Friday, October 31, 2014

செல்வம் அருளும் ஸ்ரீசென்றாயப் பெருமாள்



திருச்செங்கோட்டில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் 
சேலம்-திருச்செங்கோடு சாலையில் ராசிபுரத்தை 
அடுத்துள்ள காளிப்பட்டியில் புகழ்பெற்ற  முருகன் கோவில் உள்ளது

காளிப்பட்டி கந்தசாமி ஆலயத்திற்குப் பின்புறம் சுமார் முன்னூற்று ஐம்பது வருடங்களுக்கு முற்பட்ட சுயம்புவான புற்றினால் ஆன 
ஸ்ரீசென்றாயப் பெருமாள் கோயில்  அமைந்துளளது..

மூலவரைசுற்றி கோபுரத்தில் தசாவதாரசிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கர்ப்பகிரஹத்துக்குள் புற்று மூன்று பிரிவாக அமைந்திருக்கிறது .. நடுவில் சற்றே உயரமாக இருக்கும் புற்று சென்றாயப்பெருமாளாகவும் , இருபுறமும் உள்ளவை ,ஸ்ரீதேவி பூதேவியாகவும் வழிபடப்படுகின்றன. புற்றின் முன்புறம் சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.


ஆலய வளாகத்தில் சுற்றுப்புறத்தில் எங்குமே காணப்படாத குளத்தி மரம் மிக விஷேசமாக வளர்ந்துளளது  சிறப்பாகும் ..

மரத்தைப்பற்றி தாவரவியாலாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார்களாம்..

ஸ்ரீசென்றாயப் பெருமாள் கோயிலின் திருப்பணிகள் நடைபெற்று வீரபக்த ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி, சொர்க்க வாசல் அமைக்கப்பட்டுள்ளது..
ஆலய வளாகத்தில் அமைந்துள்ள சிற்பங்கள்..



.
துவஜ ஸ்தம்பத்தில் சௌகந்திகா மலருடன் அனுமனும் ,, 
மறுபுறம் கருடனும் அழகுற அமைக்கப்பட்டிருக்கிறது..

[hindugod_laxmi1.jpg]Ganesh Laxmi Devi Puja Tirupati Balaji Lord Wallpapers Ipad

8 comments:

  1. மூலவரைச் சுற்றி சுவரில் தசாவதாரச் சிற்பங்கள் - அபாரம்.

    குளத்தி மரம் கேள்விப் பட்டதில்லை.

    படங்களுடன் பகிர்வு அழகு.

    ReplyDelete
  2. சிறந்த பக்திப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  3. வெள்ளி தரிசனம் அருமை

    இன்னார்க்கு கிட்டுவன எட்டும் இயலார்க்கு
    இன்னதொரு பாக்யம் கிட்டும் ...

    ReplyDelete
  4. அருமையாக இருக்கிறது ஆலயம்! புதியதொரு கோவில் அறிமுகம் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  5. புதிய தகவல்கள்.
    மிக்க நன்றி சகோதரி.
    பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  6. அருமையாக இருக்கிறது ஆலயம்!
    மூலவரைச் சுற்றி சுவரில் தசாவதாரச் சிற்பங்கள் - அபாரம்.



    படங்களுடன் பகிர்வு அழகு.

    மூலவரைச் சுற்றி சுவரில் தசாவதாரச் சிற்பங்கள் - அபாரம்.

    குளத்தி மரம் கேள்விப் பட்டதில்லை.

    படங்களுடன் பகிர்வு அழகு.


    ReplyDelete
  7. அருமையான படங்கள்.....

    குளத்தி மரம் இதுவரை கேள்விப்பட்டதில்லை.....

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரி!
    தங்களது பதிவுகளையும், ஆன்மீக மனம் கமழும் கட்டுரைகளையும் படிக்கும்போது,
    குமுதம் பத்திரிகையில் எழுதும் ப்ரியா கல்யாண ராமன் நீங்கள்தானா என்று எண்ணத் தோன்றுகிறது. இலவச கோயில் தரிசனம் இன்பத்தை தருகிறது.

    எனது வலைப் பூ வாசல் வந்து வாசம் செய்தால் மனம் மகிழ்வேன்!
    நன்றியுடன்,

    புதுவை வேலு
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete