Wednesday, February 6, 2013

சர்வதேச யானைகள் திருவிழா













சர்வதேச யானைகள் திருவிழாவில்  யானனைகளுக்கான ஓட்டப்பந்தயம், அழகுப்போட்டி, ரேக்ளா வண்டி போட்டி குதிரை வண்டிப்போட்டி ஆகியவை நட்த்தப்படுவது கண்கொள்ளாக்காட்சியாகத்திகழ்கிறது...

நேபாள நாட்டு வனத்துறையினர் யானைகளையும் கால்பந்து விளையாட பயிற்சி அளித்துள்ளனர்.

அங்குள்ள சவ்ரஹா நகரில் சர்வதேச யானைகள் திருவிழாவை முன்னிட்டு யானைகளுக்கான கால்பந்து போட்டி  சிறப்பாக நடைபெறுகிறது...

யானைகள் கால்பந்தாட்டத்தில் பாகன்களை சுமந்தவாறு யானைகள் பந்தை லாவகமாக தட்டிச்சென்று கோல் அடிக்க முயன்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது.

 போட்டியின் இறுதி ஆட்டத்தில் நேபாள கிஸ்ட் வங்கி யானைகள் அணி சங்கர் வளர்ச்சி வங்கி யானைகள் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வென்று பரிசை தட்டிச்சென்றது.!!

வருடந்தோறும் நேபாள், சிட்வான் தேசிய பூங்காவில் யானைகளுக்கான விழா நிகழ்வில்  அழகு யானை போட்டி நடத்தப்பட்டுள்ளது.

அழகுப் போட்டியில் கலந்துகொள்ளும் யானைகளின் தலை உட்பட 
உடல் சிறப்பாக அலங்கரிக்கபட்டிருக்க வேண்டும்.

அத்துடன் யானைகளின் கால் விரல் நகங்கள் சிறப்பாக வர்ணமிடப்பட்டிருக்க வேண்டும் என போட்டி விதிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

கலந்துகொண்டிருந்த 9 யானைகளில் 'சித்வார் காலி' என்ற யானை  
நேபாள அழகு யானையாக தெரிவுசெய்யப்பட்டது.!!
'அழகு யானை' போட்டி
' சித்வான் காலி மிக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது'  

அழகுப்போட்டியில் கலந்துகொள்ளும் யானைகள் தமது பாகன்களின் கட்டளைப்படி இயங்கவேண்டும் என்பது கட்டாயமானது 








49 comments:

  1. காணக் கண்கோடி வேண்டும்.

    ReplyDelete
  2. arumai!

    arumai!
    arumai

    pakirvukku mikka nantri sako..!

    ReplyDelete
  3. ஆஹா..எத்தனை அருமை அத்தனையும் சிறப்பு மீண்டும் தொடங்கட்டும் அடுத்த சாதனை.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சர்வதேச யானைகள் திருவிழா பற்றிய சிறப்பான செய்திகள் அருமை. கண்கவர் யானைகள் கண்காட்சி.
    படங்கள் எல்லாம் அழகு.
    அழகு யானை சித்வான் காலிக்கு வாழ்த்துக்கள்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. அட , நம்ம பக்கத்து ஊரில தானா ??
    செய்தி வியக்க வைக்குது !

    ReplyDelete
  6. யானைப்படங்கள் கண்களையும் தகவல்கள் மனதையும் கவர்ந்தது.
    அழகு யானைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.
    சிறப்பான பதிவு.

    ReplyDelete
  7. என்ன அழகு என்ன அழகு யானைகளுக்கும் அழகி போட்டியும் உண்டா அதிசயம் தான்.

    ReplyDelete
  8. அட.. அட.. என்ன அழகு! அருமை! நல்ல தகவல்கள்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  9. Aiyoooooooooooo
    I enjoyed it.............
    loved it.................
    thankyou dear, for a lovely post...
    viji

    ReplyDelete
  10. ஆஹா, ”சர்வதேச யானைகள் திருவிழா” என்ற தலைப்பா!

    அச்சா, பஹூத் அச்சா!!

    யானைகளை ஒவ்வொன்றாக கண்டு களித்து வருகிறேன்.

    அதிலேயே லயித்துப்போய் விட்டேன்.

    அதனாலேயே பின்னூட்டமிட மிகவும் தாமதமாகி விட்டது.

    ஏற்கனவே இதே போன்ற தங்களின் ஒருசில யானைப்பதிவுகளுக்கு விடிய விடிய நான் பின்னூட்டங்கள் கொடுத்துக்கொண்டே இருந்ததில் பொழுது விடிந்தே போய்விட்டது.

