Friday, May 31, 2013

ஸ்ரீ ஐஸ்வர்ய லட்சுமி


 

நமோ லக்ஷ்மியை மகாதேவ்யை பத்மாயை ஸததும் நம!
நமோ விஷ்ணு விலாசின்யை பத்மஸ்தாயை நமோ நம!!

த்வம் சாட்சாத் ஹரிலட்சஸ்தா ஸீரே ஜ்யேஷ்டா வரோத்பவா!
பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ!!

பரமானந்ததா அபாங்கீ ஹ்ருத சம்ஸ்ருத துர்க்கதி
அருணா நந்தினீ லக்ஷ்மீ மகாலக்ஷ்மீ த்ரிசக்திகா   

ஸாம்ராஜ்யா ஸர்வஸீகதா நிதிநாதா நிதிப்ரதா
நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்ய மகோந்நதி!!

ஸம்பத்தி ஸம்மதா சர்வ சுபகா சம்ஸ்துதேஸ்வரி
ரமா ரட்சாகரீ ரம்யா ரமணி மண்டலோத்தமா!!


 -- ஸ்ரீ என்னும் 10 வரிகள் உடைய சக்திமிக்க துதி..!

 ஒரு சமயம் தேவர்கள் மகாலட்சுமியைக் குறித்துத் தவம், யாகம் செய்து கொண்டிருந்தனர். அங்கு வந்த அசுரர்கள் அவர்களை கேலியும், கிண்டலும் செய்து யாகப்பொருட்களையும் யக்ஞமேடையையும் நாசப்படுத்தினர்.

சிதறி ஓடிய தேவர்கள் மகாலட்சுமியை குறித்து தியானித்த போது அஷ்டாதசபுஜ துர்க்கையாக (18 கைகளு  டைய துர்க்கை) அவதாரம் எடுத்து அசுரர்களை விரட்டி வதம் செய்தாள்.

உடனே தேவர்கள் பக்கம் திரும்பியவள் யாகத்ததை சாஸ்திர விதியுடன் நடத்துங்கள் என்று கூறி அங்கே சாந்த சொரூபினியாக ஐஸ்வர்ய லட்சுமி வடிவம் கொண்டு தேவர்களுக்கு ஸ்ரீ என்னும் 10 வரிகள் உடைய சக்திமிக்க துதியை உபதேசித்து இதை வெள்ளிக்கிழமைகளில் கூறுவோர் தன் அருள்பெற்று அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெறுவர் என்று அருளினாள்..
Cover photoCover photo

15 comments:

 1. Aha vellikilamai aduvuma Ishvarya Lakshmi(Lakshmikal)
  Nice post and nice pictures Dear.
  viji

  ReplyDelete
 2. படங்களைத் தொகுத்த விதம் அருமை அம்மா... தங்களது தளம் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது...நன்றி...

  ReplyDelete
 3. படங்கள் விளக்கங்கள் அனைத்தும் அருமை அம்மா... நன்றிகள் பல... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. ”ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி” க்கு என் அனந்த கோடி நமஸ்காரங்கள்.

  மிகச்சிறிய ஆனால் மிகச்சிறப்பான பதிவு.

  இன்று வெள்Liக்கிழமைக்கு ஏற்ற நல்லதொரு பதிவு.

  படங்களும், விளக்கங்களும், ஸ்லோகங்களும் அழகோ அழகு.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், மனமார்ந்த நன்றிகள்.

  -=-=-=-=-

  இன்று 31.05.2013 தங்களின் தளம் வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

  -=-=-=-=-

  அதே வலைச்சரப்பகுதியில் என்னைப்பற்றியும் என் வலைத்தளத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்கள்.

  அதுவும் எனக்கு மிகவும் பிடித்த தலைப்பான

  ”9] "நானும் என் அம்பாளும் !" .............. அதிசய நிகழ்வு !”

  http://gopu1949.blogspot.in/2013/04/9.html

  என்ற பதிவினைச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

  அதனை தாங்கள் இன்று என் கவனத்திற்குக் கொண்டு வந்து உதவியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கும் என் நன்றியோ நன்றிகள்.

  ooooo 926 ooooo

  ReplyDelete
 5. அருமையான படங்களுடன் கூடிய சிறப்பான பதிவு. தங்களது தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மட்டற்ற மகிழ்வைத் தருகிறது. தங்களின் அடியொற்றியே எங்களைப் போன்ற இளம் பதிவர்கள் பயணிக்கின்றோம். நெஞ்சார்ந்த நன்றிகள் அம்மா!!.

  ReplyDelete
 6. வெள்ளிக்கிழமை அதுவுமா ஐஸ்வர்யலட்சுமியே பரிசாய்.., நன்றி அம்மா!

  ReplyDelete
 7. ஐஸ்வர்ய லக்ஷ்மியின் அருள் ஜொலிஜொலிக்கிறது. மிக்க நன்றி!

  ReplyDelete
 8. நல்ல பகிர்வு. இனி இந்த ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும். நன்றி .

  ReplyDelete
 9. ஐஸ்வர்யலட்சுமியின் அருளைப் பெற்றுக்கொண்டேன் நானும்..

  ReplyDelete
 10. ஐஸ்வர்ய லக்ஷ்மியின் படங்களும், கோலமும் அருமை.
  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 11. சிறப்பான படங்கள் மற்றும் விளக்கம். மிக்க நன்றி.

  ReplyDelete
 12. ஐஸ்வர்ய லக்ஷ்மியின் ஸ்லோகம் , படங்கள், கோலங்கள், அருமை.
  எல்லோருக்கும் ஐஸ்வர்ய லக்ஷ்மி அருள் கிடைக்கட்டும்.

  ReplyDelete
 13. சிறப்பான படங்கள் நன்றி

  ReplyDelete