Wijaya Kusuma (Indonesian)
Nishagandhi (Hindi, India)
Gul-e-Bakavali (Urdu)
Kadupul (SriLanka)
Profusion of blooms in an hanging potted plant.
Epiphyllum oxypetalum
Keefers_Flowers2034.gif Animated FlowersKeefers_Flowers2034.gif Animated Flowers
வண்ணம் கொண்ட வெண்ணிலவு வானம் விட்டு வந்ததோ !
வண்ண வண்ன மலர்கள் எண்ணம் நிறைய மலரவே!






















Epiphyllum - King Midas

Nice Online Rose Bouquet Scrap Code Comment | Festival E-Greetings ...

Monday, July 2, 2012

அபிஷேகப் பிரியரின் ஆனந்த கூத்து !




"ஆனந்தம் ஆடரங்கு, ஆனந்தம் அகில சராசரம், ஆனந்தம் ஆனந்த கூத்து'' என இறைவன் ஆடிய தாண்டவத்தை திருமூலர் போற்றுகின்றார்.

ஆடவல்லானின் திருத்தாண்டவத்தைக்காண கண் கோடி வேண்டும். பேரழகியாம் அன்னையும் பேரழகனாம் அப்பனும் குழைந்தெடுத்த திருவுருவாய்த் திகழும் நடராசர் உருவத்தை முழுமையாக அனுபவிக்க கண்கள் கோடி வேண்டுமே !!

தாண்டவத் திருவுருவத்துக்கு ஈடு எதனையும் ஒப்பிட்டு பேசமுடியாது என்பது உண்மை.

நமக்கு நல்வாழ்வு அளிக்கும் இறைவனை திருக்கோயில்களுக்கு சென்று . இளநீர், தேன், பால் போன்ற பொருட்களைக் கொண்டு உள்ளம் குளிர அபிஷேகம் செய்து மகிழ்ச்சி அடைகிறோம்.

 நதியோ, அருவியோ, ஓடையோ அனைத்தும் இறுதியாகக் கடலில் கலப்பது போன்று அனைத்து உயிர்களும் பரமனை அணுகுவதே அபிஷேக வழிபாட்டின் தத்துவம் ஆகும். 


திருமால் "அலங்காரப் பிரியர்' என்றால் சிவபெருமான் 
"அபிஷேகப் பிரியர்' எனச் சிறப்பித்துக் கூறுவர். 


சிவபெருமானுக்கு என்னென்ன பொருட்களால் "அபிஷேகம்' செய்ய வேண்டும் என்பதை "அண்ணாமலைச் சதகம்' என்ற நூலில் காணப்படும் பாடல் ஒன்று எடுத்துக் கூறுகிறது.

 ""ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்''
 ""நெய்யினோடு பால் இளநீர் ஆடினான் காண்''
 ""நெய்யும் பாலும் தயிருங் கொண்டு நித்தல் பூசனை''
 - என்றெல்லாம் சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகங்களை திருமுறைப் பாடல்கள் போற்றிக் கூறுகின்றன.



உலகில் காணப்படும் அனைத்தும் "கானல் நீர்' என்று தெளியும் தத்துவ ஞானமே திருமஞ்சனம் என்பதை காசி காண்டம் செய்யுள் கூறுகிறது. 

நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் "ஆனித் திருமஞ்சனம்' மிகவும் சிறப்பானது. 

இந்நாளில் சிவாலயங்களுக்கு சென்று "ஆனித் திருமஞ்சனம்' கண்டு வழிபட்டு வாழ்வில் அனைத்து நலன்களையும் அடைவோம்.