    ஞாபகம் வருதே ....
    ஞாபகம் வருதே.....

    >>>>>>>>

    ReplyDelete
  11. பொதுவாக யானைகளை நாம் பிறந்த மேனிக்கு நிர்வாணமாகவே தான் காண முடிகிறதூஊஊஊ.

    ஆனால் குருவாயூர், திருச்சூர் போன்ற ஊர்களிலும், உங்கள் பதிவுகளிலும் மட்டுமே அவைகளை உலக அழகியாக ”சீவி முடித்து சிங்காரித்து சிவந்த நெற்றியில் பொட்டும் வைத்து” அழகோ அழகாகக் காணமுடிகிறது. ;)))))

    >>>>>>>>>

    ReplyDelete
  12. முதல் படத்திலேயே அந்தக்கருப்பாயி யானையின் நெற்றியில் ஓர் காதல் சின்னம்.

    வலைவீசி தன் துணையினை அழைக்கிறாளோ புகுந்து விளையாட. ;)))))

    துதிக்கையில் ஓர் வளையம் ... விளையாடத்தானே?

    அதனால் மட்டுமே எனக்கு இந்த சந்தேகம். ;)

    >>>>>>>>>

    ReplyDelete
  13. அனிமேஷன் யானைகள் யாவும் வழக்கம் போல அற்புதமான தேர்வு.

    பிரஷ் பிடித்து படம் வரையும் யானையார் சூப்பர் ;)))))

    சிறப்பான பதிவுகள் தந்து என்னை தினமும் வீழ்த்தி வெற்றிவாகை சூடுவதில் எப்போதுமே ஓர் மிகப்பெரிய யானையாகவே நீங்கள்.

    தங்கள் காலடியில் நெசுங்கிப்போகும் அந்த ["Aspi e"] வெள்ளைப்பந்தாக என்றும் நான்.

    ”யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்”

    என்றும் சொல்வார்கள்.

    அது வந்தால் வரட்டும் வராவிட்டாலும் போகட்டும், என நினைத்துக்கொண்டிருப்பவன் நான்.

    வேறு வழி? யானையிடம் பூனை மோத முடியுமா என்ன?

    என்ன இருந்தாலும்

    யானை யானை தான்.

    பூனை பூனை தான்.

    >>>>>>

    ReplyDelete
  14. கருத்த உடல் தெரியாத அளவுக்கு, உடம்பு பூராவும் டிஸைன் டிஸைனாக மெஹந்தி இட்டு, மருதாணி இட்டது போன்ற அந்த சிவப்பாயி யானை ஜோர் ஜோர்.

    சும்மா ஜொலிக்குது உங்கள் பதிவுகள் போலவே.

    >>>>>>>

    ReplyDelete
  15. சர்க்கஸ் யானைகள் போல ஒருவர் பின் ஒருவர் ஏறி ஏறி ஏறி ஏறி ஏறி,ஏறி, ஏறி ...... அட்டகாசம் போங்கோ ! ;))))))

    >>>>>>>>

    ReplyDelete
  16. எதைச்சொல்வது எதை விடுவது?

    ஒவ்வொன்றையும் உற்று நோக்கி, வர்ணித்து, சொல்லிக்கொண்டே போக எனக்கும் ஆசை தான்.

    ’ஆசை இருக்கு தாஸில் பண்ண .. ஆனால் அதிர்ஷ்டம் இருக்கு என்னவோ மேய்க்க ! ’ என்பார்கள்.

    உங்களுக்கு யானைகளையே மேய்க்கக்கூட அதிர்ஷ்டம் உள்ளது.

    அதில் எனக்குமோர் அலாதியான சந்தோஷம் தான்.

    >>>>>

    ReplyDelete
  17. கடைசி இரண்டு படங்களும் அற்புதம். அபாரம். ப்ரும்மாண்டம்.

    அகிலாண்ட கோடி பிரும்மாண்ட நாயகியே!

    என் பழைய பின்னூட்டங்களைப்போய் மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்.


    >>>>>>>

    ReplyDelete
  18. படங்களும், பட விளக்கங்கள் அத்தனையும் அருமையோ அருமை.

    அருமையான அழகான பதிவினை இன்று அள்ளிக்கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    சிறப்பான பாராட்டுக்கள்.

    இனிய வாழ்த்துகள்.

    என்றும் இனிமையாய்
    வாழ்க வாழ்கவே !

    ooooooo

    ReplyDelete
  19. இராஜராஜேஸ்வரி said...
    வை.கோபாலகிருஷ்ணன் said...
    படங்களும், பட விளக்கங்கள் அத்தனையும் அருமையோ அருமை.

