" ஓம் ஷம் பஷ ஜ்வாலாஜிஹ்வே கராளதம்ஷ்ட்ரே
ப்ரத்யங்கிரா ஷம் ஹ்ரீம் ஹிம்பட் "
பிரத்யங்கரா தேவி மூல மந்திரம்
நல்லவர்கள் ஏமாற்றப்படுதலும் வதைபடுபவர்களால் பதிலுக்கு எதுவும் செய்ய முடியாத சக்தி இல்லாதவர்கள் தங்களுடைய குறைகளை முறையிடுகிற கோயில்களில் மிக முக்கியமானது அய்யாவாடியிலுள்ள பிரத்யங்கரா தேவி கோயில்.
தேவி பிரத்யங்கரா தான் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ள பக்தர்களுக்கே தன்னை வெளிக் காட்டிக் கொண்டு வந்துள்ளார்.
மிகவும் உக்ரஹமான முகத்துடன் காட்சி தரும் அவர் உருவம் எத்தனைக்கு எத்தனை பயங்கரமாக உள்ளதோ அதனை கருணை உள்ளம் கொண்டவள்
அவரை அனைவராலும் ஆராதிக்க முடியாது.
அவள் படத்தை தனி நபர்களின் வீட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ளவும் கூடாது என்பது ஒரு விதியாம் .
அப்படிப்பட்ட அந்த தேவியின் ஆலயம் பல இடங்களிலும் உள்ளது.

கோவைக்கு அருகில் சிங்காநல்லூரில் சரபேஸ்வரார் - பிரத்யங்கரா தேவி கோவில் ஒன்று சிற்ப்பாக அமைந்துள்ளது.
தேவியின் சக்தியை காட்டும் அதிசயம் தீயில் போடப்படும் மிளகாய் எந்த விதமான நெடியையும் ஏற்படுத்துவதும் இல்லை, எவருடைய கண்களும் எரிவதும் இல்லாத அதிசயத்தை உலகில் வேறு எங்குமே காண முடியாது.
அழிக்க எவர் நினைத்தாலும், வதைக்க எவர் முயன்றாலும் இங்கு வந்து ஒரு நிமிடம் மனம் கூப்பி தேவியின் பெயரைச் சொல்லி அழைத்து எனக்கு இந்த துன்பம் இருக்கிறது. தயவு செய்து நீக்கி விடு என்று சொன்னால் போதும்.
எதிரிகளை வெகுநிச்சயமாய் வேண்டுபவரின் நியாயம் இருந்தால் துவம்சம் செய்வாள்.
வாழ்வில் அநியாயக்காரர்களின் பிடியிலிருந்து அப்பாவிகளை மீட்க சில ஆலயங்கள் பிரத்யோகமாக முன்னோர்களால் வழிபடப்பட்டுவருகிறது.
கும்பகோணத்தில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஐயாவாடியில் உள்ள பழமையான தேவி பிரத்யங்கரா ஆலயம் பிரசித்தி பெற்றது.
கும்பகோணத்தில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஐயாவாடியில் உள்ள பழமையான தேவி பிரத்யங்கரா ஆலயம் பிரசித்தி பெற்றது.

தனது பக்தன் பிரகலாதனை கொடுமைப் படுத்திக்கொண்டு இருந்த ஹிரண்யகசிபு என்ற அசுரனை அழிக்க மகா விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டி இருந்தது.
அசுரன் பெற்று இருந்த வரத்தின்படி அவனை மனிதர்களோ, மிருகங்களோ அல்லது வேறு ஆயுதங்களினாலோ கொல்ல முடியாது. அவன் ரத்தம் கீழே சிந்தினால் அதில் இருந்து மீண்டும் மீண்டும் அவன் வெளிவருவான். ஆகவே
மனிதரும் அல்லாமல், மிருகமும் அல்லாத மிருகத் தலைக் கொண்ட ஒரு பயங்கர உருவைக் கொண்ட ஜீவனாக அவதாரம் எடுத்த நரசிம்மர் அந்த அசுரன் பிரகலாதனுடன் நின்று கொண்டு இருந்த இடத்தில் இருந்த ஒரு தூணில் இருந்து அதை உடைத்துக் கொண்டு வெளிவந்து அந்த அசுரனை தன் தொடை மீது பிடித்து வைத்துக் கொண்டு அவன் உடலை தன் விரல் நகத்தினால் கீறி அவன் உடலில் இருந்து வெளி வந்த ரத்தத்தைக் குடித்து அவனை கொன்றார்.

அசுரனின் ரத்தம் கீழே சிந்தாமல் அவன் உயிர் பிழைக்க வழி இல்லாமல் மரணம் அடைந்தான்.
அரக்கனைக் கொன்ற பின்னும் நரசிம்மரின் இரத்த வெறி அடங்கவில்லை.
உலகம் முழுவதையும் அவர் அழிக்கத் துவங்க தேவர்கள் சரபேஸ்வரர் உருவில் இருந்த சிவபெருமானிடம் அடைக்கலம் ஆயினர்.
சிவபெருமானும் தனது மூன்றாவது கண்ணில் (சரபேஸ்வரர் நெற்றியில் இருந்து) இருந்து ஒரு பயங்கர தேவதையை வெளிப்படுத்தினார்.
அவள் ஆயிரத்தி எட்டு சிங்கத்தின் , இரண்டாயிரத்து பதினாறு கண்கள், அதைத் தவிர மூன்றாவது கண், இரண்டாயிரம் கைகள், அந்தக் கைகளில் இருந்த விரல்களில் புலியின் நகங்கள், யமனைப் போன்ற கரிய நிறம், நீல ஆடை, சரீரமோ யானயை விட பத்து மடங்கு பெரியது என்ற விஸ்வரூப தோற்றத்துடன் வெளி வந்தாள்.

