Friday, July 26, 2013

ஸ்ரீ வளைகாப்பு நாயகி





குங்குமம் மங்கள மங்கையர் குங்குமம்
குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்

திங்கள் முகத்தில் செம்பவளம் - என திகழும் மங்கள குங்குமம்
தேவி காமாட்சி திருமுக தாமரை தேக்கும் மங்கள  குங்குமம்

காசி விசாலாட்சி கருணை முகத்தில் கலங்கரை காட்டும்  குங்குமம்
கண்ணகியோடு மதுரை  நகரில் கனலாய் எழுந்த குங்குமம்

திருச்சி உறையூரில் ஸ்ரீ குங்குமவல்லி சமேத ஸ்ரீதான் தோன்றீஸ்வரர் ஆலய
 அம்பாளுக்கு, ஸ்ரீ வளைகாப்பு நாயகி எனும் திருநாமமும் உண்டு.
  
தெற்கு நோக்கி அமைந்துள்ள அம்மன் சன்னதியில் அம்மன் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன்  அருள் பொழிகிறாள்..!

தெற்கு பிராகரத்தில் கம்பீரமாக காட்சி தரும் தில்லைகாளிக்கு பவுர்ணமியன்று சிறப்பான பூஜையும், யாகமும் நடைபெறுகிறது. \
இருபத்தேழு வகையான அபூர்வ மூலிகைகளுடன்  மிளகாய் வற்றலும் இந்த யாகத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்வதால் மனக்கஷ்டம் நீங்கும். 
கை, கால் வலி உள்ளவர்கள் எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுகின்றனர்.

அருள்பாலிக்கும் குங்குமவல்லி அம்பிக்கைக்கு வருடந்தோறும் தை மாதம் மூன்றாவது வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வளைகாப்பு உற்சவ விழாவில் கர்ப்பிணிகளும், குழந்தை பாக்கியம், மணப்பேறு வேண்டுபவர்களும் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். 

 ஆயிரக்கணக்கான வளையல்களைக் கொண்டு அம்மனை அலங்காரம் செய்வார்கள். அந்த வளையல்களை அங்கு வரும் பெண்களை அம்மனாக பாவித்து அவர்களுக்கும் அணிவிப்பர். 

வெள்ளிக் கிழமையன்று கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல் அணிவிப்பதால், அவர்கள் சுகப் பிரசவத்தில் குழந்தை பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. 

சனிக்கிழமையன்று குழந்தை இல்லாத பெண்களுக்கு வளையல் அணிவிக்க, அவர்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும். 

ஞாயிறன்று மணமாகாத பெண்கள் வளையல் அணிந்து கொள்ள, அவர்களுக்கு விரைவாக திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை.

செல்வவளம் தரும் மகாலட்சுமி சன்னதிக்கு நேராக வில்வதளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. மகாலட்சுமியின் அம்சமே வில்வம் என்பதால், இத்தகைய அமைப்பு இயற்கையாகவே ஏற்பட்டுள்ள மிகவும் விசேஷமான அமைப்பு.

 பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியில் பூஜை செய்தால் செல்வ வளம் ஏற்படும் ..!

செல்வ விநாயகர், நடராஜர் சன்னதிகளும் இங்கு உள்ளன.

சூரவாதித்த சோழ மன்னன் ஒருமுறை நாகலோகம் சென்று நாகலோகத் தலைவரான ஆதிசேஷனின் அனுமதி பெற்று நாக கன்னிகையான காந்திமதியை சூரவாதித்தன் மணந்து கொண்டான். 

காவிரிக்கரையில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, "தாயும் ஆனவன்' என பெயர் பெற்ற சிவபெருமான், தன் பக்தையான தாய்மையடைந்த காந்திமதியின் மீது இரக்கம் கொண்ட சிவன், தானே அங்கு தோன்றினார்.

பிரசவம் ஆகும் வரை,  மலைக்கு வந்து என்னை தரிசிக்க வேண்டாம். இங்கேயே உனக்காக நான் லிங்கவடிவில் அமர்வேன். நீ இவ்விடத்திலேயே என்னை வணங்கி திரும்பலாம்.தானாக உன் முன் தோன்றிய எனக்கு "தான் தோன்றீஸ்வரர்' என்ற திருநாமம் ஏற்படும். என் மனைவி பார்வதிதேவி, உன் போன்ற பெண்களுக்கு தாயாய் இருந்து பிரசவம் பார்ப்பாள். குங்குமம் காப்பாள். அவளுக்கு "குங்குமவல்லி' என்ற திருநாமம் ஏற்படும்,'' என்றார்.