    அருமையான அழகான பதிவினை இன்று அள்ளிக்கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    சிறப்பான பாராட்டுக்கள்.

    இனிய வாழ்த்துகள்.

    என்றும் இனிமையாய்
    வாழ்க வாழ்கவே !


    பிரம்மாண்டமான யானைபோல ஜொலிக்கும்படி உற்சாகமாக ரசனையாக அளித்த அத்தனை கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  20. viji said...
    Aiyoooooooooooo
    I enjoyed it.............
    loved it.................
    thankyou dear, for a lovely post...
    viji

    வாங்க விஜி வாங்க உற்சாகமாக ரசனையுடன் அளித்த கருத்துரைக்கு
    மனம் நிறைந்த இனிய நன்றிகள்

    ReplyDelete
  21. இளமதி said...
    அட.. அட.. என்ன அழகு! அருமை! நல்ல தகவல்கள்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி!/

    வாங்க இளமதி ..இனிய நிலவாய் அழகாய் அளித்த கருத்துரைக்கு
    மனம் நிறைந்த இனிய நன்றிகள்

    ReplyDelete
  22. Sasi Kala said...
    என்ன அழகு என்ன அழகு யானைகளுக்கும் அழகி போட்டியும் உண்டா அதிசயம் தான்./

    வாங்க இனிய தென்றலே ..!

    அதிசயமாய் ரசித்து
    அழகாய் அளித்த கருத்துரைக்கு
    மனம் நிறைந்த இனிய நன்றிகள்

    ReplyDelete
  23. RAMVI said...
    யானைப்படங்கள் கண்களையும் தகவல்கள் மனதையும் கவர்ந்தது.
    அழகு யானைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.
    சிறப்பான பதிவு.

    வாங்க ராம்வி ..!

    சிறப்பான கருத்துரைகள் அளித்ததற்கு
    மனம் நிறைந்த இனிய நன்றிகள்

    ReplyDelete
  24. "கிழக்கு வாசல் உதயம்” என்றொரு தமிழ் மாத இதழ்.

    நான் தொடர்ச்சியாக சந்தா கட்டி விரும்பி வரவழைத்து படித்து மகிழும் அழகானதோர் பத்திரிகை.

    அதன் ஆசிரியர்:

    திரு. உத்தம சோழன் என்பவர்.

    டிஸம்பர் 2012 இதழ் இப்போது என் கையில். அதில் திரு. உத்தம சோழன் தலையங்கம் எழுதியுள்ளார்கள்.

    தலைப்பு:

    “ வாழ்தல் என்பது பிறர் மனதில் வாழ்வதுதான்..! ”

    இதைப்படித்தவுடன் எனக்கு ஏனோ தங்கள் ஞாபகம் மட்டுமே வந்தது.

    ஞாபகமாக உடனே இங்கு இப்போது பகிர்ந்து கொண்டுள்ளேன் ......... மறக்காமல் இருக்க மட்டுமே. ;)

    -oOo-

    ReplyDelete
  25. ஸ்ரவாணி said...
    அட , நம்ம பக்கத்து ஊரில தானா ??
    செய்தி வியக்க வைக்குது !

    வாங்க ஸ்ரவாணி ..!

    தங்கச்சுரங்கமாய் வியப்பான கருத்துரைக்கு மனம் நிறைந்த
    இனிய நன்றிகள்

    ReplyDelete
  26. திண்டுக்கல் தனபாலன் said...
    ஆஹா... அருமை... அருமை.../

    அருமையான கருத்துரைக்கு
    மனம் நிறைந்த
    இனிய நன்றிகள்

    ReplyDelete
  27. கோமதி அரசு said...
    சர்வதேச யானைகள் திருவிழா பற்றிய சிறப்பான செய்திகள் அருமை. கண்கவர் யானைகள் கண்காட்சி.
    படங்கள் எல்லாம் அழகு.
    அழகு யானை சித்வான் காலிக்கு வாழ்த்துக்கள்.

    பகிர்வுக்கு நன்றி./

    வாங்க கோமதி அரசு அவர்களே .!

    மனம் கவரும்படி அழகான கருத்துரை அளித்ததற்கு நிறைந்த
    இனிய நன்றிகள்

    ReplyDelete
  28. கவியாழி கண்ணதாசன் said...
    ஆஹா..எத்தனை அருமை அத்தனையும் சிறப்பு மீண்டும் தொடங்கட்டும் அடுத்த சாதனை.வாழ்த்துக்கள்..//

    வணக்கம் கவியாழி கண்ணதாசன் அவர்களே..!

