நவராத்திரி சுபராத்திரி நவராத்திரி சுபராத்திரி
அலைமகளும் கலைமகளும் கொலுவிருக்கும் ராத்திரி
மலைமகளும் சேர்ந்து நம்மை மகிழவைக்கும் ராத்திரி
அவர் தம் தேவியர்க்கு உகந்தது நவராத்திரி.
நவம்’ என்ற சொல் நவ நவமாய் பெருகும்’ நவக்கிரகங்கள், நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவமேகங்கள், நவநிதிகள் என ஒன்பதின் பெருக்கத்தை விசேஷமாக கூறுவார்கள்.
கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி
நவம்’ என்ற சொல் நவ நவமாய் பெருகும்’ நவக்கிரகங்கள், நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவமேகங்கள், நவநிதிகள் என ஒன்பதின் பெருக்கத்தை விசேஷமாக கூறுவார்கள்.
நாடு முழுவதும் ஒன்பது நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை சிறப்பானது.
புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும்.
நவராத்திரி நமது பண்பாடு, கலை, கலாசாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் விழாவாக பெண்களை முன்நிறுத்தி கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
சக்தி தேவியான அம்பாளை பிரார்த்தித்து அவள் அருள் வேண்டி
ஒன்பது ராத்திரிகள் விரதம் இருந்து வணங்குவதே சிறப்பு.
இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி (இச்சை என்றால் விருப்பம், ஞானம் என்றால் அறிவு, கிரியா என்றால் செய்தல்) என்ற முப்பெரும் தேவிகளை வணங்குவதே நவராத்திரியின் சிறப்பாகும்.

இதற்கு சாரதா நவராத்திரி என்றும் பெயர் உண்டு.

நவராத்திரி பண்டிகை முடிந்து வரும் தசமி திதியை
‘விஜயதசமி’ என்று கொண்டாடி நிறைவு செய்கிறோம்.
‘விஜயதசமி’ என்று கொண்டாடி நிறைவு செய்கிறோம்.
சுபகாரியங்கள் செய்ய விலக்கி வைக்கும் பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகளையும் சிறப்பிப்பதற்காகவும், எல்லா திதிகளிலும் இறைவன் அம்சம் உளளது என்பதை உணர வைப்பதற்காகவும், நவராத்திரியில் இந்த திதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
நவராத்திரியில் வரும் நவமி நாள் ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது.
மாணவர்கள் புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள்.
நவராத்திரியில் வரும் தசமி நாள் விஜயதசமி என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தொடங்கப்படுகின்ற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம்.

இந்நாளில் ஞானம், வித்தை, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும், நலமும் வந்து சேரும்.
விஜயதசமி நாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வழிபடுவது மிகவும் உகந்ததாகும்.