Tuesday, November 26, 2013

வைக்கம் மகாதேவாஷ்டமி
















 ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்
 ஓம் ஈஸான: ஸர்வ வித்யானாம் ஈஸ்வர: ஸர்வ பூதானாம் 
ப்ரஹ்மாதிபதி: ப்ரஹ்மணோதிபதி: ப்ரஹ்மா ஸிவோ மே 
அஸ்து  ஸதாஸிவோம்
ஓம் த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம்
புஷ்டிவர்தனம் உர்வாருக - மிவ பந்தனான்
ம்ருத்யோ - முக்ஷீய - மாம்ருதாத்

கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு தெற்கே 23 கி.மீ. தொலைவிலுள்ளது பிரசித்தி பெற்ற வைக்கம் திருத்தலத்தில் அன்னதானப் பிரபுவாகக் கொலுவிருக்கிறார் வைக்கத்தப்பன். 
ஆலயத்தில் வழங்கப்படும் முக்கியமான பிரசாதம் வைக்கத்தப்பனின் சமையலறை விபூதிப் பிரசாதம். 

பக்தர்களுக்காக அன்னதானப் பிரபுவான வைக்கத்தப்பன் இங்கே சமையலறையில் சேவை செய்ததாகவும், அந்த நிலையில் அவரை வில்வமங்கள சுவாமி தரிசித்ததாகவும், அந்தச் சமையலறை அடுப்புச் சாம்பலே விபூதிப் பிரசாதமாகத் தரப்படுவதாகவும்  ஐதீகம் ..

இந்த விபூதியைப் பக்தியுடன் ஏற்று தரித்துக் கொண்டால் ‘ஹிஸ்டீரியா’ போன்ற சகல மனோவியாதிகளும் தீர்ந்துவிடும் 

வைக்கத்தில் மகாதேவர் எனப்படும் வைக்கத்தப்பன் கோயிலில் நடைபெறும் விழாக்களில் குறிப்பிடத்தக்கது அஷ்டமி விழா. வைக்கம் மகாதேவாஷ்டமி

மலையாள விருச்சிக மாதம் பெளர்ணமியை அடுத்துவரும் அஷ்டமி மகாதேவாஷ்டமி எனப்படுகிறது. 
வைக்கம் கோயிலில் மகாதேவாஷ்டமி  விழா 12 நாள்கள் நடைபெறுகிறது. 

அஷ்டமியன்று உச்சிக்கால பூஜை முடிந்தபின் சுவாமி ஆனக்கொட்டில் எனப்படும் யானை வளர்க்கும் இடத்தில் எழுந்தருள்கிறார். 
அருகில் உள்ள கோயில்களில் இருந்தும் உற்ஸவர்கள் எழுந்தருள்கின்றனர். 

அனைத்து தெய்வங்களும் வைக்கத்தப்பன் பின்தொடர ஆனக்கொட்டிலில் காட்சிதருவார்கள். 
அதன்பின்னர் காணிக்கை செலுத்தும் வைபவம் நடைபெறுகிறது. இதற்காகவே பக்தர்கள் காத்திருந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
பிற சிவாலயங்களுக்கு இல்லாத மற்றொரு சிறப்பு வைக்கம் கோயிலுக்கு உண்டு. இங்கு மட்டுமே சிவன் 3 வடிவங்களில் காட்சியளிக்கிறார். 
காலையில் தட்சிணாமூர்த்தியாகவும் 
பிற்பகலில் கிருதமூர்த்தியாகவும். 
மாலையில் பார்வதியுடன் சாம்பசிவனாகவும் அருள்பாலிக்கிறார். 

மகாதேவாஷ்டமி அன்று தமிழகத்தில் பல இடங்களில் அன்னதானம் நடைபெறும். 

சிவலிங்கத்தையோ அல்லது சிவபார்வதி படத்தையோ வைத்து ருத்ரம், சமகம், ஸுக்தங்கள் ஜெபித்து சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்படும். 

