Tuesday, April 2, 2013

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி

siva
உன்னையல்லால் வேறே தெய்வம் இல்லையம்மா
உலகெல்லாம் ஈன்ற அன்னை ...நீயே
மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாக்ஷிஎன பல பெயருடன்
எங்கும் நிறைந்தும் மனக்கோவிலிலும் உறையும்
அகிலாண்டகோடி பிரம்மாண்ட  நாயகியாம் அன்னை பார்வதிதேவி ஆதியில் தவம் புரிந்த புண்ணியதிருத்தலம் விண்ணவர், மண்ணவர் என யாவரும் வந்து தொழும் அரனாரின் அளப்பரிய புகழ் கொண்ட திருப்பழுவூர் சிவாலயம். தற்போது கீழப்பழுவூர் என்று அழைக்கப்படுகிறது.

அம்பாள் சந்நிதி ஒரு சுற்றைக் கொண்டு தனிக் கோவிலாகவே காணப்பெறுகிறது

அம்பாள் ஸ்ரீயோக தபஸ்வினி என்னும் திருநாமம் கொண்டு நின்ற கோலத்தில்பேரருள் புரிகிறாள். 
தவக்கோல அம்மன்

தமிழில் அருந்தவ நாயகி ,. மகாதபஸ்வினி என்றும் அம்பிகை துதிக்கப்படுகிறாள். 
அம்மன் அருந்தவ நாயகி

யோகக் கலையையும் திருமணவரத்தையும் ஒருசேர அளிப்பவள் அன்னை ..!

பெரும்புகழும் அருளும் கொண்ட பழுவூர் சிவாலயம்  சிந்தையைத் தூண்டும் அளவிற்கு கலையெழில் கொண்டு திகழ்கிறது.
ganesha and mushi Pictures, Images and Photos
 கஜமுகாசுரனை அழித்த களிப்பில் கணபதி ஆனந்த நடனம் புரிந்த அற்புதத்திருத்தலம்...

தாயைக் கொன்ற பழி நீங்கிட பரசுராமர் வழிபட்டு பரமனாரின் அருள் பெற்றுள்ளார்.

பிரம்மா, திருமால், இந்திரன், சந்திரன், சண்டிகேஸ்வரர், அகத்தியமாமுனிவர், காசிப மகரிஷி, வியாசர் போன்றோரும்  திருப்பழுவூர் சிவபெருமானை வழிபட்டுவரங்கள் பல பெற்றுள்ளனர்.

திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகம் பாடியருளியுள்ளார்.

ராமலிங்க வள்ளலாரும் தனது அருட்பாவில்  புகழ்ந்துரைத்துள்ளார். 

அருணகிரிநாதர் திருப்பழுவூர் தல முருகன்மீது திருப்புகழ் பாமாலைஒன்றைச் சூட்டியுள்ளார்

பிருத்வி தத்துவத்தை விளக்கும் புற்று வடிவான இத்தல சிவன்மீது, வருடந்தோறும் பங்குனி மாதம் 18-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு சூரியக் கதிர்கள் படர்வது சிறப்பான காட்சியாகும்.

தஞ்சை மற்றும் திருவாரூர் ஆலய வாயில் கோபுரங்களை நினைவுபடுத்தும் வகையில் ஏராளமான சிற்பங்களைக் கொண்டு, சற்று அகலமாக உருவாக்கப்பட்டுள்ளது மூன்றுநிலைகள் கொண்ட கிழக்கு நோக்கி அழகிய  ராஜகோபுரம்.மாமன்னன் இராஜேந் திர சோழனால் அமைக் கப் பெற்றது,,

கருவறையுள் கருணாமூர்த்தியாய் அருள்பாலிக்கின்றார் ஸ்ரீவடமூலநாதர். 
"பழு' என்றால் ஆலமரம். எனவே சுவாமி "ஆலந்துறையார்' எனப்படுகிறார்.
ஆலயத்திற்கு வெளியே தல மரமான ஆலமரம பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. 

தல தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும் கொள்ளிடமும் விளங்குகின்றன.
புற்று வடிவாய்,மண் லிங்கமாக சதுர ஆவுடையாரின் நடுவே அபூர்வ தோற்றத்துடன் அருட்காட்சிநல்குகிறார். 