    சிறப்பான கருத்துரைகள் வழங்கி உற்சாகப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்

    ReplyDelete
  29. Seeni said...
    arumai!

    arumai!
    arumai

    pakirvukku mikka nantri sako..!

    வணக்கம் சீனு அவர்களே ..!

    அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    ReplyDelete
  30. பழனி. கந்தசாமி said...
    காணக் கண்கோடி வேண்டும்.

    வணக்கம் பழனி. கந்தசாமி ஐயா அவர்களே ..!

    ரசித்து அளித்த கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  31. வை.கோபாலகிருஷ்ணன் said...
    எதைச்சொல்வது எதை விடுவது?

    ஒவ்வொன்றையும் உற்று நோக்கி, வர்ணித்து, சொல்லிக்கொண்டே போக எனக்கும் ஆசை தான்.

    ’ஆசை இருக்கு தாஸில் பண்ண .. ஆனால் அதிர்ஷ்டம் இருக்கு என்னவோ மேய்க்க ! ’ என்பார்கள்.

    உங்களுக்கு யானைகளையே மேய்க்கக்கூட அதிர்ஷ்டம் உள்ளது.

    அதில் எனக்குமோர் அலாதியான சந்தோஷம் தான். /
    வாங்க ஐயா திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே ..

    பதிவைத்தான் மேய்த்து வருகிறோம் .../

    வெள்ளையானை போல நேரத்தையும் காலத்தையும் வெகுவாக விழுங்கி குடும்பத்தில் வேண்டாத எதையே மேய்ப்பதாக புகழ் வாங்கித்த்ருகிறது ...

    ReplyDelete
  32. வை.கோபாலகிருஷ்ணன் said...
    "கிழக்கு வாசல் உதயம்” என்றொரு தமிழ் மாத இதழ்.

    நான் தொடர்ச்சியாக சந்தா கட்டி விரும்பி வரவழைத்து படித்து மகிழும் அழகானதோர் பத்திரிகை.

    அதன் ஆசிரியர்:

    திரு. உத்தம சோழன் என்பவர்....
    .................
    ஞாபகமாக உடனே இங்கு இப்போது பகிர்ந்து கொண்டுள்ளேன் ......... மறக்காமல் இருக்க மட்டுமே. ;)//

    நிறைவான நன்றிகள் ஐயா ..

    “ வாழ்தல் என்பது பிறர் மனதில் வாழ்வதுதான்..! ”

    அழகான மனம் கவர்ந்த தலையங்க வரிகள் தந்து மகிழ்வித்தற்கு ...

    ReplyDelete
  33. ஆஹா! எத்தனை யானைகள்! சின்னது, அதற்கும் சின்னது, பொடிசு; பெரிசு, அதற்கும் பெரிசுன்னு. ஹோஹோஹோஹோ...

    ஸ்ரீராம் வந்து பார்த்துட்டு போயிட்டாரான்னு ஒரு தடவை
    மேலிருந்து கீழ் பார்த்தேன். இன்னும் வரலைன்னு தெரிஞ்சது.

    ReplyDelete
  34. ஜீவி said...
    ஆஹா! எத்தனை யானைகள்! சின்னது, அதற்கும் சின்னது, பொடிசு; பெரிசு, அதற்கும் பெரிசுன்னு. ஹோஹோஹோஹோ...

    ஸ்ரீராம் வந்து பார்த்துட்டு போயிட்டாரான்னு ஒரு தடவை
    மேலிருந்து கீழ் பார்த்தேன். இன்னும் வரலைன்னு தெரிஞ்சது./

    வணக்கம் திரு . ஜீவி ஐயா அவர்களே ...

    உற்சாகமாய் ரசித்து அளித்த கருத்துரைகளுக்கு மகிழ்ச்சியான நன்றிகள் ஐயா..

    ஸ்ரீராம் கொஞ்சநாட்களாக இந்த பதிவுப் பக்கம் காணவில்லை..!

    ReplyDelete
  35. முதலில் இந்தப் பதிவே ஒரு திருவிழாவாக உள்ளது என்றுதான் கூற வேண்டும்.
    யானைகளின் படங்கள் வண்ணக் கலவை. பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. குருவாயூரில் யானைகள் வளர்க்கும் இடத்திற்கு மீண்டும் சென்று வந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டில் எல்லாவற்றுக்கும் விழா உண்டு. யானைகளுக்கு ஒரு திருவிழா தரும் இப்பதிவு பெருமைக்குரியது.

    ReplyDelete
  36. வர்ணம் தீட்டுகிறதே யானை !.......அருமையாக உள்ளது படங்களுடன்
    கொடுக்கப்பட்ட தகவல் மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரி .

    ReplyDelete
  37. ஆடும், ஓடும் யானைகளின் படங்களை எங்கிருந்து பிடித்தீர்கள் அம்மா...?
    இப்படிப்பட்ட படங்களை இணையதளத்தில் தேடுவது எப்படி...?

    ReplyDelete
  38. ஜீவி said...
    ஆஹா! எத்தனை யானைகள்! சின்னது, அதற்கும் சின்னது, பொடிசு; பெரிசு, அதற்கும் பெரிசுன்னு. ஹோஹோஹோஹோ...

    ஸ்ரீராம் வந்து பார்த்துட்டு போயிட்டாரான்னு ஒரு தடவை
    மேலிருந்து கீழ் பார்த்தேன். இன்னும் வரலைன்னு தெரிஞ்சது.//

    கனவில் துரத்திய யானைகள் இங்கே காண வருவாரா..!

    ReplyDelete
  39. Advocate P.R.Jayarajan said...
    முதலில் இந்தப் பதிவே ஒரு திருவிழாவாக உள்ளது என்றுதான் கூற வேண்டும்.
    யானைகளின் படங்கள் வண்ணக் கலவை. பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. குருவாயூரில் யானைகள் வளர்க்கும் இடத்திற்கு மீண்டும் சென்று வந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டில் எல்லாவற்றுக்கும் விழா உண்டு. யானைகளுக்கு ஒரு திருவிழா தரும் இப்பதிவு பெருமைக்குரியது

    வழக்கறிஞர் ஐயாவுக்கு வணக்கம் ..

    மகிழ்ச்சியான கருத்துரைகள் அளித்தமைக்கு மனம் நிறைந்த
    இனிய நன்றிகள்..

    ReplyDelete
  40. அம்பாளடியாள் said...
    வர்ணம் தீட்டுகிறதே யானை !.......அருமையாக உள்ளது படங்களுடன்
    கொடுக்கப்பட்ட தகவல் மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரி ./

    வாங்க அம்பாள்டியாள் ...

    இனிய கருத்துரைகளுக்கு மனம்
    நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  41. அனைத்தையும் ரசித்தேன்.....

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  42. படங்களை கண்டு களித்தேன்.

    ReplyDelete
  43. // கனவில் துரத்திய யானைகள் இங்கே காணவருவாரா?.. //

    அதே!

    ReplyDelete
  44. என்ன அழகான மிக சிறப்பான காட்சிகள்.
    47வதாகத் தான் வந்துள்ளேன்.
    ஆயினும் வந்திட்டேன் அது மகிழ்வு.
    இல்லாததற்குக் கவலைப்படக் கூடாது.
    மிக்க நன்றி.
    இனிய வாழ்த்து.

    ReplyDelete
  45. "ஆணை ஆணை அழகர் ஆணை "
    பாட்டு நினைவிற்கு வருகிறது.

    யானைப் பார்க்கப் பிடிக்காதவர்கள் யார்.

    அத்தனை படங்களும் அருமை.
    animated cartoons எல்லாம் ஜோர்.
    பாராட்டுக்கள்.
    ராஜி

    ReplyDelete
  46. சர்வதேச யானைகளின் அழகிப் போட்டியைக் கண்டு மகிழ்ந்தேன். யானை பற்றிய எந்தச் செய்தியானாலும் ஓட்டமாய் ஓடி வந்துடுவேன். இங்கே வந்து பார்த்தால், யப்ப்ப்ப்ப்பா எத்தனை எத்தனை நண்பர்கள்! அதிலும் இன்னிக்குக் காலம்பர திருப்பனந்தாள் குட்டியானையைப் பத்திப் படிச்சு நொந்து போன மனசுக்கு ஒரு ஆறுதலாக இருந்தது! தொலைக்காட்சியிலே எங்காவது யானை படம் இருந்தாக்கூட எங்க வீட்டிலே எல்லாரும் என்னைக் கூப்பிட்டுடுவாங்க. அவ்வளவு யானைப் பைத்தியம்! :)))))

    ReplyDelete
  47. ஆஹா... இதில் எந்த யானை என்னைத் துரத்தியது... ஒவ்வொரு நாள் ஒவ்வொரு யானையா? யானைகள் என்றால் எனக்கும் ரொம்பப் பிடிக்கும், கீதா மேடம் போல! அருகிலிருந்து அதன் ஒவ்வொரு அசைவையும் ரசிக்கப் பிடிக்கும். இங்கு எத்தனையெத்தனை யானைகள்... நேரில் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். காண கண்கோடி வேண்டும்.

    ReplyDelete