தொடர்ந்து ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்குவார்கள். ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் இது நடக்கிறது.
வைக்கம் அஷ்டமி விழா அன்னதானத்திற்கு பொருள் வழங்கினால் குடும்பம் சுபிட்சமாக இருக்கும் என்பது காலகாலமாக தொடரும் நம்பிக்கை.

வைக்கத்தப்பன் வியாக்ரபுரிசுவரர் என்கிற  பெயரிலும் அழைக்கப்படுகிறார்..!

ஸ்ரீ பரசுராமர் தமது யோக சக்தியால் ஆகாய வழியாக வடதிசை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது கருடன் கத்தியது. அவரது வலது தோள்பட்டை சிலிர்த்தது. அந்த நல்ல சகுனத்தின் அடையாளமாக அவர் கீழே பார்த்தார். 

நாவல் பழ நிறமுள்ள ஒரு சிவலிங்கம் நீரில் பாதியளவு மூழ்கியிருப்பது தெரிந்த இடத்தில் இறங்கி, அங்கிருந்த சிவலிங்கத்தை எடுத்துபீடம் ஒன்றை அமைத்து, அதில் சாஸ்திர முறைப்படி பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்தார்..!
சிவபெருமான், தன் பக்தனான கரன் எனும் அசுரனிடம் தனது அம்சமான மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து விட்டார். 

கரனுடன் ஸ்ரீ வியாக்ரபாத முனிவரையும் அனுப்பி வைத்தார். 

அவரும் கரனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்தார். 

மூன்று சிவலிங்கங்களையும் எடுத்துக் கொண்டு புறப்பட்ட கரன், களைப்பின் மிகுதியால் ஓரிடத்தில் சற்று ஒய்வு பெறுவதற்காக தன் வலக்கையில் வைத்திருந்த சிவலிங்கத்தைக் கிழே வைத்தான். 

சிவலிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்று தோல்வியடைந்த கரன், திரும்பிப் பார்த்த போது வியாக்ரபாரத முனிவர் நின்று கொண்டிருந்தார். 

கரன் அவரிடம் சிவலிங்கத்தைப் பூசை செய்து வரும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அங்கேயே தங்கி விட்டார். 
எனவே வைக்கத்திற்கு வியாக்ரபாதபுரம், வியாக்ரபுரி என்ற பெயரும் ஏற்பட்டது. 

ஸ்ரீ வியாக்ரபாதர் பூசை செய்த வைக்கத்தப்பனுக்கு வியாக்ரபுரீசுவரர் என்ற பெயரும் உண்டாயிற்று.

கோயிலில் வெளிப்பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில், ஒரு சமயம் மகாதேவர் ஸ்ரீ வியாக்ரபாதருக்குத் தரிசனம் தந்தாராம். 
தற்போது அங்கு ஆலமரத்தோடு கூடிய  மேடையை "வியாக்ரபாதர் மேடை" என்று அழைக்கிறார்கள்.









 

Monday, November 25, 2013

நலம் தரும் பைரவாஷ்டமி வழிபாடு


H A N U M A N

இலங்கையில் ராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய  லிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பினார்.

அனுமான் லிங்கத் துடன் வரும்போது, அவருடன் மகாபைரவரும் வந்தார். 

அனுமனுடன் வந்த பைரவர் என்பதால், தகட்டூர் தலத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோரும், பிரகாரத்தில் கணபதி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் உள்ளனர். கோயிலுக்கு எதிரேயுள்ள தீர்த்தக்குளம் உள்ளது.

நாகபட்டினம் மாவட்டம் தகட்டூரிலுள்ள பைரவநாத சுவாமி கோயிலில் பைரவர் மூலஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். 
[Gal1][Gal1]
"யந்திரபுரி' என்ற பெயர் பெற்ற.  தலத்தின் தமிழ்ப்பெயர்.. "தகட்டூர்'. 