அபிஷேகத்தின்போது குவளை சாற்றப்படுகின்றது. மிகவும்அரிய தரிசனம் ....
மூலவர் ஆலந்துறை நாதர்

லிங்கம் மிகச்சிறியது என்பதால் அடையாளம் காட்ட, அதன் மீது ஒரு 
குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது. 
இந்த குவளைக்கே அபிஷேகம் நடக்கும். 

பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் தாலுகாவில், அரியலூரிலிருந்து 12கிலோமீட்டர் தொலைவில், திருச்சி- அரியலூர் பேருந்து சாலையில் முக்கியநிறுத்தமாக உள்ளது கீழப்பழுவூர். 

திருச்சியிலிருந்து  ஊருக்கு வரநேரடி பஸ்கள் உள்ளன.


41 comments:

  1. அற்புத தரிசனம்!

    ReplyDelete
    Replies
    1. அற்புத தரிசனம்!//

      வாங்க நிலாமகள் ..கருத்துரைக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

      Delete
  2. உன்னையல்லால் வேறே தெய்வன் இல்லையம்மா பாடல் மாகராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடியது எனக்கு மிகவும் பிடிக்கும்.

    படங்கள் அழகு. பிள்ளையாரின் நடனம் அற்புதம்.
    அருந்தவநாயகி, ஆலந்துறைநாதர் தரிசனத்திற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. //உன்னையல்லால் வேறே தெய்வன் இல்லையம்மா பாடல் மாகராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடியது எனக்கு மிகவும் பிடிக்கும்.

      படங்கள் அழகு. பிள்ளையாரின் நடனம் அற்புதம்.
      அருந்தவநாயகி, ஆலந்துறைநாதர் தரிசனத்திற்கு நன்றி//

      வாங்க கோமதி அரசு அவர்களே ..
      வாழ்க வளமுடன் ...
      அருமையான கருத்துரைக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

      Delete
  3. நல்ல பகிர்வு. பல தகவல்கள்....

    படங்களும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. //நல்ல பகிர்வு. பல தகவல்கள்....

      படங்களும் அருமை. //

      வணக்கம் திரு வெங்கட் நாகராஜ் அவர்களே..!

      அருமையான கருத்துரைக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

      Delete

  4. திருச்சியில் பல வருடங்கள் இருந்தும் அறியாத தகவல்கள் . நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா ..

      அருமையான கருத்துரைக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா...

      Delete
  5. Replies
    1. வணக்கம் அருள் அவர்களே ..!

      அருமையான கருத்துரைக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

      Delete
  6. கீழப் பழுவூர் ஆலயம் பற்றிய செய்திகள் அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி.
    தெய்வீகப் படங்களும் மனம் கவர்ந்தன
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மூங்கில் காற்றுக்கு வணக்கம்,

      அருமையான கருத்துரைக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

      Delete
  7. அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகிக்கு என் வந்தனங்கள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா..

      இனிய வந்தனம் ...

      Delete
  8. //உன்னையல்லால் வேறே தெய்வம் இல்லையம்மா//

    உண்மை, உண்மை, உண்மை ;)))))

    நினைத்தாலே இனிக்கிறது. மன்ம் குளிர்கிறது,

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இனிமையான கருத்துரைகளுக்கு குளுமையான நன்றிகள்..

      Delete
  9. //உலகெல்லாம் ஈன்ற அன்னை ...நீயே மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாக்ஷிஎன பல பெயருடன் எங்கும் நிறைந்தும் மனக்கோவிலிலும் உறையும் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாம் அன்னை பார்வதிதேவி ஆதியில் தவம் புரிந்த புண்ணியதிருத்தலம் விண்ணவர், மண்ணவர் என யாவரும் வந்து தொழும் அரனாரின் அளப்பரிய புகழ் கொண்ட திருப்பழுவூர் சிவாலயம். தற்போது கீழப்பழுவூர் என்று அழைக்கப்படுகிறது.//

    ஆஹா, மிகவும் அழகான அற்புதமானத் தகவல்

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. அற்புதமான கருத்துரைகள் அளித்து
      உற்சாகப்படுத்துவதற்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

      Delete
  10. அழகு, அற்புதம் நிறைந்த அருமையான படங்களும் பதிவும் சகோதரி!
    மிக சிறப்பு. மிக்க நன்றி பகிர்வுக்கு...

