Friday, May 24, 2013

பாங்காய் அருளும் பாடலாத்ரி நரசிம்மர்..!


கருணைக்கடலான மகாவிஷ்ணு சிறுபாலகனின் ஆணித்தரமான "இறைவன் எங்கும் உளன்'' என்ற சொல்லை நிலை நாட்டுவதற்காகவும், மெய்ப்பிக்கவும் மாலை வேளை துவாரப்ரதேசத்தில் (வாயிற்படியில்) நரமிருக ரூபியாய் (மனித உடல் சிங்கமும்) அவதாரம் செய்து நகரங்களினாலே இரணியனை ஸம்ஹாரம் (வதம்) செய்தார்.அவர் (மஹா உக்ரத்தில்) பெருஞ்சினத்துடன் மூன்று கண்களுடன் காணப்பட்டார்.
நரசிங்க விண்ணகரம் எனப் போற்றப்படும் பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் பல்லவர் காலத்தில் எடுக்கப்பட்ட குடைவரைக் கோவில்.  சிங்கபெருமாள் கோவிலில் திருமாலின் நான்காவது அவதாரமான ஸ்ரீநரசிம்ம சுவாமி நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த நிலையில் சுதை சிற்பமாக அழகாக வீற்றிருக்கிறார். 

வலது மேல் கரத்தில் சக்கரம், இடது மேல் கரத்தில் சங்கு, கீழ் வலது கரத்தில் அபயமுத்திரையுடன் காட்சி தருகிறார்.  வலது காலை மடித்துக் கொண்டு, இடது காலை தாமரை மலர்மேல் வைத்துக் கொண்டு "த்ரிநேத்ரதாரியாய்'' (மூன்று கண்களுடன்) திருமார்பில் மகாலஷ்மியோடு, சாளக்கிராம மாலை, ஸஹஸ்ரநாத மாலை மற்றும் லஷ்மிஹாரங்நாம மாலை மற்றும் லஷ்மி ஹாரங்களுடன் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சி தருகிறார்.
மூலவரின் திருப்பெயர்: பாடலாத்ரி நரசிம்மர் உற்சவரின் திருப்பெயர்: பிரஹலாத வரதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளியுள்ளார். 

தாயாரின் திருப்பெயர்: ஆஹோபிலவல்லித் தாயார். 
 
விமானம்: ப்ரணவ கோடி விமானம்

தீர்த்தம்: சுத்த புஷ்கரணி

ஸ்தல விருட்சம்: பாரிஜாதம்

 அடர்ந்த  காட்டில் ஸப்த (ஏழு) ரிஷிகளுள் ஒருவரான ஜாபாலி இறைவனை நேரில் காண வேண்டி தவமிருது பிரார்த்தித்த வேண்டுகோளுக்கிணங்கி இரணியனை ஸம்ஹாரம் செய்த திருக்கோலத்துடன் உக்கிர நரசிம்மராக அதே கோபத்துடன்  சிறு குகையினுள் காட்சி கொடுத்ததாக ஐதீகம் ... 
சுவாமி குகைக்குள் வீற்றிருப்பதால் கோவிலை வலம் வருபவர்கள் சுமார் நூறு படிக்கட்டுகள் கொண்ட சிறு குன்றினையும் சேர்த்து தான் வலம் வரவேண்டும் த்ரிநேத்ர தரிசனம், கிரிவலம்  தனிச்சிறப்பாகும்.

 
 மணமாகாதவர்களும் குழந்தை பேறு இல்லாதவர்களும் மாமேதை ஆகும் எண்ணம் உள்ளவர்களும் தாங்கள் அணிந்திருக்கும் ஆடையிலிருந்து ஒரு நூலிழையை எடுத்து தெய்வீக அதிசயகுணம் படைத்த அழிஞ்சல் மரத்தின் கிளையில் எம்பெருமானை நினைத்து ஒரு நுனியில் கட்டி மரத்தின் அடியில் மஞ்சள், குங்குமம் பூசி, நெய் விளக்கேற்றி அர்ச்சனை செய்தால் அருள்கிட்டும். இது மகான்கள் கண்ட உண்மை. 
தெய்வாம்சம் பொருந்திய மரம் கோவில் கிரி பிரதட்சிணத்தில் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ளது.
ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படும். விழாவின் 7ம் நாள் தேர் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். 
சென்னை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது

13 comments:

 1. அருமையான விளக்கம் + படங்கள்... நன்றி அம்மா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. நானும் இந்த சந்நிதிக்கு சென்றிருக்கிறேன் இவ்வளவு சிறப்பான செய்திகள் பற்றித்தெரியாது .தெரிந்துகொண்டேன் புரிந்துகொண்டேன் நன்றி

  ReplyDelete
 3. hi i am regular reader of your blog.your blog contents and pics are very nice and interesting.

  whenever i visit your blog a sound (drums sound) will be hearing for some time which is terrific.

  i think there is problem with tamil 10 widget.
  can you correct that.

  thank you

  ReplyDelete
 4. இந்தக்கோவிலுக்குச்சென்று பாடலாத்ரி நரசிம்மரை
  தரிசிக்க வேண்டும். அதுவும் அவர் அருள் இருந்தால் இயலும்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 5. மிகமிக அருமை. அழகிய படங்களும். சுப்புத்தாத்தா சொன்னதுபோல் அங்குபோய் தரிசிப்பதற்கும் எமக்கு அருள்கிடைக்கணும்.
  பகிர்விற்கு மிக்க நன்றி சோதரி!

  ReplyDelete
 6. பார்த்தேன், படித்தேன், ரஸித்தேன்.

  கடைசியில் காட்டியுள்ள குட்டியூண்டு வெங்கலச்சிலை நரசிம்ஹர் ஜோர் ஜோர்.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  ooooo 919 ooooo

  ReplyDelete
 7. அழகான படம் அருமையான பதிவு இன்று தான் இப்படி ஒரு ஸ்தலம் இருப்பதையும் நரசிம்மர் பற்றிய குறிப்புகளையும் கண்டு கொண்டேன் அக்கா

  ReplyDelete
 8. நரசிம்மரைப் போற்றும் வெகு அருமையான பதிவு. நல்ல பல தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 9. அழகிய படங்களுடன் அருமையான தலம் பற்றிய தகவல்களுடன் பதிவு அருமை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 10. பார்க்காத நரசிம்மர் கோவில்.
  படங்கள் எல்லாம் அழகு.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 11. மிகவும் சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் தோழி .

  ReplyDelete
 12. தங்கள் மூலம் அத்தனை பெருமைகளையறியக் கிடைத்ததற்கு, தங்களையாட்டி வைக்கும் இறைவனுக்கு நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 13. entha temple ku pregnant girls varalamaa....

  ReplyDelete