அப்படி வெளிவந்த உடனேயே அவள் நரசிம்மரை நோக்கி ஓடினாள். தன்னை விட அதி பயங்கர ரூபத்துடன் வந்துள்ள ஜீவனைக் கண்ட நரசிம்மர் ஓடத் துவங்க அவரை துரத்திப் பிடித்த பிரத்தியங்கர தேவி அவரை தனது வாய்க்குள் போட்டுக் கொண்டு அப்படியே விழுங்கி யதும் அவள் கோபம் தணிந்தது. சாந்தம் அடைந்தவள் தனது விஸ்வரூப தரிசனத்தைக் களைந்து மகா பிரத்தியங்கர தேவியாகி நின்றாள்.
ஒரு முறை இந்திரஜித் ஸ்ரீ ராமபிரானுடன் போரிட்ட போது அவரை வெல்ல வேண்டும் என்பதற்காக இங்கு வந்து எட்டு திக்குகளிலும் பிரேதங்களை வைத்து நிகும்பலா என்ற யாகத்தை துவக்கி, பிரத்தியங்கரா தேவியை ஆராதித்தான்.
அந்த யாகம் வெற்றி பெற்றுவிட்டால் அதன் பிறகு அவன் ராமரை அழித்து விடுவான் என்பதினால் லஷ்மணர் தனது சகோதரரான ராமனுக்காக இங்கு ஹனுமனுடன் வந்து எந்த காரணத்தைக் கொண்டும் அக்கிரமத்தை வெல்ல விடக்கூடாது என அந்த தேவியை வேண்டினார்.
அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த தேவியும் தர்மமே வெல்லும் எனக் கூறி இந்திரஜித்துக்கு அவன் வேண்டிய வரத்தை தர மறுத்து விட்டாள்.

இந்த பூமியில்தான் பஞ்ச பாண்டவர்களும் கூட வந்து பூஜைகளை செய்தனராம்.
பூக்கள் கிடைக்காத நிலையில் அங்கிருந்த மரத்தின் இலைகளால் பூஜை செய்து பீமன் வரம் பெற்றானாம்.
அகத்திய முனிவரும் தன்னுடன் பதினெட்டு சித்தர்களை அழைத்து வந்து இந்த இடத்தில் அமர்ந்து கொண்டு பிரத்தியுங்கரா தேவியை பூஜித்ததாகவும் ஆகவே அவள் அகத்தியருக்கு மட்டும் காட்சி தந்தருளினாளாம் ...

சன்னதியின் நுழை வாயிலில் அவளுக்கு வலதுபுறம் மிகப் பெரிய சரபேஸ்வரர் மற்றும் அகஸ்தியர், இடது புறம் இரண்டு ரிஷிகளான பிரத்தியங்கரா மற்றும் அங்கீரசா போன்றவர்கள் என அவர்களின் உருவம் அந்த சுவற்றில் பதிக்கப்பட்டு உள்ள தாமிரத் தட்டில் காணப்படுகின்றது.
சன்னதிக்கு உள்ளே அனைத்து பக்க சுவர்களிலும் பல கதைகளை ஓவியமாக வரைந்து உள்ளார்கள்.
அங்கு பிரத்யங்கரா தேவிக்கு துணையாக அறுபத்தி நான்கு பைரவர்கள் எட்டு பிரிவாக வகுத்திருக்கிறாகள்..
ஓவியங்களில் பைரவர் அன்னம், மாடு, மயில், இரண்டு விதமான நாய்கள், கழுகு, குதிரை, யானை மற்றும் கழுதை போன்ற வாகனங்களுடன் காட்சி தருகிறார்.

தேவிக்கு பூஜை மட்டுமே செய்யப்படுகின்றது.
ஆலய சன்னதிகள் முழுவதும் மேல் கூரையில் உத்ராக்ஷ மணிகளினால் ஆன மாலைகள் பந்தல் போடப்பட்டு உள்ளதைப் போல தொங்க விடப்பட்டு உள்ளன என்பதனால் அங்கு யாரும் தீபம் எற்றுவதையோ, கற்பூரம் கொளுத்துவதையோ அனுமதிப்பதும் இல்லை.
ஆலய தல விருஷத்தில் ஐந்து விதமான இலைகளைக் கொண்ட அரச மரம் உள்ளது.
ஆலயத்தின் எட்டு திக்குகளிலும் மயானம் உள்ளது.
இரவில் ஆலயத்துக்குள் எவருமே தங்க அனுமதிப்பது இல்லை.
இங்கு வந்து இந்த தேவியை வணகுவதின் மூலம்
- ஏவல், பில்லி, சூனிய வைப்புக்கள் போன்றவை விலகுகின்றன
-நமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுகின்றன
-பூர்வ ஜென்ம பாபங்கள் விலகுகின்றன
- நமக்கு தொல்லை தருபவர்களின் எண்ணம் நிறைவேறாது .

![[48056660_4e92cbb6e7.jpg]](http://2.bp.blogspot.com/_t9mF8OsQGW8/SQFolWVFm6I/AAAAAAAAAWM/0QMKHbj3vLk/s320/48056660_4e92cbb6e7.jpg)