Saturday, April 27, 2013

கோலாஹல பஞ்சமுக ஆஞ்சநேயா











ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய வாயு புத்ராய மகா பலாய
சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாயமஹா பலப்ரகண்டாய 

பல்குணசகாயகோலாகல சகல பிரம்மாண்ட பாலகாயசப்த சமுத்ர நிராலங்கிதாய, பிங்கள நயனாய அமித விக்ரமாயசூர்யபிம்ப 

பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய சஞ்சீவினி சமாநயன சமார்த்தாய
அங்கதலட்சுமண கபி சைன்ய ப்ராண நிர்வாககாய தசகண்ட 

வித்வம்ஸனாய இராமேஷ்டாய பல்குணசகாய சீதா சகித இராமச்சந்திர ப்ராசதகாய -ட் ப்ரயோகாங்கபஞ்சமுக ஹனுமதே நம:

இந்த பஞ்சமுக ஆஞ்சநேயா மாலா மந்திரத்தை தினமும் 8 முறை படித்து அனுமனை வழிபட்டால், கிரக பீடைகள், கெட்ட கனவுகள் ஆகிய பல்வேறு இன்னல்கள்  நீங்கி இனிய நல்வாழ்வும், 
ஆயுள் ஆரோக்கியமும் இனிதே அமையும்..



ஓம் ஸ்ரீராமதூதாய,ஆஞ்சநேயாய,
வாயுபுத்ராய மஹாபலாய,
ஸீதாதுக்க நிவாரணாய,
லங்காவிதாஹகாய,
ம்ஹாபலப்ரசண்டாய,
பல்குணஸகாய,
கோலாஹல ஸகல ப்ரஹ்மாண்ட பாலகாய,
ஸப்தஸமுத்ர நிராலங்கிதாய,
பிங்கள்நயநாய, அமித விக்ரமாய,
ஸூர்யபிம்பஸேவகாய,
துஷ்ட நிராலம்ப க்ருதாய,
ஸஞ்சீவிநீ ஸமாநயந ஸம்ர்த்தாய,
அங்கத லக்ஷ்மணகபிஸைந்ய ப்ராணநிர்வாஹ்காய,
தசகண்ட வித் வம்ஸநாய ராமேஷ்டாய,
பல்குணஸகாசாய,
ஸீதாஸஹித ராம சந்த்ர ப்ரஸாதகாய,
ஷட்ப்ரயோகாங்க பஞ்சமுகி ஹநுமதே நம:

பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய 
வல்லமை மிக்க பஞ்சமுக அனுமன்.

வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார் 
அஞ்சிலே ஒன்று பெற்ற அருள் குமரன் அனுமன்.


பஞ்ச  முக  தரிசன  பலன்கள்:

அனுமன்       -    சனித்தொல்லை, , சகல  தோஷங்களையும்  நீக்குவார்

நரசிம்மர்        -     பயத்தைப்  போக்கி  துஷ்ட  தேவதைகளை  அடக்குவார்

கருடர்             -     அனைத்து  வியாதிகளையும்  நீக்குவார்

வராகர்            -      செல்வத்தைப்  பெருக்கி  பாவத்தைப்  போக்குவார்

ஹயக்ரீவர்    -      கலை , படிப்பு  ,வாக்கு  சாதுர்த்தியம்  தருபவர்    

ராவணனுக்கு  மயில் இராவணன்  என்ற  ஒரு சகோதரன்  இருந்தான் .

அவன் ஒரு  சமயம்  ராம  இலக்குவரைக்  கவர்ந்து சென்று  அடைத்தான் .

மயில் ராவணனின்  உயிர்  ஐந்து  வண்டுகளிடம்   குடிகொண்டு  இருந்தது .
அந்த  ஐந்து  வண்டுகளையும்  ஒரே  நேரத்தில்  அழித்தால் மட்டுமே  அவனுக்கு  அழிவு  ஏற்படும் .

எனவே  மயில்  ராவணனை அழிப்பதற்காக  ,அனுமன்   ஒரே  நேரத்தில்  ஐந்து  முகங்களையும்  பெற்று , ஐந்து  வண்டுகளையும்  பிடித்துக்  கொன்றார் .

ஒரு  காரியத்தை  எவ்வாறு   சித்தியாக்குவது , எவ்வாறு  வெற்றி கொள்வது என்பதை  வாழ்ந்துக்  காட்டியவர்  ஸ்ரீ  ராமபக்த  அனுமன் .  

ராமாயணத்தில் உள்ள  சுந்தர காண்டத்தில்  அனுமன் , ராமனை  சீதையுடன் சேர்த்துவைக்க அவர் உதவும்  நிகழ்வு  உள்ளது .
சுந்தரக் காண்டத்தைப்   படித்தால் கணவன்  மனைவி இடையே  சண்டைகள் வராது  , ,பிரிந்தவர்கள் சேர்வார்கள் .. 
துன்பநேரங்களில்   பாராயணம்  செய்து வாழ்வில் வெற்றி  பெறலாம் 

ஸர்வ  கல்யாண  தாதாரம் ஸர்வா பத்கந  வாரகம்
அபார  கருணா  மூர்த்திம்ஆஞ்சநேய  நமாம்யஹம்

அஞ்சனா  கர்ப்ப  ஸம்பூதம்குமாரம்  ப்ருஹ்மசாரிணம்
துஷ்டக்ருஹ  வினாஸாயஹனுமந்த  முபாஸ்மஹே

ஸ்ரீ ராமதூத  மஹாதீர ருத்ரவீர்ய  சமுத்பவ
அஞ்சனா  கர்ப்ப  ஸம்பூத   வாயு  புத்திர  நமோஸ்துதே

அஸாத்ய  ஸாதக  ஸ்வாமிந்அஸாத்யம் தவ கிம்தவ
ராம தூத  இக்ருபாஷிந்தோமத்கார்யம் ஸாதய  ப்ரபோ

புத்திர் பலம்  யசோதைர்யம்நிற்பயத்வம்  அரோகதாஅஜாட்யம்
வாக்படுத்வம்சஹனுமத் ஸரணாத் /ஸ்மரணாத்  பவேத்




Friday, April 26, 2013

புத்த பூர்ணிமா









புத்தம் சரணம் கச்சாமி 
சங்கம் சரணம் கச்சாமி 
ஞானோதயம் அடைந்த புத்தரின் போதனைகள் ஆன்ம சாதகர்களை 
இன்றும் வழி நடத்துகிறது. 

புத்த பூர்ணிமா வைசாக மாதத்தில் 
(ஏப்ரல் அல்லது மே) கொண்டாடப்படுகிறது. 

கௌதம புத்தரின் பிறப்பு, ஞானோதயம், மற்றும் மஹா சமாதி ஆகிய புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான இந்த மூன்று சம்பவங்களையும் நினைவு கூறுவதே புத்தபூர்ணிமா எனப்படுகிறது. 

நாமும் அந்த மாதிரி நிலையை அடையலாம் என்று நமக்கு உணர்த்துகிறது.

மன்னரின் மகனாக அவதரித்து மக்களின் வாழ்விற்காக அனைத்தையும் துறந்த மகான் புத்தர் பிரான். இவர் அவதரித்த நாள் புத்த பூர்ணிமா, புத்த ஜெயந்தி அல்லது விசாக் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. 
கயா என்னும் காட்டுப்பகுதியில் போதி மரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டுகள் தவம் செய்த சித்தார்த்தன், முடிவில் தனது பிறந்த நாளான அதே வைசாகா முழு நிலவு நாளில் ஞான ஒளியைப் பெற்று தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடித்தது முதல் அவர் கௌதம புத்தர் என அழைக்கப்பட்டார்..

தனது 80 – வது வயதில் தனது பிறந்த நாளும், தான் ஞானத்தை அடைந்த நாளுமான அதே வைசாகா அன்று புத்தர் இவ்வுலக வாழ்வைத் துறந்தார்.

புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். 
ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.உலகமே உன் காலடியில் இருக்குபோது எதற்காக நீ ஆசைப்படுகிறாய்? எல்லாமே உன்னுடையது எனும்போது எதற்கு ஆசைப்படுகிறாய்? ஆசை என்பது தேவையற்றதுதானே? தேவையற்ற ஆசை அழிவைத்தானே தரும்."

எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம். புத்தர் கூறிய சமய முறையில் ஆசையை அறவே ஒழித்து, பல்வகையான வாழ்க்கையின் மீது நாட்டம் கொள்ளாமல், வாழ்க்கையில் ஆசையால் விளையும் துன்பங்களை ஒழிப்பதே ..!!