சக்தி வாய்ந்த தெய்வங்களின் முன்பு ஸ்ரீசக்ரம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். இந்தக் கோயிலிலும் ஒரு யந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உற்சவர் சட்டைநாதர் சிலையும் இருக்கிறது.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

குளத்தின் ஒரு கரையில் காத்தாயி, கருப்பாயி சமேத ராவுத்தர் சன்னதி இருக்கிறது. இவரும் இத்தலத்தில் காவல் தெய்வமாக இருக்கிறார்.
[Gal1]
கோயில்களில் பைரவரே காவல் தெய்வம். அக்காலத்தில், கோயிலைப் பூட்டிபைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதை தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும்.

அந்தளவுக்கு சக்திவாய்ந்தவராக பைரவர் திககிறார்..!

அதுபோல் காசி லிங்கத்திற்கு காவலாக பைரவர் அனுமனுடன் வந்துள்ளார். அவருக்கு தற்போதைய தகட்டூர் தலத்தில் குடியிருக்க ஆசைபிறக்கவே, அங்கேயே தங்கி விட்டார்.
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.

பைரவ காயத்ரியை அஷ்டமி வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.
கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி கால பைரவாஷ்டமி 
என்று அழைக்கப்படுகிறது.

இறைவனின் அம்சமாக, அவதாரமாக இருக்கும் பைரவருக்கு 
தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிக சிறப்பானதாகும். 

பைரவர் வழிபாடு ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டு காலம், காலமாக நடைபெற்று வருகிறது. 

பைரவ மூர்த்திகளில் 64 திருவடிவங்கள் உள்ளதாகவும் 
மேலும் 108 வரை உள்ளதாகவும் அறியப்படுகிறது. 

 பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் வடகிழக்குப் பகுதியில் பைரவருக்கு தனி சந்நதி இருக்கும். 

அனைத்து சிவாலயங்களிலும் காலையில் சிவபூஜை சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த ஜாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது.

பிரம்மதேவனின் அகந்தையை அடக்க, சிவபெருமான் ஆணைப்படி ருத்திரர், கால பைரவர் உருக்கொண்டு, பிரம்மனின் ஐந்தாவது தலையைத் துண்டித்தார். 
நவகிரகங்கள் அனைத்தும் கால பைரவருக்குள் அடக்கம். 

நவகிரகங்களால் ஏற்படும் காலசர்ப்ப தோஷம், நாகதோஷம் முதலானவை நீங்க கால பைரவரை வழிபடுவது மிகச் சிறப்பு. 

பொதுவாக மக்களால் ஒதுக்கப்படும் அஷ்டமி திதியில் அஷ்ட லட்சுமிகளும், கால பைரவரால் வழிபடப்படுவதால், அஷ்டலட்சுமியின் அருளும் பெற, அஷ்டமி திதியில் கால பைரவரை வழிபடுவது சிறப்பு.

 மகாகால பைரவருக்கு செம்பாக்கம் என வழங்கும் வட திருவானைக்கா அருள்மிகு அழகாம்பிகை சமேத சம்புகேசுவரர் திருக்கோயிலுக்கு அருகில் இராஜராஜ சோழன் காலத்தில் அமைக்கப்பட்ட தனிக்கோயிலும் அமைந்துள்ளது. 

 திருப்போரூர் செங்கல்பட்டு வழித்தடத்தில் திருப்போரூரிலிருந்து
 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

கார்த்திகை மாதம் வருகின்ற தேய்பிறை அஷ்டமி மிகவும் சிறப்பு பெற்றது. தினமும் அஷ்ட பைரவர் வேள்வி, யாகம், சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்..!

சிவன் அம்சமான மகா கால பைரவரை வழிபட்டு,  அருள்மிகு அழகாம்பிகை சமேத சம்புகேசுவரப் பெருமானையும் வழிபட்டால் கால சர்ப்பதோஷம், நவகிரக தோஷம் நீங்கி அஷ்டலட்சுமி கடாட்சமும் பெறலாம்.

ஆலங்குடி அருள்மிகு தர்மசம்வர்த்தினி உடனுறை நாமபுரீசுவரர் திருக்கோயிலில் காலபைரவாஷ்டமி விழா  சிறப்பு..!