காந்திமதி மகிழ்ச்சியடைந்து பிரசவ காலம் வரை அங்கு வந்து இறைவனை வணங்கி, அழகிய குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

இறைவன் சுயம்புவாக லிங்கத் திருமேனியராக எழுந்தருளியுள்ளார். 
நவகிரக நாயகர்கள் தம்பதி சமேதராய் வாகனங்களில் எழுந்தருளியிருப்பது கோயிலின் தனி சிறப்பு.  எனவே சிறந்த கிரக பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

குங்குமவல்லிக்கு வளையல் அணிவித்து பூஜை செய்வது விசேஷம். 


நவராத்திரியின்போது தினமும் மகா சண்டி ஹோமம் நடைபெறும். கர்ப்பிணிகளும், திருமண தடையால் தவிப்பவர்களும், பிள்ளை பாக்கியம் இல்லாதவர்களும் ஹோமத்தில் பங்கேற்று அம்மனை வணங்கினால் சுகப்பிரசவம் நிகழும், நல்ல வரன் அமையும், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது நம்பிக்கை.




23 comments:

  1. VERY VERY GOOD MORNING !

    வளைகாப்பு நாயகிக்கு வந்தனங்கள். !!


    >>>>>

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா
    புதிய புதிய கருத்துக்களுடன் புதிய புதிய திருப்பங்களுடன் ஒவ்வொரு நாளும் பதிவுகள் மலர்வதை நினைத்து மிக மகிழ்ச்சியாக உள்ளது பதிவு மிக அருமை படங்களும்அருமை வாழ்த்துக்கள் அம்மா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அழகழகான வளையல் குவியல்களுடன் அற்புதமான நம்மூர் அம்மன்களின் படங்கள். சந்தோஷம்.

    >>>>>>

    ReplyDelete
  4. வழக்கம்போல அருமையான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மகிழ்ச்சி.

    >>>>>>

    ReplyDelete
  5. அழகான இன்றைய பதிவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ooooo 982 ooooo

    ReplyDelete
  6. ஆடி வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற அழகான பதிவு மனதுக்கு இதமாக உள்ளது.

    -oOo-

    ReplyDelete
  7. என் அன்னையின் அழகுத் திருக்கோலத்தைக் கண்டு வியந்தேன் .காணக் கண்கோடி வேண்டும் .தூண்டில் போட்டு இழுக்கும் துயரை வேண்டும் வரம் கொண்டு வெட்டி விடுவாள் ......அழகிய திருவுருவம்
    காண வழிசெய்த என் தோழிக்கு
    மிக்க நன்றி ......................

    ReplyDelete
  8. அருமையான அம்மன் தரிசனம்... நன்றி...

    ReplyDelete
  9. படங்கள் + தகவல்கள் அருமை... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...

    ReplyDelete
  10. நாங்கள் இருந்த திருச்சிக்கு மிக அருகே இருக்கும் உறையூரில் இந்த கோவிலுக்கு நான் சென்றதில்லை. ஒரு வேலை பஞ்ச வர்ணீச்வரர் கோவில் ஆக இருக்குமோ.? வை. கோ வுக்கு தெரிந்திருக்கலாம்.

    நல்ல வர்ணனை. குங்குமம் பாட்டை நானும் பாடுவேன்.


    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. To Mr. SURY SIVA Sir,

      ஐயா, வணக்கம். பஞ்ச வர்ணீஸ்வரர் கோயில், நாச்சியார் கோயில் போன்றவைகள் உறையூரில் காலம் காலமாக இருந்து வரும் பழமை வாய்ந்த கோயில்கள்.

      இந்த இவர்கள் சொல்லும் கோயில் உறையூர் செல்லும் சாலை ரோட்டின் மீது உள்ளது. பழைய பத்மாமணி தியேட்டர் [இன்றைய ருக்மணி தியேட்டர்] அருகே உள்ளது.

      தில்லைநகர் ஆர்ச் வளைவுக்கும் உறையூர் பஸ் ஸ்டாண்டுக்கும் இடையே புதிதாக ஒரு 10 ஆண்டுகளுக்குள் தோன்றியுள்ளது.