    ReplyDelete
    Replies
    1. வாஙக் இளமதி

      சிறப்பான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

      Delete
  11. //தமிழில் அருந்தவ நாயகி,. மகாதபஸ்வினி என்றும் அம்பிகை துதிக்கப்படுகிறாள்.//

    இரண்டு பெயர்களுமே அழகோ அழகு தான். அருந்தவம் செய்தவர்கள் மட்டுமல்லவோ இந்தத்தங்களின் பதிவினைப்படிக்க முடியும்!!! ;)

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்துரைக்கு
      மனம் மகிழ்ந்த இனிய நன்றிகள் ஐயா...

      Delete
  12. //"பழு' என்றால் ஆலமரம். எனவே சுவாமி "ஆலந்துறையார்' //

    புதியதொரு தகவல், தகவல் களஞ்சியத்திடமிருந்து.

    //லிங்கம் மிகச்சிறியது என்பதால் அடையாளம் காட்ட, அதன் மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த குவளைக்கே அபிஷேகம் நடக்கும்.//

    சிவனுக்கே ஹெல்மெட்டா? ;)))))

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. புதிய கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா...

      Delete
  13. //பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் தாலுகாவில், அரியலூரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில், திருச்சி>>>>அரியலூர் பேருந்து சாலையில் முக்கியநிறுத்தமாக உள்ளது கீழப்பழுவூர். திருச்சியிலிருந்து ஊருக்கு வரநேரடி பஸ்கள் உள்ளன.//

    பயனுள்ள [நல்]வழிகாட்டி தான் தாங்கள். வழிகாட்டுதல் சிறப்பானது.

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. பயனுள்ள கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா...

      Delete
  14. இன்றைய பதிவு வழக்கம் போல மிக அருமையான படங்களுடனும், சிறப்பான தகவல்களுடனும், பிரும்மாண்டமான தலைப்புடன் அமைந்துள்ளது.

    முதல் படத்தில் அபிஷேகப்பிரியனான சிவன் தலையில் சொட்டுச்சொட்டாக விழுந்து கொண்டிருக்கும் அபிஷேக தீர்த்தமும், அசையும் நெற்றிக்கண்ணும், பாம்பு, உடுக்கை, சூலாயுதம், சங்கு போன்ற அனைத்தும் அருமையோ அருமையாக, எனக்கு மிகவும் பிடித்துள்ளன.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
    .
    ooooo 867 ooooo

    ReplyDelete
    Replies
    1. அருமையான ரசனை மிக்க
      பிரம்மாண்டமான கருத்துரைகளால்
      பதிவை பெருமைப்படுத்தியதற்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா...

      Delete
  15. படங்கள் மிகவும் அருமை அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..

      அருமையான வாழ்த்துகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

      Delete
  16. நல்ல பகிர்வு மிக்க நன்றி .....

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க

      அருமையான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

      Delete
  17. நல்ல பகிர்வு மிக்க நன்றி .....

    ReplyDelete
  18. It is new to me. Paluoor......
    reading this name i remember Ponninselvan............
    Nice post new places to know with.
    Thanks.
    viji

    ReplyDelete
    Replies
    1. வாங்க விஜி வாங்க ....

      பொன்னியின் செல்வனில் பழுவேட்டரையர்களும் பழுவூரும் மறக்கூடியதா என்ன ??

      கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

      Delete
  19. "சிவாய நம என சிந்திப்போர்க்கு அபாயம் ஓர் நாளும் இல்லையே"- தெய்வீக தரிசனம். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாஙக் உஷா அன்பரசு ..

      ஓம் நம சிவாய ..

      அருமையான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

      Delete
  20. விநாயகனின ஆனந்த நடனம் அழகோ அழகு .

    திருப்பழுவூர் சிவாலயம் பற்றிய தகவல் புதிய தகவல்.
    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  21. வாங்க வாங்க

    கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

    ReplyDelete
  22. ஆனந்த நடனமிடும் கணபதி கண்ணிலேயே நிற்கிறார். மஹாதபஸ்வினி - அருந்தவ நாயகி - என்ன ஒரு அற்புதமான மொழியாக்கம்!

    ReplyDelete
  23. அன்புடையீர்,

    வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு: http://blogintamil.blogspot.in/2015/06/12.html

    ReplyDelete