பைரவாஷ்டமியையொட்டி, கோயிலில் காக்கும் கடவுளாக போற்றப்படும் காலபைரவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மஹாதீபாராதனை காட்டப்படுகிறது.  சந்தனக்காப்பு அலங்காரமும், பைரவ சகஸ்ரநாமமும் நடைபெறும்  சுவாமி வீதியுலா நடைபெறும்..



தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. 

சிலர் நாயை செல்லமாக வளர்ப்பார்கள். சிலர் நாயை துன்புறுத்துவார்கள்..!

இதுபோல், வாழ்க்கையில் வரும் துன்பத்தையும், இன்பத்தையும் இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்றே வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாகவே நாய் வாகனம் கருதப் படுகிறது. 

நாய்க்கு "வேதஞாளி' என்ற பெயரும் இருக்கிறது..!

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

மனோபலம், வியாதி நிவர்த்தி, நியாயமாக நினைப்பவை நிறைவேற தேய்பிறை அஷ்டமியன்று மாலை 5-8மணிக்குள் யாகம் நடத்தப்படுகிறது. திங்கள்,வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மொட்டைக்கோபுரம் அருகில் உள்ள பைரவர் சக்தி வாய்ந்தவர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோவிலில் உள்ள பைரவர், இரட்டை நாய்களுடன் காவல் செய்கிறார்.
பைரவருக்கு வடை மாலை, எலுமிச்சை மாலை அணிவிப்பது வழக்கம்

கேரளாவிலுள்ள வைக்கம் மகாதேவர் கோவிலில், கார்த்திகை தேய்பிறை அஷ்டமியை மகாதேவ வாஷ்டமி என்ற பெயரில் விமரிசையாக நிகழ்த்துவர். அந்த நாளில், இங்கு அன்னதானம் செய்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும்.

ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.

பைரவ பெருமான், ராகு-கேது எனப்படும் பாம்புகளை பூனூலாகத் தரித்தும், சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருபவராகிறார். காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரெண்டு ராசிகளும் அடக்கம்.

ஒரு முழு தேங்காயை உடைத்து அதில் குடுமி இருக்கும் பக்கம் பிய்த்தால் அதில் மூன்று கண் போன்ற அமைப்பு இருக்கும். அந்த கண் பக்கம் இருக்கும் மூடியில் ஐந்துவிதமான எண்ணெய். அதாவது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்து திரி போட்டு விளக்கேற்ற சனி தோஷங்கள்,, அஷ்டம சனி தாக்கங்கள் நீங்கும். போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல் மூலம் வரக்கூடிய தோஷம் கழியும். காத்து, கருப்பு, கெட்ட சேஷ்டைகள், துர் ஆவிகள் அண்டாது என்பது ஐதீகம்.

எல்லா பரிகாரங்களுக்கும் நெய் தீபமும், மிளகு தீபமும் பொதுவானது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் தலத்தில் ஸ்ரீ கோட்டை பைரவர், கால பைரவ அம்சமாக இருந்து அருள்பாலிக்கிறார்.

சிவபெருமான் அவதாரம் கொண்டதாக ஆகமங்கள் இயம்புகின்ற  கோட்டை பைரவரிடம் வேண்டுதல் செய்வோருக்கு கைமேல் பலன் கிடைக்கும்

திருமெய்யம் கோட்டை பைரவருக்கு சந்தனாதி தைலம் சாற்றி அபிஷேகம் செய்து சந்தனக்காப்பு, வடைமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம், தொழில் போன்றவற்றில் அபிவிருத்தி ஏற்படும்.

பைரவருக்கு கோடி அர்ச்சனையோ, லட்சார்ச்சனையோ செய்து வழிபட்டால் குழந்தை பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை..!

 தேய்பிறை அஷ்டமி அன்று கோட்டை பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த நாளில் வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு நன்மைகள் நாடி வந்து சேரும்.
கார்த்திகை மாதம் நடைபெறும் பைரவாஷ்டமி விழா சிறப்பு வாய்ந்தது.