      கடந்த 4-5 ஆண்டுகளாக மட்டுமே பிரபலமாகியுள்ளது.

      நானே சென்ற ஆண்டு தான் இவர்களின் பதிவினைப்பார்த்து விட்டுப்போய் தரிஸனம் செய்து வந்தேன்.

      தமிழ்நாட்டில் பக்தி சம்பந்தமாக நிறைய வார / மாத இதழ்கள் இப்போது வெளியாகி வருகின்றன. அதில் இடம்பெறும் கோயில்கள், ஸ்வாமிகள், அம்பாள்கள் இவற்றிற்கு மட்டுமே ஜனங்கள் கூட்டம் அலை மோதுகிறது.

      கோயிலே ஆனாலும், தெய்வமே ஆனாலும், விளம்பரம் தேவைப்படுகிறது என்பதே உண்மையாக உள்ளது.

      நான் என் மனைவியுடன் சென்ற ஆண்டு போனபோது, என்னைப்போலவே பலதம்பதிகள் முதன்முதலாக அந்தக்கோயிலுக்கு வருகை தந்திருந்தனர்.

      அவர்களில் சிலரை நான் பேட்டி கண்டபோது, அதன் சிறப்பை வெவ்வேறு வார / மாத இதழ்களில் ப்டித்து அறிந்ததாகச் சொன்னார்கள்.

      இது உங்கள் தகவலுக்காக மட்டுமே.

      அன்புடன்
      VGK

      Delete
  11. வளைகாப்பு நாயகியை மனம் குளிர தரிசனம் செய்யும் பாக்கியம் உங்களால் அடைகிறோம்.
    அந்தப் படங்களை பார்த்து பார்த்து , எத்தனை முறை பார்த்தேன் என்று சொல்ல முடியவில்லை. பரவசமானேன்.
    நன்றி

    ReplyDelete
  12. வளைகாப்பு நாயகியின் தரிசனம் மனதுக்கு மகிழ்ச்சி. மிக அழகான அம்மனின் படங்கள். நன்றி.

    ReplyDelete
  13. ஆடி வெள்ளியன்று அருமையான தரிசனம். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  14. வளைக்கர நாயகி தாளடி போற்றத்
    திளைத்திடும் தாய்மையின் பேறு!

    அற்புத தரிசனம். ஆனந்தம்!

    அழகிய படங்களும் பதிவும் சகோதரி!

    பகிர்விற்கு இனிய நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  15. ஸ்ரீ வளைகாப்பு நாயகி பற்றிய பகிர்வு அருமை. ஸ்ரீ குங்குமவள்ளி சமேத ஸ்ரீ தான் தோன்றீஸ்வரர் பற்றியும் படித்து அறிந்து கொண்டேன். வளையல்கள் நடுவில் அம்பாள் அற்புத தரிசனம்.

    ReplyDelete
  16. ஆஹா ஆஹா, என்ன அருமையான காட்சியும், பதிவும்........ நன்றி, மிக்க நன்றி !

    ReplyDelete
  17. வளைகாப்பு நாயகி குறித்த பகிர்வும் படங்களும் அருமை...

    ReplyDelete
  18. சுப்புத் தாத்தாவின் பதிவில் பார்த்துட்டு வந்தேன். இந்தக் கோயிலுக்குப் போகணும். இன்னும் உறையூர்ப்பக்கம் போகலை. போனால் கட்டாயமாப்போயிட்டு வரேன். தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  19. வளையல்களினால் அம்மன் அலங்காரம்.. இதுபோல் நான் கண்டதில்லை.

    ReplyDelete
  20. வளையல் அம்மனைப் பற்றி ஏற்கனவே நான் உங்கள் வலைத்தளத்தில் படித்ததாக நினைவு.. திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்களின் கருத்துரை சந்தேகத்தைப் போக்கியது. படங்களுக்க்காக எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

    ReplyDelete
  21. வளையல் அலங்காரங்கள் அனைத்தும் அழகு.......

    ReplyDelete
  22. அன்பின் இராஜ இராஜேஸ்வரி

    வளைகாப்பு நாயகி - பதிவு அருமை - படங்கள் அத்தனையும் அருமை - வளைகாப்பு நாயகி வளையல்கள் அணிந்து காட்சி தருவது எவ்வளவு சிறப்பு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete